Saturday, March 15, 2014

ஆவி டாக்கீஸ் - ஆயிரத்தில் ஒருவன் (1965)


இன்ட்ரோ  
                1960ஸ் மூவி ஒன்றை பெரிய திரையில் பார்ப்பது இதுவே முதல் முறை. அந்தக்கால "பெருசுகள்" இந்தக்கால படங்களை வெறுப்பதிலும் ஒரு நியாயம் இருக்கத்தான் செய்கிறது. "எவர்க்ரீன்" எம்ஜியார்,  கருத்துள்ள பாடல்கள், உண்மையிலேயே "அழகான" ஹீரோயின், ஆக்க்ஷன், ரோமென்ஸ், சிறப்பான இசை, சுஜாதாவின் "வசந்த்" டைப் காமெடி என எல்லாம் சரிவிகிதத்தில் கலந்த கமர்ஷியல் எண்டர்டெயினர். ரீஸ்டோரேஷன் என்ற பெயரில் "நினைத்தாலே கசக்கும்" அனுபவத்தை மறந்து விட்டு படம் பார்க்க சென்ற எனக்கு கிடைத்தது பரவச அனுபவம். பாடல் காட்சிகளிலும் பின்னணியிலும் தெளிவான ஒலியமைப்பு. இந்தக் காலத்து க்வாலிட்டி இல்லையென்றாலும் சிறப்பான விஷுவல் என கொடுத்த காசுக்கு ஏற்ற பணியாரம்..!



கதை         
                  கலகக்காரர்களுக்கு ட்ரீட்மென்ட் கொடுத்த குற்றத்திற்காக சர்வாதிகார மன்னனால் (மனோகர்) கைது செய்யப்பட்டு அடிமைகளோடு அடிமையாய் நெய்தல் நாட்டிலிருந்து கன்னித்தீவிற்கு அனுப்பப்படும் மருத்துவர்  மணிமாறனை(எம்ஜியார்) டைம் வேஸ்ட் பண்ணாமல் "லவ் அட் பர்ஸ்ட் சைட்" முறையில் லவ்வும் அந்த நாட்டு இளவரசி பூங்கொடி (ஜெயலலிதா). அந்தக் காதலை மறுத்து தன் கூட்டத்தாரின் விடுதலைக்காக போராடும் மணிமாறன் ஒரு கட்டத்தில் மன்னனின் வஞ்சக வார்த்தையை நம்பி கடல் கொள்ளையர்களுடன் (நம்பியார்) போராடி நாட்டை மீட்கிறார். பின்னர் மன்னனின் சூழ்ச்சி தெரிந்து அங்கிருந்து கொள்ளையர்கள் உதவியுடன் தப்பிக்கிறார்.

                     காப்பாற்றுவது போல் நாடகமாடி மணிமாறனையும் கூட்டத்தையும் தன் தீவிற்கு அழைத்து வந்து அவர்களையும் கொள்ளையடிக்க பணிக்கிறான். மணிமாறன் முதலில் மறுத்தாலும் தன்னுடன் வந்தவர்கள் உயிருக்கு ஊறு ஏற்படாமலிருக்க வேண்டி கொள்ளைகள் செய்கிறார், ஒரு சந்தர்ப்பத்தில் இளவரசி பூங்கொடியை சந்திக்கிறார். அவரையும் அந்த தீவுக்கு அழைத்து வருகிறார். கொள்ளையடித்த பொருள்கள் அரசுக்கு சொந்தம், எனக் கூறி இளவரசி மேல் மையல் கொள்ளும் கொள்ளையர் தலைவன் ஏலத்தில் விடுகிறான்,

                       ஏலத்தில் காப்பாற்றிய மணிமாறனை முதலில் தவறாக புரிந்து கொள்ளும் பூங்கொடி பின் உண்மை உணர்ந்து ஆசை கொள்கிறாள். பூங்கொடியை அடையத் திட்டமிடும் கொள்ளைத் தலைவன் அடுத்த கொள்ளைக்கு  மணிமாறனை அனுப்பி கொல்லத்  திட்டமிடுகிறான். இதை அறிந்த மணிமாறன் கொள்ளையர் தலைவனுடன் சண்டையிட்டு வென்று பின் அவனை நண்பனாக்குகிறான். பின் இருவரும் சேர்ந்து படையுடன் சென்று சர்வாதிகாரி மன்னனின் கப்பலை தாக்குகின்றனர். அதில் காயமடையும் சர்வாதிகாரியை தன் மருத்துவ திறமையால் காப்பாற்றுகிறார். திருந்திய மன்னன் நாட்டை ஆட்சி செய்ய அழைக்க அதை மறுத்து மக்களுக்கு நல்லது செய்யும்படி வேண்டுகோள் விடுத்து தன் மனைவியுடன் மருத்துவ தொழிலுக்கே செல்கிறார்.
                                                                                                                                           ஆக்க்ஷன் 
                     
                    படையப்பா படத்தில் ரஜினியை பார்த்து அப்பாஸ் "வாட் எ மேன்" என்று ஒரு வசனம் பேசுவார். அதற்கு பொருத்தமான நடிகர் எம்ஜியாராக தான் இருக்க முடியும். "கொஞ்சம் பொறு கண்ணே, விளையாடிவிட்டு வருகிறேன்" என்று கூறிவிட்டு நம்பியாருடன் வாள் வீசுவதாகட்டும், "உங்கள் அதிகாரமென்ன, சிலப்பதிகாரமா? நிலைத்து நிற்க" என்று சர்வாதிகார மன்னனை எதிர்த்து நக்கலாக கேள்வி கேட்பதாகட்டும், காதல் காட்சிகளில் ஆகட்டும், நாகேஷுடன் சேர்ந்து நகைச்சுவை விருந்து படைப்பதாகட்டும் 'வாத்தியார்' கலக்குகிறார். சூப்பர்ஸ்டாரின் வெற்றி பார்முலா இவரிடமிருந்தே உருவப்பட்டிருப்பதாய்  தெரிகிறது. நாயகி ஜெயலலிதா, இரண்டாவது படம் நடிக்கும் புதுமுகம் என்பதற்கான அடையாளம் கொஞ்சமும் தெரியவில்லை.. அந்தக்கால "நஸ்ரியா" போல் அம்சமாக இருக்கிறார்.விஷம் அருந்தியதாக சொல்லி நாடகமாடும் காட்சியில் கலக்கியிருப்பார்.

                      நாகேஷ் உடல்மொழிக் கலைஞர், இதில் நிறைய பேசுகிறார். சில சமயம் போர் அடித்தாலும் மொத்தத்தில் கிச்சுகிச்சு மூட்டுகிறார். அடிமையாய் வேறு தேசத்திற்கு வந்து அங்கே மன்னன் வரிசையில் நிற்கச் சொல்லும்போது இவர் செய்வது லாரல்ஹார்டி டைப் காமெடி. நம்பியார் இல்லாமல் இந்தப் படத்தை நினைத்துப் பார்க்க முடியாது. படம் நெடுக ஓவர் கோட்டும், ஒரு துபாய் லுங்கியுமாய்  வரும் இவர் "மதம் கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா" என்று உறுமும் போது தியேட்டரில் அப்ளாஸ். மற்றொரு குறிப்பிடத்தக்க கதாப்பாத்திரம் இளவரசியின் தோழியாய் வரும் தேன்மொழி (மாதவி). ஜெயலலிதா திரையில் வராத நேரங்களில் இவர் அழகாக தெரிகிறார்.  ஆர்.எஸ். மனோகர், செங்கப்பனாக வரும் நடிகர், மாற்றுக் கருத்து கொண்ட குண்டர், ஏலமிடும் நபர்  என எல்லோரும் அளவான நடிப்பை வெளிப்படுத்தியிருக்கின்றனர்.



                                                                                             
இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 மெல்லிசை மன்னர்கள் விஸ்வநாதன்-ராமமூர்த்தி காம்போ மிரட்டியிருக்கிறார்கள். ஒவ்வொரு பாடலும் சூப்பர்ஹிட். பின்னணி இசை அவுட்ஸ்டாண்டிங். காலத்தால் அழியாத "அதோ அந்த பறவை போல்" மாஸ்டர்பீஸ் பாடல். தயாரிப்பு மற்றும் இயக்கம் பி.ஆர். பந்துலு, முதல் முறையாக எம்ஜியாருடன் பணிபுரிந்த படம். கர்ணன் பட இழப்புக்கு பின் பெருவாரியாக ஓடி வெற்றிவாகை சூடி வசூல் தேடித்தந்த படம் இது. "கேப்டன் ப்ளட்" மற்றும் "கிரிம்சன் பைரேட்" ஆகிய ஹாலிவுட் படங்களை தழுவி எடுக்கப்பட்டதாக சொல்லப்பட்டாலும் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கொடுத்திருந்தது சிறப்பு..

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 எம்ஜியார் வரும் எந்தக் காட்சியுமே கண்கொட்டாமல் பார்க்கும்படி இருந்தது. பதின்வயது நாயகி உடனிருந்த போதும் அவரையே ரசிக்க வைத்தது தான்  அவர் ஸ்பெஷாலிட்டி. எல்லாப் பாடல்களுமே பிடித்தாலும் படம் முடிந்த பின்னும் முணுமுணுத்துக் கொண்டே வந்தது  "மாளிகையில் அவள் வீடு, மரக்கிளையில் என் கூடு"

                  Aavee's Comments - Outstanding Oruvan !




26 comments:

  1. நாடோடி மன்னன், மலைக்கள்ளன் என பலமுறை பார்த்த தலைவர் படங்களில் அதிகமாக பார்த்த படங்களில் இதுவும் ஒன்று...

    முடிவில் உங்கள் ட்ச்... சூப்பர்...!

    மாளிகையே அவள் வீடு...
    மரக்கிளையில் என் கூடு... (ஆவி அல்லவா... ஹிஹி)
    வாடுவதே என் பாடு...
    இதில் நான்... அந்த மான்...
    நெஞ்சை நாடுவதெங்கே கூறு...?

    ஓடும் மேகங்களே ஒருசொல் கேளீரோ...
    ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ...
    ஆடும் மனதினிலே ஆறுதல் தாரீரோ...

    ReplyDelete
    Replies
    1. //ஆவி அல்லவா...//
      ஹஹஹா DD!

      நானும் எம்ஜியாரின் தீவிர விசிறி ஆகிட்டு வர்றேன்னு நினைக்கிறேன் ..!

      Delete
  2. //டைம் வேஸ்ட் பண்ணாமல் "லவ் அட் பர்ஸ்ட் சைட்" முறையில் லவ்வும் அந்த நாட்டு இளவரசி பூங்கொடி//

    :))))))))

    //கதாப்பாத்திரம்//

    நோ 'ப்'

    இதற்கான இன்றைய விமர்சனங்கள் மகிழ்வூட்டுகின்றன. உங்களுக்கு இன்னொரு படம் - படமல்ல - சிபாரிசு செய்கிறேன். 'வஞ்சிக் கோட்டை வாலிபன்'.

    கொஞ்சும் சலங்கை கூட பார்க்கலாம்.

    ReplyDelete
    Replies
    1. //நோ'ப்' //

      திருத்திக் கொள்கிறேன் ஸார்..

      நீங்க சொன்ன படங்களை பார்க்க முயற்சிக்கிறேன் ஸார்.. ஆமா நீங்க ஜெமினி fan ஆ?????

      Delete
    2. ரெண்டு ஜெமினி படம் பேர் சொல்லிட்டா ஜெமினி Fanஆ? கர்ணன் பிடிக்கும். சிவாஜியின் பல படங்கள் பிடிக்கும். எம் ஜி ஆர் பிடிக்கும். சுவாரஸ்யமான படங்களின் ரசிகன் என்று சொல்லலாம்!

      Delete
    3. இல்லை இல்லை நான் கேட்டது எனக்கு ஜெமினி படங்கள் பிடிக்கும், அதுபோல் உங்களுக்குமா என்று... "தேன் நிலவு", "மிஸ்ஸியம்மா", "வெள்ளிவிழா" போன்ற படங்கள் பிடித்தவை.. அதுவும் தேன் நிலவின் பாடல்கள் என் ஆல்-டைம் பேவரைட்ஸ்.. சிவாஜியின் கம்பெனியில் ஜெமினி வேலை செய்வதாய் ஒரு படம் பார்த்த ஞாபகம் (பாசமலர் அல்ல) அது என்னவென்று நீண்ட நாளாக தேடிக் கொண்டிருக்கிறேன்.. தெரிந்தால் சொல்லுங்களேன்..!

      Delete
    4. அப்படியா.. தேடிப்பார்க்கிறேன், அந்தப் படம் கிடைக்குமான்னு.. நன்றி ஸார்..

      Delete
  3. //"கொஞ்சம் பொறு கண்ணே, விளையாடிவிட்டு வருகிறேன்"என்று கூறிவிட்டு நம்பியாருடன் வாள் வீசுவதாகட்டும், "உங்கள் அதிகாரமென்ன, சிலப்பதிகாரமா? நிலைத்து நிற்க" // ஆச்சரியம் இதே வரிகளை வாத்தியாரும் குறிப்பிட்டிருந்தார்

    நல்ல விமர்சனம் பாஸ்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி பா..தலைவர் நான் பீல் பண்ணின மாதிரியே ஹீரோயின அந்தக்கால நஸ்ரியான்னு பீல் பண்ணினது ஆச்சர்யமா இருந்தது..:)

      Delete
    2. //ஆச்சரியம் இதே வரிகளை வாத்தியாரும் குறிப்பிட்டிருந்தார் //

      படம் பாருங்க.. அந்த வசனங்களோட வீரியம் புரியும்.. :)

      Delete
  4. ‘நாங்கள் தம்பதிபளாகி விட்டோம். தீவின் சட்டப்படி எங்களை வாழ்த்துங்கள்’ என ஜெயலலிதா சொல்ல... வயிற்றெரிச்சலுடன் பொறுமியபடி ‘வாழுங்கள்... நன்றாக வாழுங்கள்..’ என்று வாழத்தி விட்டுப் போவாரே... அந்த ஒரு சீனில் நடித்ததற்கே நம்பியாருக்குக் கொடுத்த பணம் செரித்தசூ ஆனந்து1 என்ன மாதிரியான வில்லன் வாத்யாருக்குக் கிடைத்தார் பாரு...

    ReplyDelete
    Replies
    1. அந்த இடமும் சரி.. சர்வாதிகாரியை காப்பாற்ற முயலும் எம்ஜியாரை நோக்கி ஒரு பார்வை வீசுவாரே, அருமை..!

      Delete
  5. கிட்டத்தட்ட நான் ரசித்த அத்தனை அம்சங்களையும் நீயும் ரசிச்சிருக்கே ஆனந்து... பார்த்ததுமே சந்தோஷமாயிருக்கு. உனக்கு முதல் அனுபவமான வாத்யாரின் ஸ்க்ரீன் ப்ரஸன்ஸ்க்கு நானும் அடிமைதான்.

    அப்புறம்... வாத்யாரின் விசிறி ஆவது எனில் இன்னும் சில குறிப்பிடித்தக்க, பார்க்க வேண்டிய அவர் படங்களை என்னிடமிருந்து பெற்றுக் கொள்ளலாம்.

    ReplyDelete
    Replies
    1. கண்டிப்பா சார்.. இதே படத்தை நான் லேப்டாப்பில் பார்த்த போது இந்த பிரம்மாண்ட அனுபவம் கிட்டவில்லை ஸார்.. அந்தக் காலத்திலேயே தீவு, கடலில், கப்பலில் என ஷங்கர் பட பீல் ஐ கொடுத்தது திரை அனுபவம்.. அடுத்த முறை வரும்போது உங்ககிட்ட இருக்கிற படங்களை வாங்கிக்கிறேன்.. :)

      Delete
  6. அருமையான படம் பற்றி உங்கள் பார்வை..... நன்று.

    காலையிலேயே வாத்யார் தளத்தில் படித்து ரசித்தேன். இப்போது இங்கே....

    வாழ்த்துகள்.

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்.. நன்றி பாஸ்..

      Delete
  7. #அந்தக்கால "நஸ்ரியா" போல் அம்சமாக இருக்கிறார்#
    இது வேறு யாரோ சொன்னதாச்சே !
    த ம +1

    ReplyDelete
    Replies
    1. அது எங்க "வாத்தியார்" தான் பாஸ்..! நோ டென்சன்..;)

      Delete
  8. நல்ல விமர்சனம்.படமும் நன்று தான்,ஹ!ஹ!!ஹா!!!////கோவை ஆவி said ....
    நானும் எம்ஜியாரின் தீவிர விசிறி ஆகிட்டு வர்றேன்னு நினைக்கிறேன் ..!///நாங்க "அப்பவே"!!!!!!!!!

    ReplyDelete
  9. அருமையான விமர்சனம்...
    இங்கயும் நஸ்ரியாவைக் கொன்டு வந்துட்டீங்க... ஹா...ஹா....

    நாங்கள்லாம் டோரண்ட்ல வந்தாத்தான் பார்க்கலாம்...

    ReplyDelete
    Replies
    1. //இங்கயும் நஸ்ரியாவைக் கொன்டு வந்துட்டீங்க//

      அதுவா வருது பாஸ்!! :)

      Delete
  10. அருமையான விமர்சனம்!

    ReplyDelete
  11. மிகச்சிறப்பான ஒரு படம்! பல காட்சிகள் களைகட்டும்! நீங்கள் சொன்ன நிலைத்து நிற்க இதென்ன சிலப்பதிகாரமா? என்ற வரிகள் மாஸ்டர் பீஸ்! பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...