Monday, December 23, 2013

ஆவி டாக்கீஸ் - தூம் 3 (ஹிந்தி)


இன்ட்ரோ  
                          பிரம்மாண்டமாக படம் எடுத்து விட்டால் நாம் லாஜிக் மீறல்களை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது நம் இந்திய சினிமாவில் எழுதப் படாத ஒரு விதி. பொதுவாக அமீர்கானின் படங்களில் ஓரளவு எதார்த்தம் இருக்கும். பக்கா கமர்ஷியல் சினிமா என்பதாலோ என்னவோ பல வெள்ளைக் காக்கைகளை பறக்க விட்டிருக்கிறார் இயக்குனர்.கதை         
                            தொழிலில் ஏற்பட்ட நஷ்டத்தின் காரணமாய் தவணை கட்டாத சர்க்கஸ் கம்பெனியை தன் வசம் எடுத்துக் கொள்ள ஒரு வங்கி முயல, கடைசியாக ஒரு "சிறப்பான" ஒரு மேஜிக் ஷோ செய்து காட்டி சர்க்கஸை தன் வசம் வைத்துக் கொள்ள ஜாக்கி ஷெராப் முயல, ஆனால் வங்கி அதிகாரி மேஜிக் ஷோ சர்க்கஸில் ஒன்றாக எடுத்துக் கொள்ள முடியாது என்று சொல்லி நிராகரித்து சர்க்கஸை அபகரிக்க வருத்தத்தில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு இறக்கிறார், இதை கண்ணேதிரே பார்த்துக் கொண்டிருந்த சிறுவயது அமீர்கான் அந்த சர்க்கஸை மீட்டெடுத்து அந்த வங்கியையும் திவாலாக்குகிறார்.. கைது செய்ய வரும் அமெரிக்க போலீசுக்கும், இந்திய சூரப்புலி போலிஸ் அபிஷேக் பச்சனுக்கும் எப்படி டேக்கா கொடுக்கிறார் என்பதே கதை.
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                                 அமீர், அமீர், அமீர்... படம் முழுக்க அமீர்கான் அன்றி வேறொன்றும் இல்லை. முந்தைய படங்களில் இவருடைய "மாஸ்டர் பீஸ்" களை ரசித்து விட்டதாலோ என்னவோ இதில் இவர் செய்யும் "மாஸ்" பீஸ்கள் அவ்வளவாய் ஈர்க்கவில்லை. தவிர முக்கியமான ஒரு ட்விஸ்ட் கிளைமாக்ஸுக்கு முன்பே உடைந்து விடுவதால் பின்பாதி கொஞ்சம் இழுவையாய் தெரிகிறது. (கிறிஸ்டோபர் நோலனின் ப்ரெஸ்டீஜ் படம் பார்த்தவர்களுக்கு அந்த ட்விஸ்டும் புஸ் தான்..) அபிஷேக் பேருக்குதான் சூரப்புலி ஆபிசர், ஒவ்வொரு முறையும் அமீரிடம் தோற்கும்போதும் நமக்கே பாவமாக இருக்கிறது.. கூட வரும் உதய் சோப்ரா முந்தைய தூம்களில் இவர் சேட்டைகளை பார்த்து விட்டதால் வெறுப்பு தான் மிஞ்சுகிறது.

                                  படத்தின் ஒரே ஆறுதல் கத்ரீனா கைப். "கம்லி" பாடலில் கொடுக்கப்பட்ட ஐந்து நிமிடத்திற்குள் ஜிம்னாஸ்டிக்குடன் இவர் போடும் அசத்தல் நடனம் அமீரின் மனசை மட்டுமல்ல நம்முடைய மனசையும் கவர்கிறது. கிளைமாக்ஸுக்கு முந்தைய காட்சியில் கத்ரினாவிடமிருந்து அமீர் லிப் டு லிப் பெறும்போது எல்லா இளவட்டங்களின் வெறுப்புக்கும் ஆளாகிறார். கயிற்றின் மேல் பைக் ஓட்டுவது, நாற்பது அடுக்கு மாடியின் மேலிருந்து ஒற்றை கயிற்றின் உதவியுடன் இறங்குவதும், பாலத்தை பறந்தபடியே தாண்டுவதும் மசாலா பட விரும்பிகளுக்கு அருமையான விஷுவல் ட்ரீட்.

