இன்ட்ரோ
இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற போது படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை பாரத்ததிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. தமிழில் துப்பறியும் கதைகள் என்பது அதிகம் வரும் வகையறா கிடையாது. அதிலும் செவிகளுக்கு இனிமையான இரு பாடல்களும் இருக்க, என் பிரியப்பட்ட கிரிக்கட்டை கூட புறக்கணித்து விட்டு படம் பார்க்கச் சென்றேன்.
கதை
கல்லூரியை முடித்த கையோடு ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்க தன் குருநாதரின் ஆசியோடு வேலையில் சேர்கிறான் நாயகன். சேர்ந்த இடத்தில் ஒரு சில நபர்களை நிழல் போல் தொடர்ந்து அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து கொடுக்க வேண்டும். இப்படி நான்கு பேருக்கு கொடுத்த பிறகு ஐந்தாவதாக தான் விரும்பும் பெண்ணையே பின்தொடர வேண்டிய நிலைமை. அப்போதுதான் தான் நிழலாய் தொடர்ந்து தகவல் கொடுத்த இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து போயிருப்பதை கண்டு சுதாரித்து மற்றவர்களையும் தன் காதலியையும் காப்பாற்ற, இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கண்டறியவும் முனைகிறான். இவர்களை காப்பாற்றினானா இல்லையா என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்ளுங்கள்.
ஆக்க்ஷன்
நாயகன் அசோக் செல்வன் வில்லா படத்திற்கு பின் நடித்திருக்கும் படம், இன்னும் முகபாவங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு கம்பெனி கொடுக்கிறார். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் பாஸ்.. துப்பறியும் கதை என்பதாலோ என்னவோ இவர் பேசும் டயலாக் எல்லாமே அதிகபட்சம் பத்து வார்த்தைகள் மட்டுமே. ஆனாலும் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கக் கூடிய தகுதிகளும் இருக்கிறது. ஜனனி ஐயர் பெரிதாக நடிக்க ஸ்கோப் இல்லாவிட்டாலும் பாடல் காட்சிகளில் அழகாக வந்து போகிறார்.நாயகனின் நண்பனாக வரும் காளி நல்ல குணசித்திர நடிகர். இயல்பான காமெடியும் இவரிடம் தமிழ் திரையுலகம் எதிர்பார்க்கலாம். ஹோட்டலில் அசோக்கிடம் இவர் வந்து மெதுவாக சாப்பிட்ட பில்லுக்கு பணம் கொடுத்துட்டு போ என்பது தியேட்டரில் எல்லோரும் ஒருசேர சிரித்த காட்சி.. ஜெயபிரகாஷ் வழக்கமான நடிப்பு. துப்பறியும் நிறுவன முதலாளி மற்றும் அசோக்கின் குரு ஆகியோரும் நல்ல நடிப்பு. ஆனாலும் காதல் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்போடு இருந்திருக்கும்.
இசை-இயக்கம்-தயாரிப்பு
அறிமுக இசையமைப்பாளர் நிவாஸ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் குறைவில்லாமல் செய்திருக்கிறார். முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு அனுபவமிக்க இசையை கொடுத்துள்ளார். நாளைய இயக்குனர் மூலம் அறிமுகமான ரமேஷின் முதல் முயற்சி நிச்சயம் சிறப்பான ஒன்றுதான். வழக்கம்போல் நல்ல, விறுவிறுப்பான படத்தை தயாரித்திருக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சி.வி குமாருக்கு ஒரு ஷொட்டு..
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
"யார் எழுதியதோ" மற்றும் "விண்மீன் விதையாய்" பாடல்கள். சங்கரன் குளக்கரை காட்சி மற்றும் கமலக்கண்ணன் சந்திப்பு இப்படி சில காட்சிகள் படத்திற்கு வலு சேர்க்கும் காட்சிகள்.
Aavee's Comments - Inspiring Detective with too much of love..!
வணக்கம்
ReplyDeleteதங்களை மிஞ்ஜ யாருதான் இருக்கு இப்படி கதையை சொல்ல
வாழ்த்துக்கள்......
தல நீ கலக்கு தல :-)))))))))
Deleteநன்றி ரூபன்..:)
Deleteஅப்போ பார்க்கலாம்னு சொல்றீங்க.. சாரி முடிந்தால் திங்கட்கிழமை பார்கிறேன்..
ReplyDeleteம்ம்.. பாருங்க.. அதுதான் மூணுநாள் இருக்கே லீவ்..
Deleteபாஸ் யாரு அந்த பொண்ணு ...? ஏன் சுமார் மூஞ்சி பிகர் கூட எல்லாம் போட்டோ எடுக்குறீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ் செவல தாவுடா தாவு
ReplyDeleteநான் போட்டோ எடுத்தா அதுல நான் எப்படி இருப்பேன்.. வேறொருத்தர் எடுத்தது.. ஹஹஹ்ஹா..
Deleteமேலே ஜனனி பக்கத்துல இருக்கிறவர் தான் வில்லனா?
ReplyDeleteஹா ஹா ஹா...
Deleteஇல்லப்பா அவர் வெறும் காமெடி பீஸு..
Deleteஜோடி பொருத்தம் நல்லா இருக்கே ஹி ஹி...
ReplyDeleteஅப்படியா சொல்றீங்க அண்ணே.. ஆனா அந்த பொண்ணு ரொம்ப குள்ளம்.. (நீ பெரிய உயரமான்னு கேக்கப்படாது)
Deleteஎனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் ஆவிவிவி...!
ReplyDeleteகேளுங்க கேளுங்க.. நீங்க என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும் எனக்கு.. ;-) ஆனா இது அது இல்ல..
Deleteநல்ல விமர்சனம்!எப்படியும்,ஞாயிறு இணையத்தில் வந்து விடும்,பார்ப்போம்!
ReplyDeleteநல்ல ஆடியோவுடன் பாருங்க. பிடிக்கும்.. :)
Delete"சந்திரா" என்று ஒரு ராஜ பரம்பரைப் பின்னணியில் 'ஸ்ரேயா' நடித்த படம் ஒன்று ரிலீசாகி இருக்கிறது.சுமார் தான்,முடிந்தால் பாருங்கள்.
ReplyDeleteஆமா, ஸ்ரேயா கூட தன் கேரியரில் சிறந்த படம் ன்னு சொல்லியிருக்கிறதா கேள்வி.. இங்க நல்ல தியேட்டர் எதிலும் வரவில்லை.. ஆகவே டிவிடி க்கு வெயிட்டிங்.. (ஒரிஜினல் டிவிடி தான் பாஸு ):)
Deleteஎதுக்கு டீ.வீ டீ க்கு வெயிட் பண்ணனும்?ப்ரீயா வே அரச(raj ) இணைய தொலை இல் பார்க்கலாம்!
Deleteமிக அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள்...
ReplyDeleteநன்றி குமார்..
Deleteஅடங்கொன்னியா... ஈரோயின் பக்கத்துல நிக்கிறது இந்தப் படத்தோட ஈரோன்னுல்ல நெனச்சுக்கிட்டு இருந்தேன்...!
ReplyDeleteஹஹஹா.. இப்படி ஒரு சிலர் ஏமாந்து போகட்டுமேன்னு தான் அத்தை இங்க போட்டேன்.. :)
Deleteஅநதப் புள்ள நியாயவிலைக் கடைல சர்க்கரை தர்ற மாதிரி அளவாச் சிரிக்குது. பக்கத்துல நிக்கிற ஆவியோ விலையில்லா சர்க்கரை கிடைச்சுட்ட மாதிரி அகலமாச் சிரிச்சுக்கினு இருக்காரு. நல்லவேளை... இன்னும் கொஞ்சம் லெவல் கூடியிருந்தா ‘இஹாஹாஹாஹா’ன்னு குமரிமுத்து சிரிப்பாயிருக்கும் வேய்! த்ரில்லர் படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்கறதால அவசியம் பாத்துடறேன் (சீனு செலவில... ஹி... ஹி...!)
ReplyDeleteஎப்படி பார்த்தாலும் அதே படம் தானே.. அப்ப ஒக்கே..
Deleteஆவி பக்கத்துல நிக்கும் போது ஒரு பயம் இருக்காதா பின்னே..? :)
விமர்சனம் நல்லா இருக்கு.. துப்பறியும் படம்னா பார்க்கலாம் போலிருக்கு..
ReplyDeleteநஸ்ரியாவிற்குப் பிறகு? ......:))))
ReplyDeleteநல்ல விமர்சனம் ஆவி. உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக போடும்போது தான் நான் பார்க்க முடியும்!