Monday, January 27, 2014

ஆவி டாக்கீஸ் - திருமணம் எனும் நிக்காஹ் (Music)



                ராஜாராணி வெற்றிக்கு பின் தலா  ஒவ்வொரு தோல்வியை சந்தித்த ஜெய் மற்றும் நஸ்ரியா இணைந்து நடிக்கும் படம் திருமணம் எனும் நிக்காஹ்.. ராஜாராணி படத்திற்கு முன்பே இப்படத்தின் படப்பிடிப்பு துவங்கி இருந்தாலும் அடுத்த வருடம் தான் வெளிவருகிறது. இந்தப் படத்தின் இசை எப்படி இருக்கிறது என்று பார்ப்போமா?



                 1. "என்தாரா..என்தாரா" - ஷதாப் பரிதி, சின்மயி பாடியிருக்கும் இந்தப் பாடல் மின்சாரம் பாய்ச்சும் காதல் பாடல். கார்த்திக் நேதா எழுதியிருக்கும் வரிகளும், ஜிப்ரானின் இசையும் ஒன்றோடொன்று பின்னிப் பிணைந்து இருக்கிறது. "TAAL" படத்தில் அக்க்ஷய் கண்ணா, ஐஸ்வர்யா ராய்க்கு இடையில் காதல் அரும்பும் முதல் பாடலின் சாயலில் இருக்கிறது.

                  2. சாருலதா மணி, சாதனா சர்கம், விஜயபிரகாஷ், Dr. கணேஷ் இணைந்து பாடியிருக்கும் கிளாசிக்கல் கலக்கல் "கண்ணுக்குள் பொத்தி வைப்பவன்". பாடலுக்கு இடையே காதலனும் காதலியும் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொள்ளும் "சரச" வரிகளும் உண்டு. கவிஞர் பார்வதியின் எழுத்தாணியில் உருவான பாடலிது.

                   3. "க்வாஜா ஜி"  கடவுளிடம் வேண்டிப் பாடும் பாடலாய் வருகிறது. அரிதுல்லா ஷா, காலிப்-ஈ-ரிபாயி குழுவினர் பாடியிருக்கும் பாடல்.

                  4. தேன்மொழி தாஸ் எழுதியிருக்கும் "ரயிலே ரா" பாடல் இந்த ஆல்பத்தில் அதிவேகத்தில் செல்லும் ஒரு பாடல். போனி சக்ரபர்த்தி, "இசைமழை"ஹரிஷ், அஸ்விதா  மற்றும் நிவாஸ் பாடியிருக்கும் இந்தப் பாடல் இரயில் சிநேகம் போலிருக்கும் காதலை பற்றி பேசுகிறது.


                   5. யாசின் நசிர் சோக கீதம் பாடியிருக்கும் "யாரோ இவள்" பாடல் அவ்வளவாக நம்மை ஈர்க்காவிட்டாலும்

  "மேலே போடும் நீலத் திரை தாண்டி என்னை பார்ப்பாயா, சட்டென வாழ்ந்திடும் சட்டத்தை விட்டுட்டு என் மன ஓசை கேட்பாயா?"

                    எனும் பார்வதியின்  வரிகள் கவனிக்க வைக்கின்றன.

                  6. காதல் மதியின் காதல் ரசம் பொங்கி வழியும் "சில்லென்ற சில்லென்ற" பாடலை சுந்தர் நாராயண ராவ் தமிழிலும், கௌசிகி சக்ரபர்த்தி ஹிந்தியில் பாட கேட்பதற்கு இனிமையான பாடல். கௌஷிகியின் தமிழ் உச்சரிப்பும் அழகு. முன்னா சவுகத் அலி மற்றும் ஜிப்ரான் உச்சஸ்தாயியில் பாடும் போது நாமும் மெய்மறந்து தான் போகிறோம்.

                   முஸ்லிம் திருமணத்தின் பின்னணியில் அமைந்த பாடல்கள் மெல்லிசை தாலாட்டு..

20 comments:

  1. எத்தனை பாடகர்கள்!
    தமிழ்த் திரையிசை நிச்சயம் மாறித்தான் போனது.

    ReplyDelete
    Replies
    1. ஆமா, அப்பாதுரை சார்.. புதியவர்கள் நிறைய பேர் வருவது ஆரோக்கியமான விஷயம் தானே!!

      Delete
  2. பாடகர்கள் எல்லோரும் புதிதாகத் தெரிகிறார்கள். காதல்மதி தவிர, கவிஞர்களும்! பாடல் ஒன்றுகூட இன்னும் காதில் விழவில்லை! பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. விஜயபிரகாஷ், சின்மயி, ஸ்ரேயா கோஷல் நீண்ட நாட்களாக பாடிக் கொண்டிருக்கிறார்கள் சார்.. ;-)

      Delete
  3. //"க்வாஜா ஜி"// டமில் சாங்குன்னு சொல்லிட்டு... போங்கு...
    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி.. நான் இன்னாபா பண்றது.. அத்த அவங்க கைல தான் சொல்லணும்.. :) தேங்க்ஸ் ப்பா

      Delete
  4. Replies
    1. கேளுங்க நண்பரே, இரண்டு பாடல்கள் அருமை.. மற்றவை இசைக் கொர்வைக்காக கேட்கலாம்..

      Delete
  5. பார்வதி...! கவிஞர் (கவிஞி?) பேர் புதுசா இருககுது. அவர் ஏதோ ஆணி வெச்சு எழுதறார்ங்கற தகவலும் புதுசாத்தான் இருக்குது. ஹி... ஹி...!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. ஆமா சார் கொஞ்சம் புதுசு தான் சார்..காதலில் சொதப்புவது எப்படி, வல்லினம் படங்கள்ல எழுதியிருக்காங்க.

      Delete
  6. தலைப்பைப் பார்த்து வேறு நினைத்தேன்...! பாடல்களை கேட்டுப் பார்ப்போம்...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. நீங்க என்ன நினைச்சிருப்பீங்கன்னு ஊகிக்க முடியுது..

      Delete
  7. இன்னுமா நஸ்ரியா மோகம்!?

    ReplyDelete
  8. கேட்ருவோம் பாஆஆஆஆஸ்

    ReplyDelete
  9. கோவை ஆவி "ஆவி" பறக்க தந்த தகவல்! ஆமாம் படம் பேரே புதுசா இருக்கு! நிறைய பேரு பாட வந்துருக்காங்க! அதிலும் இப்ப ஏர்டெல் சூப்பர் சிங்கர் லருந்து வர்ரவங்களும் இருக்காங்க! முன்பெல்லாம் சுசீலா, ஜானகி அம்மா, அப்புறம் சித்திரா, ஜென்சி, என்று ஒரு சிலர் என்பதால் பாடும் போதே ஈசியா குரல் கண்டுபிடிச்சு விடலாம். இப்ப அப்படி இல்ல யாரு பாடறாங்க்னு கண்டு பிடிக்கறதும் கஷ்டமா இருக்கு! ஆனாலும் என்ன நிறைய பேருக்கு சான்ஸ் கிடைக்குது இல்ல!!! நல்ல விஷயம் தான்!

    நல்லாருக்கு பாடல்கள்! கேட்டவரை....இன்னும் முழுதும் கேக்கல.....நெட்டு புட்டுக்குது...

    ReplyDelete
  10. முஸ்லிம் திருமணத்தின் பின்னணியில் அமைந்த பாட்டு என்றாலே எங்கள் இருவருக்கும் மலையாள மாப்பிள்ளைப் பாட்டுக்கள்தான் நினைவுக்கு வருகின்றாது! அருமையாக இருக்கும். உங்களுக்கும் தெரிந்த்திருக்கும்!

    ReplyDelete
  11. பகிர்வுக்கு நன்றி!///"பாப்பா"(நஸ்)நிக்காஹூக்கு அப்புறம் தான் படம் ரிலீஸ் ஆகும் போல?

    ReplyDelete
  12. விரைவில் கேட்கிறேன் ஆவி.... தகவலுக்கு நன்றி.

    ReplyDelete
  13. பகிர்வுக்கு நன்றி! டவுண்லோடிடுவோம்!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails