சமுத்திரக்கனி இயக்கத்தில் ஒரு நீண்ட இடைவெளிக்குப் பின் 'ஜெயம்' ரவி நடித்து வெளிவரும் படம். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் அமலா பால் மற்றும் ராகினி திவேதி ஆகியோர் நடித்திருக்கின்றனர். இதன் இசை சரிகாமா குழுமத்தினரால் புதனன்று வெளியிடப்பட்டது.
1. ராஜாதி ராஜா- கவிஞர் கபிலன் எழுதிய இந்தப் பாடல் அறிமுகப் பாடலாய் வருகிறது. நாயகன் தன்னைத் தானே உயர்த்திப் பாடும் வழக்கமான தமிழ் சினிமா பாடல். ஹேமச்சந்திராவின் குரலில் ஆர்பாட்டமில்லாமல் ரசிக்கும்படி இருக்கிறது.
2. நெகிழியினில்.. வைரமுத்துவின் கைவண்ணம் அப்படியே பெற்றிருக்கிறார் மதன் கார்க்கி. நாயகன் நாயகி மன வருத்தத்தில் ஒருவரை ஒருவர் நினைத்துப் பாடும் பாடல். காதல் ரசம் சொட்டும் பாடலை ஹரிசரணும், மிஸஸ் ஜீவியும் பாடியிருக்கிறார்கள். ஆனாலும் இசை ரொம்ப மெல்லியதாக இருப்பதால் அரங்கில் வரும்போது ரசிகர்கள் தூங்கிப் போக வாய்ப்பிருக்கிறது.
3. தமிழ் சினிமாவின் தற்போதைய பிஸியான பாடகர் கானா பாலா எழுதி பாடியிருக்கும் பாடல் "Don't Worry Be Happy" டென்ஷன் ரிலீப் பாடல் என்றாலும் வரிசையாக எல்லாப் படத்திலும் இவருக்கு ஒரே போல பாடல் கொடுப்பது அலுப்பு தட்டுகிறது.
4. GITA VERSES.. ஹரிசரனின் கம்பீர குரலில் கீதையின் வரிகள் கதாநாயகனுக்கு உத்வேகம் கொடுக்கும் பாடலாக வருகிறது. பகவான் கிருஷ்ணரின் பாடல் வரிகள் இந்தக் கால அர்ஜுனனுக்கு எப்படி ஊக்கம் அளிக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
5. காதல் நேர்கையில்.. ஜாவேத் அலி, சாஷா மற்றும் ஜீ.வியின் குரல்களில் இனிமையாய் ஒலிக்கிறது. கபிலனின் வரிகள் பாடலுக்கு இனிமை சேர்க்கிறது..
"பாறை போல வாழ்ந்த நானே சிற்பமாகிறேன்- உன்னாலே" போன்றவை காதலின் பெருமை பேசும் வரிகள்.
ராஜா ராணி படத்திற்கு பிறகு ஜீவி இசையமைத்திருக்கும் பாடல் அது போல் முதல் முறை கேட்டவுடன் மனதில் ஒட்டவில்லை என்றாலும் சில முறை கேட்டலுக்கு பின் நிறைவாய் இருக்கிறது.
வணக்கம்
ReplyDeleteசிறப்பாக உள்ளது பதிவு.. வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்!
Deleteவணக்கம்
ReplyDeleteத.ம.2வது வாக்கு
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி
Deleteஆமாம் சகோ உங்கள் இசை விமர்சனம் 90 வீதம் எனக்கும் இசைவாய்த்தான் இருக்கு.
ReplyDeleteஅந்தப் 10 வீதம் நெகிழினியில்.. சயந்தவி குரலில் ரொம்ப அருமையாக இருக்கு. பாடல் அமைதியாக இதமாக இருக்கிறது எனக்கு..:)
பாடல் வரிகளும் அற்புதம்!
நல்ல பகிர்வு! வாழ்த்துக்கள் சகோ!
த ம.3
நன்றி இளமதி.. சில முறை கேட்ட பின்பு இப்போது அந்தப் பாட்டு எனக்கும் பிடித்துவிட்டது.
Deleteபடம் நிமிர்ந்து நின்று விடும்... !
ReplyDeleteஅப்படித்தான் நினைக்கிறேன்..
Deleteபாடல்கள் விமர்சனம்,நன்று!கேட்போம்!
ReplyDeleteகேளுங்க கேளுங்க..
Deleteநாடோடிகள் அளவுக்கு இல்லையோ?படம் எப்போ ரிலீஸ்?
ReplyDeleteஅவ்வளவு சிறப்பா இல்லை..
Deleteபுதிய பாடல்கள் இன்னும் கேட்கவில்லை ஆவி. கேட்கிறேன்.
ReplyDeleteம்ம்..
Delete