இன்ட்ரோ
இயல்பாய் வரும் நகைச்சுவை, அசத்தல் பின்னணி இசை.. மெல்லிய சோகம், அழகான கதைக்களம், நிறைவான நடிப்பு இதுவே குக்கூ! குயிலை நாம் அழகிற்காக நாம் பார்ப்பதில்லை.. அதன் குரலை வைத்தே மதிப்பிடுகின்றோம். கண் இழந்தவர்களின் வாழ்க்கையும் அவ்வாறே என்று கவிதையாய் சொல்லும் படம்! கொஞ்சம் உணர்வுப் பூர்வமானது. நோ கமர்ஷியல் காம்ப்ரமைஸ்..!
கதை
புதிதாய் சொல்லப்பட்ட கதையில்லை, திரைக்கதையும் புதிதில்லை, ஆனால் காட்சியமைப்புகள், நடிகர்களின் உடல்மொழி மட்டுமே மாறுபட்டிருக்கிறது.. கண் பார்வை இழந்த அதே சமயம் மாற்றுத் திறன்கள் பல கொண்ட இளைஞன் ஒருவன் மற்றொரு கண் பார்வையிழந்த பெண்ணை சந்தித்து, மோதல் காதல், பின் ஒரு சராசரி மனிதன் தன் காதல் மெய்ப்பட என்னவெல்லாம் செய்வானோ அதெல்லாம் செய்கிறான். ஒரு கட்டத்தில் அவளும் நேசிக்க தடைகளை மீறி வாழ்வில் அவர்கள் இணைந்தார்களா என்பதே கதை.
ஆக்க்ஷன்
"அட்டக்கத்தி" தினேஷ் இனி "குக்கூ" தினேஷாக மாற எல்லா அம்சங்களும் உள்ளன. ராஜபார்வை, காசி படங்கள் எல்லாம் அந்த நடிகர்களின் முதிர்ந்த நடிப்பின் வெளிப்பாடாய் பார்த்திருந்தோம். மூன்றாவது படத்திலேயே இப்படி ஒரு கேரக்டரை எடுத்து நடிக்க நிச்சயம் அசாத்திய துணிச்சல் வேண்டும். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். இயல்பாகவே மற்றவர்களை பகடி செய்யும் குணமுள்ள கதாப்பாத்திரத்தில் சிறப்பாய் செய்திருக்கிறார். நண்பராக வரும் நடிகர் படத்தின் காமெடி ஏரியாவிற்கு முழு சொந்தக்காரர். "Wonder.. Wonder" என்று சர்ச்சில் இவர் சொல்லும்போது தியேட்டரே "கொல்".
மற்றுமொரு சிறப்பான கதாப்பாத்திரம் "சந்திரபாபு" வேடத்தில் வருபவர். நகை உணர்வு, குணச்சித்திரம் இரண்டும் வசப்பட்டிருக்கிறது இவருக்கு.. நல்ல படங்களை தேர்வு செய்து நடித்தால் நல்ல இடத்திற்கு வரலாம். எம்ஜியார், தல, தளபதி கதாப்பாத்திரங்கள் கதையை உறுத்தாத காமெடி. நாயகியின் அண்ணன் அண்ணி, கிளைமேக்ஸ் தேவதூதர், டிரெயின் தாத்தா, நாயகியின் தோழி என எல்லோருமே அளவான நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார்கள். 'கானக்குயிலே' என்று கூறிக்கொண்டு வரும் நம்ம ஆடுகளம் நடிகரும் சிறப்பு..
அசத்தல் அறிமுகம்
நாயகன் நாயகி இருவருமே மாற்றுத் திறனாளிகளாய் நடித்த போதும் புதுமுக நாயகி மாளவிகா கொஞ்சம் எக்ஸ்ட்ரா ஸ்கோர் செய்கிறார். கோபம், சந்தோசம், தன்மான சீற்றம் என தனக்கு நடிக்க கிடைத்த எல்லா இடங்களிலும் மிளிர்கிறார். நஸ்ரியாவிற்கு பிறகு மலையாள உலகம் நமக்கு தந்திருக்கும் மற்றொரு வரப்பிரசாதம் இவர். ஒரு சில பிரேம்களில் "ஒல்லி" சௌந்தர்யாவை காண முடிந்தது. அடுத்து நடிக்கும் படங்களும் இதுபோல் நடிப்பிற்கு தீனி போடும் பாத்திரங்கள் தேர்வு செய்தால் சிறப்பாக வருவார்.
மற்றொரு அறிமுகம் எழுத்தாளர் கம் இயக்குனர் "ராஜு முருகன்". படத்திலும் "அவராகவே" வருகிறார். அதிகம் அலட்டலில்லாத நடிப்பு. தொடரலாம். நடிப்பை விட இயக்குனரே மேலோங்கி நிற்கிறார். காட்சியமைப்புகளில் பிரமாதப் படுத்தியிருக்கிறார். சுருக்கென இருக்கும் முதல் பாதியும், கொஞ்சம் இழுவை பட் கதையோட்டத்திற்கு தேவை என்பதால் ரசிகர்கள் ஏற்றுக் கொள்ளலாம்.. கிளைமாக்ஸ் கிளிஷேக்களை தவிர்த்திருக்கலாம். நல்ல ஒரு படத்தை கொடுத்ததற்காக ஹேட்ஸ் ஆப் டூ யு சார்!!
இசை-தயாரிப்பு
படத்தின் எதார்த்த நாயகனாக ஜொலிப்பது இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன்.. ஒவ்வொரு காட்சியிலும் பின்னணி இசை காட்சியோடு இயல்பாய் ஒன்றிப் போகிறது. பாடல்களும் அனாவசிய துருத்தல்களாய் நாம் உணரும் தருணங்களே இல்லை எனலாம். குறிப்பாய் முதல் பாதியில் இளையராஜாவின் இசையை கையாண்ட விதம் அருமை. சத்தமே இல்லாமல்(?!) இசை உலகில் சட்டென மேலே வரும் இளம் இசையமைப்பாளர் போக வேண்டிய தூரங்கள் இன்னும் நிறைய இருக்கிறது. தயாரிப்பு பாக்ஸ் ஸ்டார் மற்றும் நெக்ஸ்ட் பிக் பிலிம் நிறுவனத்துடையது. மைதாஸ் டச் என்பார்களே. அதுபோல் இவர்கள் நல்ல விஷயங்களை மட்டுமே தொட்டு பொன்னாக்குகிறார்கள்..வாழ்த்துகள்.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
"காதல் கண்மணியே", "ஆகாசத்த நான் பாக்குறேன்", "மனசுல சூரக் காத்தே", "பொட்டப்புள்ள" என எல்லாப் பாடல்களுமே படத்துடன் பார்க்கையில் பிடித்துப் போனாலும் படம் பார்க்கும் முன்னரே மனதில் ஒட்டிக் கொண்ட "கோடையில மழை போல" பாடல் தான் ஆவி'ஸ் பேவரைட். மாளவிகாவின் மனதில் காதல் அரும்பும் காட்சிகள் அருமை.
Aavee's Comments - Beautiful Voice!
பாடல்களை சில முறை கேட்டேன் ஆவி. பிடித்திருந்தது.
ReplyDeleteஇங்கே படம் பார்க்க முடியும் என தோன்றவில்லை. இந்த வாரம் வெளியிடவில்லை. அடுத்த வாரம் வெளியிட்டால் போக நினைத்திருக்கிறேன்.
ம்ம்.. பாருங்க..
Deleteஎனக்கு இரண்டு பாடல்கள் மிகவும் பிடித்திருந்தது...
ReplyDeleteபலப்பல வரப்பிரசாதம் இனி வந்தாலும்... ம்... ம்... அவர்களைப் போல்... ல்... ல்...
ஹிஹி...
அவங்களுக்கு ஈடாகுமா? அது முடியாது.. ஹிஹிஹி..
Deleteஆவிக்கு நல்ல விஷயங்கள் மட்டும் கண்ணில பட்டிருக்கு. அவ்ளோ... நல்லவரா நீங்க..? என் கருத்து மாலையில வருதுங்கோ... ஆவியின் கருத்துகளுடன் பாதிக்கும் குறைவாகத்தான் எனக்கு ஒத்துப் போகிறது.
ReplyDeleteநல்லது மட்டுமல்லவே.. பின்பாதி இழுவை, கிளிஷேக்களை தவிர்த்திருக்கலாம் என்றும் சொல்லியிருக்கேனே..
Deleteஇந்த கோடை விடுமுறைக்கு ப்சங்களை அழைத்து செல்ல நல்ல படம் வந்திருக்குப் போல! இப்பதான் டிவில குக்கூ படத்தின் பாட்டு ஒண்ணு பார்த்தேன். அப்பவே மனசு லயிச்சுப் போச்சு!
ReplyDeleteபார்க்கலாம் அக்கா.. அதுக்குள்ள மான் கராத்தே வந்திடும்.. :)
Deleteபார்க்கனும்னு இருக்கேன்.. பார்த்துடுவேன்..
ReplyDeleteபாருங்க.. பாருங்க..
Deleteவணக்கம்,ஆ.வி!நலமா?///இந்தப் படத்த,முந்தா நேத்து பாத்தேன்.தமிழ் சினிமா ல இப்புடி சத்தமே இல்லாம ஒரு படமா ன்னு ஆச்சரியப்பட்டுப் போனேன்.///பிரகாஷ் ராஜோட மொழி வேற விதம்.இது வேற விதம்.///நீங்க சொன்ன மாதிரி,மொத பாதி கலகலப்பா...........மறு பாதி கொஞ்சூண்டு சீரியஸ்னஸ்.
ReplyDeleteநலம் யோகா ஸார்.. உண்மைதான், காதல் தான் களம்ன்னாலும் சொன்ன விதம் அருமை..
Deleteநல்ல விமர்சனம்! ரெண்டாவது நஸ்ரியாவை பிடிச்சுட்டீங்க போல! வாழ்த்துக்கள்!
ReplyDeleteஅச்சச்சோ.. இல்ல இல்ல.. பிடிச்சா சொல்லாம விட்டுடுவேனா? :)
Deleteநலமா ஆவி!
ReplyDeleteநலமா இருக்கேன் ஐயா!!
Deleteஆவி .. உமக்கு செண்டிமெண்டேல்லாம் பிடிக்குமாய்யா ... நான் நி.நி போயிருந்தேன் ....
ReplyDeleteராம் இவ்வளவு சொன்னதுக்கப்புறமும் .....
அவர் கடமைய அவர் செய்யறார்.. என் கடமைய நான் செய்யறேன்.. "என் கடன் ரிவ்யு எழுதிக் கிடப்பதே" ன்னு ஆவியானந்தா சொல்லிக் கேட்டதில்லையா நீர்?
Deleteபடம் பார்க்கத் தூண்டுகிறது தங்களின் விமர்சனம்
ReplyDeleteநன்றி நண்பரே
நன்றிங்க ஐயா..
Deleteபார்க்கலாமா வேண்டாமா என்று குழப்பத்தில் இருந்தேன், பார்க்கலாம்னு சொல்லிட்டீங்க...
ReplyDeleteஹஹஹா.. பாருங்க ஸ்பை
Deleteநான் இன்னும் படம் பாக்கல, ஆனா இத எல்லாம் படிச்சா பாக்கணும்னு தோணுது அண்ணா
ReplyDeleteகண்டிப்பா பாருப்பா.. பார்த்துட்டு சொல்லு எப்படி இருக்குன்னு.. :)
Deleteபார்த்திடலாங்கறீங்க....
ReplyDeleteமிஸ் பண்ணிடாதீங்க.ஆயிரத்தில ஒரு படம் இப்புடி வருது!
Deleteநன்றி யோகா சார். நல்ல படம் மேடம்.. பாருங்க..
Delete