Wednesday, December 4, 2013

காலை எழுந்தவுடன் கொலை!! (க்ரைம் தொடர்-6)

பகுதி-1     பகுதி-2   பகுதி-5

பகுதி-3     பகுதி-4

                                       

                       இரண்டு நாட்களுக்குப் பிறகு ஆனந்திற்கு ஒரு மாபெரும் பாராட்டு விழா நடந்தது. அதில் ஆனந்தை பாராட்டி பேசிய D.I.G தினகரன் ஆனந்திடம் " எப்படி ஸார், கடைசி வரைக்கும் காமெடியாவே இருந்துட்டு இவ்வளவு பெரிய கும்பல பிடிச்சிங்க. ப்ளீஸ் டெல் அபவுட் தட்." என்றார். அந்த வயர்லெஸ் மைக்கை கைகளில் வாங்கிய ஆனந்த் எல்லோருக்கும் நன்றி சொல்லிவிட்டு "ஏன் ஸார், துப்பறியும் நிபுணர்னா சீரியஸாவே இருக்கணுமா?, வெல், இந்த கேஸ ஆரம்பிச்சப்போ எனக்கும் சுந்தருக்கும் தலைகால் புரியலே என்பதுதான் உண்மை. அதுக்கப்புறம் தொழிலதிபர் சின்னசாமி வீட்டில் சோதனையிட சென்றபோது அங்கே ஒரு தடயம் கிடைச்சுது. அது வேற ஒண்ணுமில்லே போலிஸ் பேட்சுல இருக்கிற ஒரு நட்சத்திரம். அதுக்கு பின்னாடி ஒருமுறை சுந்தர் வீட்டுக்கு போனபோது அந்த பேட்சோட மீதி இரண்டு நட்சத்திரங்கள் மேசை மீது வைக்கப்பட்டிருந்ததைப் பார்த்தேன்.
     
                      அதே போல தர்மராஜ் கொலை கேசுல அவர் வீட்டுக்கு பின்புறம் சேத்துல போலிஸ் ஜீப்போட டயர் அச்சு இருந்தது. வேலியே பயிரை மேயிறது போல மக்களை காப்பாத்த வேண்டிய போலிசை சார்ந்த ஒருத்தர் தான் இந்த கொலைகளை செய்கிறார்ன்னு முடிவுக்கு வந்தேன். அது மட்டுமில்லாம நானும் சுந்தரும் க்ளோஸ் பிரெண்ட்ஸ். அவன் டிடக்டிவ் ஏஜென்சி ஆரம்பிச்சப்புறம் நான் அவனை பாஸ், சுந்தர்னு கூப்பிடுவேன். ஆனா நாங்க காலேஜ்ல ஒண்ணா படிக்கும்போது "சுரேஷ்"ன்னு அவங்க வீட்டுல கூப்பிடற பேரைத்தான் இப்பவும் நாங்க ரெண்டு பெரும் தனியா இருக்கிறப்போ கூப்பிடுவேன். கடந்த சில நாட்களா அவன்கிட்ட சில மாற்றம். இந்த டிடெக்டிவ் ஏஜன்சி ஆரம்பிச்ச மூணு வருஷத்துல ஒரு நாளும் என் டைமிங் பத்தி அவன் கமென்ட் பண்ணினது இல்லே.. தவிர நானும் லாவண்யாவும் லவ் பண்றது அவனுக்கு நல்லா தெரியும். ஒருநாள் என்கிட்டே அஞ்சு மணி ஆனதும் எங்க கிளம்புற ஆனந்துன்னு கேட்டான்.

                       இதெல்லாம் வச்சு பார்த்தப்போ அங்கே இருக்கிறது சுந்தர் தானா அப்படின்னே சந்தேகம் வந்திடுச்சு எனக்கு. அதை உறுதி செய்யுற மாதிரி ஒருநாள் நான் அவனை சுரேஷ், சுரேஷ் ன்னு கூப்பிட்டும் அவன் திரும்பிப் பார்க்காம பைக்கில போனான். நான் அவனை பாலோ பண்ணி பின்னாடியே போன போது அந்த கும்பல்கிட்ட மாட்டிகிட்டேன். அப்ப அங்க கிருஷ்ணான்றவன் போன் செஞ்சு பேசும்போது மறுமுனையில் ஒலித்த குரல் எனக்கு பரிச்சியமானதா இருந்தது. நல்லா யோசிச்சு பார்த்தப்போ அது சிவஞானம் உடைய குரல்னு தெரிஞ்சுகிட்டேன். அதுவுமில்லாம சுந்தர் என் பெஸ்ட் பிரெண்ட், அவன் முகம் எனக்கு தெரியாதா? அந்த கிருஷ்ணன் பார்க்க சுந்தர் போலவே இருந்தான். என்கிட்டே மறைக்கரதுக்காக மீசை தாடியெல்லாம் ஓட்டிகிட்டு நாடோடி மன்னன் எம்ஜியார் போல வந்தான். ஆனாலும் நா கண்டுபிடிச்சுட்டேன். அங்கிருந்து தப்பிச்சு அவன் கொடுத்த க்ளுப்படி ஹரிஹரன் வீட்டுக்கு போனேன். அங்கே நான் போகவும் சிவஞானம் கத்திய தூக்கவும் சரியா இருந்தது. அவரை தடுத்து அவரையும் அவர் கூட்டாளிகளையும் கைது செய்து அவங்க கஸ்டடில இருந்த சுந்தரையும் விடுவிச்சு, எச்சச்ச கச்சச்ச..." என்று ஆனந்த் முடித்ததும் தினகரன் தொடர்ந்தார்.