இசை-இயக்கம்
                                 சுனிதி சவ்ஹான் பாடிய கம்லி மற்றும் தூம் டைட்டில் பாடலை தவிர வேறெந்த பாடலும் மனதில் நிற்கவில்லை. மூன்றாம் முறை தூம் படத்திற்கு இசையமைத்திருக்கும் ப்ரீத்தமின் பின்னணி இசை ஒகே. சுதீப் சாட்டர்ஜியின் அசத்தல் ஒளிப்பதிவு படத்திற்கு ப்ளஸ். விஜய் கிருஷ்ண ஆச்சார்யா படத்தை இயக்க நிச்சயம் உழைத்திருக்கிறார்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 ஆடைகளை ஒவ்வொன்றாக அவிழ்த்தபடி நடனத்திலிருந்து அக்ரோபாட் மூவ்மேண்டுகளுக்கு மாறும் கத்ரீனாவின் அறிமுக காட்சி. பின் பாதியில் அமீர்கானின் உடல்மொழி. எழில் கொஞ்சும் சிகாகோ மாநகரம். (இவ்வளவு சொல்லிட்டு எங்க ஊரப் பத்தி சொல்லலேன்னா எப்படி)

                  Aavee's Comments - Hi-tech Masala.
17 comments:

 1. ஆவியை மட்டுமல்ல எல்லாத்தையும் டச் பண்ணும் போலையே தல ..அந்த அழகிய காட்சி .. இன்னும் பாக்கல சொன்ன்னதுதான் .

  ReplyDelete
 2. நல்ல விமர்சனம்...லாஜிக் இல்லா Hi-tech Masala.

  ReplyDelete
 3. // கண்ணேதிரே பார்த்துக் கொண்டிருந்த சிறுவயது அமீர்கான் அந்த சர்க்கஸை மீட்டெடுத்து அந்த வங்கியையும் திவாலாக்குகிறார்..// யாரும் பணம் போடலைன்னா அதுவா திவாலாகும்.

  .... சர்க்கஸ் படமா? டெரரா இருக்கும் போல இருக்கே !

  ReplyDelete
  Replies
  1. படம் முடிந்து வெளியே வரும் போது நம் முகத்தில் வியர்வை துளிகள் இருப்பது நிச்சயம்..

   Delete
 4. வணக்கம்
  ஆவி(அண்ணா)

  விமர்சனம் மிக அருமையாக உள்ளது வாழ்த்துக்கள் எப்பதான் ஆங்கிலப்பட விமர்சனம் எழுதுவிங்கள்.ஏன்என்றால் தமிழ்.ஹிந்தி எல்லாம் வந்தாச்சி...ஆவி என்றால் சும்மாவா?

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. ஆங்கிலம் எழுதி இருக்கிறேன் ரூபன்,,நன்றி..

   Delete
 5. சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள் ஆவி. முந்தய பாகம்லாம் பார்த்திருக்கிறீர்களா?

  ReplyDelete
  Replies
  1. ம்ம்ம்.. ஜான் ஆபிரஹாமுக்காக முதல் பாகமும், ஹ்ரிதிக்-ஐஸுக்காக இரண்டாவதும் பிடித்தது, மூன்றாவது ரொம்ப எதிர்பார்ப்போடு பார்த்ததாலோ என்னவோ கொஞ்சம் ஏமாற்றிவிட்டது.

   Delete
 6. //(கிறிஸ்டோபர் நோலனின் ப்ரெஸ்டீஜ் படம் பார்த்தவர்களுக்கு அந்த ட்விஸ்டும் புஸ் தான்..) //
  ஓஹோ... அப்புடியா சங்கதி...?

  அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

  ReplyDelete
 7. Nice Post Wish you all the best By http://wintvindia.com/

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails