இன்ட்ரோ
மலையாளத்தில் "த்ரிஷ்யம்" எனும் அற்புதமான படத்தை கொடுத்த மோகன்லால் எனும் நல்ல நடிகனை பஞ்ச் டயலாக் பேசவிட்டு 'தாதா' வாக்கி அழகு பார்த்திருக்கிறார்கள் நம்மவர்கள். இதுபோன்ற பல மாஸ் படங்களில் அவர் நிறைய நடித்திருந்தாலும் விஜய் போன்ற ஒரு இளைய தலைமுறை நடிகரிடம் அடங்கிப் போகும் கதாப்பாத்திரத்தில் நடித்திருப்பது விஜய் ரசிகர்களை வேண்டுமானால் திருப்திபடுத்தலாம். கேரள ரசிகர்கள் ஏற்றுக்கொள்வார்களா என்று தெரியவில்லை.
கதை
வளர்ப்புத் தந்தையின் (மலையாள வாடையுடன்) அரவணைப்பில் இருக்கும் போது சரியென தெரியும் தந்தையின் தவறுகள் ஒரு சமயம் தவறென புரிய வருகிறது நாயகனுக்கு. அதன் பிறகு தந்தையை தவறு செய்யாமல் தடுக்க முயல்கிறார். தந்தை தன்னை விரோதியாக பார்க்கும் நிலை வருகிறது. எப்படி அதிலிருந்து மீண்டு தன் தந்தையை காப்பாற்றினார் என்று சொல்வது தான் ஜில்லா.. கதை எங்கயோ கேட்ட மாதிரி இருக்கா.. யு ஆர் ரைட்.. 'தல' நடிச்ச தீனா வ கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து சுரேஷ் கோபிக்கு பதிலா மோகன்லால நடிக்க வுட்டு ஜில்லாவாக்கி கல்லா கட்ட பார்த்திருக்காங்க. உஷார் மக்களே!!
ஆக்க்ஷன்
டைட்டிலில் மோகன்லால் பெயர் போடுவதற்கு அனுமதி வழங்கிய பெருந்தன்மைக்காக விஜய்க்கு இரண்டாவது டாக்டர் பட்டம் வேண்டுமானால் கொடுக்கலாம். சரளமாக வரும் நையாண்டி, அட்டகாசமான நடனம் இவருக்கு கைவசப் பட்டிருந்தாலும் நடிப்பு என்ற ஏரியாவை பற்றி சற்றும் கவலைப் பட்டதாய் தெரியவில்லை. தங்கையின் கல்யாணத்திற்கு அழையா விருந்தாளியாய் வரும் காட்சியில் பெர்பாமன்ஸ் பின்னியிருக்க வேண்டாமா? நாயர் கடையில் சாயா குடித்த ரியாக்சன் தான் அவர் முகத்தில் காண முடிந்தது..மோகன்லால் இதுபோன்ற படங்களில் நடிக்காமல் இருப்பது நலம் பயக்கும். ஆனால் கொடுத்த கேரக்டரை அசால்டாக செய்து அசத்தியிருக்கிறார். ஒரு கட்டத்தில் லாலேட்டன் என்பதை மறந்து சிவன் என்ற பெயரே நம் மனதில் நிலைக்கும்படி செய்திருப்பது அழகு. பின்புறத்தில் 'கை' வைப்பதை காமெடியாய், காதல் பொங்கும் காட்சியாய் வைப்பது மூன்றாம் முறையாய் விஜய் படங்களில் பார்த்து புளங்காகிதம் அடையும் ரசிகர்கள் இருக்கும்வரை தளபதி காட்டில் என்றும் மழைதான்.. இந்தப்படத்தில் காஜல் போலிஸ் உடுப்பில் அழகாய் தெரிந்தார். சூரியின் மறுபக்க வேதனைகள் குபீர் சிரிப்பை வரவழைக்கிறது. இதிலும் பிரதிப் ராவத் டம்மி பீஸ் தான். சம்பத் வழக்கமான வில்லன் என்பதால் சலிப்பு தட்டுகிறது.
இசை-இயக்கம்
இமானின் இசையும் பின்னணி இசையும் படத்திற்கு ஆறுதல். "பாடகர் விஜய்" கண்டாங்கி சேலையை கச்சிதமாக பாடி மனம் கவர்கிறார். இயக்குனர் நீசன் இன்னும் நிறைய உழைக்க வேண்டி இருக்கிறது. பெரிய நடிகர்களை வைத்து படம் பண்ணும்போது காட்சிக்கு தேவையான விஷயங்களை அவர்களிடம் வாங்குவதற்கு தயக்கம் காட்டக் கூடாது. இதை ஒரு நல்ல முயற்சியாக மட்டும் பாவித்து இன்னும் சிறப்பான படைப்பை கொடுக்க முயற்சிக்க வேண்டும்.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
காஜலை பெண் பார்க்க செல்லும் காட்சி, இரண்டாம் மூன்றாம் முறை பின் விளைவால் சூரி அவதிப்படும் காட்சி. கண்டாங்கி மற்றும் வெரசா போகையிலே பாடல் காட்சிகள்..
Aavee's Comments - Same ?#@$ in a new package.
ஆக மொத்தம் மோகன்லால் தலையில பொங்கல் வச்சுட்டாங்களா!? பாவம்!!!
ReplyDelete:)
Deleteமொத டிக்கட் எனக்கா!? ஐயோ ஜில்லா படத்துக்கா வாங்குனேன்!! :-(
ReplyDeleteவாங்கிட்டீங்களா.. அச்சச்சோ..
Deleteஎதுவுமே சரியில்லை...!
ReplyDeleteஆமாம் DD.. ஒன்னும் சரியில்ல..
Deleteத்ரிஷ்யம் பற்றி அனைவரும் பேசுகிறார்களே... நல்ல படமா?
ReplyDeleteஇயக்குனர் நீசன்????
திட்டுகிறீர்களோ?
த்ரிஷ்யம் அருமையான படம்.. மிஸ் பண்ணாம பாருங்க..
Deleteநீசன் - ஒக்கே.. ஆனா அவர் சுதந்திரமா தான் நினைச்சதை எடுத்த மாதிரி தெரியல.. அதைத்தான் சொன்னேன்..
பிழைக்கத் தெரிந்த நீசன்.
Deleteஎம்ஜிஆர் பட இயக்குனர்கள் போலத் தான்.
///தங்கையின் கல்யாணத்திற்கு அழையா விருந்தாளியாய் வரும் காட்சியில் பெர்பாமன்ஸ் பின்னியிருக்க வேண்டாமா? நாயர் கடையில் சாயா குடித்த ரியாக்சன் தான் அவர் முகத்தில் காண முடிந்தது..///
ReplyDeleteஇந்த குற்றச்சாட்டு அநியாயம்.
விஜய், வச்சுகிட்டு வஞ்சினை பண்ற ஆளில்லை!
ஹஹஹா.. உண்மைதான் பாஸு..
Deleteநன்றி நண்பரே
ReplyDeleteஇனிய பொங்கல் வாழ்த்துக்கள்
நன்றிங்க.. பொங்கல் வாழ்த்துகள்..
Deleteவிஜய் மோகன்லால் என்று இரண்டு பேருக்கு இடையே தல சிக்ஸர் அடிச்சிக்கிட்டு இருக்காரு...
ReplyDeleteஜில்லா ஊத்திக்கிச்சாமே... விமர்சனம் நன்று...
சிக்ஸர் ன்னு எல்லாம் சொல்ல முடியாது.. மொத்தமா படம் னு பார்த்தா வீரம் ஒக்கே அவ்வளவுதான். மத்தபடி ரெண்டுமே சுமார் தான்..
DeleteAnand I heard Jilla is like Sura Part 2....nyabgam irukka naama Sura Chicago la paarthom
ReplyDeleteஹஹஹா.. மறக்க முடியுமா அந்த காவியம் பார்த்த அனுபவத்தை.. இது அவ்வளவு மோசமில்லை.. ஜில்லா பார்க்கும் போது தீனா பார்த்த உணர்வே வந்தது..
Deleteதிரைகடல் தாண்டி அந்த காவியத்தை கண்டவரா நீர்
Deleteஆமாப்பா ஆமா.. முதல் காட்சியில அவரு கடல் உள்ளே இருந்து வரும்போது சிகாகோவின் குளிர் போயி உடம்பே சூடாயிடுச்சுன்னா பார்த்துக்கோங்க!!
Deleteவணக்கம்
ReplyDeleteதங்களின் பார்வையில் விமர்னம் நன்றாக எழுதியுள்ளிர்கள் வாழ்த்துக்கள்..
இனிய பொங்கல் வாழ்த்துக்கள்
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்..
Deletevery nice review.... goood
ReplyDelete1Thanks Buddy
Deleteபகிர்வுக்கு நன்றி .இனிய பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள் சகோ .
ReplyDeleteநன்றி சகோ.. உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் என் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்!!
Deleteவிமர்சனத்துக்கு நன்றி!///இரண்டு படங்களுமே செம ஸ்பீடில் "அந்த" டீ.வீ யில் தரவேற்றி விட்டார்கள்,ஹ!ஹ!!ஹா!!!
ReplyDeleteஹஹஹா. அப்படியா, எனக்கு தெரியாது..
Deleteநல்லா விமர்சனம் செஞ்சுருக்கீங்க! நான் ஆமாம்...லாலேட்டனின் த்ரிஷ்யம் அருமையான படம்தான்! இதிலும் அவர் நன்றாகத்தன் செய்திருக்கிறார்.!
ReplyDeleteதங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எங்கள் மனமார்ந்த இனிய பொங்கல் வாழ்த்டுக்கள்!!
நன்றி சார்.. உங்களுக்கும் மேடத்திற்கும் என் மனம் நிறைந்த பொங்கல் வாழ்த்துகள்!!
Deleteஅண்ணா படம் பாக்காலாமா வேண்டாமா ?
ReplyDeleteமாஸ் படம் பிடிக்கும்னா ஒரு முறை பார்க்கலாம்.. கண்டாங்கி மற்றும் வெரசா போகையிலே பாட்டுக்காகவே போகலாம்.. :)
Deleteவணக்கம் சகோதரர்
ReplyDeleteஜில்லா பற்றி மிக நேர்த்தியான விமர்சனம். சுருக்கமாகவும் படிப்பவர்களைக் கவரும் வண்ணமும் அமைந்த்து சிறப்பு.
--------
தங்களுக்கும், இல்லத்தார் அனைவருக்கும்,நண்பர்களுக்கும் எனது அன்பான தமிழர் திருநாள் மற்றும் உழவர் திருநாள் வாழ்த்துகள்..
நன்றி சகோ,
Deleteஉங்களுக்கும் என் பொங்கல் வாழ்த்துகள்..
அக்கு வேற ஆணி வேறயா சொம்மா பிர்ச்சு மேஞ்சிட்டபா...
ReplyDeleteஒன்க்கும் ஒன் வூட்டாண்ட அல்லாருக்கும் பொங்கல் வாய்த்துக்கள்பா...
டேங்க்ஸு ப்பா..
Deleteஅங்கயும் பொங்கல் இனிதே பொங்கட்டும்.. :)
ஆவி! எழாவது ஓட்டைப் போட்டு தமிழ்மணம் மகுடம் ஏத்திட்டேன்.
ReplyDeleteஇதை விடுங்க!
இப்ப, " எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்"
குச்சி வச்சுக்கிட்டு நிக்கற கோமான் அவ்வையா இல்லை விவேகானந்தரா?
ஹஹஹ்ஹா.. அவ்வை மாதிரி தான் தெரியுது, ஆனா விவேக் ஆனந்த் ன்னு சொல்றாங்க.. சரி விவேகானந்தர் வீட்டுக்கு அவ்வை எதுக்கு வந்தாங்கன்னு யாராவது நம்மள பார்த்து கேட்டுட்டா அவ்வளவு தான்.. அதான் எஸ்ஸாயிட்டேன்.. ஹிஹிஹி..
Deleteமகுடத்திற்கு நன்றி..
Deleteஅடடே தீனாவோட உல்டாவா..இனிய தமிழ்ப் புத்தாண்டு மற்றும் பொங்கல் நல்வாழ்த்துக்கள் கோவை ஆவி.
ReplyDeleteஆமா பாஸ்!! நன்றி..
Deleteசிறப்பான விமர்சனம்......
ReplyDeleteபாராட்டுகள் ஆவி. இந்த சினிமாக்களை பார்க்கும் அளவிற்கு பொறுமை இல்லை ஆவி. உங்களை எல்லாம் பார்க்கும்போது ஆச்சரியம் தான்! சீனு கூட ஒரே நாளில் இரண்டு படம் பார்த்து விமர்சனம் எழுதி இருக்கிறாரே....
அவர் கூட்டமா போய் இரண்டு காவியங்களையும்ன்னு போட்டிருந்தாரே.. அந்த கூட்டத்தில் நானும் ஒருத்தன் ஸார்.. (நீ ஒருத்தனே கூட்டம் மாதிரி தான்ன்னு பின்னாடி வர்ற புண்ணியவான்கள் கமென்ட் போடுறக்கு முன்னாடி நானே சொல்லிடறேன்)
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteதல ரசிகரின் ஒரு தல பட்ச விமர்சனம்
ReplyDelete