இன்ட்ரோ
அஜித் என்ற ஒரு நல்ல "நடிகனை" மாஸ் என்ற வட்டத்துக்குள் சிக்க வைத்து, பஞ்ச் டயலாக் பேசவிட்டு, பத்து பதினைந்து அடியாட்களை பறக்க விட்டு, இடையிடையே ரோமேன்ஸ் என்ற பெயரில் ஆடவிட்டு, செண்டிமெண்ட் என்ற பெயரில் காமெடி செய்து, காமெடி என்ற பெயரில் அழ வைத்து, "வீரம்" என்பது உருட்டுக் கட்டையிலும், அரிவாளிலும் தான் இருக்கிறது என சொல்ல வந்திருக்கும் இந்த மசாலாவில் கொஞ்சம் "ராயலசீமா" வாடை தூக்கலாக இருக்கிறது.
கதை
தம்பிகளைக் காரணம் காட்டி திருமணம் செய்து கொள்ளாமல் ஜாலியாக இருந்த அண்ணனை அவருடைய விளக்கெண்ணை பிரதர்ஸ் (அப்படித்தான் படத்திலேயே சொல்றாங்க) சந்தானத்தோடு சேர்ந்து தமன்னாவை காதலிக்க வைக்கிறார்கள். அங்கு ஆரம்பிக்கும் அவருடைய ஏழரை படம் முடியும் போது ரசிகர்களுக்கும் வந்து சேர்கிறது. அடிதடி பிசினஸ் செய்யும் அவரை அம்பியாய் நினைத்து காதலிக்கும் தமன்னா "கௌதம புத்தரின்" பாசறையிலிருந்து வேலை பார்க்கும் தன் தந்தையிடம் அஜித்தை அறிமுகம் செய்து வைக்க அழைத்து செல்லும் வழியில் எதிர்வரும் "ரத கஜ பராக்கிரமர்களை" வதம் செய்து ரயிலின் மேற்கூரையில் நங்கூரமிட்டு நிறுத்த அப்போது அவர் வீரத்தை பார்த்து 'மயங்கி' விழுவது தமன்னா மட்டுமல்ல ஒட்டுமொத்த திரையரங்கமே தான். மயங்கிய ஆடியன்ஸை இடைவேளை விட்டு கொஞ்சம் தெளிய வைத்து அவர்களுக்கு பாப்கார்ன், ஐஸ்க்ரீம் எல்லாம் வயிறார கொடுத்து விட்டு மீண்டும் இரண்டாம் பாதியில் "ஹைதராபாத்" தம் பிரியாணி படைக்கிறார். வயிறு நிறைந்து நாம் சீட்டை விட்டு எழும்போது கடிக்கவே முடியாத ஒரு "காமெடி கொட்டைப்பாக்கை" நம் வாயில் திணித்து அனுப்புகிறார் சந்தானம். ஷப்பா...
ஆக்க்ஷன்
'தல' என்ற ஒற்றை அச்சாணி கொண்டு கிராமத்தில் மாட்டு வண்டி ஓட்ட முயல்கிறார்கள். மறுபுறம் குடை சாயும் வண்டியை தாங்கிப் பிடிக்க தம்பிகளோ, சந்தானமோ, தமன்னாவோ யாராலும் முடியவில்லை. மாஸ் எல்லாம் ஒக்கே "தல".. நல்ல படத்தில் உங்க நடிப்ப இன்வெஸ்ட் பண்ணுங்க என்று அலறும் "தல" ரசிகனின் கதறலை அஜித்தின் காதில் சென்று சேர இயக்குனர்கள் விடுவார்களா என தெரியவில்லை. அதிலும் அவர் பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் போது "வணக்கம் சென்னை" சிவாவை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவே உணர முடிந்தது. தமன்னா பெயின்ட் அடித்த பப்பாளி, முதல் முறை பார்க்கிறவங்க கிட்ட தன் செல்லப் பேரையெல்லாமா சொல்வாங்க.. ஒரே மாதிரியான ரியாக்க்ஷன்ஸ் பார்த்து பார்த்து போரடித்து விட்டது. Babe, இட்ஸ் டைம் டு லீவ்..நான்கு தம்பில ஒருத்தன் கூடவா பெர்பார்மன்ஸ் பண்ண முடியல? சரி தல இருக்கும் போது வால் எப்படி ஆட முடியும். சந்தானம் சில காமெடி ஒக்கே என்றாலும் சீக்கிரம் விவேக், வடிவேலு லிஸ்டில் சேர வாய்ப்புள்ளது. நாசர் டம்மி பீஸாக வந்து போகிறார். 'தல' க்கு பிறகு நிறைவான நடிப்பை தந்த ஒரே ஆள் அப்புக்குட்டி தான். செண்டிமெண்ட் காமெடிகளுக்கு நடுவே நெஞ்சின் ஓரத்தை சுரண்டிய ஒரே காட்சி இவருடையது தான். அதுல் குல்கர்னி, பிரதீப் ராவத் ஆகியோர் நேரம் கிடைக்கும் போதெல்லாம் வந்து 'தல'யிடம் அடிவாங்கி செல்கிறார். கிராமத்து சப்ஜெக்ட் என்பதற்காக ஜெயிலில் இருந்து தப்பிய கைதி ராமராஜ் வேஷ்டியை மாற்றிக் கொண்டு வந்து அடிவாங்கி செல்வதெல்லாம் டூ மச்..
இசை-இயக்கம்
DSP தன் பங்கிற்கு தாரை தப்பட்டைகளை முழங்க விட்டிருக்கிறார். ஒரே ஆறுதல் "ரத கஜ பதாதி" பாடல் மட்டுமே.. அதுவும்டீசரில் பார்த்தபோது கலக்கலாக இருந்தது. ஆனால் படத்தில் பத்து நிமிடத்திற்கு ஒரு முறை வரும்போது கொஞ்சம் வேறுபேற்றுகிறது என்பது தான் உண்மை. 'சிறுத்தை' சிவா சார், உங்க பெயரில் சிறுத்தையை சேர்த்துக் கொண்டது சரி, எடுக்கும் எல்லா படங்களையும் அதே டெம்ப்ளேட்டில் எடுப்பது நல்லா இருக்காது சார், தமிழ்நாட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை பண்ணுங்க..
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
மாஸ் நிறைந்த அந்த ரயில் சண்டைக் காட்சி மற்றும் தமன்னாவிடம் தயங்கி தயங்கி பெயர் கேட்கும் அஜித்தின் நடிப்பு. இருந்தாலும் படம் முடிந்த பிறகு சொல்லிக் கொள்ளும்படி ஒரு காட்சியும் நினைவில் இல்லை என்பதே நிதர்சனம்.
Aavee's Comments - Valour with lot of bloodshed.
பரவாயில்ல எனக்கு உங்கள விட ஒரு படி மேல புடிச்சி இருக்கு.. ஆனா அதுக்காக வணக்கம் சென்னை சிவா கூட கம்பேர் பண்ணினதா சங்கம் வன்மையாக கண்டிக்கிறது :-)
ReplyDeleteஹஹஹா.. எனக்கும் பிடிச்சிருந்தது சீனு. ஆனாலும் மக்களை காப்பாத்த வேண்டிய சமூகக் கடமை ஒண்ணு இருக்கில்ல.. என்ன நான் சொல்றது!!
Deleteஉங்கள் பார்வையில் விமர்சனம் நன்று,
ReplyDeleteஎனக்கு படம் பிடித்திருந்தது.
எனக்கும் பிடிச்சிருந்துதுங்க.. ஒரு 'தல' ரசிகனாய் ரொம்பவே ரசிச்சு பார்த்தேன்.. அந்த சட்டையை கழட்டி வச்சுட்டு பார்த்தா தொய்வான திரைக்கதை கொண்ட ரொம்பவே சுமாரான படம் தான் இது!!
Deleteநல்ல விமர்சனம்?சரி விடுங்க,'நம்ம" தல படம்!!!
ReplyDeleteஆமா பாஸ்.. "தல" தீபாவளி.. "தல" பொங்கல் இதுக்கு மேல ஒரு தல ரசிகனுக்கு வேறென்ன வேணும்..
Deleteஉங்க விமர்சனத்த நம்பி படத்த பார்க்கலாம்னு சொல்ற அளவுக்கு நடுநிலமையா சொல்லிருக்கீங்க. இனிமே உங்க விமர்சனங்களை தவறாம படிக்கணும்.
ReplyDeleteநன்றி சங்கர்.. தொடர்ந்து படிங்க..
DeleteGud open statement bro
ReplyDeleteயாரிடமும் 'மயங்காத' விமர்சனம்...
ReplyDeleteநன்றி DD
Deleteரொம்ப புகழ்ந்து எழுதுவீங்கன்னு பார்த்தா இப்படி கவுத்திட்டீங்களே பாஸ்!
ReplyDeleteநியாயம்ன்னு ஒண்ணு இருக்கே.. அஜித் நல்ல கதைகளை கேட்டு நடிக்க வேண்டிய நேரம் வந்தாச்சி.. "தல" ரசிகனா என்னோட ஆசை.. :)
Deleteஎன்ன இப்படி ஏமார்த்திப்போட்டீங்க ஆவி இன்னும் படம் பார்க்கவில்லை.
ReplyDeleteஏமாத்தினது நான் இல்ல பாஸ்.. இயக்குனர் சிவா..
Deleteநல்ல விமர்சனம்! எஸ்! அஜித் சூஸ் பண்ணி படம் பண்ணனும்...சரிதான்....
ReplyDeleteபாராட்டிற்கு நன்றிகள்!!
Deleteநல்ல விமர்சனம்.... பாராட்டுகள் ஆவி!
ReplyDeleteநன்றி சார்!
DeleteThis comment has been removed by the author.
ReplyDeleteஅஜித் பாடல் காட்சிகளில் நடனம் ஆடும் போது "வணக்கம் சென்னை" சிவாவை தோற்கடிக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகவே உணர முடிந்தது.தல' க்கு பிறகு நிறைவான நடிப்பை தந்த ஒரே ஆள் அப்புக்குட்டி தான். 'சிறுத்தை' சிவா சார், உங்க பெயரில் சிறுத்தையை சேர்த்துக் கொண்டது சரி, எடுக்கும் எல்லா படங்களையும் அதே டெம்ப்ளேட்டில் எடுப்பது நல்லா இருக்காது சார், தமிழ்நாட்டுக்கு ஏத்த மாதிரி ஒரு கதை பண்ணுங்க..
ReplyDeleteசரியான விமர்சனம்
நீங்கள்தான் உண்மையான தல ரசிகன்