Monday, December 30, 2013

இந்த வருடம்: திரும்பிப் பார்க்கிறேன்..

                 


                       நான் பொதுவா என் காரிலேயே குறைவா யூஸ் பண்றது ரிவர்ஸ் கியர் தான். ஏன்னா முன் வச்ச டயர பின் வைக்க வேண்டாமேன்னு தான். நம்ம 'வாத்தி' ராஜா "திரும்பிப் பார்க்கிறேன்" ன்னு சொன்னதும் நான் வருடக் கடைசில எழுதிக்கலாம்ன்னு அப்படியே விட்டுட்டேன்..  நேத்து ட்ராப்ட்ல பார்த்தப்போ தான் இதை மறந்துட்டஞாபகம் வந்தது. அது என்னன்னு பார்ப்போம்.  இந்த வருடம் ஆவிக்கு நிறைய 'சம்பவங்கள் நிறைந்த வருடமாக' (Eventful Year - Translation அது!).இருந்தது.


                      வருடத் துவக்கத்தில் ஆர்வத்துடன் எதிர்பார்த்த கடவுளின் திரைப்படம் சில அரசியல் காரணங்களுக்காய் தடை செய்யப்பட்டு, அதை காணவேண்டி கோவையிலிருந்து நண்பர் உதயகுமாருடன் சேர்ந்து கேரளா சென்று படம் திருப்தி அடைந்தேன். அதே சமயத்தில் என் வாழ்வில் நானும்  ஒரு மீள முடியாத சோகத்தில் இருந்த போது தான் "திரைக்கடவுள்" படத்தை வெளியிடாவிட்டால் நாட்டை விட்டே போவதாக அறிவித்தார். அவருக்கு ஆதரவாக தமிழ்நாடே துணை நின்றது. எனக்கு ஆதரவாக பாஸ்கர், ஆனந்த குமார் இருவரும் நின்ற போது இடிந்து போகாமல் பிடித்து நிற்க முடிந்தது. உற்ற துணையாய் நின்ற 'SAM' என்கிற சமீரா  என் வாழ்வில் எனக்கு கிடைத்த அற்புதமான தோழி.


                     புண்ணிய ஸ்தலமான வெள்ளியங்கிரி பயணம் கோவை நேரம் ஜீவா, ஆனந்தகுமார், உதய் ஆகியோருடன் சென்று வந்தது மனதுக்கு இதம் தந்தது. தங்கையின் திருமண வேலைகள் என்னை பிஸியாக வைத்திருந்தது. கல்யாணத்திற்கு சிறிது நாட்களுக்கு முன் என் வீட்டிற்கு வலது "டயர்" எடுத்து வைத்து உள்ளே வந்தாள் அனாமிகா. (Hyundai i20) அமெரிக்காவில் "இன்பினிட்டி" என்று ஒரு சொகுசு கார் உண்டு. அதில் இருந்த எல்லா வசதிகளும் அனாமிகாவில் இருந்தது கண்டு அதிசயித்தேன். தங்கையின் திருமணம் விமரிசையாக குருவாயூர் கோவிலில் நடந்தது. வாத்தியாரின் (பாலகணேஷ்) கோவை வருகை மகிழ்ச்சி தந்தது. கவியாழி ஐயாவின் வருகையும் சந்திப்பும் கோவையில் நடைபெற்றது. புலவர் ஐயா வீட்டில் வைத்து சில இணைய நண்பர்களை சந்தித்தது மகிழ்ச்சி கொடுத்தது. குறிப்பாக அன்று அறிமுகமான மஞ்சுபாஷிணி அக்காவின் அன்பும் பாசமும் மெய்சிலிர்க்க வைத்தது. கவிஞர் மதுமதி மற்றும் சேட்டைக்காரன் ஐயாவையும் அன்று சந்திக்க முடிந்தது.



