Wednesday, January 8, 2014

யார் படிக்க இந்த "ஆவிப்பா" ?

                 "எல்லாம் தெரிந்தவர்கள்தான் கவிதைகளும், கதைகளும் எழுத வேண்டும் என்றிருந்தால் தமிழில் இவ்வளவு புத்தகங்கள் வெளிவந்திருக்காது."
                                                                                                    -கோவை ஆவி 

                   இலக்கியமோ,  இலக்கணத்தோடு கூடிய சொற்றோடரோ எதிர்பார்க்கின்ற ஆள் நீங்கள் என்றால்  ஆவிப்பா நிச்சயம் உங்களுக்கான புத்தகம் அல்ல. எளிமையான வார்த்தைகளும், எதார்த்த உணர்வுகளும் மட்டுமே இதில் இருக்கும்.  யாரையும் "பகடி" செய்தோ, மற்றவர்களை காயப் படுத்தும் வார்த்தைகளோ நிச்சயம் இதில் இருக்காது.  

                     ஆகச் சிறந்த "உலக சினிமாக்களின்" நடுவே வந்த "வருத்தப்படாத வாலிபர் சங்கமும்" மக்களால் ரசிக்கப்பட்டு  வெற்றியடைந்த படம்தான். இந்த "ஆவிப்பாவும்" அதுபோன்ற ஒரு படைப்பு தான்.  கண நேரம் கூட சிந்திக்காமல் வெளிவந்த முத்தாக மற்றவர்களுக்கு தெரியலாம்.. ஆயினும் எந்த ஒரு படைப்பையும் ஒரு புத்தகமாக கொண்டு வருவதில் உள்ள சிக்கல்கள் யாவையும் கடந்தே, பல பேருடைய உழைப்பை தாங்கி வெளிவருகிறது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.



                      ஒரு வாசகனாய் இந்த புத்தகத்தை விமர்சனம் செய்ய உங்களுக்கு நிச்சயம் உரிமை இருக்கிறது. ஆனால் வெளிவராத ஒரு புத்தகத்தின் தரத்தை பற்றி விமர்சிப்பது நிச்சயம் வேதனைக்குரியது. இது போன்ற பலவற்றையும் நான் எதிர்பார்த்து தானிருந்தேன் என்ற போதும் என் பொக்கிஷமாய் பாதுகாத்து வைத்திருந்த ஒரு கூர்வாளே கீறுமென்று சற்றும் எதிர்பார்க்கவில்லை. எது எப்படியோ யார் மீதும் திணிக்கப் படுவதற்கு அல்ல இந்த ஆவிப்பா.. விருப்பமுள்ளவர்கள் வாங்கிப் படியுங்கள். இல்லையென்றால் வழக்கம் போல் கேலி பேசிவிட்டு 'வெளிநாடு' செல்லுங்கள்.. இரண்டும் எனக்கு சந்தோசம் தான்.. குடிக்கறதுக்கு காப்பி வேணும், அது உயர்தர "காபி டே" வோ இல்லே தெருமுனையில் இருக்கும் டீக்கடையோ அது எனக்கு கவலையில்லை.. நட்போடு குடிப்பதில் தான் சந்தோசம் இருக்கிறது..

                     வெளியிடும் தேதி ஒன்றிரண்டு நாட்களில் அறிவிக்கிறேன்.. விருப்பமும், வாழ்த்த மனதும் இருப்பவர்கள் சென்னைக்கு வர முடிந்தால் வாருங்கள். மிகவும் சந்தோஷப் படுவேன்!

64 comments:

  1. என்ன தல பிரச்சினை .. இந்த மாதிரி நாம இறங்க ஆரம்பித்தாலே சில எதிர்ப்புகள் இருக்க்கதான் செய்யும் .. அதை புறந்தள்ளி வாருங்கள் பாஸ்

    ReplyDelete
    Replies
    1. பிரச்சனை எல்லாம் ஒண்ணும் இல்லப்பா.. ஒரு நண்பர் ஜாலியா எப்பவும் போல கிண்டல் செய்து சொன்னார்.. முதல் கிண்டல் அப்படீங்கறதாலவும், அவர் என் நெருங்கிய நண்பர் ங்கிரதாலயும் கொஞ்சம் வருத்தம் இருந்தது,, அப்புறம் அவர் ஜாலியா தானே சொல்லியிருக்கார் நாமளும் ஜாலியா எடுத்துப்போம்னு எடுத்துகிட்டேன்.

      Delete
    2. ஆமா, நாம வாங்காத அடியா.. :)

      Delete
  2. ஆரம்பமே அட்டகாசம் வோய்... ஹா ஹா ஹா

    ReplyDelete
    Replies
    1. வீரமா ஆரம்பிப்போம்..!! :)

      Delete
  3. புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள் ஆவி

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா.. முடிந்த அளவு வரப்பாருங்கள்.

      Delete
  4. நிகழ்ச்சி மாலை வேளையில் இல்லைன்னா வருகிறேன் ஆவி! தலைப்பாக்கட்டி பிரியாணி வாங்கி தரனும்.

    ReplyDelete
    Replies
    1. ஒய் அக்கா- மாலையில் தான் எல்லோரும் வேலை முடிந்து கலந்து கொள்ள முடியும்.. பார்க்கிறேன்.. :)

      Delete
    2. எங்க ஊர் ஸ்பெஷல் அங்கண்ணன் பிரியாணி வேண்டாமா?

      Delete
    3. எனக்கு தலைப்பா கட்டத் தெரியாதே!! ;-)

      Delete
    4. என்னது அங்கண்ணன்,,,பிரியாணியா.....டேய் மச்சி,,,,,இன்னும் அந்த காலத்துல இருக்கற போல....

      Delete
    5. அண்டார்டிக்காவுக்கே போனாலும் மாலை நாலு மணிக்குள் வீட்டுக்கு வந்துடனும். இல்லாட்டி அப்பு அழிச்சாட்டியம் தாங்க முடியாது ஆவி!. எந்த கடையா இருந்தா என்ன!? எனக்கு சுவையான பிரியாணி வேணும்.

      Delete
  5. எனக்கொரு டிக்கட் வேணுமச்சி....

    ReplyDelete
    Replies
    1. எந்த படத்துக்கு மச்சி?

      Delete
  6. மச்சி....இது என்ன வியாபார யுக்தியா....?

    ReplyDelete
    Replies
    1. விளம்பரம் மாதிரி தெரியுதா என்ன?

      Delete
  7. யாருய்யா அது சிறுத்தைய சொரண்டி பாத்தது.

    ReplyDelete
  8. மிக்க மகிழ்ச்சி... புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள்...

    ReplyDelete
  9. புத்தக வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!///நான் இப்ப வெளி நாட்டுல தான் இருக்கேன்,ஹ!ஹ!!ஹா!!!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. உங்க வாழ்த்துகள் போதும் சார், நீங்க எங்க இருந்தா என்ன?

      Delete
  10. [[வெளியிடும் தேதி ஒன்றிரண்டு நாட்களில் அறிவிக்கிறேன்.. விருப்பமும், வாழ்த்த மனதும் இருப்பவர்கள் சென்னைக்கு வர முடிந்தால் வாருங்கள். மிகவும் சந்தோஷப் படுவேன]]

    சென்னைக்கு வருவது கடினம்; டிக்கெட் எடுத்து அனுப்பினால் நானும் மிகவும் சந்தோஷப் படுவேன்!

    தமிழ்மணம் +1

    ReplyDelete
    Replies
    1. வீரத்திற்கு நாலு டிக்கட் எடுத்திருக்கேன், வரீங்களா?? ;-)

      Delete
  11. பாட்டாவே பாடிட்டீங்களா..ரைட்டு.

    ReplyDelete
    Replies
    1. பாட்டு இல்ல பாஸ், அது "ப்பா" !! ;-)

      Delete
  12. புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துகள் ஆவி.

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஸ்ரீராம் சார்.. வருவீங்க தானே?

      Delete
  13. வாழ்த்துக்கள் நண்பா, ஆவிப்பா நல்லா விப்பா! எனக்கு ஒரு பிரதி எடுத்து வை!

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா மச்சான்!!

      Delete
  14. புத்தக வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள் நண்பா

    ஆவிப்பாவுக்கு என் வாழ்த்துப்பா

    ReplyDelete
  15. அருமையான மார்க்கெட்டிங் அறிவு! வெளியீடு சிறப்புற வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  16. book எனக்கொண்ணு எங்க ஊட்டுக்கிழவிக்கு ஒண்ணு
    என்னோட தாத்தாவுக்கு ஒண்ணு.

    யாருது உங்க தாத்தாவா !! நீங்களே தாத்தா ஆச்சே !!
    அப்படின்னு நீங்க நினைக்கிறது நல்லாவே கேட்கிறதாக
    எங்க தாத்தா சொல்றாரு ?

    எப்படி ?
    அவர் ஆவி ரூபத்திலே உங்க பக்கத்திலே இருந்து
    புத்தக வெளியீடு விழாவை நானும் கவனிச்சுக்கிறேன்
    என்று சொல்றாப்போல..


    சுப்பு தாத்தா.

    நிசமாவே நான் வர்றேன். எங்க எப்போ.

    ReplyDelete
    Replies
    1. இடமும் நேரமும் சனிக்கிழமை மாலைக்குள் சொல்லிவிடுகிறேன் தாத்தா.. உங்க ஆசிகள் நிச்சயம் வேணும்.. :)

      Delete
  17. ஆ விப்பா !!
    பசு ஒன்று விற்பனைக்கு வருகிறது
    பசி தீர்க்கும் மருந்தாகப் போகிறது
    சிசுக் கொலைகள் தான் எதற்கு விட்டு விடுங்கள்
    சிந்தித்து வாழ்த்துரைகள் சொல்லி விடுங்கள் ...

    நான் சொல்லி விட்டேன் சகோதரா
    ஆஹா ஓகோ என்று வாருங்கள் :))

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஆகட்டும் சகோ.. அருமையான வாழ்த்துக்கு நன்றி..

      Delete
  18. இப்படி முன்னாடியே பதிவு போட்டு உசாரா தப்பிச்சிக்கலாம்னு நினைச்சா நடக்காது தம்பி நடக்காது. புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்து, காசு கொடுத்து புத்தகத்தை வாங்கி, படித்து, கலர் கலரா ஜிகினா தோரணம் கட்டாமல் விட மாட்டோம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா அண்ணே, பட்டைய கிளப்பிடுவோம்..

      Delete
  19. ஆவிப்பா புத்தகமாக வெளிவருவது மகிழ்ச்சி! யார் எது சொன்னால் என்ன? நம் கடன் எழுதி தள்ளுவது! ஜமாயுங்க பாஸ்! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  20. ஆவிப்பா வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்... தேதியை மிக விரைவில் அறிவிக்கவும்...

    ReplyDelete
    Replies
    1. சனிக்கிழமை மாலைக்குள் சொல்கிறேன், நன்றி

      Delete
  21. புத்தக வெளியீடு சிறப்பாக அமைய வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அக்கா.. நீங்களும் வரணும் அக்கா.. முயற்சி பண்ணுங்க..

      Delete
  22. வாழ்த்துக்கள்! தங்கள் புத்தகம் வெளிவருவதற்கு!! தேதியை அறிவிக்கவும்! வருகை நிச்சயம்!!

    துளசிதரன், கீதா

    ReplyDelete
    Replies
    1. உங்க;வருகை சந்தோஷம் அளிக்கிறது.. கண்டிப்பாக தேதிய சொல்றேன்.. வந்திடுங்க..

      Delete
  23. வாழ்த்துக்கள் ஆவி புத்தக முயற்ச்சிக்கு..

    ReplyDelete
    Replies
    1. ரொம்ப நன்றிங்க!!

      Delete
  24. புத்தகம் வெளியீட்டுக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி

      Delete
  25. எப்போ ? இடம் ! எங்கே? வாழ்த்து !

    ReplyDelete
    Replies
    1. பிப்ரவரி 10 மாலை , நேரமும் இடமும் இன்னும் முடிவாகவில்லை ஐயா.. வாழ்த்துக்கு நன்றி!

      Delete
  26. Anna vazthukkal ,
    yaru enna sonnalum kandukathenga anney

    munvacha kaala pinvaikura palakkam siruthaiku kidaiyathu :)))))

    ReplyDelete
    Replies
    1. அவ்வ்வ்வவ்வ்வ்வவ்வ்வ்!!

      Delete
  27. வாழ்த்துக்கள் பாஸ்!

    துபாய்க்கு ஒரு ப்ளைட் டிக்கெட் எடுத்து கொடுத்தீங்கன்னா நேரடியா நிகழ்ச்சிக்கு வந்தே புக்கை வாங்கிக்கிறேன் பாஸ்.... :)

    ReplyDelete
    Replies
    1. நானே ஓரிரு மாதங்களில் துபாய் வரலாம்னு இருக்கேன்.. நேரிலேயே வந்து கொடுத்திடறேன்.. ;-)

      Delete
  28. உலகம் ஆயிரம் சொல்லட்டுமே ...கவலையை விடுங்க ஆவி ஜி !
    அவங்க புத்தக விற்பனையைப் பார்த்து மயங்கி விழப் போறாங்க !

    ReplyDelete
    Replies
    1. சப்போர்ட்டுக்கு நன்றி பகவான்ஜி!!

      Delete
  29. புத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள் ஆவி......

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...