எனக்கு மிகவும் பிடித்த நடிகர்களில் ஒருவர், பிரபல ஹாலிவுட் நடிகர் பிலிப் சீமோர் ஹாப்மேன் (Philip Seymour Hoffman) மரணம்! அளவுக்கு அதிகமாக போதை மருந்து உட்கொண்டதால் மரணம் ஏற்பட்டிருக்கலாம் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான Hunger Games படத்தில் இவர் நடித்திருந்தார். Doubt, Capote, Mission Impossible 3 போன்ற படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியிருப்பார். ஒவ்வொரு படங்களிலும் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் தோன்றும் இவர் சிறந்த நடிகருக்கான ஆஸ்கரை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. RIP Philip Seymour Hoffman!!
*****************
சமீபத்தில் வெளியான வீரம் ஜில்லா போன்ற படங்கள் இரண்டையும் முதல் நாள் முதல் காட்சி பார்க்கும் வாய்ப்பு கிட்டியது. அங்கே சென்ற போது கண்ட காட்சிகள் நாம் இன்னும் பக்குவப்பட்ட மனிதர்களாய் மாறவில்லை என்பதையே உரைத்தது. ஒரு நடிகரின் ரசிகன் மற்ற ரசிகர்களை கேவலமாக சாடுவதும், அசிங்கமான வார்த்தைகளால் அர்ச்சனை செய்வதும் பண்பட்டவர்கள் போல் தோன்றவில்லை. இதற்கும் அதில் சிலர் ஐ.டி கம்பெனிகளில் பணிபுரியும் நபர்கள். ரசிகர்களாய் இருப்பது தவறில்லை. ஆனால் அதற்கு முன் பொது நாகரிகம் தெரிந்த மனிதனாய் இருத்தல் மிக மிக அவசியம். இதை மறைமுகமாக ஊடகங்களும் ஊக்கப் படுத்திக் கொண்டுதான் இருக்கின்றன. பில்லாவும் ஜில்லாவும் எல்லாமல்ல என்று இவர்கள் உணரும் தருணம் எப்போது வருமோ?
*****************
சென்ற சனவரி 26 குடியரசு தினத்தை ஒட்டி மெரீனா கடற்கரையில் வாத்தியாரும் சிஷ்யப் பிள்ளைகளும் சந்திப்பு அரங்கேறியது. வழக்கம்போல் வெட்டி அரட்டைகள் நிகழ்த்தாமல், கடற்கரை மணலில் கொஞ்சி விளையாடிய வஞ்சிகளை நோக்காமல் 2014ஆம் ஆண்டு செய்து முடிக்க வேண்டிய பல பணிகளை பற்றிய கலந்தாய்வு நடந்தது. முதலாவதாக "வாசகர் கூடம்" எனும் தளம் ஆரம்பித்து அதில் புத்தக விமர்சனங்கள் வெளியிடலாம் எனவும் அதற்கு "புத்தகம் சரணம் கச்சாமி" என்று பஞ்ச் லைனை வைக்கலாம் என்றும் முடிவு செய்யப்பட்டது. எல்லா புத்தகங்களையும் எல்லாரும் படிப்பதென்பது இயலாத காரியம். ஆகவே தாம் படித்து ரசித்த நல்ல புத்தகங்களின் விமர்சனங்களை இங்கே பகிர்வதன் மூலம் பல வாசகர்களுக்கு அது சென்றடையும் என்ற நோக்கில் இது ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வாசகர்கள் மற்றும் விமர்சகர்கள் மோஸ்ட் வெல்கம்!!
*****************
உலக நுண்ணறிவாளர் தினம் தொடங்கி இன்றோடு பதினொரு ஆண்டுகளாகிறது. இன்று ( பிப்ரவரி 6 ) பிறந்த நாள் காணும் 'கோவை நேரம்' ஜீவா, மனோஜ் மற்றும் இன்று பிறந்த எல்லா நுண்ணறிவாளர்களுக்கும் ( Born Intelligents ) என் வாழ்த்துகள். இந்த நன்னாளில் என் வாசகர்கள், பதிவர்கள் மற்றும் எழுத்தாளர்களை கவுரவிக்கும் விதமாக கீழ்க்கண்ட விருதுகள் வழங்கப்படுகின்றன. தயை கூர்ந்து இவற்றை ஏற்றுக் கொண்டு உங்கள் தொடர்ந்த ஆதரவை நல்குமாறு கேட்டுக் கொள்கிறேன். பின்வருவன சென்ற ஆண்டு ( பிப் 6,2013- பிப் 5,2014)நான் படித்து/பார்த்து/கேட்டு ரசித்தவைகளில் இருந்து மட்டுமே.. மத்தவங்க கோச்சுக்காதீங்க..
நுண்ணறிவாளர் விருது:
(விருதை உங்க தளத்துல இணைச்சுக்கோங்க !!)
திரையுலகு:
சிறந்த இயக்குனர் - ஜித்து ஜோசப் (த்ரிஷ்யம், மெமரிஸ்)
சிறந்த நடிகர் - பகத் பாசில் (நார்த் 24 காதம், ஆமென், ரெட் ஒயின்)
சிறந்த நடிகை - தீபிகா படுகோன் ( ஏ ஜவானி ஹே தீவானி)
சிறந்த படம் - நார்த் 24 காதம் (மலையாளம்), லஞ்ச் பாக்ஸ் (ஹிந்தி)
பதிவுலகு:
நெகிழ வைத்த பதிவு - தாத்தா (ஸ்கூல்பையன் )
சிறந்த பதிவு ( சமூகப் பார்வை) - திருநங்கை சங்கீதா (ஜீவா) , சுற்றுச்சூழல் (கோகுல்)
சிறந்த பதிவு ( நகைச்சுவை) - 'கொசு'வநாத புராணம் (பாலகணேஷ்)
சிறந்த பதிவு (ஜோக்ஸ்) - ஜோக்காளி (பகவான்ஜி)
சிறந்த பதிவு ( பொது அறிவு) -தஞ்சாவூர் வீணை (சுரேஷ்)
சிறந்த பதிவு ( பயணம்) - பத்மநாபபுரம் அரண்மனை (கா.போ.க ராஜி) , யானையை விழுங்கும் பாம்பு ( கரந்தை ஜெயக்குமார்)
சிறந்த பதிவு (ஆய்வு) - இந்திய கற்பாறை சித்திரங்கள் (கலாகுமரன்)
சிறந்த பதிவு (சரித்திரம்) - வானவல்லி ( வெற்றிவேல் )
சிறந்த பதிவு (கிராமிய மணம் ) - ஊர்ப்பேச்சு (அரசன்)
சிறந்த பதிவு (காதல் கடிதம்) - வார்த்தைகள் தேவையா? (சுபத்ரா)
சிறந்த பதிவு ( கட்டுரை) - சச்சின் பிரிவுபசாரமும் பாரத ரத்னாவும் (டி.என். முரளிதரன்)
சிறந்த பதிவு (அனுபவம்) - ஸ்கூல் பையன் (சீனு)
சிறந்த பதிவு (கல்வி) - இந்த கல்வியை கொடுப்பதெப்படி (எழில்)
சிறந்த பதிவு (தமிழ் ) - உங்களின் தமிழ் அறிவு எப்படி ('தளிர் சுரேஷ்)
சிறந்த பதிவு (விளையாட்டு) - நியுசிலாந்து தொடர் (எல்.கே)
சிறந்த பதிவு ( கிளுகிளுப்பு) - மார்னிங் சிக்னஸ் (நம்பள்கி)
சிறந்த தொகுப்புகள் - முத்துக்குவியல், தேன்மிட்டாய்
சிறந்த கதை ( தொடர்) -
சிறந்த திரை விமர்சனம் - ஆல்இன்ஆல் அழகுராஜா (உலக சினிமா ரசிகன் )
சிறந்த கவிதாயினி - 'கவிஞர்' கோவை சரளா
'கவிஞர்' தென்றல் சசிகலா
"சகோ"அம்பாள் அடியாள்
"என் தங்கை" காயத்ரி
சிறந்த கவிஞர் - புலவர் இராமாநுசம்
கவிஞர் ரமணி
சிறந்த பதிவர் (ஆன்மிகம்) - இராஜராஜேஸ்வரி ( மணிராஜ்)
சிறந்த பதிவர் (சினிமா) - ஆரூர் மூனா, உலக சினிமா ரசிகன், செங்கோவி, ஹாரி
சிறந்த பதிவர் (பல்சுவை) - சுப்புத்தாத்தா, எங்கள் பிளாக்
சிறந்த பதிவர் (தொழில்நுட்பம்) - அப்துல் பாசித், பிரபு கிருஷ்ணா
சிறந்த பதிவர் (பின்னூட்டப் புயல்) - திண்டுக்கல் தனபாலன்
சிறந்த பதிவர் (ஜாலி) - நாஞ்சில் மனோ, அனன்யா மகாதேவன் , ஸாதிகா, "விக்கியுலகம்" வெங்கட், ஆர்.வி.சரவணன், 'மேலையூர்' ராஜா
சிறந்த புகைப்படப் பதிவர் - வெங்கட் நாகராஜ் (பதிவர் சந்திப்பு படங்கள்)
சிறந்த பதிவர் (நையாண்டி) - சிவகுமார் (மெட்ராஸ்பவன்), "பிலாசபி" பிரபாகரன், ஜீவன்சுப்பு
சிறந்த பதிவர் ("இலக்கியம்") - கவியாழி கண்ணதாசன்
சிறப்பு "ஆவி" விருது -
1. திடம்கொண்டு போராடு "சீனு" (கவிதைப் போட்டி ஒன்றை நடத்தி தொய்வடைந்திருந்த பதிவுலகத்தை தட்டி எழுப்பியதற்காக)
2. வலைச்சரம் "சீனா", தமிழ்வாசி "பிரகாஷ் ( ஆசிரியர் பொறுப்பு தந்து பதிவர்களை ஒருவரை ஒருவர் அறியச் செய்யும் அரும் பணியை செய்து வருவதற்காக)
************
வணக்கம்
ReplyDeleteநல்ல முயற்சிக்கு பாராட்டுக்கள்... சாதனையாளர்கள் அனைருக்கும் வாழ்த்துக்கள்...
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
நன்றி ரூபன்!!
Delete'புத்தகம் சரணம் கச்சாமி' நன்றாயிருக்கிறது.
ReplyDeleteநானும் என் பிறந்த நாளை ஃபிப்ரவரி ஆறுக்கு மாற்றிக் கொள்ளலாமா என்று பார்க்கிறேன்!
ஆமாம் சார், அதுதான் பொருத்தமா இருக்கும்.. :)
Deleteஇன்று நுண்ணறிவாளர் தினம் கொண்டாடும் தங்களுக்கும் என் வாழ்த்துக்கள்
ReplyDeleteநன்றி பா!!
Deleteநன்றி...
ReplyDeleteஅனைவருக்கும் வாழ்த்துக்கள்...
நன்றி DD
Deleteஇதயம் நிறைந்த இனிய பிறந்ததின நல்வாழ்த்துகள் ஆனந்த்! விருதுகள் வழங்கி எல்லாரையும் மகிழ்ச்சில ஆழ்த்திட்ட... நிழற்குடையும் குளுகுளுவென்றுதான் இருக்கிறது. கன்டின்யூ...! அப்புறம்... ஒரு சின்னத் திருத்தம்...! நம்ம ‘வாசகர் கூடம்’ தளம் புத்தக விமர்சனங்களைப் பகிர்வதற்கான தளம் மட்டுமில்ல... இனிவரும் நாட்களில் எழுத்தாளர்களைப் பற்றிய கட்டுரைகள், புத்தகங்கள் பற்றிய அலசல்கள், பழங்கால புதினங்களின் கதைச்சுருக்க அறிமுகம் என பலவும் வரப் போகிறது. ஆக அது வாசிப்புக்கான ஒரு தளம்னே குறிப்பிடறது அழகுன்னு நெனக்கிறேன்!
ReplyDeleteவாழ்த்துக்கு நன்றி சார்!! ஆமாமில்ல, நாம பேசினத மறந்துட்டன்.. மன்னிச்சு..
Deleteசூப்பருப்பா...!
ReplyDeleteஅல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...
நைனாவை பள்ளிச்சிறுவன் சுற்றி வளைத்ததாய் கேள்விப்பட்டேன்.. உண்மையா பா??
Deleteகடற்கரையில் வாத்தியாரும் சிஷ்யப் பிள்ளைகளும் சந்திப்பு அரங்கேறியது. வழக்கம்போல் //என்னை பெருமைப் படுத்தியமைக்கும் நன்றி
ReplyDeleteநீங்க எல்லாம் தான் எங்க எழுத்துகளுக்கு முன்னோடி சார்!!
Deleteதீபிகா படுகோனை விருது வழங்கும் விழாவிற்கு அழைப்பு விடுத்து விட்டீர்களா ?
ReplyDeleteஅவர் கையால் மட்டுமே நான் விருதை வாங்கிக் கொள்ள முடிவு ...ஹிஹி !
த ம 6
வேண்டாம் சார்.. அவங்க ரன்பீரோட ஜோடியா வந்து இறங்குறத பார்த்தா உங்க பிஞ்சு மனசு சுக்கு நூறா ஒடன்சுடும்ங்கறதால நான் வர வேணாம்னு சொல்லிட்டேன்..!
Deleteகடல்பயணங்கள் தளத்திற்கு பொது அறிவு பிரிவில் விருது தந்தமைக்கு நன்றி ஆவி...... உங்களது ஆவிப்பா வெற்றி அடைய வாழ்த்துக்கள்.
ReplyDeleteசரி, விருது வழங்கும் விழா எப்போ ?!
விருது வழங்கும் விழாவா?? எஸ்கேப்புடா ஆவிஈஈஈஈ !!
Deleteமனம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்..!
ReplyDelete"புத்தகம் சரணம் கச்சாமி" என்று பஞ்ச் லைன் பொருத்தமாக ரசிக்கவைத்தது..!
//சிறந்த பதிவர் (ஆன்மிகம்) - இராஜராஜேஸ்வரி ( மணிராஜ்)//
எமது தளத்திற்கு விருது அளித்து பெருமைப்படுத்தியதற்கு
இனிய நன்றிகள்..!
நன்றி அம்மா..
Deleteநன்றி..சிறந்த நஸ்ரியா பல்பு விருது - ஆவிக்கா?
ReplyDelete"அயர்ன் மேன்" விருது கொடுத்திருக்காங்க நண்பா.. (எதையும் தாங்குவேனாம்!!!)
Deleteமிக்க மகிழ்ச்சிங்க.. தென்றலையும் மறக்காமல் விருது கொடுத்து மகிழ்ந்தமைக்கு எனது மனமார்ந்த நன்றிங்க.
ReplyDeleteகவிதாயினிக்கு கொடுக்காம அந்த விருது எப்படி பெருமை அடையும்.. உங்களை நினைச்சதுமே "அக்கா மகளே ராசாத்தி" கவிதை நினைவுக்கு வருது..
Deleteதலைவரே விருது வழங்கும் விழாவிற்கு நச்ரியாவை அழைக்கும் எண்ணம் உள்ளதா....????
ReplyDeleteநன்றி ஆவி அண்ணா. வலையுலகில் எனக்கு கிடைத்த முதல் விருது இதுதான்... நன்றி. மிக்க மகிழ்ச்சி...
விருது பெற்ற அனைவருக்கும் எனது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும்....
திரைத்துறையில் தங்கள் விருதை எந்தவொரு தமிழருக்கும் வழங்காதது சற்று வருத்தமே...
கண்டிப்பா அதுக்கு தகுதியான ஆள் தான் தம்பி நீ!!
Deleteவிருதுக்கு நஸ்ரியா வர்றேன்னாங்க, நான்தான் தம்பி வெற்றி வர்றேன்னு சொல்லிட்டாப்லே, நீங்க வேண்டாம்னு சொல்லிட்டேன்.. :)
எது சிறந்த பதிவரா அதுவும் ஜாலி கேட்டகிரியா? ஹிஹி! பதிவே போடாட்டாலும் விருது கொடுத்து கெளரவிக்கும் ஆவியே... நீவீர் வாழி! நின் கொற்றம் வாழி! நின் கொடை வாழி! ;-)
ReplyDeleteமுற்பகல் செய்தது பிற்பகல் விளைஞ்சிருக்கு.. அவ்ளோதான்.. நம்ம கைல என்ன இருக்கு!!
Delete//சிறந்த நடிகர் - பகத் பாசில்// உனக்கு rival ஆ இருந்தாலும் அவார்டு குடுத்திருக்கே பார்த்தியாப்பா! அங்கே தான் ராஸா நீ நிக்கறே! அந்த வானத்த போல மனம் படைச்ச மன்னவனே......
ReplyDelete"ஆலன்போர்டு" டிக்க்ஷனரில நேர்மைங்கற வார்த்தைக்கு பக்கம் ஆவி பெயர் இருக்கும் படிச்சதில்லையோ நீங்க? :)
Deleteவாழ்த்துக்கள்! வாத்தியாரும் சிஷ்ய பிள்ளைகளும் சேர்ந்து ஆரம்பிச்சிருக்கிற வாசகர் கூடம் நல்ல முயற்சி! முதல் பதிவை படிச்சிட்டேன்! புது பதிவுகளை இனி படிச்சுடறேன்! எனக்கும் ஒரு விருது கொடுத்து கவுரவித்தமைக்கு நன்றி! எதிர்ப்பார்க்காத பரிசு இது! நன்றி!
ReplyDeleteநன்றி நண்பா!! தொடர்ந்து வாங்க
Deleteபுத்தம் சரணம் கச்சாமி சூப்பர்!
ReplyDeleteஅருமையான விருதுகள் செலக்ஷன்! அனைவருக்கும் பாராட்டுக்கள்!
கண்டிப்பாக ஒரு புத்தக விமர்சனம் வருகின்றது! எழுதி முடிக்க வில்லை இன்னும்! வாசகர் கூடத்தில் பதிந்து விடலாம்! அதே சமயம் எங்கள் வலைப்பூவில் இடுகையாகப் போடலாமா?
சக பதிவர்களை விருது கொடுத்துப் பாராட்டும் தங்களுக்குப் பாராட்டுக்கள்!
தொடருங்கள்! வாழ்த்துக்கள!!!
புத்தம் சரணம் கச்சாமி சூப்பர்!
ReplyDeleteஅருமையான விருதுகள் செலக்ஷன்! அனைவருக்கும் பாராட்டுக்கள்!
கண்டிப்பாக ஒரு புத்தக விமர்சனம் வருகின்றது! எழுதி முடிக்க வில்லை இன்னும்! வாசகர் கூடத்தில் பதிந்து விடலாம்! அதே சமயம் எங்கள் வலைப்பூவில் இடுகையாகப் போடலாமா?
சக பதிவர்களை விருது கொடுத்துப் பாராட்டும் தங்களுக்குப் பாராட்டுக்கள்!
தொடருங்கள்! வாழ்த்துக்கள!!!
புத்தம் சரணம் கச்சாமி சூப்பர்!
ReplyDeleteபுத்தக விமர்சனம் வருகின்றது வாசகர் கூடத்தில் பதிந்து விடலாம். இன்னும் எழுதி முடிக்க வில்லை!
சக பதிவர்களையும் பாராட்டி விருது கொடுக்கும் தங்களுக்கு எங்கள் பாராட்டுக்கள்!
தொடரவௌம், வாழ்த்துக்கள!
நிழற்குடை நல்ல கூலாகவே உள்ளது!!
துளசிதரன், கீதா
சூப்பர் ஆவி.... வாழ்த்துக்கள்....
ReplyDeleteவாசகர் கூடம் நல்ல முயற்சி... தொடருங்கள்.
வாசகர் கூடம் அருமையான ஏற்பாடு..சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள். சிறந்த பதிவு(கல்வி)க்கான விருது கொடுத்தமைக்கு மிக்க நன்றி...
ReplyDeleteநன்றி எழில் மேடம்..
Deleteமிக்க நன்றி ஆவி,எல்லோருக்கும் வாழ்த்துகள்.
ReplyDeleteநன்றி கோகுல்
Deleteபுலவர் ஐயாவுடன் இணைந்து
ReplyDeleteஇந்த விருது பெறுவது
கூடுதல் மகிழ்வளிக்கிறது
மிக்க நன்றி
நன்றி ஐயா..
Deleteநன்றாக நிழல் தந்தது,உங்கள் நிழற் குடை!(சும்மா படிச்சுட்டுக் கொமெண்ட் பண்ற எனக்கு ஒண்ணும்(விருது/எருது) இல்லியா?///செங்கோவி....said ....
ReplyDeleteநன்றி..சிறந்த நஸ்ரியா பல்பு விருது - ஆவிக்கா?
கோவை ஆவி said ......
"அயர்ன் மேன்" விருது கொடுத்திருக்காங்க நண்பா.. (எதையும் தாங்குவேனாம்!!!)////உருகிடாது?
நன்றி பாஸ்.. கண்டிப்பா உங்களைப் போன்றோரின் ஊக்குவிப்பு தான் எழுத்தாளர்களை உற்சாகப்படுத்துது. உங்களுக்கு இல்லாத விருதா பாஸ்.. சிறந்த ஊக்கு-விப்பாளர் உங்களக்குதான்.. :)
Deleteஎன்ன பாஸ் நீங்க.. ஸ்பைடர் மேனை பார்த்து வலை கிழிஞ்சிடாதான்னு கேப்பீங்களோ?
Deleteமிக்க நன்றி! ஆவி! என்னையும் கவிஞராக ஏற்றுக் கொண்டதற்கு!
ReplyDeleteநன்றி ஆவி பாஸ்.. தங்களுக்கும் தாங்கள் பகிர்ந்தளித்த விருதுகளுக்கும்... நண்பன்டா... :-))))))))
ReplyDeleteவிருதிற்கு நன்றி ஆவி.......
ReplyDeleteபுத்தக வெளியீட்டிற்கு வாழ்த்துகள்.
விருது கொடுத்தமைக்கு மிக்க மகிழ்ச்சி வாழ்த்துகள்.
ReplyDeleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : மஞ்சு பாஷிணி சம்பத் குமார் அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கதம்ப உணர்வுகள்
வலைச்சர தள இணைப்பு : அன்பின் பூ - நான்காம் நாள்