Saturday, December 21, 2013

ஆவி டாக்கீஸ் - என்றென்றும் புன்னகை


இன்ட்ரோ  
                          நட்பு மட்டுமே கடைசி வரை தொடர்ந்து வரும், காதலும் கல்யாணமும் வலிகளையே பரிசளிக்கும் என்று சொல்ல வந்திருக்கும் படம். இன்றைய இளைஞர்கள் பற்றி நல்லதாக சொல்ல எவ்வளவோ விஷயங்கள் இருக்க சமீபத்திய தமிழ்ப்படங்கள் அவர்கள் குடிப்பதையும்,  தெரு ஓரங்களில் சிறுநீர் கழிப்பதையும் காண்பிப்பது வழக்கமாகிவிட்டது.. இதற்கு இந்தப்படமும் விதிவிலக்கல்ல.
கதை         
                            கோபம்  என்பதை சரியான முறையில் காண்பித்து,  விட்டுக் கொடுக்கும் மனப்பான்மை இல்லாமல் பெற்ற தந்தை மற்றும் சிறுவயது தொட்டே ஒன்றாக வளரும் நண்பர்கள் எல்லோரையும் அவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள் என்பதற்காக அவர்களுடன் பேசுவதை நிறுத்திவிடும் ஜீவா எப்படி தான் காதல் வயப்பட்டதும் மற்றவர்களை வெறுத்த தன் குணத்தை மாற்றிக் கொண்டு எல்லோரையும் நேசிக்கும் கதையை நகைச்சுவையோடு சொல்லியிருக்கும் படம் தான் என்றென்றும் புன்னகை.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              ஜீவா இதற்கு முன் பார்த்த எல்லா படங்களை விட இதில் மிகவும் அழகாக இருக்கிறார். ஆனால் ஈ, கற்றது தமிழ் படங்களோடு ஒப்பிடும் போது நடிப்பு மிகச் சுமார் தான். வினய் நண்பன் கதாப்பாத்திரத்தில் அருமையாக பொருந்துகிறார். இரண்டு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலும் மின்னலே படத்தில் அப்பாஸின் நிலைமை தான் இவருக்கும். இருந்தாலும் கிடைத்த கேப்பில் கிடா வெட்டியிருக்கிறார். சந்தானம் இஸ் பேக் என்றே சொல்ல வேண்டும். ஏகப்பட்ட ஒன் லைனர்களை வைத்துக் கொண்டே முதல் பாதியை குபீர் பாதியாக்கிய பெருமை இவரையே சேரும். இரண்டாம் பாதியில் வரும் ஸ்லாப்ஸ்டிக் வகை காமெடி கண்டிப்பாக ரசிகர்களை குலுங்க குலுங்க சிரிக்க வைக்கும்.

                               நாசர் ஜாலியான அப்பா வேடத்திலும் சரி உருக்கமான காட்சிகளிலும் சரி பட்டையை கிளப்புகிறார். திரிஷா நகைச்சுவை சரக்கிற்கு நடுவே தொட்டுக்கொள்ள பயன்பட்ட ஊறுகாய். (கொஞ்சம் முத்தின மாங்காய் கொண்டு தயாரிக்கப்பட்ட ஊறுகாய்). கதைப்படி நாயகியாய் வரும் ஆண்ட்ரியா கவர்ச்சி எனும் பெயரில் கண்றாவியாக இருக்கிறார். வேறு புதுமுகத்தை போட்டிருக்கலாம். சுவாமிநாதன் மற்றும் பலர் அவ்வப்போது கிச்சுகிச்சு மூட்டுகிறார்கள்.


இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 இசை ஹாரிஸ் ஜெயராஜ், பாடல்கள் பின்னணி இசை இரண்டிலும் படத்தை அழகாக நகர்த்திச் செல்கிறார். சிறப்பான இசையில் காதல், கோபம், கேலி, கொண்டாட்டம் என எல்லா உணர்வுகளையும் கதாப்பாத்திரங்களோடு சேர்த்து நம்மையும் அனுபவிக்க வைக்கிறார். இயக்கம் புதுமுக இயக்குனர் அஹமது. கன்னி முயற்சியில் வெற்றி பெற்றுவிட்டார் என்றே சொல்ல வேண்டும். "ஊருக்கு உபதேசம்" என்பது இந்தப் படம் ஒரு உதாரணம். குடிக்கக் கூடாது, காதல் செய்யக் கூடாது என்றெல்லாம் அரசியல் பேசுபவர்கள் தாங்கள் தயாரிக்கும் படங்களில் இது இல்லாமல் படமெடுக்க முயற்சிகாதது ஏன்?

                                                                                                                       ஒளிப்பதிவு

                                    மதியின் கேமிரா வண்ணத்தில் மேஸ்மரைஸ் ஆகிறோம். ஒவ்வொரு பிரேமிலும் அவ்வளவு "ரிச்" பீலிங் கொண்டு வந்திருக்கிறார். வெளிநாட்டு காட்சிகளில் உள்ளத்தை கவர்கிறார். குறிப்பாக சுவிஸ் காட்சியும், ஜீவா த்ரிஷா புகைப்படம் எடுத்துக் கொள்ளும் காட்சியும் புகைப்படத்தில் ஓர் கவிதை  என்றே சொல்லலாம். மற்றும் ஒரு காட்சியில் மொட்டை மாடியில் கம்பி மீது அமர்ந்திருக்கும் ஜீவாவை அழகாக 180 டிகிரி கோணத்தில் சுற்றி வரும் போதும், அவருடைய மதுக்கோப்பை மேலிருந்து கீழே விழும்போதும் திக் திக் நிமிடங்களாய் மாற்றிய பெருமை அவரையே சேரும். ஹேட்ஸ் ஆப் மதி!! (இவருடைய ஜாலத்தை கண்டிப்பாக முழுமையாக ரசிக்க திரையரங்கில் மட்டுமே சாத்தியப்படும்)


                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 முத்து முத்தான பாடல்கள். எல்லா ஒன் லைனர்கள். நண்பர்கள் அடிக்கும் லூட்டிகள். சந்தானத்தின் ஸ்லாப்ஸ்டிக் காமெடி.

                  Aavee's Comments - Not just Smile, it's a Fun Riot.
11 comments:

 1. சந்தானத்தை நான் இந்தப் படத்தில் மிக ரசித்தேன். மதியை மயக்கிய மதியின் சினிமோட்டோகிராபியும் ரசனைக்கு விருந்து. இவர் பேரைக் குறிச்சுக்காததால என் விமர்சனத்துல குறிப்பிடாம விட்டுட்டேன். விமர்சனம்னா ஆவிதான்... பேஷ் பேஷ்... ரொம்ப்ப்ப நன்னாருக்கு!

  ReplyDelete
  Replies
  1. நன்றி ஸார்.. மதியின் அட்டகாசமான வேலைக்காகவே இந்தப் படத்தை பார்க்கலாம்..

   Delete
 2. எங்கள் ஊரில் ரிலீஸ் ஆயிருக்கு.நாளை பார்க்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. கண்டிப்பா பாருங்கள் சொர்ணமித்திரன்.. கண்டிப்பாக பிடிக்கும்!

   Delete
 3. Replies
  1. நல்ல ரசித்து பார்க்கலாம் DD.. ஜாலியா போயிட்டு வாங்க..

   Delete
 4. ரசித்து எழுதிய விமர்சனம்...
  குடி.. குடி.. இந்த் டிரெண்ட் சினிமாக்கள் எப்போது மாறும்..

  ReplyDelete
 5. அவசியம் பார்க்கிறேன்
  த.ம.3

  ReplyDelete
 6. பார்க்க முயற்சிக்கிறேன் ஆவி.

  ReplyDelete
 7. நேற்றுப் படம் பார்த்தேன்.. சந்தனத்தின் காமெடிக்கு அளவே இல்லை.. குறிப்பாக நாய் இறந்ததை ஜீரணிக்க முடியாமை என சொல்லும் காட்சி சூப்பர்...

  ReplyDelete
 8. நல்ல விமர்சனம்!எல்லோரும் நல்ல படம் என்றே விமர்சித்திருக்கிறார்கள்!!நன்று&நன்றி!!!

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails