Thursday, January 16, 2014

ஹலோ, நாங்களும் இன்ஜினியர் தான்!! (ஊடலுக்கு பின் காதல்) -14

முந்தைய பதிவுகளுக்கு...


                         அன்பு சொல்ல வருவதை கேட்கப் பிடிக்காமல் வகுப்பறையை விட்டு வெளியே சென்ற ரமாவின் பின்னே சென்று சமாதானப் படுத்த முயற்சி செய்து கொண்டிருந்தான் அன்பு. இதற்கு மேலும் அகிம்சை உதவாது என உணர்ந்த நான் அவர்கள் பின்னே சென்றேன். ஒரு மரத்தடியில் நின்று கொண்டு அன்பு ஏதோ சொல்லிக் கொண்டிருக்க அவள் தன் காதுகளை இரு கைகளாலும் அடைத்தபடி நின்றிருந்தாள். அவர்கள் அருகே சென்ற நான் அவள் கையை பிடித்து இழுத்தபடி கல்லூரி வாயிலை நோக்கி நடக்க ஆரம்பித்தேன்.. என் கைகளிலிருந்து அவள் கைகளை விடுவிக்க முயன்ற முயற்சிகள் தோல்வியடைய "கைய விடுங்க, எல்லாரும் பார்க்கிறாங்க". "ஐ டோன்ட் கேர். நான் உன்கிட்ட சில விஷயம் பேசியாகணும்.." வழியெங்கும் நின்றிருந்த மாணவர்கள் எங்களையே உத்துப் பார்ப்பதை கவனித்த அவள் "சரி நான் வர்றேன். கைய விடுங்க"  என்றாள். அப்போதும் அவள் கையை விடாமல் பற்றிக் கொண்டு கல்லூரியின் வாயிலை அடைந்தேன்.



                           என் பிடியிலிருந்து அவள் கைகளை விடுவிக்க சொல்லி அவள் இதழ்கள் சொல்லியது. ஆனால் அவள் கைகள் அதற்கெதிராய் அந்த தொடுதலை ரசித்தது போல் இருந்தது. என் வேகத்துக்கு ஈடு கொடுத்தபடி ஓட்டமும் நடையுமாய் வந்த அவள் வண்டிகேட்டின் பேருந்து நிறுத்தத்தை அடைந்தவுடன் "எங்க போறோம்னு தெரிஞ்சுக்கலாமா" என்றாள். நானோ புன்முறுவலுடன் "ம்ஹும்.. சொல்லமாட்டேன். சேர்ந்த பின் நீயே தெரிஞ்சுக்குவே." என்று கூறியவாறே நிறுத்தத்தில் வந்து நின்ற பேருந்தில் அவளுடன் ஏறினேன். "ரெண்டு கரூர் கொடுங்க" என்று டிக்கெட் வாங்கியதும் "கிளாஸ் கட் பண்ணிட்டு இப்ப எதுக்கு கரூர்?" "வா சொல்றேன்" என்று கூறிவிட்டு அவள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தேன்.. சில நிமிஷங்கள் முகத்தை திருப்பிக் கொண்ட போதும் மீண்டும் என் பக்கமாய் திரும்பி என் கண்கள் அவளை கவனிக்கின்றனவா என உறுதி செய்தபடி வந்தாள்.

                           "ரமா, உனக்கு பச்சை கலர்ன்னா ரொம்ப பிடிக்குமா?" என்று பேச்சை ஆரம்பித்தேன். அவளிடம் அதற்கு பதிலில்லை. "ஊர்ல அப்பா, அம்மா எல்லாம் நல்லா இருக்காங்களா?" அதற்கும் மௌனமே பதிலாய் கிடைத்தது. "இதப் பாரு ரமா, உலகத்தில் மிகப் பெரிய கொடூரத்தை பண்ணினவனுக்கு கூட தூக்கு தான் உச்சபட்ச தண்டனை. ஆனா நீ இப்படி பேசாம இருக்கிறது அதை விட கொடுமையான தண்டனை. ரொம்ப சங்கடமா இருக்கு. உனக்கு என்னை பிடிக்கலையா?" என்றேன். சட்டென்று திரும்பிய அவள் "பிடிக்காமதான் உங்க பக்கத்துல இவ்வளவு நேரம் உங்க பக்கத்துல உட்கார்ந்துட்டு இருக்கேனா?" என்றாள். "அப்பாடா, கோபம் போயிடுச்சு." "இல்ல இன்னும் கொஞ்சம் பாக்கி இருக்கு" என்றவாறு என் பக்கம் திரும்பி சிரித்தாள். கண்களில் ஓரிரு துளி நீரை உதிர்த்துக் கொண்டே அவள் சிரித்ததை பார்த்ததும் "ச்சே.. மனோ..ரமாவுக்கு அப்புறம் இப்படி ஒரு சூப்பர் பெர்பாமென்ஸ் தர இந்த ரமாவால தான் முடியும்." என்றதும் என் தோள்களில் குத்து விட்டு "இது ஒண்ணும் பெர்பார்மன்ஸ் இல்ல" என்று பொய்க்கோபம் காட்டினாள்.

                                 அதற்குள் கரூர் வந்துவிட பஸ்ஸை விட்டு இறங்கினோம். அவளை அழைத்துக் கொண்டு தைலா சில்க்ஸ் சென்றேன். இதுவரை அமைதியாக வந்த அவள் துணிக்கடைக்குள் நுழைந்ததும் "ஆனந்த், இப்ப எதுக்கு இங்கே?" அவள் பேச்சை பொருட்படுத்தாமல் நேரே புடவை செக்க்ஷனுக்கு  சென்றோம். "பச்சை கலர் இருக்கிறமாதிரி  கொடுங்க" என்றேன்.. "இப்ப எதுக்கு புடவை எல்லாம்?" "எந்த புடவை பிடிச்சிருக்குன்னு மட்டும் சொல்லு" என்றேன். அவள் ஒன்றும் சொல்லாமல் அமர்ந்திருக்க நானே வெள்ளை புடவையில் பச்சையும் கருப்பும் பூக்கள் போட்ட ஒன்றை தேர்வு செய்து "இது பிடிச்சிருக்கா" என்றேன். "பிடிச்சிருக்கு, ஆனா இப்ப எதுக்குப்பா?" இப்போது அவள் குரலில் ஒரு சாந்தம் தெரிந்தது. "ம்ம்.. விஷயம் இருக்கு, சொல்றேன்"  என்று கூறிவிட்டு அந்த சேலையை பேக் செய்து வாங்கிக் கொண்டு வெளியே வந்தோம்.

                                என் கைகளை பிடித்தபடியே நடந்த அவள் "இப்பவாவது சொல்லுங்க.. என்ன விஷயம்". "அது ஒண்ணுமில்லடா.. உன் பர்த்டேக்கு ட்ரெஸ் வாங்கும்போதே பாஸ்கர் கிட்ட கடன் வாங்கித்தான் என்னால வாங்க முடிஞ்சது. அப்புறம் சிவாவ ஹாஸ்பிடல் கூட்டிப் போகும்போதும் என் கையில சுத்தமா பணம் இல்லே. அதனால.." "அதனால?" "அதனால.. நீங்கெல்லாம் செமஸ்டர் ஹாலிடேஸ் ஊருக்கு போனப்போ நான் இங்க தான் இருந்தேன். அந்த ஒரு மாசமும் மோகனூர்ல ஒரு பிரிண்டிங் பிரஸ்சுல வேலைக்கு போனேன்.  மதியம் மூணு மணிக்கு போனா பதினோரு மணி வரை வெளியே வர முடியாது. இடையிலே ரெண்டு மூணு டீ ப்ரெஸ்ஸுக்கே கொண்டு வந்திடுவாங்க.. அதனால தான் என்னால சிக்ஸ் டூ சிக்ஸ் தேர்ட்டி உனக்கு கூப்பிட முடியல.. சாரிடா"

                               ஆதரவாய் என் கரங்களை பற்றியபடி, "ஆனந்த், நீங்க எனக்கு ஏதாவது செய்யணும்கறதுக்காக வேலைக்கு போனது பெருமையா இருக்கு..ஆனா அதே சமயம் மனசுக்கு கஷ்டமாவும் இருக்கு.. இன்னும் ரெண்டு வருஷத்துல நீங்களும் ஒரு இஞ்சினியர் ஆயிடுவீங்க.. அதுக்கப்புறம் ஒரு நல்ல வேலைக்கு போய் நீங்க எனக்கு என்ன செய்யணும்னு நினைக்கறீங்களோ? அதெல்லாம் செய்யுங்க.. இந்த வேலை வேணாங்க, ப்ளீஸ்.." என்று அவள் வைத்த வேண்டுகோளை ஆமோதித்தபடி நடந்த போது அறிந்திருக்கவில்லை இனி எப்போதும் அப்படி ஓர் சந்தர்ப்பம் அமையப் போவதில்லை என்று..


..தொடரும்..

31 comments:

  1. நன்னாருக்கு.சொந்தமா சம்பாதிச்சு,வருங்காலப் பொண்டாட்டிக்கு சேலை எடுத்துக் குடுக்குறது பெருமைப்பட வேண்டிய விஷயம்...............தொடரட்டும்!தொடர்கிறோம்!!!

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றி பாஸ்!! தொடர்ந்து வாங்க!

      Delete
  2. போன பார்ட்டை மிஸ் பண்ணிருக்கேன் போலருக்கே... தோ படிச்சுட்டு இங்க வரேன்!

    ReplyDelete
  3. முதல் முதலில் சம்பாதித்த பணத்தில் ரமாவுக்கு சேலையா...! நல்லாத்தான் இருக்கு...! ஆனா கடைசியில ஒரு கொக்கி போட்டு முடிச்சிருக்கறதப் பாக்கறப்ப கொஞ்சம் கலக்கமாவும் இருக்கு....

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்.. கருத்துக்கு நன்றி சார்.. :) :)

      Delete
  4. முன்பதிவுகளைப் படிக்கத் தூண்டும் விறுவிறுப்பான எழுத்து. முன்பதிவுகள் படிக்காதவருக்கு கதைச்சுருக்கம் பயன்படும். சுவாரசியமான கதைக்கரு.

    ReplyDelete
    Replies
    1. நன்றி அப்பாதுரை சார்.. கதை எழுதவே சோம்பேறித்தனப்படற ஆள்.. கதைச் சுருக்கம் வேறயா.. முயற்சிக்கிறேன் ஸார்.. :) :)

      Delete
  5. //அவள் வைத்த வேண்டுகோளை ஆமோதித்தபடி நடந்த போது அறிந்திருக்கவில்லை இனி எப்போதும் அப்படி ஓர் சந்தர்ப்பம் அமையப் போவதில்லை என்று.//

    ஐயையோ.... அடப் பாவமே...

    ReplyDelete
  6. விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது! கடைசியில் சோக கீதம் வாசிச்சிராதீங்க!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. என்ன நடந்ததோ அதைத் தானே எழுத முடியும் நண்பா!! :) ;)

      Delete
  7. //இது ஒண்ணும் பெர்பார்மன்ஸ் இல்ல// பார்ரா

    //நீங்களும் ஒரு இஞ்சினியர் ஆயிடுவீங்க.// ம்ம்ம்கும்

    //அப்படி ஓர் சந்தர்ப்பம் அமையப் போவதில்லை என்று..// அதை இன்னும் ஒரு மாதத்தில் சொல்லிவிடுவீர்களா ஆவி பாஸ்

    ReplyDelete
    Replies
    1. // அதை இன்னும் ஒரு மாதத்தில் சொல்லிவிடுவீர்களா ஆவி பாஸ்//

      தெரியலையேப்பா (நாயகன் ஸ்டைலில் வாசிக்கவும்)

      Delete
  8. அடடா... ஒரு சேலையோடு அவ்வளவு தானா...? சந்தர்ப்பமே அமையப் போவதில்லையா...? ம்...

    ReplyDelete
    Replies
    1. கருத்துக்கு நன்றி DD.. :)

      Delete
  9. விறுவிறுப்பு கூடிக்கொண்டே போகிறது!

    ReplyDelete
  10. அருமையா இருக்கு...
    தொடர்கிறேன்...

    ReplyDelete
  11. நல்ல விறுவிறுப்பு. அடுத்த பகுதிக்கான காத்திருப்புடன்....

    ReplyDelete
    Replies
    1. நன்றி வெங்கட் சார்!

      Delete
  12. சமீபத்தில் தான் பழைய பாகங்களைப் படித்திருந்ததால் இம்முறை கதை மறக்கவில்லை.... ஆறு டு ஆறரை போன் செய்யமுடியாததன் காரணம் நெகிழவைக்கிறது..... நீங்க அப்பவே அப்படியா?

    ReplyDelete
    Replies
    1. இப்பவும் அப்படித்தான் பாஸு!! :) :)

      Delete
  13. ஆமோதித்தபடி நடந்த போது அறிந்திருக்கவில்லை இனி எப்போதும் அப்படி ஓர் சந்தர்ப்பம் அமையப் போவதில்லை என்று..

    why anna why

    enna nadanthu irukum

    ReplyDelete
    Replies
    1. அது தெரிஞ்சுக்க கொஞ்சம் வெயிட் பண்ணனும்.. :) :)

      Delete
  14. ஆமோதித்தபடி நடந்த போது அறிந்திருக்கவில்லை இனி எப்போதும் அப்படி ஓர் சந்தர்ப்பம் அமையப் போவதில்லை என்று..

    why anna why

    enna nadanthu irukum

    ReplyDelete
    Replies
    1. ஒரே கேள்விய ரெண்டு தடவ கேட்டா மாத்தியா சொல்லப் போறேன்.. :)

      Delete
  15. அடுத்த பகுதி எப்பொ ?

    ReplyDelete
  16. வணக்கம்

    இன்று தங்களின் வலைப்பூ வலைச்சரத்தில் அறிமுகமாகியுள்ளது...வாழ்த்துக்கள்

    நன்றி
    அன்புடன்
    ரூபன்

    ReplyDelete
  17. Hai Kovai Aavee,

    Yen intha kadai todara villai. Please restart this todar kadai.

    Raman A V

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...