கமலின் தீவிர பக்தனான நான் சினிமாவின் ஆராதகன் என்பதால் ரஜினி படங்களும் பார்ப்பதுண்டு. ஒரே பார்முலாவில் ஒரு படத்திற்கும் இன்னொரு படத்திற்கும் ஆறேழு வித்தியாசங்கள் தவிர கிட்டத்தட்ட அதே சாயலில் இருக்கும் அவர் படங்கள். சிகை அலங்காரத்தில் கூட பெரிய வித்தியாசம் இருக்காது. படு வேகமான தமிழ் உச்சரிப்பு சிறுவனாக இருக்கும்போது சில வசனங்களை புரிந்து கொள்வதில் பல முறை சிரமப்பட்டிருக்கிறேன். சமகால நடிகரான கமலுடன் ஒப்பிட்டு பார்க்கும்போது தான் நடிக்கும் படங்களில் எந்த ஒரு பரிட்சார்த்த முயற்சிகளும் எடுக்கத் தயங்குபவர். இதுதான் ரஜினியை பற்றி நான் புரிந்து வைத்திருந்த விஷயங்கள்.
கொஞ்சம் சினிமாவின் வட்டத்தை பெரிது படுத்திய காலத்தில் எண்பதுகளின் படங்களை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது எனக்கு. முதலில் "நல்லவனுக்கு நல்லவன்" என்ற படத்தை பார்த்த போது அதில் ஒரு திருடனாக, நல்ல கணவனாக, திருந்தி நல்லவனாக, ஒரு தொழிலாளியாக, பின் அந்த தொழிற்சாலைக்கு முதலாளியாக, ஒரு பெண் குழந்தைக்கு தந்தையாக நடித்திருப்பார். அதில் வரும் " சிட்டுக்கு சின்ன சிட்டுக்கு" பாடலில் ஓரிரு கண்ணீர் துளிகள் நம் கண்ணில் நம்மையும் அறியாமல் எட்டிப் பார்க்கும். அந்தப் படத்தில் தான் நான் முதலில் ரஜினி என்ற நடிகனைப் பார்த்தேன்.. அவ்வளவு நேர்த்தியாக அந்த கதாப்பாத்திரத்தை ஏற்று நடித்திருப்பார்.
பின்னர் "முள்ளும் மலரும்" எனும் படத்தை பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது. ஒரு அண்ணன் தங்கைக்கு இடையே உள்ள பாசம். காளி என்பவன் தன்னுடைய கர்வத்தை, தன்மானத்தை சற்றும் விட்டுக் கொடுக்காமல் ஊரையே எதிர்த்து நிற்கும் நடிப்பில் சத்தியமாக வேறு எந்த நடிகரும் இவ்வளவு அழகாக செய்திருக்க முடியுமா என்பது சந்தேகமே. அதிலும் கடைசி காட்சியில் ஊரார் சொல்வதை கேட்காமல் தங்கை அண்ணனின் பக்கம் வந்து நிற்கும் போது ஒரு பெருமிதப் பார்வையோடு ஊராரை கேலி பேசும் இடத்தில் அசத்தல். கையிழந்த சோகமும் தெரியக்கூடாது. தலைக்கனமும் கர்வமும் ஒருசேர கலந்த அதே சமயம் பாசமுள்ள அண்ணன் என்ற அந்த எல்லாவற்றையும் சரிவிகிதத்தில் கொடுத்திருப்பார்.
சமீபத்தில் "அவள் அப்படித்தான்" என்ற படத்துல பெண்கள் என்றால் வெறும் போகப் பொருள் மட்டும் தான் என்று நினைக்கும் ஒரு கேரக்டர். அதில் அவர் கமலிடம் பேசும்போதெல்லாம் பெண்களை அவ்வளவு தரக் குறைவாக பேசுவார். கமலின் கதாப்பாத்திரம் எவ்வளவு நல்லவனாக சித்தரிக்கப் பட்டிருக்குமோ அவ்வளவு எதிர்மறையான கதாப்பாத்திரம் இவருக்கு.. மனிதர் கொஞ்சமும் இமேஜ் என்பதை பார்க்காமல் நடித்திருப்பார். அதில் ஸ்ரீப்ரியா ஒரு சமயம் தாளிடப்பட்ட அறைக்குள் ரஜினியை அவமானப் படுத்துவது போல் ஒரு காட்சி இருக்கும். இன்றைய தலைமுறை நடிகர்கள் யாரும் சத்தியமாக அப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க துணிவார்களா என்பது சந்தேகமே.
இவையல்லாமல் "நினைத்தாலே இனிக்கும்" படத்தில் காமெடியனாக பல பல்புகளை வாங்குவார். இரு ஹீரோ சப்ஜெக்ட் என்றாலே இருவருக்கும் சரிசமமாக பங்களிப்பு இருக்க வேண்டும் என்று கண்டிஷன் போட்டு நடிக்கும் இன்றைய நடிகர்கள் எங்கே, கமல் கதாநாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக, ஜோக்கராக எல்லாம் நடித்திருப்பார். இவை வளரும் சமயத்தில் என்றாலும், ஹீரோ அந்தஸ்திற்கு வந்த பின்னும் அந்த கர்வம் துளியும் இல்லாமல் சில படங்களில் நடித்திருப்பார். இதை எல்லாம் பார்த்த பிறகு தான் ரஜினி என்னும் நல்ல நடிகனை தமிழ் சினிமா எவ்வளவு வீணடித்திருக்கிறது என்பதை உணர்ந்தேன். "வெறும் பஞ்ச் டயலாக்குகளும், ஸ்டைலும்" கொடுத்து அவரின் நல்ல நடிப்பை தேடி எடுக்காமல் விட்டுவிட்டது இயக்குனரின் குற்றமா.. இல்லை தன் திறமையை வெளிப்படுத்தும் நல்ல கதைகளை தேர்வு செய்து நடிக்காதது சூப்பர் ஸ்டாரின் குற்றமா.. எது எப்படியோ இன்று சிறு குழந்தைகளுக்கும் பிடிக்கும் நடிகராகவும், உலகெங்கும் பிரபலமாக உள்ள நடிகராகவும் இருக்கும் ரஜினி ஒரு நல்ல மனிதர் என்பதும் எல்லோரும் அறிந்ததே.. அவருடைய பிறந்த நாளான இன்று அவரை வாழ்த்துவதில் பல கோடி ரசிகர்களுடன் நானும் சேர்ந்து கொள்கிறேன்!!
ரஜினி செய்யும் பல ஸ்டைல்களை மற்றவர்கள் செய்தால் கேவலமாக இருக்கும். ஆனால் ரஜுனி செய்தால் ரசிக்கலாம்
ReplyDeleteஉண்மைதான் ராஜா.. ஆனா வெறும் ஸ்டைல் காலத்தால் மறக்கப்படும்.. அதோடு சேர்ந்த அவருடைய நடிப்பினால் தான் இன்னும் எத்தனை வருடங்கள் சென்றாலும் மக்கள் மனதில் அவர் சூப்பர் ஸ்டாராகவே இருப்பார்!!
Deleteநல்ல பகிர்வு!இந்த (நல்ல நடிகர்)ஆதங்கம் எனக்கும் உண்டு!பதிவர் செங்கோவி கூட அண்மையில்,'முள்ளும் மலரும்' விமர்சனத்தில்,சிலாகித்திருப்பார்!எப்படியோ,சூப்பர் ஸ்டார் ஆக இன்று வரை பரிணமிக்கிறார்,ரஜனி!உங்கள் தளம் மூலம் என் வாழ்த்துக்களும்!!!
ReplyDeleteசெங்கோவியின் பதிவை நானும் படித்தேன்.. நன்றி..
Deleteஇனிய வணக்கம் நண்பரே...
ReplyDeleteநடிகர் ரஜினி நடித்த படங்களைப் பற்றிய
சிறுகுறிப்புடன் படம்பற்றிய உங்களின்
எண்ண ஓட்டத்தையும் குறிப்பிட்டது அழகு.
அவரின் சிறந்த படங்களை இங்கே
பட்டியலிட்டு இருக்கிறீர்கள்..
அந்த வரிசையில் எனக்குப் பிடித்தது
""ஆறிலிருந்து அறுபது வரை"""
நான் எப்போதோ பார்த்தது.. மீண்டும் பார்க்கிறேன்..
DeleteAlso you can watch the movies Johny, Engeyo ketta kural...
Deleteஅருமை
ReplyDeleteவாழ்த்துக்கள்
நண்பரே
நன்றிங்க!
Deleteவணக்கம்
ReplyDeleteஆவி(அண்ணா)
இன்று தலைவனின் பிறந்த நாள் சிறப்பு பதிவு அருமை வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்!
Deleteஅலசல் அருமை, ஆறில் இருந்து அறுபது. மூன்று முகம் சேர்த்து இருக்கலாம். ஶ்ரீ தேவியுடன் நடித்த படங்களிலும் அவரின் நடிப்பு சிறப்பாக. இருக்கும்
ReplyDeleteமூன்று முகம் கொஞ்சம் மசாலா இருப்பது போல் எனக்கு தோன்றியது.. ஆ..அ.. வரை பார்த்துவிட்டு சொல்கிறேன்..
Deleteரஜினி ! வசீகரமான நடிகர், அவர் செய்யும் ஸ்டைல்,டான்ஸ் எல்லாம் மற்றவர்கள் செய்யும்போது காமெடியாக இருக்கும் ,ரஜினி செய்யும் போது செமயா இருக்கும் ! " அவன் கண்ணுக்குள்ளே காந்தம் உண்டு உண்மை தானடா " !!! ஹேப்பி பர்த்டே தலைவா :)
ReplyDeleteஉண்மைதாங்க.. வருகைக்கு நன்றி
Deleteரஜினி பற்றிய நல்லதொரு அலசல் அண்ணா...
