Wednesday, December 18, 2013

உலக சினிமாவும் உப்புமா ரசிகனும்!! (பகுதி-1)


                    இந்திய படங்கள் அல்லாது மற்ற எல்லா நாட்டு படங்களும் உலக சினிமா என்று நான் நினைத்திருந்த காலம் உண்டு. கொஞ்சம் கொஞ்சமாக சினிமா எப்படி பார்க்க வேண்டும் என்று கற்றுக் கொண்டேன். ஒளி, ஒலி, காட்சியமைப்புகள், திரைக்கதை, உடல்மொழி என பல விஷயங்களை கூர்ந்து கவனிக்க ஆரம்பித்தேன். சினிமா ஆர்வம் ஒரு கட்டத்தில் தீவிரமாக ஒரே நாளில் (ஒரு நியு இயர் அன்று) இரவு பனிரெண்டு மணிக்கு படம் பார்க்க ஆரம்பித்தவன் மறுநாள் காலை, மதியம், இரவுக்காட்சி, செகண்ட் ஷோ என ஒரே நாளில் ஐந்து சினிமா பார்த்து புளங்காகிதம் அடைந்தவன். அதே போன்ற ஒரு உணர்வு நீண்ட நாட்களுக்கு பின் இப்போது சென்னையில் நடக்கும் உலக சினிமா திருவிழாவில் நிறைவேறியது. கோவா மற்றும் கேரளாவில் நடந்த விழாக்களுக்கு உலக சினிமா ரசிகன் அழைத்த போது நேரமின்மையால் கலந்து கொள்ள முடியவில்லை. இப்போது அவருடன் சேர்ந்து நம் தமிழ் மண்ணில் உலக சினிமா பார்ப்பது தினமும் பேரானந்தம் தருகிறது.



                     படம் பார்க்க வந்த ஜாம்பவான்களுக்கிடையில் நான் வெறும் உப்புமா ரசிகன் என்றாலும், என் பார்வையில் நான் பார்த்த படங்களை இங்கே உங்களுக்காக பகிர்கிறேன்..

 CHEAP THRILLS : என்னை வாழ வைத்த அமெரிக்க தேசத்திலிருந்து தேர்வாகி வந்திருந்த படமிது. இந்தப் படம் என்னை பெரிதாக கவரவில்லை என்ற போதும் ஒரு சில நல்ல விஷயங்கள் இருக்கத்தான் செய்தது.
பணம் எந்த ஒரு மனிதனையும் மாற்றிவிடும் என்பதை இரு நண்பர்கள் ( ஒரு "குடும்பஸ்தன்" ஒரு "பிரம்மச்சாரி" ) பணத்திற்காக ஒருவரை ஒருவர் கொலை செய்யும் அளவுக்கு போவது தான் கதை.  இது உலக சினிமா தரத்தில் இல்லை என்பது என் தாழ்மையான கருத்து.




THE HUNT: தன் மேல் சுமத்தப்பட்ட வீண் பழியால் தன் குடும்பம், தொழில், சமூகத்தில் நல்ல பெயர் என எல்லாவற்றையும் இழந்து சிறைக்கும் செல்லும் நாயகனை நன்றாக பழகிய நண்பர்கள், தன் சக பணியாளர்கள், தன் கேர்ள் பிரண்ட் என எல்லோரும் சந்தேகப்பட வாழ்க்கையின் ஓரத்திற்கே செல்லும் அவன் சமூகத்தை விட்டு தள்ளி தன் மகனுடன் வாழ, கிளைமாக்சில் வேட்டைக்கு தன் மகனுடன் செல்லும் அவனை யாரோ சுட முயல யாரென்று பார்க்கும் போது அது தன் மகன் என்று அறிந்து வேதனையுடன் நிற்பதோடு கதை முடிகிறது. டென்மார்க்கை சேர்ந்த இப்படத்தில்  ஒவ்வொரு காட்சிகளையும் அழகாக எடுத்திருப்பார்கள்.



BLUE IS THE WARMEST COLOR: பிரான்ஸிலிருந்து பட விழாவிற்கு வந்திருந்த படங்களில் இந்தப் படத்திற்கு திரையிட்ட இடங்களில் எல்லாம் அரங்கு நிறைந்த காட்சிகள் என்று கேள்விப்பட்டேன். அரை மணி நேரம் முன்னதாகவே சென்று இடம் பிடித்து அமர்ந்தோம். இடம் இல்லாமல் மக்கள் நின்று கொண்டே படம் பார்க்கவும் செய்தார்கள். அப்படி என்னதான் இந்த படத்தில் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? அதே கேள்வியுடன் தான் நானும் படம் பார்க்க ஆரம்பித்தேன். ஒரு பெண், அவளுடைய தினசரி நடவடிக்கைகள், கல்லூரி வாழ்க்கை என சென்று கொண்டிருந்த அவள் வாழ்வில் ஒரு நீலப் புயல் அடிக்கிறது. ஒரு பெண் வடிவில். அவள் பால் ஈர்க்கப்பட்ட இந்தப் பெண் அவளுக்கு தன்னையே கொடுக்கிறாள், இன்பம் பெறுகிறாள். ஒரு கட்டத்தில் இருவரும் பிரிய நேர்கிறது.  பிரிகையில் உண்டாகும் சோகத்தோடு படம் நிறைவடைகிறது.



                 முதல் நாள் பார்த்த மூன்று படங்கள் இவை.. இரண்டாம் நாள் பார்த்த ஒரு அற்புதமான திரைப்படத்தோட உங்களை சந்திக்கிறேன்..


                    

14 comments:

  1. நன்றாக உள்ளது

    ReplyDelete
  2. உப்புமா ரசிகன் என்று மட்டும் சொல்லாதீர்கள்... தொடர வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. பெரிய பெரிய ஆளுகளுக்கு நடுவுல நான் உப்புமா தானே..? சரி இருந்தாலும் நீங்க சொல்றதுக்காக இனிமே சொல்லல..

      Delete
  3. சூப்பர்யா..நல்ல படங்கள் எல்லாமே உலக சினிமா தான்..எனக்கும் கொஞ்ச வருசமாகத்தான் இந்த கிறுக்கு பிடித்தது!

    ReplyDelete
    Replies
    1. அப்படித்தான் ஆயிடுச்சு இப்ப நிலைமை!!
      //எனக்கும் கொஞ்ச வருசமாகத்தான் இந்த கிறுக்கு பிடித்தது!//
      சொல்லவே இல்லே?

      Delete
  4. ஒரு நாளைக்கு அதிகபட்சம் 2 அ 3 பார்த்திருக்கிறேன். அந்த காகிதம் எங்க கிடைக்கும்? ஏன்னா புளங்காகிதம் அடைந்ததில்லை.படங்களை பார்த்து பரவசம் அடைந்திருக்கிறேன். படம் பார்க்கவே சென்னைக்கு போயிருக்கீங்க. அதோட சூடான விமர்சனமும் நன்று !

    ReplyDelete
    Replies
    1. இதய மரத்திலிருந்து தயாரிக்கப்படும் காகிதம் அது சார்..

      Delete
  5. நல்ல தெளிந்த பார்வை!இப்போ எல்லாமே,ஒலக சினிமா தான்,ஹி!ஹி!!ஹீ!!!///செங்கோவிக்கு கிறுக்கு புடிச்சுடுத்தாம்!

    ReplyDelete
    Replies
    1. //செங்கோவிக்கு கிறுக்கு புடிச்சுடுத்தாம்!//

      Late Realization?? ;-)

      Delete
  6. அந்த ஆலிவுட்டுல உள்ள புகழ் பெற்ற ஒரு உள்ளூரூல இருக்குற,

    ஒரு புகழ் பெற்ற சந்துல இருக்குற,

    அந்த சந்துல உள்ள ஒரு புகழ் பெற்ற வூட்டாண்ட வாடகைக்கு குடியிருக்கும் புகழ் பெற்ற (??) இருக்குற டைரக்டர்கள் எடுக்குற படங்களை நீங்கள் பார்ப்பதில்லையா ? உதாரணத்துக்கு கடந்த மூன்று நாளில் நான் பார்த்து டரியல் ஆகிப்போன படங்கள் (நல்லவேளை முழுசா பார்க்கலை)

    Jug Face - ஒரு எழவும் புரியல
    Ghost Shark - அதாவது சுறா மீன் பேயா மாறி பழி வாங்குதாம்
    Road Kill - ஹீரோ தன்னோட .... குடிச்சதுதான் மிச்சம்
    Age of Dinosaur - கிராபிக்ஸ் எப்படி பண்ணனும்கிற அறிவு இல்லாத படம்.

    ஹாரர் படங்களை ஒட்டுமொத்தமா டவுன்லோட் பண்ணினதன் விளைவு.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹஹா.. நல்லா மாட்டிகிட்டீங்க போல..

      Delete
  7. நன்று.அடுத்த படங்களை எதிர்பார்க்கிறேன்.

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம். நன்று.

    ஒரே நாளில் ஐந்து படங்கள் - ஒரு நாளில் ஒரு படம் பார்க்கவே முடியவில்லை ஆவி!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...