Thursday, February 20, 2014

ஆவி டாக்கீஸ் - "ஆஹா கல்யாணம்" (Music Review)

             
                     ஹிந்தியில் சூப்பர் ஹிட்டாக ஓடிய படத்தை தமிழில் ரீமேக்கியிருக்கிறார்கள். ஒரிஜினல் படத்தின் மிகப்பெரிய பலம் படத்தின் நாயகி அனுஷ்கா ஷர்மாவும், இசையும். தமிழில் "நான் ஈ"  புகழ் நானி நடித்து வெளிவர இருக்கிறது. இதன் பாடல்கள் எப்படி வந்திருக்குன்னு பார்ப்போமா?



                     1. "மழையின் சாரலில்" -  தாமரையின் "திகட்டாத" தமிழ் வரிகள்,  நரேஷ் ஐயர், ஸ்வேதா மேனன் பாடும் இந்த பாடலை கேட்கும்போதே டூயட்டை திரையில் காணும் ஆவல் எழுகிறது.

                     2. கிடார் இசையுடன் துவங்கும் "பாதியே என் பாதியே" பாடல் இடையில் வயலின் வாசிப்புடன் இனிமையோடும் அதே சமயம் பிரிவின் வலியை அழுத்ததோடும் ஒலிக்கும் பாடல். சக்திஸ்ரீ கோபாலனின் குரலில் ஒரு பாதியும்,  அபயின் குரலில் மறு பாதியும் ஒலிக்கிறது.

                     3. "The Punch Song" - போடா போடியில் வரும் குத்து சாங் மெட்டை போலவே வரும் பாடல்.. மானசி, நிவாஸ் குரலில் டி.ஆர், ரஜினி, அஜித், விஜய் ஆகியோரின் பன்ச் டயலாக்குகளை ஒன்று சேர்த்து பாடலாக்கியிருக்கிறார்கள்.   கொஞ்சம் இரைச்சல் அதிகம் என்றாலும் முன்வரிசை ரசிகர்கள் நடனமாட ஏதுவான பாடல்.

                     4. "Bon Bon" - ஹரிசரண் சுனிதி சவ்ஹான் பாடியிருக்கும் துள்ளல் பாங்க்ரா.. பாடலில் ஆங்காங்கே  வடக்கத்திய சாயல் தெரிகிறது. தரணின் இசை மேலாண்மை "ஆஹா" போட வைக்கிறது.

                     5. "ஹனியே ஹனியே" பாடல் ஆல்பத்தின் "மெல்லிசை சரவெடி".. நரேஷ் ஐயரின் குரலிலும் பின்னர் அதே பாடல் சுப்ரியாவின் குரலிலும் வருகிறது.. இனி வரும் சில நாட்களுக்கு தொலைக்காட்சியில் அடிக்கடி இடம் பிடிக்கப் போகும் பாடல் இதுவாகத்தான் இருக்கும்.

                     6. சின்மயியின் தித்திக்கும் குரலில் "கத கத" பாடல் காதல் அரும்பிய பெண்ணின் உணர்வுகளை சொல்லும் பாடல். வயலின், மத்தளம் என இசையின் ஆதிக்கம் நிறைந்த துடிதுடிப்பான பாடல்

                     7. "கூட்டாளி கூட்டாளி" பாடல் பென்னி தயாள் மற்றும் உஷா உதூப்பின் குரல்களில் தாளம் போட வைக்கும் பாடல். ஹை-பிட்ச்சில் இருவரும் பாடுவதை கேட்கையில் மனதில் உற்சாகம் தோன்றும்..    

                         போடா-போடி  படத்திற்கு பின் இசையமைப்பாளர் தரண்குமார் இசையமைத்திருக்கும் படம் இது. சில பாடல்கள் இவரது முந்தைய படங்களின் சாயல்களில் இருந்தாலும் ஒரிஜினல் (ஹிந்தி) பாடல்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் அதே சமயம் தமிழ் ரசிகர்களை கவரும்படி பாடல்கள் நிறைவாய் இருக்கிறது.