                     நண்பர்களுடன் குற்றாலம் பயணம் செய்தது மறக்க முடியாத அனுபவம். வரும் வழியில் திண்டுக்கல் தனபாலன் அவர்களை சந்தித்த அனுபவம் இனிமை. நண்பர் ஜீவாவுடன் (கோவை நேரம்) முதன் முதலாய் நீச்சல் குளத்திற்கு சென்று ஆழம் தெரியாமல் காலை விட்டு மரணத்தின் விளிம்பிற்கு சென்று மீண்டு வந்த அனுபவம் மறுபிறப்பை போல் உணர வைத்தது. அதைத் தொடர்ந்து நான் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்த நண்பன்/உறவினன் பிரகாஷ் சவுதியிலிருந்து திரும்பியது இன்னும் உற்சாகத்தை கூட்டியது. இருவரும் தியேட்டர்கள், உணவகங்கள், மால் என பல இடங்களுக்கும் சுற்றி பால்ய கால நினைவுகளை மீட்டெடுத்துக் கொண்டோம். அதே ஜோரில் இருவரும் கோவையிலிருந்து பொள்ளாச்சி செல்லும் வழியில் முப்பது கிலோமீட்டர் வேகத்திலும், எதிரே வாகனங்கள் எதுவும் வராத போதும் விபத்தில் சிக்கிய போது "விதி" என்ற ஒன்றின் மேல் நம்பிக்கை வந்தது.


                     அடிபட்டு ஆஸ்பத்திரியில் மாவுக்கட்டு போடும்போதும் அலப்பறைகள் விட்டுக் கொண்டிருந்த என்னைப் பார்த்து ரெண்டு கைலையும் எலும்பு நொறுங்கியிருக்கு எப்படி சிரிச்சு சிரிச்சு பேசறீங்க என்று சுற்றி நின்ற சிஸ்டர்களிடம் இதை விட பெரிய காயங்கள் ஏற்கனவே தாங்கிக் கொண்டதால் இது மிகவும் சிறியதாக தோன்றுகிறது என்று நான் கூறவில்லை. ஆஸ்பித்திரியில் இருந்த சமயத்தில் அன்புடன், ஆதரவுடன் போன் செய்தும், நேரில் வந்தும் என்னை உற்சாகப்படுத்திய நண்பர்கள், இணையத் தோழர்கள், முகநூல் அன்பர்கள், உறவினர்கள் எல்லோருக்கும் நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்.


                    ஒரு மாதம் வீட்டிற்குள் கழித்த நேரத்தை பதிவர் சந்திப்பு பாடல் எழுதி பயனுள்ளதாய் மாற்றிக் கொண்டேன். பதிவர் சந்திப்பு விழாவிற்கு முன்னரே சென்று உதவ எண்ணியிருந்த நினைப்பு நிறைவேறா விட்டாலும் சந்திப்பிற்கு பத்திரமாக சென்று வர உதவிய நண்பர்  ஜீவா, கலாகுமரன் சார், எழில் மேடம், அகிலா மேடம், கோவை சதீஷ் ஆகியோருக்கு நன்றிகள். பதிவர் சந்திப்பில் அதுவரை தொலைபேசியிலும் இணையத்திலும் மட்டுமே உரையாடிக் கொண்டிருந்த சீனு, ரூபக், ஸ்கூல் பையன், அரசன், ராஜி அக்கா, "தீவிரவாதி" சதீஷ், ரேவதி சதீஷ், "தென்றல்" சசிகலா, ரமணி ஐயா, KRP செந்தில், "தளிர்" சுரேஷ், 'தமிழ்வாசி பிரகாஷ், 'ராஜபாட்டை' ராஜா, 'இரவின் புன்னகை வெற்றிவேல்', ஆரூர் மூனா செந்தில்,  நீண்ட நாள் பதிவுலக நண்பர் குடந்தையூர் சரவணன், ரஞ்சனி அம்மா, அப்துல் பாசித்  திண்டுக்கல் தனபாலன்,உணவுலகம் ஆபிசர் சங்கரலிங்கம்,  ஆகியோரை கண்டது மகிழ்ச்சி. சுப்பு தாத்தாவை கண்ட போதும் அளவளாவ முடியாமல் போனது வருத்தமே. (இன்னும் பலரை சந்தித்த சந்தோசம் மனதில் உண்டு, இங்கு குறிப்பிடாமல் மறந்து இருந்தால் மன்னிக்கவும்.)




