1960 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் த்ரில்லர் பட வரிசையில் தனியிடம் பிடித்த படம். "மர்மக்கதை மன்னன்" ஆல்பிரெட் ஹிச்காக்" இயக்கிய இந்த படத்தின் கதை ஒரு நாவலை அடிப்படையாக கொண்டது. பொதுவாக புத்தகம் படமாக்கப்படும் பொழுது அது அவ்வளவு சிறப்பாக இருக்காது என்றொரு கருத்துண்டு.. ஆனால் இது ஹிட்ச்காக்கின் படங்களுக்கு சிறிதும் பொருந்தாது என்பதே என் கருத்து. த்ரில்லர் படங்களுக்கு அவர் வைக்கும் ஷாட்டுகள், கலைஞர்களின் உடல் மொழி மற்றும் முக பாவங்கள் ஆகியவை நிச்சயம் எழுத்தை தாண்டிய ஒரு உணர்வை நமக்கு கொடுக்கும்.
அதிகம் விரசமில்லாத ஒரு படுக்கையறைக் காட்சியிலிருந்து துவங்குகிறது படம். ஒரு வெள்ளிக்கிழமை மதியம் உணவு இடைவேளையின் போது தன் காதலனுடன் சரசம் கொள்ளும் நாயகி பின் இதுபோல் சந்திப்பதை தவிர்க்க வேண்டுமென சொல்லி முத்தமிட்டு பிரிகிறாள். நேராக வேலைக்கு செல்லும் அவள் தன் பணியிடத்தில் ஒரு கட்டிடத்தை விலைக்கு வாங்க வரும் வாடிக்கையாளர் இவளிடம் "ஜொள்" விட்டுக் கொண்டே தன் மகளுக்காக வீட்டை வாங்குவதாக கூறி அதற்கென முழுவதையும் பணமாக (பல லட்சங்கள்) கொடுக்கிறார். அதை வாங்கும் முதலாளி நாயகியிடம் கொடுத்து வங்கியில் சேர்க்குமாறு கூறுகிறார். தனக்கு தலை வலிப்பதாக கூறி சீக்கிரமே வீட்டிற்கு செல்லும் நாயகி வங்கியில் பணத்தை செலுத்தாமல் அதை தானே வைத்துக் கொள்ள திட்டமிடுகிறாள்.
தன் காரில் சில துணிமணிகளை எடுத்துக் கொண்டு ஊரை விட்டு கிளம்புகிறாள். செல்லும் வழியில் ஒரு காவலர் விசாரிக்க தடுமாறியபடி தப்பிக்கிறாள். மேலும் தன் காரை சொற்ப விலைக்கு விற்றுவிட்டு ஒரு புதிய காரை வாங்குகிறாள். பின் தன் பயணத்தை தொடரும் அவள் தூக்க கலக்கமாக இருக்கவே நெடுஞ்சாலை ஓரத்தில் இருக்கும் ஒரு மோட்டலுக்கு செல்கிறாள். ஆள் நடமாட்டமே இல்லாத அந்த மோட்டலில் மேனேஜர் மட்டும் இருக்க அவனிடம் ஒரு அறையை வாடகைக்கு எடுத்துக் கொண்டு செல்கிறாள். தன் பணத்தை சிரத்தையுடன் ஒரு தினசரியில் மடித்து ஒளித்துவைக்கிறாள். தன்னுடன் இரவு உணவு அருந்துமாறு அழைப்பு விடுக்கும் மேனேஜரின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கிறாள். ஆனால் உணவை தயார் செய்ய மோட்டலுக்கு அருகில் உள்ள தனது வீட்டிற்கு சென்ற மேனேஜரை அவன் தாயார் திட்டும் ஓசை கேட்கிறது. மேலும் பிற பெண்மணிகளை அழைத்து வரும் பண்பை கண்டிக்கிறார்.
சோகத்துடன் திரும்பி வரும் அவன் அவளுக்கு அங்கேயே உணவு பரிமாறுகிறான். தாயின் செயலுக்கு மன்னிப்பு கேட்கிறான். வயதான நோய்வாய்ப்பட்ட தன் தாய் சில சமயம் இதுபோல் நடந்துகொள்வது வருத்தமளிப்பதாய் கூறுகிறான். அவன் மேல் பரிதாபப்பட்ட அவள் அவன் தாயை ஒரு அநாதை விடுதியில் சேர்த்து விட அறிவுரை கூற அதை மறுக்கிறான். தன் தாயை கவனித்து கொள்ள யாரும் இல்லையென்றும் தான் தான் கவனிக்க வேண்டும் என்றும் கடுமையாக கூறுகிறான். தனக்கு உறக்கம் வருவதாக கூறி தன் அறைக்கு செல்லும் நாயகி உடை களைந்து குளிக்க செல்கிறாள். ஷவரில் சுடு நீரின் சுகந்தத்தை அனுபவித்து அலுப்பு தீர குளிக்கும் அவள் பின்னால் ஒரு உருவம் வருகிறது. குளியலறைக்கு வரும் அது அவளை சரமாரியாக குத்திக் கொல்கிறது. பின் அங்கிருந்து வெளியேறுகிறது. சற்று நேரத்தில் அவள் அலறல் கேட்டு ஓடிவரும் மேனேஜர் காற்று போன பலூனாய் கிடக்கும் அவளை தன் தாய் தான் கொன்றிருக்க வேண்டுமென முடிவு செய்து அவளையும் அவள் பொருட்களையும் (பணத்தையும் சேர்த்து) அவள் வந்த காரிலேயே போட்டு ஒரு சேற்றில் மூழ்கடிக்கிறான்.
ஒரு வாரத்திற்கு பிறகு அலுவலகத்திற்கு வராத நாயகியை பற்றி விசாரிக்க ஒரு பிரைவேட் டிடேக்டீவை ஏற்பாடு செய்கிறார் முதலாளி. அவர் நாயகியின் காதலனிடமும், தங்கையிடமும் விசாரிக்கிறார். பின்னர் அவளைத் தேடி வரும் வழியில் இந்த மோட்டலுக்கு வருகிறார், அங்கே விசாரணையில் முதலில் முன்னுக்கு பின் முரணாக பதில் சொல்லும் மேனேஜர் பின் நாயகி அங்கே வந்து தங்கியதை ஒப்புக் கொள்கிறான் ஆனால் மறுநாள் காலையில் திரும்பி சென்றதாய் கூறுகிறான். மேலும் தன் வீட்டையோ, மோட்டல் அறைகளையோ சோதனையிட அனுமதி மறுக்கிறான். இதனால் டிடேக்டீவின் சந்தேகம் வலுக்க நாயகியின் தங்கைக்கு போன் செய்து நடந்ததை கூறிவிட்டு பின் தான் அருகில் இருக்கும் அவன் வீட்டிற்கு செல்லப் போவதாய் கூறுகிறார். பின் மேனேஜருக்கு தெரியாமல் பின்புறமாக அவன் வீட்டை அடையும் அவர் ஒவ்வொரு அறையாக சோதனை செய்தபடி மாடிக்கு வருகிறார். அங்கே அவர் வரவும் வேறொரு அறையில் இருந்து திடீரென வெளிவரும் அந்த உருவம் கத்தியால் அவரைத் தாக்க அவர் நிலைகுலைந்து மாடிப் படிகளில் உருண்டு விழுந்து இறக்கிறார்.
டிடேக்டீவிடமிருந்து தகவல் வராத நிலையில் போலீஸை அணுகுகிறார்கள் நாயகியின் காதலனும், அவள் தங்கையும். போலிஸ் நம்மூரைப் போலவே பேருக்கு சோதனை இட்டுவிட்டு ஒன்றுமில்லை என்று கூறுகிறது. ஆனால் அதே சமயம் அந்த மேனேஜரின் தாய் இறந்து பல வருடங்கள் ஆனதாகவும் கூறுகிறார். இதற்குள் போலிஸ் மோப்பம் பிடித்ததை அறிந்த மேனேஜர் நடக்க முடியாத தன் தாயை வேறோர் இடத்திற்கு தூக்கிச் செல்கிறான். இதை அவள் எதிர்த்த போதும் வேறு வழியில்லாமல் கீழே பேஸ்மெண்டிற்கு செல்கிறாள். தன் அக்காளின் மர்மத்தை கண்டறிய வேண்டி நாயகியின் காதலனுடன் அந்த மோட்டலுக்கு வருகிறாள். மேனேஜரை காதலன் பேசியபடி சமாளிக்க தங்கை அந்த மர்ம வீட்டிற்குள் நுழைகிறாள். அங்கே மேனேஜரின் தாய் படுத்த படுக்கை எல்லாவற்றையும் பார்த்துவிட்டு பின் கீழே பேஸ்மெண்டிற்கு செல்ல அங்கே அமர்ந்திருந்த தாயை திருப்ப முயல அவள் பின்னாலிருந்து "அந்த" உருவம் அவளைத் தீர்த்துக் கட்ட வருகிறது.. அவள் "அதனிடமிருந்து" தப்பித்தாளா? அந்த "உருவம்" யார் என்ற கேள்விகளுக்கு எல்லாம் கிளைமாக்ஸ் பதில் சொல்கிறது.
இன்று இருக்கும் இசைக் கருவிகள், டெக்னாலஜி என்று பலதும் இல்லாமல் இப்படி ஒரு அட்டகாசமான த்ரில்லர் படம் கொடுக்க முடிந்தது என்றால் அது நிச்சயம் ஹிட்ச்காக் என்ற ஒற்றை மனிதனால் மட்டுமே சாத்தியப்பட்டது. இன்று பல உலக சினிமாக்கள் பார்த்துவிட்ட நம்மால் இந்தப் படத்தின் முடிவை எளிதில் ஊகிக்க முடிந்தது எனினும் காட்சியமைப்புகள் நம்மை சீட்டின் நுனிக்கே தள்ளிவிடும் அதிசயம் தான் இந்தப் படத்தின் வெற்றி. இன்று நாம் பார்க்கும் பல த்ரில்லர்கள் இந்தப் படத்தை முன்னோடியாகவே கொண்டு வந்திருக்கின்றன என்பது மறுக்க முடியாத உண்மை!!
கடைசி வரை அந்த "உருவம்" சுவாரஸ்யம் தான்...
ReplyDeleteஅதென்ன...? நம்மூரைப் போலவேவா...?
ஆமா DD ரொம்ப ரசித்துப் பார்த்தேன்..
Deleteஇன்று இருக்கும் இசைக் கருவிகள், டெக்னாலஜி என்று பலதும் இல்லாமல் இப்படி ஒரு அட்டகாசமான த்ரில்லர் படம் கொடுக்க முடிந்தது என்றால் அது நிச்சயம் ஹிட்ச்காக் என்ற ஒற்றை மனிதனால் மட்டுமே சாத்தியப்பட்டது.
ReplyDeleteமிகவும் சரியே! அருமையான் ஒரு படம்...கடைசி வரைக்கும்! ரொம்ப ரசித்துப் பார்த்த படம்!
பகிர்வுக்கு மிக்க நன்றி!
கருத்துக்கு நன்றிங்க..
Deleteஇனறுள்ள வசதிகள் எதுவும் இல்லாத நிலையில் ஹிட்ச்காக் எடுத்த ‘சைக்கோ’ த்ரில்லரை விட ‘பேர்ட்ஸ்’ த்ரில்லர்தான் எனக்குப் பெருவியப்பு தரும் ஆவி! பறவைகள் ஆக்ரோஷமாக மனிதர்களைத் தாக்குவதை எப்படித்தான் சாத்தியமாக்கினாரோ? ‘சைக்கோ’ படத்தின் விறுவிறுப்பும் டெம்போவும் இன்றளவும் மறக்க முடியாது. அந்த ஷவர் கொலை அந்நாளில் பலரது தூக்கத்தைக் கெடுத்தது என்று கேள்விப்பட்டதுண்டு நான். அத்தனை அருமையாகப் படமாக்கப்பட்ட காட்சி அது. அதுசுரி... ஹிட்ச்காக்கின் ‘வெர்டிகோ’ பார்த்ததுண்டா ஆவி?
ReplyDeleteகடைசியா பறவைகள் பறந்திடுச்சு போலயே.. பேஷ்.. பேஷ்.. அடுத்த முறை வரும்போது அதுவும் லூசியாவும் வேணும்.. :)
Deleteஎன்னய்யா ஆளாளுக்கு பழைய படமா போட்டு தாக்குறீங்க ...?
ReplyDeleteஇந்த மாதம் பழைய படங்கள் மாதம்!!
Deleteரொம்ப ப்ரீயா இருக்கும்போது பாத்துக்கறேன்...
ReplyDeleteஅதாரு பாஸ் ப்ரியா? எனக்கு தெரியாம?
Deleteநல்லா கதை சொல்லி அந்த உருவம் யாருன்னு சொல்லாம விட்டுட்டீங்களே ஆவி! நன்றி!
ReplyDeleteஅதுதான் படத்தோட முதுகெலும்பு நண்பா.. படம் பாருங்க.. நான் விட்டதன் காரணம் புரியும்..
Deleteபடத்தைப் பற்றிய சிறப்புகள் காட்சி அமைப்பு இசை ஒளியமைப்பு, கேமரா இன்னும் பல..அம்சங்கள் கொட்டிக் கிடக்கும் படம். கதையை மட்டுமே விவரித்து சொல்லியிருக்கீங்க மூச்சுவிடாம ....
ReplyDeleteஉண்மைதான்.. பப்ளிஷ் பண்ணின அப்புறம் தான் அது பத்தி யோசித்தேன்.. பேசாம நம்ப உ.சி.ர ஹேராம் எழுதின மாதிரி பல பகுதிகளா போட்டிருக்கலாமோ?
ReplyDeleteஐந்து வருடங்களுக்கு முன் பார்க்கலாம் என்று ஆரம்பித்த போது ஏதோ ஒரு வெறுப்பு வந்து பார்க்காமல் விட்டுவிட்டேன் (ஒன்றும் புரியாத, அல்லது அரதப் பழைய படம் பார்க்கப் பிடிக்காத போன்ற காரணங்களாயும் இருக்கலாம்) அதன்பின் பலரும் கட்டாயம் பார்க்க வேண்டும் என்று வலியுறுத்திய படம்.. உங்கள் வீட்டு ஹோம் தியேட்டரில் போட்டு பாடம் எடுத்தால் ( நான் கேட்காவிட்டாலும் அதுதானே நடக்கும் :-) நான் பார்க்க தயார்...
ReplyDeleteகதையை படித்தால் மானாஜர் தான் சைக்கோவா ?
ஜமாய்ச்சிருவோம் வாங்க..
Delete//கதையை படித்தால் மானாஜர் தான் சைக்கோவா ?// ஹஹஹா அது சஸ்பென்ஸ்.. படம் பார்க்கும்போது தெரிஞ்சுக்கோங்க..
Deleteநல்ல சஸ்பென்ஸ் த்ரில்லர்......
ReplyDeleteமீண்டும் நினைவூட்டியதற்கு நன்றி.
வருகைக்கு நன்றி பாஸ்!
Deleteசூப்பர் ஜி சூப்பர் ஜி !!!கலக்குறிங்க போங்க
ReplyDeleteஜி இந்தப் படத்தை நாம ஏற்கனவே பார்த்துட்டோம் ஜி ஒரு சில வருடத்துக்கு ...முடிவு சரியா நியபிகம் இல்லை ...அந்த அம்மா ஒரு இறந்த பிணம் நு நினைக்கேன் ...அந்த அஆளு தான் எல்லாரையும் தீர்த்து கட்டி இருப்பான் ....நான் சொன்னது சரிங்களா
ReplyDeleteகரெக்ட் தான்,, ஆனா சஸ்பென்ஸ போட்டு உடைச்சிட்டீங்களே? ;-)
Deleteஅச்சச்சோ சாரி ஜி ...மன்னிச்சிடுங்க ...தெரியமா உடைச்சிட்டேன் ...நான் வேணா பெவிகுயக் போட்டு ஒட்டித் தந்துடவா ( வாத்துக் கடி ஜி நோ கோவம் ஜி )
Deleteஹஹஹா.. அதெல்லாம் முடியாது.. பனிஷ்மென்டா இன்னும் ரெண்டு மூணு விமர்சனம் படிச்சுட்டு போங்க.
Deleteஉங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...
ReplyDeleteமேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...
அறிமுகப்படுத்தியவர் : கலைச்செல்வி அவர்கள்
அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : கிராமத்துக் கருவாச்சி
வலைச்சர தள இணைப்பு : இன்றோடு நீங்கள் விடுதலை!!