ReplyDeleteநன்றி தம்பி!
Deleteஆறிலிருந்து அறுபது வரை, பாட்ஷா - இப்படி பல படங்கள் ரஜினி அவர்களால் மட்டுமே முடியும்... சிறப்பாகவும் இருக்கும்...
ReplyDeleteஆமாம் DD, உண்மைதான்!
Deleteரஜனி அங்கிள் நான் இங்க இருக்கிறன் இங்க .எங்கம்மா இருக்கிற ?..சுவிசில் இப்போது தான் விடிந்துள்ளது இனிமேல் தான் ஆக்கமே வெளியிடவுள்ளேன் :)))அதற்கு முன்னர் எங்கள் ஆவிச் சகோதரர் என் அபிமான நடிகர் ரஜனியை வாழ்த்தி எழுதிய இந்த
ReplyDeleteஆக்கத்தினைக் கடந்து செல்ல முடியவில்லை .சகோதரா மிக்க நன்றி பகிர்வுக்கும்
வாழ்த்திற்கும் .நானும் தங்களுடன் சேர்ந்து இம் மாபெரும் கலைஞனை வாழ்த்துவதில்
பெருமை கொள்கின்றேன் .
கண்டிப்பாக சகோதரி! சூப்பர் ஸ்டாருக்கு ஒரு ஓ!!
Deleteரஜினியை நடிகராக விட, எளிமையான மனிதராக ரொம்பப் பிடிக்கும். போலித்தனம் இல்லாத மனிதன்.
ReplyDeleteஆமா ஸ்ரீராம் சார்.. பொது மேடைகள்ல கூட போலியா விக்கு கூட வச்சுக்க மாட்டார்!! ;-)
Deleteரஜினி கமலைப்போல தேர்ந்தெடுத்து நடித்து இருந்தால் சிலருக்கு மட்டுமே பிடித்து இருக்கும்! அவரது சினிமா என்பது பொழுது போக்காக மாறிவிட்டதால் பலதரப்பட்ட ரசிகர்களையும் பெற்று உள்ளார். கமல் ரசிகரான உங்களுக்கும் ரஜினியை பிடிக்கிறது மற்றவர்களுக்கும் பிடிக்கிறது! பகிர்வுக்கு நன்றி!
ReplyDeleteநிஜம்தான் நண்பா!
Delete\\கமலின் தீவிர பக்தனான நான் சினிமாவின் ஆராதகன் என்பதால் ரஜினி படங்களும் பார்ப்பதுண்டு.\\கமல் ரசிகனா இருந்தா ரஜினி படம் பார்ப்பதே குத்தமா? .[வடிவேலு ஸ்டைலில் ........] ஐயோ.................ஐயோ...........
ReplyDelete\\மனிதர் கொஞ்சமும் இமேஜ் என்பதை பார்க்காமல் நடித்திருப்பார். அதில் ஸ்ரீப்ரியா ஒரு சமயம் தாளிடப்பட்ட அறைக்குள் ரஜினியை அவமானப் படுத்துவது போல் ஒரு காட்சி இருக்கும். இன்றைய தலைமுறை நடிகர்கள் யாரும் சத்தியமாக அப்படி ஒரு கதாப்பாத்திரத்தில் நடிக்க துணிவார்களா என்பது சந்தேகமே.\\ ரஜினி வந்த சமயத்தில் கமல் பிரபல நடிகர். அந்த சமயத்தில் ரஜினிக்கு பட வாயிப்பு கிடைப்பதே பெரிசு. கிடைச்ச ரோலை பண்ணியிருக்கார். அவ்வளவு தான்.........
இல்லங்க.. இது ரஜினியுடைய முப்பத்தி அஞ்சோ ஆறாவதோ படம்.. இந்த படம் வரும்போது அவர் ஹீரோவாவும் பண்ணிக்கிட்டு இருந்திருக்கார்!
Deleteஉண்மை தான் ஆவி..நல்ல நடிகர்..மாஸ் ஹீரோவாகவே வீணடித்து விட்டார்கள்.
ReplyDeleteஆமா பாஸ்!!
Deleteஅமோல் பாலேகர் நடித்த தில்லுமுல்லு [ஹிந்தி] பார்த்த பிறகு தான் தமிழ் பார்த்தேன். ஆனாலும் ஏனோ ரஜினியை அந்த பாத்திரத்தில் மிகவும் ரசித்தேன்.
ReplyDeleteபல படங்கள் பிடித்தவை..... நல்ல அலசல் ஆவி.
அவருக்கு என் சார்பிலும் பிறந்த நாள் வாழ்த்துகள்....
நன்றி வெங்கட் ஸார்!
Delete