                    சந்திப்பின் பிறகு "வாத்தியார்" என்னை சிஷ்யனாக ஏற்றுக் கொண்டதும், சீனு, ரூபக் போன்றோர்கள் நண்பர்களாக ஏற்றுக் கொண்டதும், என்னை அண்ணனா காயத்ரி (ஜி.டி) தத்து எடுத்துக் கொண்டதும் சந்தோஷமான நிகழ்வுகள். என் எழுத்துகளுக்கு ஊக்கம் கொடுத்து பல பதிவுகள் எழுத ஆதரவு அளித்த அனைத்து வாசகர்களுக்கும் குறிப்பாக, வடிவு பாஸ்கர், நண்பன் ஜெயராஜ் ஆகியோருக்கு நன்றிகள். வருடக் கடைசியில் வந்த "சென்யோரீட்டா" (மஹிந்த்ரா செஞ்சுரோ) சந்தோஷங்களை இரட்டிப்பாக்கியது. நான் நீண்ட நாட்கள் ஆசைப்பட்ட "கடவுள் எனும் கோட்பாடு" பதிவு எழுத ஆரம்பித்துள்ளேன். அருண், அகிலா மற்றும் விக்கியுடன் கொண்டாடிய மகிழ்ச்சியான தீபாவளி.




                    உலக சினிமா ரசிகன் அவர்களுடன் கோவையிலும், சென்னையிலும் (உலக சினிமா திருவிழா) பார்த்த படங்கள் குதூகலம் மட்டுமல்லாது அவர் என்னுடன் பகிர்ந்த சினிமாவின் நுணுக்கங்கள் பற்றிய அறிவும் அளப்பரியது. முகநூலில் இவருடைய சொல்லாடல்களை ரசிக்காதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். டிசம்பரில் சீனுவின் வருகை உவகை அளித்தது. இந்த வருடம் பல சோகங்களையும், சந்தோஷங்களையும் கொடுத்திருந்தாலும் அது சிறப்பானதாகவே உணர்கிறேன். அடுத்த வருடம் எல்லோருக்கும் சிறப்பானதாக இருக்க வேண்டுமென வாழ்த்துகிறேன்.. வாசகர்கள் அனைவருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!!

H A P P Y   N E W   Y E A R   -    2 0 1 4  !!!







57 comments:

  1. போன வருஷம் நீங்க திரும்பி பார்க்கலையா பாஸ்? :P

    ReplyDelete
    Replies
    1. யாரும் திரும்பி பார்க்கவே கூப்பிடல.. இந்த வருஷம் வாத்தி கூப்பிட்டதுக்காக எழுதினேன்.. :)

      Delete
    2. புத்தாண்டு வாழ்த்துகள் அப்துல்!!

      Delete
  2. பகிர்வு அருமை!உங்களுக்கும் முற் கூட்டிய புது வருட வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. புத்தாண்டு வாழ்த்துகள் யோகா ஸார்!!

      Delete
  3. நல்ல அனுபவப் பதிவு!! தொடர்கிறோம்! உடல் நலம் நன்றாகியிருக்கும் என நினைக்கிறோம். உங்களுக்கு இந்த புத்தாண்டு எல்ல சந்தோஷங்களையும் கொடுக்கட்டும்!
    இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்!!

    ReplyDelete
    Replies
    1. முதல் வருகைக்கு நன்றி.. உடல் நலம் குறித்து விசாரித்தமைக்கு நன்றி. இப்போது நலமாக இருக்கிறேன்..

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் கோவை ஆவியின் புத்தாண்டு வாழ்த்துகள்!!

      Delete
  4. தொகுப்பு சுவாரசியம் ஐயா.இனிய முன்கூட்டிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஐயா எல்லாம் வேண்டாங்க. ஆவின்னே கூப்பிடுங்க. புத்தாண்டு வாழ்த்துகள்!!

      Delete
  5. அருமையான பகிர்வு என்னுள்ளும் ஒருமுறை
    பழைய ஆண்டின் நினைவுகளை நினைவுகளைக்
    கிளறிப்போனது.
    மனம் கவர்ந்த பதிவு

    தங்களுக்கும் தங்கள் குடும்பத்தார் அனைவருக்கும்
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா.. சென்ற ஆண்டு உங்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி..

      புத்தாண்டு வாழ்த்துகள் ஐயா!!

      Delete
  6. மிகவும் ரசித்து எழுதி உள்ளீர்கள்... பாராட்டுக்கள்...

    வரும் ஆண்டும் சிறப்பாக அமைய எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆண்டு நான் சுமார் நூற்றி அறுபது பதிவுகள் எழுதிருக்கிறேன்.. எல்லாவற்றிற்கும் முதல் ஆளாக வந்து பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்திய உங்களுக்கு என் மனப்பூர்வமான நன்றிகள்.

      இந்த வருடம் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தார்க்கும் சந்தோஷமாய் அமைய என் வாழ்த்துகள்.

      Delete
  7. WISH YOU A JOYFULL, HAPPIEST, PROPEROUS NEW YEAR DEAR ANAND!

    ReplyDelete
    Replies
    1. இந்த ஆண்டு எனக்கு மிகவும் சிறப்பாக அமைந்ததற்கு உங்க அறிமுகம் கிடைத்தது தான் ஸார்.. Thank You 2013!!

      HAPPY NEW YEAR FOR YOU SIR!!

      Delete
  8. புத்தாண்டு வாழ்த்துக்கள்!
    தமிழ்மணம் +1
    ஒய்வு பெற்றபின் உங்களை (பலர் என் மகன் வயதை ஒத்தவர்கள்) சந்திப்பேன் என்று நினைக்கிறேன். எப்படி கிண்டல் செய்வது என்று இலவச வகுப்பு வேண்டு மென்றாலும் எடுக்கிறேன்!

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றிங்க..உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!!

      கண்டிப்பாக சந்திப்போம் ங்க..

      // எப்படி கிண்டல் செய்வது என்று இலவச வகுப்பு வேண்டு மென்றாலும் எடுக்கிறேன்!//

      இது புரியல..

      Delete
  9. பதிவை தொடர்ந்தமைக்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. இது போன்ற ஒரு பதிவு அழைத்தமைக்கு நன்றி ராஜா.. சென்ற ஆண்டு சுகமாய் அசைபோட உதவியது அது..

      Delete
  10. நம் எல்லாரையும் இனைத்த இந்த பதிவுலகிர்க்கு நன்றி

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா என் நன்றிகளும்..

      உங்களுக்கும் உங்க குடும்பத்தாருக்கும் (குறிப்பாக குட்டி சூப்பர் ஸ்டார் சரணுக்கும்) என் புத்தாண்டு வாழ்த்துகள்!!

      Delete
  11. //நான் என்றும் கடமைப் பட்டுள்ளேன்.// ஆகையால் என்னோட இந்த மாசத்து இன்டர்நெட் பில்ல கட்டிருங்க.. அடுத்த மாசம் என்ன பண்ணனும்னு அடுத்த மாசம் சொல்றேன் :-)

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி.. இணையத்தின் இடைவிடா சேவை உங்களுக்கு தேவை என்றால் இதுபோல் கேட்டிருக்க மாட்டீர்கள்.

      அண்ணா, அப்பா, அம்மா, கௌதம், ஸ்ரீமதி உடன் சேர்த்து உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!!

      Delete
  12. வாழ்க்கைப் பயணம் ...!

    மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா..

      உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!!

      Delete
  13. அருமையான திரும்பிப்பார்த்தல் ..ஆனால் என்னவோ ஆவியின் வழக்கமான ஜோஸ் குறைந்திருக்கிறது 2013 செல்கிறதே என்ற வருத்தமா...வருத்தப்படாதீங்க 2014 வந்துகிட்டேயிருக்கு...

    ReplyDelete
    Replies
    1. ம்ம்.. கலக்கிருவோம் மேடம்..

      Delete
  14. சுப்பு தாத்தாவுடன் அளவளாவ முடியவில்லையே என்ற வருத்தமா?


    அடடா....

    பேரப்புள்ள என்ன செண்டிமெண்ட் . என்ன செண்டிமெண்ட் ..

    உள்ளம் உருகுதையா...

    உங்களுக்காகவே நான்
    எங்க புது வருஷ கொண்டாட்ட ஸ்டால் லே
    ஒரு தனி ஸ்டால் போட்டு இருக்குய்யா.

    வந்து ஒரு கப் டீ சாப்பிடுங்க.
    புது வருஷ
    வாழ்த்துக்கள்

    சுப்பு தாத்தா.
    www.vazhvuneri.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. பார்த்தேன் தாத்தா..உங்களுக்கும் ஹேப்பி நியு இயர்!!

      Delete
  15. தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் !

    நீங்கள் நினைத்த காரியம் வெற்றி பெற வாழ்த்துகிறேன்..... ஆரோக்கியமும், வளமும் பெருகட்டும் இந்த ஆண்டில் !!

    ReplyDelete
  16. ஹை.... சூப்பர் சூப்பர் சூப்பர் (y)

    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் அண்ணா

    ReplyDelete
    Replies
    1. இதே குஷியோட எப்பவும் இருக்கணும் தங்கச்சி.. :)

      Delete
  17. நம்ம பெயரையும் குறிப்பிட்டமைக்கு நன்றி... இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நம்ம பேரை நாமே குரிப்பிடனுமா என்ன,, :)

      Delete
  18. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர்&நண்பர்கள்&உறவினர்கள் அனைவருக்கும்,இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துக்கள்!பிறக்கும் ஆண்டில் தொல்லைகள் நீங்கி நலமே வாழ இறைவன் துணை வேண்டுகிறேன்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி.. உங்களுக்கும் எல்லா நலமும் வளமும் கிடைக்க என் பிரார்த்தனைகள்!!

      Delete
  19. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. நன்றி சார். உங்களுக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

      Delete
  20. Nalla pagirvu, Anand..! Iniya puthandu vaazhthukkal..! :-)

    ReplyDelete
  21. சூப்பருப்பா... சோக்கா தியும்பிப் பாத்துகினபா... (நாலாவது படம் - அப்புடிக்காத்தான் தியும்பிப் பாக்கனுமாபா...?)

    //முப்பது கிலோமீட்டர் வேகத்திலும், எதிரே வாகனங்கள் எதுவும் வராத போதும் விபத்தில் சிக்கிய போது//
    "ஆவி" வாய்க்கையில அல்லாம் சாதாரணமப்பா...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. மெய்யாலுமே அதாம்பா நடந்தது..

      Delete
  22. நல்லாவே திரும்பி பார்த்திருக்கீங்க ஆவி. இனிய ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  23. நல்ல அலசல் ஆவி......

    உங்களுக்கும் குடும்பத்தினர் அனைவருக்கும் மனம் நிறைந்த புத்தாண்டு நல்வாழ்த்துகள்.....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தாருக்கும் என் புத்தாண்டு வாழ்த்துகள்!

      Delete
  24. தங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் நண்பா

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்! இந்த வருஷம் முதல் புத்தகத்தோடு இனிதே ஆரம்பிக்கட்டும்..

      Delete
  25. திரும்பிப் பார்த்தது நன்றாக இருக்கிறது.
    இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  26. anney happy new year ,,,,, antha pakkam therumbi parthathu pothum, ini intha pakkam thirumbuga anney :))))))))))))))))))))))

    ReplyDelete
  27. பகிர்வு அருமை... இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...