இன்ட்ரோ
கிரிக்கெட்டை தவிர வேறெந்த விளையாட்டுக்கும் விளம்பரமோ, முக்கியத்துவமோ கிடைப்பதில்லை, இந்த நிலை மாற வேண்டும் என்பதை கொஞ்சம் நட்பு, கொஞ்சம் காதல், கொஞ்சூண்டு பேஸ்கட் பாலுடன் சொல்லியிருக்கிறார்கள். விளையாட்டு சம்பந்தமான படத்தில் காதலை கலக்காமல் சொல்லவே முடியாதா? கடைசியில் சொல்ல வந்த விஷயத்தையும் அரை குறையாய் சொல்லி முடித்திருக்கிறார் அறிவழகன்.
கதை
பேஸ்கட் பால் (முக உடைப்பு பந்து என்று அர்த்தம் கொள்ளக் கூடாது) விளையாட்டால் தன் உயிர் நண்பனை இழந்த காரணத்தால் அந்த விளையாட்டையே துறக்கும் நகுல் மீண்டும் விளையாட ஆரம்பிப்பது மற்றொரு நண்பனுக்காக. தன் கல்லூரியில் நடக்கும் பேஸ்கட்பால் டோர்னமெண்டில் ஜெயித்து அதை பிரபலப்படுத்த நினைக்கிறான் நாயகன். அவன் எண்ணம் நடந்ததா என்பதை படம் நல்லாயிருந்தது என்று ஆரம்பிக்கும் யாரிடமாவது கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள்.தமிழ்நாட்டை பொறுத்தவரை கிரிக்கட்டை எதிர்த்து படம் பண்ணி அதில் வெற்றி காண்பது என்பது கடினமான செயல். சக்தே இந்தியா போல் வந்திருக்க வேண்டிய படம். காதல், மோதல் இருக்கிறதே தவிர, ஒரு விளையாட்டு சம்பந்தமான ஒரு படத்தில் இருக்க வேண்டிய எல்லாமே மிஸ்ஸிங். ஒரு கமர்ஷியல் படங்களுக்கு தேவையான அம்சங்கள் இல்லாமல் போனதால் படம் படுத்துவிடுகிறது.
ஆக்க்ஷன்
நகுல் நீளமான டயலாக்குகளை பேசும்போது தன் மேனரிசங்களை மாற்றிக் கொள்ளாவிட்டால் அப்பாஸ், ஷாம் வரிசையில் சேர நேரிடும். இருந்த போதும் இந்த படத்திற்கென பேஸ்கட்பால் நுணுக்கங்களை கற்றுக் கொண்டதும், பல நேரம் ஜிம்மில் கிடையாய் கிடந்ததும் படத்தில் தெரிகிறது. படம் தொடங்கி பதினைந்து நிமிடம் நாயகி என்ட்ரிக்காக வெயிட் பண்ணினேன்.. அப்புறம் தான் தெரிந்தது முன்னரே ஒரு சீனில் வந்த சுமார் மூஞ்சி குமாரி ஒன்று தான் நாயகி என்று. படம் நெடுகிலும் "ஜாக்கி" பனியனுக்கு மாடலாக இருக்கிறார். அந்த "நகுலா" பாடலில் முகத்தை சுளித்து, உடலை வளைத்து, ஆடை குறைத்து என என்னென்னவோ ட்ரை பண்றார்..ம்ஹூம், ஒன்றும் எடுபடலை. தமிழ் ரசிகர்களின் ரசனை அவ்வளவு தரம் தாழ்ந்து போய்விட வில்லையே.ஒரு தலை ராகம் படத்தில் வருவது போல் நாயகியின் தோழி சூப்பராக இருக்கிறார். அவருக்கு இனிவரும் படங்களில் வாய்ப்புகள் கிட்டலாம். நண்பனாக வருபவர், கிரிக்கட் சீனியர், அதுல் குல்கர்னி, கிருஷ்ணா, ஆதி என அனைவரும் நல்ல பங்களிப்பு. (தோத்து போற மேட்சுல செஞ்சுரி அடிச்சு என்ன பிரயோசனம்) இதிலும் ஜெயப்ரகாஷை பார்க்கும் போது வெறுப்பு ப்ளஸ் சலிப்பு.. தமிழ் சினிமாவில் வேற ஆளேவா இல்ல.
இசை-இயக்கம்-தயாரிப்பு
தமன் இசை சுமாருக்கும் கீழ். பாஸ் நீங்க ஆந்திரா பக்கமே இருங்க.. இங்க பல நல்ல இசையமைப்பாளர்கள் இருக்காங்க. அறிவழகனின் இரண்டாம் படம் என்று நம்பி வந்தவர்கள் தலையில் எல்லாம் தொப்பி. இவர் அமானுஷ்ய படங்களையே தொடர்ந்து எடுக்கலாம் என்று நினைக்க வைக்கிறார். தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் படத்தில் உபயோகப்படுத்தும் லைட்டுகளுக்கே ஏகப்பட்ட செலவு பண்ணியிருப்பார் போல.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
"மாமன் மச்சான்" பாடல் ஒன்று மட்டும்.
Aavee's Comments - Poor Game plan
மத்தவங்க விமர்சனத்தை பார்த்துட்டே போயிருக்கலாம்!
ReplyDeleteநண்பர் ஒருவர் அறிவழகனின் தீவிர விசிறி.. அவரே நொந்துட்டாரு படம் பார்த்து..
Delete// ஒரு தலை ராகம் நாயகியின் தோழி போல... // எங்கேயோ போயிட்டீங்க ஆவி...!
ReplyDeleteஅது உண்மை தானே தல..
Deleteமுக உடைப்புப் பந்து & ஆஹா... என்னமா பெயர்க்கறீங்க ஆவி... உமது சேவை தமிழுக்குத் தேவை!
ReplyDeleteஒருதலைராகம் படத்துல வருவது போல தோழி அழகாயிருக்காங்களா? & உமது இந்த விமர்சனம் கரடியாரின் பார்வையில் படாமலிருக்கக் கடவது! ஹி... ஹி...!
உண்மையில் விளையாட்டு சம்பந்தப்பட்ட படமாக இருந்தாலும் அதில் காதல், தேசபக்தியை அளவோடு அழகாகக் கலந்து ஜெயித்தது ‘லகான்’தான். ஆமீர்கானின் டீம் ஜெயிக்கணும் அப்படிங்கற எண்ணம் ஆடியன்ஸ்க்கே வர்ற அளவுல திரைக்கதை அமைஞ்சிருந்தது ப்ளஸ். அதை சாதிச்சுட்டா எந்த விளையாட்டப் பத்தின படம்னாலும் ஹிட்டாயிடும். (யாருப்பா இங்க கில்லியல்லாம் ஞாபகப் &படுத்துறது!)
லகான், கிரிக்கட் சம்பந்தப் பட்டது தானே.. சக்தே இந்தியா ஹாக்கி சம்பந்தப்பட்டது.. அதிலும் கிரிக்கட்டுக்கு இருக்கிற மவுசு பற்றி சொல்லப்பட்டு அழகாக அதே சமயம் விறுவிறுப்பாக கொண்டு போயிருப்பார்கள்..லகான் மாதிரியே இதுவும் நல்லா இருக்கும் சார். கில்லியா.. அவ்வ்வ்வ் மீ எஸ்கேப்..
Deleteநல்ல விமர்சனம்!முக உடைப்புப் பந்து-------நல்ல மொழி பெயர்ப்பு!எனக்கு மொதல்ல புரியல.அடடா...........அப்புறம் தான்..........பாஸ்கெட் பால்(Basket-Ball) ன்னு ஹையோ.........ஹையோ!!!!!!!!!
ReplyDeleteஆவி சூப்பர் விமர்சனம் போங்க....ரொம்ப நன்றிங்க......நான் இங்க வர தமிழ் படம் கூடியவரை பார்த்துடுவேன்....தோழி ஏதாவது விமர்சனம் படிச்சுட்டு மொக்கைனு சொன்னா மட்டும்தான் போக மாட்டேன்... ...இப்ப நீங்க சொல்லிட்டீங்க..."யாம் பெற்ற துன்பம் இவ்வையகம் பெற வேண்டாம் "அப்படின்ற நல்ல நோக்குல...நன்றி.....
ReplyDeleteதோழி கேக்கறாங்க இந்த மொக்கைய எப்படி கோவை ஆவி பொறுமையா பார்த்தாருன்னு.....
முக உடைப்பு பந்து....ஹாஹாஅ.....ஐயோ வேண்டாம் ஆவி தமிழ் படுத்துதல் சரிதான் ஆனா இது போல வேண்டாம்....உள்ள பேரும் மறந்து போயிடும்.......இது கூடைப்பந்து சரியா?!!!!
நல்ல விமர்சனம்! படத்தைப்பார்க்க வேன்டிய அவசியம் இல்லாமல் போய் விட்டது.
ReplyDeleteபாஸ்கட் பால் மொழிபெயர்ப்பு! சிரிப்பு தாங்கவில்லை!!
This comment has been removed by the author.
ReplyDeleteஅருமையான கதை.அளவான நடிப்பு&நடிகர்கள்.அருமையான இயக்கம்.தமிழ் சினிமா தொட்டுப் பார்க்காத கதைக் களம்!சபாஷ்,ஆஸ்கார் பிலிம்ஸ்+அறிவழகன்.(முட்டைக் கண் நாயகி ‘ஒரு’ ரவுண்ட் வருவார்!)
ReplyDeleteமுக உடைப்பு பந்து.... என்ன ஒரு முழிபெயர்ப்பு!:)))
ReplyDelete