Saturday, January 4, 2014

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (முதல் பிரிவு ) -13

முந்தைய பதிவுகளுக்கு...


                       ஓரிரு வாரங்களில் தேர்வுகள் முடிந்து எல்லோரும் ஊருக்கு செல்ல ஆயத்தமாகிக் கொண்டிருந்தனர். கல்லூரியின் எல்லா பாகங்களிலும் மாணவர்கள் கும்பல் கும்பலாக நின்று கொண்டு ஒருவருக்கொருவர் தங்கள் விடுமுறை திட்டங்களைப் பற்றி பேசிக் கொண்டிருந்தனர். ரமா நாங்கள் எப்போதும் அமர்ந்து அளவளாவும் சிவில் இஞ்சினியரிங் அருகில் இருந்த ஒரு பெஞ்சில் கொஞ்சம் கவலை தோய்ந்த முகத்தோடு நின்றிருந்தாள். என் புத்தகப் பையை எடுத்துக் கொண்டு அவள் அருகே சென்றேன். என் வரவுக்காய் காத்திருந்தவள் போல் அந்த பெஞ்சில் அமர்ந்தாள். சிவில் இஞ்சினியரிங் பிரிவு மாணவர்களுக்கு முன்பே தேர்வுகள் முடிந்து விட்டதால் அங்கே நாங்கள் இருவர் மட்டுமே இருந்தோம்.


                         மெதுவாய் சென்று அவள் அருகே ஒன்றும் பேசாமல் அமர்ந்தேன். புத்தகப் பையின் மேல் வைத்திருந்த என் கையை எடுத்து தன் கைகளோடு சேர்த்துக் கொண்டாள். அவள் பக்கமாய் திரும்பிய போது தான் அவள் கண்களில் கோர்த்திருந்த நீரைப் பார்த்தேன்.. "ஏ.. ஏண்டா அழறே" என்றேன் நான். "ம்ம்.. இன்னும் ஒன் மன்த் உங்களை பார்க்க முடியாதே.. அதை நினைச்சதும் என்னையும் அறியாமல் கண்ணீர் வருது. மனசுக்கு கஷ்டமா இருக்கு.." என்றாள். "என்னடா நீ, ஒன் மன்த் இதாங்கறதுக்குள்ள போயிடும். தவிர உன் போன் நம்பர் கொடு. நான் தினமும் கூப்பிடறேன்.." "நான் நம்பர் தர்றேன். ஈவ்னிங் சிக்ஸ் டு சிக்ஸ் தேர்ட்டி கூப்பிடுங்க. நான் உங்க காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன். நீங்க கூப்பிடும் போது என்னைத் தவிர யாரும் எடுத்தா ஒண்ணும் பேசாம வச்சிடுங்க."  "ஏன், ரமாகிட்ட கொடுங்க ன்னு சொல்லி உங்கிட்டே பேசறேன்" "அச்சச்சோ, அப்படி ஏதும் பண்ணிடாதீங்க. அப்பா ரொம்ப ஸ்ட்ரிக்ட். அவருக்கு மட்டும் தெரிஞ்சா தொலைச்சுடுவார்." "அப்புறம் கண்டுபிடிக்க போலீஸ்ல கம்ப்ளைன்ட் கொடுப்பாரா?" என்றதும் "சீரியஸா பேசும்போது விளையாடாதீங்க. " என்று சினமுற்றாள். "ஒக்கே டா, ஐ வில் கால் யு டெய்லி டா.." . அவளை சமாதானப் படுத்தி பின் சிறிது நேரம் பேசிவிட்டு அவளை வண்டிகேட் வரை அழைத்துச் சென்று பேருந்தில் ஏற்றிவிட்டேன். அவள் சென்ற மறு வினாடி அவள் இறக்கி வைத்த பாரம் என் மனதில் ஏறிக் கொண்டது. 

                          "ஐ வில் கால் யு டெய்லி" என்று அவளுக்கு வாக்குறுதி கொடுத்த போதும் அடுத்து வந்த இருபத்தியெட்டு நாட்களும் அவளுக்கு அழைக்கவே இல்லை. அவளை நான் அழைக்காததற்கு என் தரப்பு நியாயங்கள் பல இருக்கவே செய்தன. குரல் மட்டும் கேட்டால் முகம் பார்க்கும் ஏக்கம் தோன்றும் என்பதாலோ, அவளை அழைக்கும் போது வேறு யாராவது பேசிவிடுவார்களோ என்ற பயமோ நிச்சயம் காரணம் இல்லை. இருபத்தியெட்டு நாட்கள் கடும் விரதத்தை என்னால் தொடர முடியாமல் அவள் எண்களை பொதுத் தொலைபேசியில் ஒற்றி எடுத்தேன். ட்ரிங் ட்ரிங் என்று ஒவ்வொரு முறை மணி அடித்த போதும் என் மனசில் அவள் குரலை கேட்கும் சந்தோசம் பொங்கியது. பல ட்ரிங்குகளுக்குப் பிறகு யாரும் எடுக்காத காரணத்தால் நிசப்தமானது தொலைபேசி. 

                         ஏமாற்றத்துடன் திரும்பிய நான் அவளுக்கு ஒரு கடிதம் எழுதத் துவங்கினேன். இருபத்தியெட்டு நாட்கள் இறுமாப்புடன் இருந்த காரணத்தை காகிதத்தில் விவரிக்க தொடங்கினேன். இன்று அவளிடம் பேச எண்ணிய எல்லாவற்றையும் வார்த்தைகளாய் வடித்து, இடையிடையே அவளை தவிக்க விட்ட காரணத்திற்கு பல "Sorry" களையும் உடன் சேர்த்து எழுதி முடித்தேன். இன்னும் இரண்டு நாட்களில் அவள் வரும் போது கொடுக்க எண்ணி அதை மடித்து என் டைரிக்குள் வைத்தேன். (கதை கதையாய் சம்பவங்களை விவரிக்கும் பழக்கம் இருந்ததால் அன்றெல்லாம் ஒரு குயர் நோட்டுதான் என்னுடைய டைரி) என் தன்னிலை விளக்கத்தை அவள் புரிந்து கொள்வாள் என மனம் நம்பியது. இரண்டு நாட்களும் இமைப்பொழுதில் நகர்ந்து விட அவளை வரவேற்க வேண்டி மோகனூர் சென்று காத்திருந்தேன். அவள் எப்போதும் காலை ஆறு மணிக்கு சென்னையிலிருந்து புறப்பட்டு மதியம் மூன்றரை மணிக்கு வந்து சேரும் வழக்கத்தை நான் அறிந்திருந்ததால் மூன்று மணியிலிருந்து அங்கே காத்திருந்தேன். மூன்றரை மணிக்கு சேலத்திலிருந்து வந்த பேருந்து வந்து நின்றது. அவள் அன்று பூத்த மல்லிகை மொட்டாய் இறங்கினாள்.

                         ஓடிச்சென்று அவள் பைகளை வாங்க  முற்பட்ட போது என் கைகளை தட்டிவிட்டு தானே சுமந்தபடி என்னை புறக்கணித்து முன்னே சென்றாள். "ரமா, நீ எம் மேலே கோபமா இருப்பேன்னு எனக்குத் தெரியும். நான் உனக்கு ஏன் போன் பண்ணலேன்னு தெரிஞ்சா இப்படி பேசாம போகமாட்டே" என்றேன். என் வார்த்தைகளை  அலட்சியப்படுத்திவிட்டு அவள் கிராயூர் செல்லும் பஸ்ஸில் ஏறினாள். எனக்கு சங்கடமாய் இருந்த போதும் அவள் கோபத்தை புரிந்து கொள்ள முடிந்தது. பஸ்ஸில் நிறைய பேர் அமர்ந்திருந்ததாலும்  அதற்கு மேலும் அவளை தொல்லை செய்ய விரும்பாததாலும் அங்கிருந்து அகன்று விட்டேன். சற்று தொலைவு சென்று திரும்பிப் பார்த்த போதும் அவள் என் பக்கம் பார்க்காமல் வேறு பக்கம் தலையை திருப்பியிருந்தாள். அப்போதைக்கு அவள் கண் முன்னிருந்து தூரச் செல்வதே அவள் கோபம் குறைய ஒரே வழி என்றுணர்ந்த நான் அருகிலிருந்த கடைக்குள் சென்று அமர்ந்துவிட்டு அந்த பஸ் அங்கிருந்து  சென்ற பிறகு வெளியே வந்தேன். 

                         மறுநாள் கல்லூரிக்கு சென்ற நான் வழக்கம் போல் என் இருக்கையில் அமர்ந்தேன். சிவசங்கரி மற்றும் ரமா அமர்ந்திருக்க, என்னை கவனிக்காதது போல் பாவனையில் இருந்தாள். "குட் மார்னிங் சிவா, குட் மார்னிங் ரமா" என்று நான் சொல்ல சிவசங்கரி மட்டும் தலையசைத்தாள். அப்போது அங்கே வந்த அன்பு ரமாவிடம் சென்று "ரமா, உன்கிட்ட கொஞ்சம் பேசணும்" என்றான். "சொல்லுங்க" என்றவளிடம் "நேத்து ஆனந்த், ரொம்ப பீல் பண்ணினான்" "அதுக்கு நான் என்னங்க பண்ண முடியும்" "இல்லே, என்ன நடந்ததுன்னு நீங்க தெரிஞ்சுக்கணும்." "ப்ளீஸ், வேணாங்க.. ஒவ்வொருத்தருக்கும்  முக்கியமான வேலைகள் பலதும் இருக்கும். அதை எல்லாம் நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லே.." "இல்லே நீங்க கேட்டுத்தான் ஆகணும்." என்றபடி அவன் சொல்ல ஆரம்பிக்க அவள் அதைக் கேட்க விரும்பாமல் வேகமாக வகுப்பறையிலிருந்து வெளியேறினாள். அன்புவும் விடாமல் அவள் பின்னால் சென்றான். 

                         
தொடரும்..



                    

35 comments:

  1. முந்தைய பதிவுகள் படிக்காமல் இப்படியே தொடர்கிறேன்...... நல்லாப் போகுது.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்..நேரம் கிடைக்கும் போது அதையும் படிச்சுப் பாருங்க.. :)

      Delete
  2. முந்தைய பதுவுகளோடு தொடரவேணும்....

    ReplyDelete
    Replies
    1. மேலே லிங்க் கொடுத்திருக்கேனே..

      Delete
  3. ஒரு குயர் நோட்டு பஸ்ஸில் கொடுத்திருக்கலாம்...

    ஏன் திடீரென்று இவ்வளவு கோபம்...?

    ReplyDelete
    Replies
    1. ஒரு மாதம் பேசாத காரணத்தால் DD!!

      Delete
  4. # நான் உங்க காலுக்காக வெயிட் பண்ணிட்டு இருப்பேன்#
    மைன்ட் வாய்சில்...காதலுக்காக என்று கேட்கிறதே !
    +5

    ReplyDelete
    Replies
    1. ஹை, அது கூட நல்லாயிருக்கே!!

      Delete
  5. வணக்கம்,ஆ.வி!இது வரை இந்தத் தொடர் என் பார்வையில் சிக்கவில்லை.இன்று சிக்கியது,ஒரே மூச்சில் படித்து முடித்தேன்!அப்பப்போ படித்து முடித்து விட்டு ஆவலுடன்,அடுத்த பகுதிக்குக் காத்திருப்பதை விட,இது சூப்பர்!அதிலும் லவ் மேட்டர் இல்லியா?சந்தோஷமோ,சந்தோஷம்!சூப்பரா போகுது கதை,வாழ்த்துக்கள்!!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி பாஸ்!! :) :) :) உங்க பின்னூட்டத்தை படித்ததும் ரொம்ப சந்தோஷமா இருந்தது..

      Delete
  6. உங்க வாழ்க்கைக் கதையா ஆவி?

    ReplyDelete
    Replies
    1. நிஜமும் நிழலும் சேர்ந்தது செங்கோவி.!

      Delete
  7. அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன் நானும்.....

    ReplyDelete
    Replies
    1. சீக்கிரம் போட்டுடறேன் சார்.. :)

      Delete
  8. 1 முதல் 13 வரை

    அசத்தல்


    தனுஷ், நஸ்ரியா , சந்தானம்

    பொருத்தமா இருக்குமா !

    கதை முடியவரைக்கும் வைட் பண்ணலாம். அப்படின்னு நினைக்கிறீர்களா ?
    எதுக்கும் கதையை காபி ரைட் உரிமை வாங்கி வச்சுடுங்க.

    எந்தெந்த இடத்திலே பாட்டு போடனும் அப்படின்னு முடிவு
    செஞ்சுட்டேன். ம்யூசிக் இளைய ராஜா தான் நல்ல இருக்கும்.


    கோயமுத்தூர் பக்கத்திலே பொள்ளாச்சி போறப்போ,
    இல்ல, உடுமல்பெட்டை தாண்டியா தெரியல்ல, சரியான சில லொகேஷன் கூட கீது.

    ஒன்னு இரண்டு கனவு சீன் ஸ்விஸ் லே நல்ல இருக்கும்..



    சுப்பு தாத்தா.
    www.subbuthatha72.blogspot.com

    ReplyDelete
    Replies
    1. ஐ.. நல்லா இருக்கே.. தாத்தா, நான் படிச்ச காலேஜ் இன்னும் அங்கே இருக்கு. இன்னைக்கு போட்டிருந்த பெஞ்சின் புகைப்படம் அங்கே எடுத்ததுதான்!! :)

      காப்பி ரைட் எப்படி வாங்கனும்னு தெரியாதே.. யாரவது சொல்லுங்களேன்..

      என் சாய்சும் இளையராஜா தான்..

      ஹீரோயின் நஸ்ரியா வா, அப்ப கொஞ்சம் கருப்பு சாயம் பூசணுமே ;-)

      ஹீரோ மட்டும் தனுஷ் வேண்டாம்.. சூர்யா போட்டுக்கலாமா? (ஏன்னா கதைப்படி ஹீரோ கலரா இருக்கணும்) :-)

      Delete
    2. சூர்யா எல்லாம் உங்களுக்கு budget கட்டுபடியா ஆகாது.

      என்ன சொன்னீங்க...

      கலரா இருக்கனுமா?
      நீங்களே நடிச்சா என்ன ?

      எப்படி ஐடியா ?

      .அது இருக்கட்டும்.


      அந்த பெஞ்சும் அங்கனவே இருக்கா ?

      அப்ப அந்த கருப்பு, அதான் அந்த கரா கமா வும் அங்கனவே இருக்கா ?

      பொஸ்தகம் போடுவதற்கு முன்னாடி, பர்மிஷன் வாங்கிடுங்க..

      சுப்பு தாத்தா.

      Delete
    3. //நீங்களே நடிச்சா என்ன ? //

      ஆஹா, பண்ணலாமே.. :)

      //அந்த பெஞ்சும் அங்கனவே இருக்கா ?//

      அந்த பெஞ்ச் மட்டும் தான் அங்கே இருக்கு.
      கரா கமா இங்கே சென்னையில் தான் இருக்கு தாத்தா..


      //பொஸ்தகம் போடுவதற்கு முன்னாடி, பர்மிஷன் வாங்கிடுங்க..//

      நம்மள நேசிக்கிறவங்க கிட்ட நாம "டேக் இட் பார் கிராண்டட்" ஆ சில விஷயங்கள் பர்மிஷன் வாங்காம செய்தாலும் அவங்க அத சந்தோஷமா தான் எடுத்துப்பாங்க.. :)

      Delete
  9. ஊடல் இல்லாத காதலா ? படிக்க படிக்க நல்லாவே போகுது. பாா்த்திங்களா ? உங்களிடம் நான் இந்த தொடரை பதிவிட்டால் எனக்கு தொிய படுத்த சொல்லியிருந்தேனே மறந்துட்டிங்க. நானே சரியா வந்து விட்டேன் பாருங்க.

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ, மறந்துட்டேன் பாருங்க.. இனி ஒவ்வொரு சனிக்கிழமையும் ஒரு பகுதி போடுவதென தீர்மானித்துள்ளேன்.. So அடுத்த சனிக்கிழமை வந்துடுங்க.. :)

      Delete
  10. 1 to 12 padichitu comment podren anney

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஆகட்டும் தங்கச்சி..

      Delete
  11. அவள் அன்று பூத்த மல்லிகை மொட்டாய் இறங்கினாள்.
    engeyoo idikutheey . pooththa malligaii (or ) mottu mallikai kelvi pattu riuken

    ithu enna pootha maligai mottu :))))))

    ithuvum nallathaney iruku

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. இன்னும் யாரும் கேக்கலையேன்னு பார்த்தேன். எழுதும் போது இன்று மொட்டு விட்ட மல்லிகையாய் ன்னு தான் முதலில் எழுதினேன். அப்புறம் அதைவிட இது படிக்க நல்லா இருந்ததால் இப்படி எழுதிட்டேன்.. தங்கச்சி கரெக்டா கண்டுபிடிச்சு குட்டிட்டா.. :)

      Delete
  12. 1 to 12 padichitu comment podren anney

    ReplyDelete
    Replies
    1. அதான் மேலேயே சொல்லிட்டேயே !!

      Delete
  13. full kathai padichachi super anna

    lost year april month start pana kathai inum mudikalaya neega , intha year kulla mudichidunga anna

    ReplyDelete
    Replies
    1. இந்த வருஷம் மூணு குறிக்கோள்கள் வைத்துள்ளேன்.
      அதில் முதலாவது இந்தத் தொடரை முடித்து, புத்தக வடிவில் அச்சிட்டு அடுத்த புத்தக விழாவில் வெளியிடணும்.. இரண்டாவதும் மூன்றாவதும் கூட என் எழுத்து சம்பந்தப்பட்டது தான். ஆனால் அது என்னன்னு இப்போ சொல்லப் போறதில்லே. அதில் ஒன்று வித்தியாசமான ஒரு முயற்சி. இன்னொன்னு பற்றிய அறிவிப்பு இன்னும் ஓரிரு வாரங்களில் வெளியிடுகிறேன்.

      Delete
  14. // அவள் அன்று பூத்த மல்லிகை மொட்டாய் இறங்கினாள்.// ரசித்தேன் :) .... 28 நாட்கள் பேசாமல் இருந்தது கொஞ்சம் கொழுப்பு தான். கெஞ்சினால் மிஞ்சுவது மனித இயல்பு தான்... காத்திருக்கிறேன் அவள் முடிவை அறிய. இடைவெளி விடாமல் தொடரை எழுதுவது கடினம் என்பதை நான் அறிவேன், இருப்பினும் இடைவெளியை குறைக்க முயலுங்கள் :)

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா ரூபக்.. இனி ரெகுலரா போட முயற்சிக்கிறேன்.. என் புது வருட சபதங்களுள் இதுவும் ஒன்று..

      Delete
  15. பதிமூன்று பாகங்களையும் ஒரே மூச்சில் படித்து முடித்துவிட்டேன், சுவாரஸ்யம்... ஒவ்வொரு பாகத்திலும் ஒவ்வொரு சஸ்பென்ஸ் வைத்து முடித்திருப்பது சிறப்பு... இதுவரை படித்ததில் ரமாவின் கேரக்டர் "மிஞ்சினால் கெஞ்சுவது கெஞ்சினால் மிஞ்சுவது" என்று ஓரளவுக்கு யூகிக்க முடிகிறது.... ஆவலுடன் அடுத்த பாகத்துக்காக...

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் மூச்சு விட்டு படிச்சிருக்கலாமே.. இப்போ மூச்சிரைக்குது பாருங்க.. சீக்கிரம் போட்டுடறேன் அடுத்த பாகத்தை..

      Delete
  16. தொலைச்சுட்டு அப்புறம் கண்டுபிடிப்பாரா...? அப்பவே ‘கடி’ ஆவியாத்தான் இருந்திருக்க போல...! காதலின் சுவாரஸ்யம் படிக்கும் ஆர்வத்தை தூண்டுது. பின்னூட்டங்களைப் பாத்ததுல நிச்சயம் புத்தகமாக்கலாம்னு எனக்கும் ஆசை வந்துருச்சு! கலக்கறே ஆவி!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...