                         "அந்த சிவஞானத்தை ஸ்பெஷலா விசாரிச்சதுல அவர் ஒரு சைக்கோ பேஷண்ட்டுன்னு தெரிய வந்தது. தான் ஒரு புத்திசாலின்னு நிரூபிக்கறதுக்காக தடயமே இல்லாம கொலை செய்து அதை வேறு ஒருவரைக் கொண்டு விசாரிக்க செய்து தோல்வியடைய செய்யறது தான் அவன் ப்ளான்.. ஆல்பாபெடிகல் ஆர்டர்ல கொலை செய்து அதில் தான் மாட்டினாலும் அதில் சுந்தரை சிக்க வைக்க எண்ணி அவனைக் கடத்தி அவனைப் போலவே உருவமுடைய கிருஷ்ணாவை இங்கே அனுப்பி அவன் செய்த குளறுபடியில் சிறு தடயங்களை விட்டு இப்போ ஜெயிலில் கம்பிய கால்குலேட் பண்ணிக்கிட்டு இருக்கார். சுந்தர் ஹாஸ்பிட்டலில் ட்ரீட்மென்ட் எடுத்து வருகிறார்.  கிரேட் ஜாப் ஆனந்த்" என்று விழாவை முடித்தார் DIG தினகரன். ஆனந்த் புறப்பட எத்தனித்து தன் யமஹாவிற்கு அருகில் வர பத்திரிக்கையாளர்கள் அவனை சூழ்ந்து கொண்டு "இன்னும் சில கேள்விகள் சார்" என்றதும் "சாரி பாஸ், இட்ஸ் ரோமேண்டிக் டைம்.. ஐ ஹாவ் டு மீட் மை பியான்ஸே.." என்றதும்.. "எப்ப சார், உங்க கல்யாணம்" என்றவர்களை நோக்கி "வெரி சூன்.. உங்க எல்லாருக்கும் இன்வைட் அனுப்பறேன்.. கட்டாயம் வந்திடுங்க" என்று கண்ணடித்தவாறே கிளம்பினான்.


முற்றும்..
                        

15 comments:

  1. துப்பறியும் ஆனந்து சூப்பருப்பா... கலிக்கிட்டாருபா... நெக்ஸ்ட் கேசு இன்னாபா?

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு... +1

    ReplyDelete
    Replies
    1. இப்போதானே இந்த கேஸ் முடிஞ்சிருக்கு.. பாவம்பா...கொஞ்சம் ரெஸ்ட் எடுக்கட்டும்.( படிக்கிற வாசகர்கள சொன்னேன் ;-))

      Delete
  2. துப்பறியும் ஆவிக்கு... ஆனந்திற்கு பாராட்டுக்கள்...

    ReplyDelete
  3. அவ்வ்வ்வ் எனக்கு தல சுத்திடுச்சு

    ReplyDelete
    Replies
    1. என்னாச்சு தங்கச்சி.. புரியலையா?

      Delete
    2. புரிஞ்சுச்சு அண்ணா புரிஞ்சுச்சு, ஆனா நான் கேள்வி கேக்க ஆரம்பிச்சேனா நிறுத்த மாட்டேனே அவ்வ்வ்வ்

      Delete
  4. து....து......து......துப்பறிஞ்சு முடிச்சாச்சு,இனிமே பியான்சே கூட ......த....த...த....தள்ளு,முள்ளு தான்!(மாலையும் கழட்டியாச்சு!)

    ReplyDelete
    Replies
    1. இரு வேறு உலகத்தை இணைக்க பார்க்கறீங்க பாஸ்.. துப்பறிவது டிடெக்டிவ் ஆனந்த். மாலை கழட்டியது ஆவி. அப்போ அந்த தள்ளு முள்ளு யாருக்கு கரெக்டா சொல்லுங்க பார்ப்போம்?

      Delete
  5. Replies
    1. கருத்திட்டமைக்கு நன்றி..

      Delete
  6. இன்று தான் தங்களின் கருத்துரைக்குப் பின் தங்கள் தளம் பற்றி அறிந்தேன்! அருமையாய் உள்ளது தங்களின் தளம்! பதிவுகளும் அருமை! வாழ்த்துக்கள் அய்யா!

    ReplyDelete
    Replies
    1. அய்யா ன்னெல்லாம் கூப்பிடாதீங்க பாஸ்.. ஆவின்னு கூப்பிடுங்க..போதும்.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றிங்க..

      Delete
  7. வணக்கம்
    மேலும் தொடர எனது வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...