19 comments:

  1. Hello Anna., Tharan Kumar already done a Music to Thakararu film after Pods Podi film... And the heroine of this film is Vani Kapoor not Anushka Sharma...

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.. தமிழில் தான் வாணி கபூர்.. என் முதல் வரியை பாருங்க..
      // ஒரிஜினல் படத்தின் மிகப்பெரிய பலம் படத்தின் நாயகி அனுஷ்கா ஷர்மாவும், இசையும். // ன்னு தானே சொல்லியிருக்கேன்..

      Delete
    2. Mannikkavum... Sariyaga kavanikkavillai...

      Delete
    3. அதெல்லாம் ஒத்துக்க முடியாது நெற்றிக்கண் திறப்பினும் குற்றம் குற்றமே... நீங்க வாங்க புஸ்பராஜ் சார், நாம ஆவி கூட ஜாலிய சண்ட போடலாம் :-)))))

      Delete
    4. வேடிக்கைப் பார்க்க நான் ரெடி!!

      Delete
    5. தப்பை யார் சொன்னாலும் ஆவி சிரம் தாழ்ந்து கேட்டுக் கொள்வார்.. ( அடுத்தவன் சட்டை கிழியுதுன்னா கூடுற கூட்டத்த பாரு!!)

      Delete
  2. ஹிந்தி ஒரிஜினலின் பெயர் என்னவோ? ஏன் கார்த்திக், ஹரிஹரன் எல்லாம் இப்போது பாடுவது இல்லையா? ஷ்ரேயா கோஷல் பெயர் கூடக் காணோமே...

    ReplyDelete
    Replies
    1. ஹிந்தி படத்தின் பெயர் Band Bajaa Bhaarat (தமிழில் எழுதினேன், ரொம்ப கேவலமா இருந்ததால ஆங்கிலத்திலேயே விட்டுவிட்டேன்.. ;-)

      Delete
    2. ஆமாம் சார் அவங்கெல்லாம் என் பேவரைட் கூட.. ஆனா அவங்க யாரும் இல்லாமலே ஆல்பம் நல்லா இருக்கு.. :)

      Delete
  3. அனுஷ்கா நடிக்கும் இப் படத்துக்கு தாமரை எழுதிய பாடல் வரிகளைக் காணவும் ஆவல் வந்து விட்டது எனக்கும் .சிறப்பாக விமர்சித்த ஆவிச் சகோதரா உங்களுக்கு என் பாராட்டுக்கள் ,வாழ்த்துக்கள் .

    ReplyDelete
    Replies
    1. அச்சச்சோ சகோ, இந்தப் படத்தில் அனுஷ்கா நடிக்கவில்லை.. ஸ்ரீராம் சார் காதில் கேட்டுவிடப் போகிறது.. இதில் வாணி கபூர் எனும் வட இந்திய நடிகை தமிழில் அறிமுகமாகிறார்.

      பாராட்டுக்கு நன்றி சகோ..

      Delete
  4. விமர்சனம் பாடல்களைக் கேட்கத் தூண்டுகின்றது! அதுவும் முதல் பாடல் நீங்கள் சொல்லியிருப்பதைப் பார்க்கும்போது ...ஆஹா என்றிருக்கும் போல உள்ளதே!

    ReplyDelete
    Replies
    1. எல்லாமே நல்லா இருக்குங்க.. கேட்டுப் பாருங்க..

      Delete
  5. முதல் பாடலும், சின்மயி அவர்களின் பாடலும் கேட்க வேண்டும் எனும் ஆவலைத் தூண்டுகிறது... ரசனைக்கு வாழ்த்துக்கள் ஆவி...

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா DD.. நல்ல பாடல்கள்..:)

      Delete
  6. பாடல்களைக் கேக்க வேண்டும்...

    ReplyDelete
  7. சூப்பர் ரிவியூ

    ReplyDelete
  8. கேட்க முயல்கிறேன் ஆவி....

    ReplyDelete
  9. இன்று எனது பக்கத்தில்....

    ஆவி எழுதிய கவிதை....

    http://venkatnagaraj.blogspot.com/2014/02/blog-post_27.html

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...