Thursday, December 5, 2013

ஆவி டாக்கீஸ் - விடியும் முன்

                                         



இன்ட்ரோ  
                          த்ரில்லர் வகையறாவிற்கு மிக முக்கியமான விஷயம் வேகம். அதைத் தவற விட்ட போதும் சொல்ல வந்த கதையை தெளிவாக சொல்லி முடித்த இயக்குனருக்கு பாராட்டுகள். "ஆரண்ய காண்டம்" படத்திற்கு பிறகு தமிழ் சினிமாவில் ஒரு நல்ல முயற்சி. சிறந்த ஆட்களை தேர்வு செய்ததிலும் இயக்குனர் வெற்றி பெறுகிறார்.

கதை         
                            பாலியல் தொழில் செய்யும் ஒரு பெண் பணத்திற்காக ஒரு சிறுமியை அதே அவலத்தில் தள்ள, பின் கடைசி நிமிடத்தில் மனம் மாறி அவளைக் காப்பாற்ற துடிக்கும் போது அவளைச் சூழும் ஆபத்துகள்,  அவள் மனிதக் கழுகுகளுக்கு சிறுமியுடன் பயந்து ஓடுவதும், கடைசியில் அவர்களிடமிருந்து தப்பித்தாளா என்பது தான் கதை..

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              பூஜா-நீண்ட இடைவெளிக்குப் பின் நடித்திருக்கிறார். நான் கடவுள் படத்தில் இவரது நடிப்பு கண்டுகொள்ளப் படாமல் போனாலும் இதில் மீண்டும் ஒருமுறை அந்த ரேகா எனும் பாலியில் தொழில் செய்யும் பெண் கதாப்பாத்திரத்திற்கு உயிரூட்டியிருக்கிறார். துளி பிசகினாலும் ஆபாசமாக பார்க்கப்படும் அபாயம் உள்ள இதுபோன்ற படத்தில் "கண்ணியமான" நடிப்பை வழங்கியிருக்கிறார். சொந்தக் குரலில் பேசி அசத்திய இவருக்கு இன்னொரு சபாஷ். சிறுமி மாளவிகா மணிகுட்டன் தமிழ் சினிமாவுக்கு வழக்கமான அதிபுத்திசாலி குழந்தை நட்சத்திரம். ( எப்பதான் குழந்தை கதாப்பாத்திரங்களை குழந்தைகளாவே காட்டுவாங்களோ- இது உலக சினிமா ரசிகனின் ஆதங்கம்)

                              மேலும் படத்தின் தூணாக நான் கருதுவது ஜான்விஜய் மற்றும் சிங்காரம் கதாப்பாத்திரத்தில் வரும் அமரேந்திரன். வழக்கம் போல் தன் பேஸ் வாய்ஸில் மிரட்டிச் செல்கிறார் ஜான் விஜய். வினோத் மற்றும் லக்ஷ்மி ராமகிருஷ்ணன் ஆகியோரின் நடிப்பும் ஒக்கே ரகம். முகபாவங்களில் வினோத்  (நந்தா, நான் மகான் அல்ல படங்களில் நடித்தவர்) அமைதியை நிரப்பினாலும் தன் பங்கை செவ்வனே செய்திருக்கிறார்.


இசை-இயக்கம்
                                 கிரிஷ் கோபாலகிருஷ்ணனின் இசை இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம்.. எல்லாக் காட்சியிலும் ஒலிக்கும் கீ-போர்டு இசை கொஞ்சம் எரிச்சல் ஊட்டுகிறது. வேகமான திரைக்கதை, தேவையற்ற காட்சிகளை தவிர்த்தல், அதிகப்படியான  ஸ்லோ-மோஷன் காட்சிகள் போன்றவை சலிப்பை கூட்டினாலும் நல்ல முயற்சிக்காக பாலாஜி குமாருக்கு பாராட்டுகள்.


                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                  டபுள் க்ராஸிங் செய்யும் ஜான்விஜய் வரும் காட்சிகள்.

                  Aavee's Comments - Still dark.



14 comments:

  1. ///Aavee's Comments - Still dark./// இந்த ஒரு வரி போதுமே இந்த படத்துக்கு.

    ReplyDelete
  2. விறுவிறுப்பா இருக்கும் போல...!

    ReplyDelete
    Replies
    1. விறுவிறுப்பா இருந்திருக்கலாம் DD!

      Delete
  3. ஒரிஜினல் படம் 1:22 மணி நேரம் தான். அதை இழுத்ததால ஸ்பீடு குறைஞ்சிருக்கலாம்

    ReplyDelete
    Replies
    1. அதுக்காக இப்படியா.. மாடிப்படி ஏர்றத அஞ்சு நிமிஷம், ஜூஸ் ஊத்தறத அஞ்சு நிமிஷம்.. அப்படின்னு மக்களோட பொறுமைய சோதிக்கக் கூடாது..

      Delete

  4. தெளிவான விமர்சனம். படத்திற்கு நிறைய பாசிடிவ் ரிவியு வருகிறது... கண்டிப்பாக பார்க்கலாம் என்றிருக்கிறேன்... பூஜா மிகத் தத்ரூபமாக நடித்திருப்பதைப் பார்த்தால் சொந்த அனுபவம் போல தெரிகிறது. ஐ மீன் நான் சீமான் , ஆர்யா என நம்பி ஏமாந்ததை சொன்னேன்.

    ReplyDelete
    Replies
    1. அது பத்தியெல்லாம் எனக்கு தெரியாது பாஸ்! ;-)

      Delete
  5. விமர்சனத்துக்கு நன்றி,ஆ.விஜய்!

    ReplyDelete
  6. நன்றி விமர்சகர் ஆவி . யுகி விமர்சனம் படிச்சேளா ?

    //Still dark//

    அப்டின்னா ஸ்டில்ஸ் எல்லாம் டார்க்கா இருக்கா வோய் ...?

    ReplyDelete
  7. இப்போ நீங்க படம் பாக்கலாம்ங்குறீங்களா, பாக்க கூடாதுங்குறீங்களா?

    ReplyDelete
  8. நல்ல விமர்சனம்...
    படம் பார்க்கலாம்ன்னு சொல்றீங்க...

    ReplyDelete
  9. நல்ல விமர்சனம். எப்புடித்தான் உங்க வீட்ல எல்லா படத்தையும் பார்க்க விடுராங்களோ தெரியல. நான் படத்துக்கு கிளம்பறன்னு தெரிஞ்சாலே வெளக்காமூற எடுத்துடுராங்க... வாய்ப்பு கிடைச்சா லேப் டாப்ல பார்க்கணும்...

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails