மேலே உள்ள புகைப்படம் சித்தன்ன வாசல் பயணிகள் நிழற்குடை. திரைப்பாடல்களிலும், கவிதை மற்றும் கதைகளிலும் அழகான பெண்களை "சித்தன்ன வாசல் ஓவியமே" என்று வர்ணிக்க கேட்டிருப்போம். அப்படி கேட்டுணர்ந்த வர்ணனைகள் ஏற்படுத்திய கற்பனை பிம்பங்களோடு நண்பர்களுடன் சித்தன்னவாசல் சென்றேன். அங்கு சென்ற எனக்கோ பெருத்த ஏமாற்றம். அங்கே நான் கண்டது ஒரு 20x16 அறையின் கூரையில் அழகுற வரையப்பட்ட ஓவியங்களும், ஓவியங்களை பார்த்தபடி சில சிற்பங்களும் இருந்தன.. மிகவும் நுட்பத்துடனும், சிரமத்துடனும் வரைந்த அந்த ஓவியங்களை கண்டது சந்தோசம் எனினும் அங்கு இருந்த ஓவியங்கள் மிகமிக குறைவே என்றபோது ஏமாற்றமாக இருந்தது. (என்னை மாதிரியே சித்தன்ன வாசல் பற்றிய பெருங்கனவு உங்களில் யாருக்கேனும் உண்டா?)
அதனுள் சமண மகரிஷிகள் தவமிருக்கும் ஓர் சிறிய அறை இருந்தது. அதனுள் சென்று நாம் உள்ளத்தை ஒருங்கிணைத்து மனதை ஒருநிலைப்படுத்தும் போது அந்த அறையில் இருப்பவர்களுக்கு "ஓம்" எனும் சப்தம் கேட்கிறது.. இது ஆச்சர்யமாகவும், அதிசயமாகவும் இருந்தது.. இது எப்படி சாத்தியம் என்று தெரிந்தவர்கள் கூறுங்கள்.
*********** x ************
சமீபத்தில் MTS இணையக் கருவியின் ஒரு தொலைக்காட்சி விளம்பரம் பார்த்தேன். அதில் பிரசவ வலியில் ஒரு பெண் துடித்துக் கொண்டிருக்க, அருகே அவள் கணவன் "Push, Push" என்று ஆறுதலாக கூறிக்கொண்டிருக்க உள்ளிருந்து குழந்தை வெளிவந்து அருகிலிருந்த நர்ஸின் பாக்கேட்டிலிருந்து மொபைலை எடுத்து இன்டர்நெட்டில் தொப்புள் கோடியை அறுப்பது எப்படி என வீடியோ பார்த்து வெட்டிக் கொள்கிறது, பின்னர் அந்த கட்டிலிலிருந்து இறங்கி சென்று அருகே இருந்த லேப்டாப்பில் பேஸ்புக், லைவ் ரெக்கார்டிங் போன்றவற்றை செய்துவிட்டு வெளியே நடக்க ஆரம்பிக்கிறது. "Born for Internet" என்ற வாசகத்துடன் விளம்பரம் முடிகிறது. இன்டர்நெட் வேகமாக இருக்கிறது என்பதை கூற எவ்வளவோ வழிகள் இருக்க இப்படி ஒரு விளம்பரம் அவசியமா? என்று சிந்திக்க தோன்றியது.
*********** x ************
திரையரங்குகளில் எப்போது நுழைந்தாலும் உடனே மொபைலை வைப்ரேட் மோடுக்கு மாற்றிவிடுவேன். முடிந்த வரை கால்கள் எடுக்க மாட்டேன். சிலருக்கு பதில் SMS அனுப்பிவிடுவேன். தவிர்க்க முடியாத ஒரு சில அழைப்புகளை எடுக்க வேண்டிய கட்டாயம் வந்தால் வெளியே சென்று பேசிவிட்டு வருவேன். ஆனால் ஒவ்வொரு முறை நான் அரங்கம் செல்லும்போதும் எதாவது ஒரு மண்டையில் மசாலா குறைந்த யாராவது ஒருத்தனின் ரிங்க்டோன் அரங்கத்தின் QUBE சிஸ்டத்தை காட்டிலும் அதிகமாக அலறி விட்டு பின் அதை எடுத்து ஒரு ஐந்து நிமிடம் பேசி வெறுப்பேற்றும் சம்பவம் தொடர்ந்து நடக்கிறது. ஓரிரு முறை அவர்களிடம் கூறிவிடுவேன். சில சமயம் பொறுத்துக் கொள்ள வேண்டியிருக்கும்.. இந்த மண்ணாங்கட்டிகள் எப்பவாவது திருந்துவார்களா?
*********** x ************
இன்று மார்ச் மூன்று முதல் தலைவர் கமலஹாசனின் "உத்தம வில்லன்" பட ஷூட்டிங் தொடங்குகிறது. விஸ்வரூபம் பார்ட்-II படத்தின் போஸ்ட் ப்ரோடக்க்ஷன் வேலைகள் தொடர்ந்து நடந்து வருகிறது.. சித்திரையில் நமக்கு விருந்தளிக்க வரலாம். இப்போது லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் மற்றும் ராஜ்கமல் இன்டர்நேஷனல் இணைந்து வழங்கும் உத்தமவில்லன் படத்தின் "First Look" மற்றும் டீசரை இங்கே காணுங்கள்.
FIRST LOOK
டீசர்
*********** x ************
ஆசியக் கோப்பை கிரிக்கட் போட்டியின் முக்கியமான போட்டியில் இந்தியா நேற்று தோல்வியடைந்தது. மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்திருந்த இந்தியர்களின் கனவை கடைசி ஓவரில் இரண்டு சிக்ஸ் அடித்து தகர்த்தான் அப்ரிதி.. இருந்தபோதும் இந்திய அணி பீல்டிங், பவுலிங் போன்ற துறைகளில் நல்ல முன்னேற்றம் கண்டிருப்பது ஒரு ஆறுதல்.. தவிர விராட் கோஹ்லி கேப்டனாக சிறப்பாக செயல்படுவது இந்திய கிரிக்கட்டுக்கு நல்ல ஒரு விஷயம். நேற்றைய போட்டியில் சிறப்பாக விளையாடிய ரவிந்தர ஜடேஜா மற்றும் இதற்கு முந்தைய போட்டிகளில் நன்றாக விளையாடிய விராட்டுக்கும் வாழ்த்துகள்.
*********** x ************
சமீபத்தில் ஹார்ட் அட்டாக் எனும் தெலுங்கு படத்தை பார்த்தேன். இயக்குனர் பூரி ஜெகன்நாத் படம் என்றதால் சென்றேன். படத்தில் குறிப்பிட்டு சொல்ல ஒன்றும் இல்லையென்றாலும் படத்தின் நாயகி "அடா ஷர்மா" அடடடடா.. அவ்வளவு அழகு.. பூரியின் ரசனைக்கு ஒரு ஷொட்டு..
அதே போல சென்ற வாரம் பார்த்த 1983 என்ற மலையாள திரைப்படம் நிச்சயம் கிரிக்கட் ரசிகர்களுக்கு மிகவும் பிடித்த படமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை. இளம் நடிகரான நிவின் பாலி இப்படி வித்தியாசமான கதைகளை தேர்ந்தெடுத்து நடிப்பது அருமை.
*********** x ************
இன்று நம்முடைய வாரம் வாசகர் கூடத்தில் நான் படித்து ரசித்த "தூப்புக்காரி " எனும் புதினத்தின் விமர்சனம் கொடுத்துள்ளேன். படித்துவிட்டு உங்க மேலான கருத்தை அங்கே பகிரவும்.
சுட்டி: http://vasagarkoodam.blogspot.com/2014/03/thooppukkari.html
*********** x ************
சரி இந்த மாத பயணத்துக்கு வண்டி வந்திடுச்சு.. அடுத்த மாசம் நிழற்குடையில் ச(சி)ந்திப்போம்...! வர்ட்டா!!
// நாம் உள்ளத்தை ஒருங்கிணைத்து மனதை ஒருநிலைப்படுத்தும் போது அந்த அறையில் இருப்பவர்களுக்கு "ஓம்" எனும் சப்தம் கேட்கிறது.//
ReplyDeleteநம் உள்ளத்தை நாம் ஒருங்கிணைத்தால் அறையில் இருக்கும் மற்றவர்களுக்கு 'ஓம்' ஒலி கேட்கிறதா... அட!
MTS விளம்பரத்தில் முதலில் அந்தக் குழந்தை டாக்டரின் கண்ணைக் குத்தி பயமுறுத்த முயல்கிறது!
ஆமா சார்.. அது ஆச்சர்யமா இருந்தது..
Deleteபல்வேறு மொழிப் படங்களையும் பார்ப்பீங்களா...
ReplyDeleteதமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, ஹிந்தி, எப்பவாவது கன்னடம்.. அப்புறம் சப்டைட்டிலோட எல்லா உலக சினிமாக்களும்.. :)
Deleteகலையை ரசிக்க மொழி தடையில்லை, சரிதானே சார்!! :)
விளம்பரம் கொடுமை...
ReplyDeleteஇந்திய கிரிக்கட்டுக்கு நேரம் சரியில்லை போல...
விமர்சனம் அருமை...
இதுபோல விளம்பரங்களை அமெரிக்காவில் பார்த்தபோது நெருடலாக தெரியவில்லை.. ஆனால் இங்கே பார்க்கையில் கொஞ்சம் அருவருப்பா இருக்கு, மனசுதான் காரணமோ?
Deleteஇந்திய கிரிக்கட்டிலிருந்து சச்சின் டிராவிட், சேவாக், ஹர்பஜன், ஜாகீர் என பெரிய தலைகள் எல்லாம் வெளியே போய்விட இளம் வீரர்கள் இப்போதான் அனுபவம் பெற ஆரம்பிச்சிருக்காங்க.. நாம அடைஞ்சது கண்டிப்பா படுதோல்வி கிடையாது.. கொஞ்சம் கவுரவமான தோல்வி தான். விளையாட்டுன்னா வெற்றி தோல்வி ரெண்டுமே இருக்குமே.. :) மீண்டு வருவோம்.. பாருங்க..
Delete//அழகுற வரையப்பட்ட சிற்பங்கள் இருந்தன// பார்த்தது ஓவியமா சிற்பமா ?
ReplyDeleteபளிச்சுன்னு வரையப்பட்ட ஓவியங்களை எதிர்பார்த்துப் போய், மெருகு குலைஞ்ச ஓவியத்தால ஏமாந்தாரா... அந்த ஏரியாவுல ஒரு ஆஞ்சநேயர் வேற ஆவியின் அழகுல மயங்கி துரத்துச்சா? அந்த வெறுப்புல கொஞ்சம் கிறங்கி சிற்பம்னு எழுதிட்டாரு கலாகுமரன்! ஹி... ஹி...!
Deleteஎனக்கு அப்படித்தான் தோனிச்சு , ஓவியத்தை சிற்பம் போல் தீட்டி இருப்பாங்களோன்னு, ...அந்த
Deleteதுரத்தலில் இருந்து இன்னும் மீண்டு வரல ...போல
ஓவியங்களை பார்த்தபடி சில சிற்பங்கள் நின்றிருந்தன.. ;-)
Deleteஅந்த மாதிரி ஆசாமிகள் தலையில் ‘தியேட்டர்ல இனி பேசுவியாச?’ன்னு கத்திட்டே அவிங்க செல்போனாலேயே நாலு மொத்து மொத்துங்க ஆவி...! உம்மைக் கண்டு பயந்து அப்புறம் என்னிக்கும் தியேட்டர் பேச மாட்டாங்க. அப்புறம்... .அது அடா ஷர்மா இல்லை... அடடா ஷர்மா! (தியேட்டர்ல நான் ‘ஜொள்’ளினதை நல்லவேளையா பக்கத்து சீட்காரன் கவனிக்கலை ஓய்!)
ReplyDeleteஅண்ணாக்கு இளமைத் திரும்புது போல!!
Deleteஅவருக்கு என்னங்க, இந்த மே மாசம் வந்தா இருபத்தியெட்டு தானே ஆகப் போகுது..
Deleteபக்கத்து சீட்காரன் அவன் ஜொள்ளை துடைக்கவே நேரம் சரியா இருந்ததே..!
Deleteஓம்...எனும் சப்தம் அந்த அறையின் அமைப்பு அப்படி இருக்கலாம். நம்மால் கேட்க முடியாத மீ ஒலிகள் சிதறல் அடைந்து வலிமை இழந்து எதிரொலிப்பதாக இருக்கலாம்....
ReplyDeleteஅதெப்படி சார் நாம் மனதை ஒருமைப்படுத்தும் போது மட்டும் கேக்குது.. நேக்கு புரியலை..இன்னும் பக்குவம் வரணுமோ?
Deleteடீசரை காணோம்... ;-(
ReplyDeleteவருதே சார்.. வேற யாருக்கும் இதே பிராப்ளம் இருக்கா?
Deleteசின்ன அறையில் பாதி உதிர்ந்த ஓவியங்களைப் பார்த்ததும் ஏமாற்றமே.... சுவாரஸ்யமாக விளம்பரம் எடுக்க இப்போதுள்ள விளம்பரதாரர்கள் கற்றுக்கொள்ள வேண்டும்...
ReplyDeleteஅமெரிக்காவில் "சூப்பர் பவுல்" (Super Bowl) என்ற விளையாட்டின் போது ஒளிபரப்படும் ஒவ்வொரு விளம்பரமும் அமர்க்களமாய் இருக்கும். நம்மூர்ல நல்ல திறமையான இயக்குனர்கள் இருந்தும் ஒரு சில விளம்பரங்கள் மட்டுமே நல்லா இருக்கு..
Deleteஎனக்கு ஏமாற்றம் இல்லை பாஸ்.. சமணர் படுகையை பார்க்காமல் சமணர் படுகையை பார்க்காமல் வந்தது மட்டும்தான் என்னுடைய ஏமாற்றம்
ReplyDeleteம்ம்ம்.. பார்த்த வரை நல்லா இருந்தது சீனு.. நான் சொல்ல வந்தது என்ன்னன்னா, சிறு வயது முதல் சித்தன்ன வாசல் அப்படின்னா ஒரு பெரிய குகையில ஓவியங்கள் வரைஞ்சிருப்பாங்கன்னு நானா மனசுல உருவகப்படுத்தி வச்சிருந்தேன்.. அது இல்லேன்னதும் கொஞ்சம் ஏமாற்றம் அவ்வளவே..
Deleteநிழற்குடை என்கிற பெயர் நன்றாக இருக்கிறது, ஆவி.
ReplyDeleteஇன்னும் மொக்கையான, எரிச்சலூட்டும் விளம்பரம் நடு இரவில் மனைவியை எழுப்பி, 'நாளைக் காலை ஓட்ஸ் செய்துகொடுப்பாய், இல்லையா?' என்று கேட்பது. நான் மனைவியாக இருதிருந்தால், நல்ல தூக்கத்தைக் கெடுத்த உனக்கு, சோறே கிடையாது என்று டிவோர்ஸ் வாங்கி விடுவேன் on the spot! கற்பனை வளம் இல்லாதவர்கள்!
வில்லன் உத்தமனாகக் கூட இருப்பாரா? பாவம் கமல்!
ரொம்பவும் எதிர்பார்த்துப் போனால் இப்படி சிலசமயம் ஆகிவிடுகிறது - சித்தன்னவாசல் ஓவியங்களை பார்க்க வேண்டும் என்கிற ஆசை எனக்கும் உண்டு. மர்மப்புன்னகை மோனாலிசா ஓவியம் கூட இப்படித்தான் ஏமாற்றத்தைக் கொடுக்கும் என்று சொல்கிறார்கள். நாம்தான் ரொம்ப எதிர்பார்க்கிறோமோ?
கன்னட படமும் பார்ப்பீங்களா? லூசியா, நின்னின்தலே போன்ற படங்கள் நன்றாக இருக்கிறது என்று சொல்கிறார்கள்.
தூப்புக்காரி பற்றிய உங்கள் மதிப்புரையைப் படிக்க செல்லுகிறேன்.
ஹையா... லூசியா (கன்னடம்) டி.வி.டி. நான் வாங்கி வெச்சிட்டனே... சீக்கிரம் பாத்துடறேன் ரஞ்சனி மேம்!
Deleteஅட! நிஜமாவா? பாத்துட்டு இங்க அனுப்புங்க!
Deleteலூசியா இன்னும் பாக்கலே.. அதை பார்க்கனும்னு இருக்கேன்.. மற்றொரு படம் இப்ப நீங்க சொல்லித்தான் கேள்விப்படறேன்.. கன்னடத்தில் நான் சில படங்களே பார்த்திருக்கிறேன்.. "முங்கரு மாலே" ன்னு ஒரு படம் பிடித்திருந்தது..
Deleteமுங்காரு மளே (மழைக்காலத்தில் பெய்யும் முதல் மழை - பருவ மழை என்றும் சொல்லலாம்). சூப்பர் ஹிட் படம். பாடல்கள் எல்லாம் இனிமையோ இனிமை. இப்போது கோல்டன் ஸ்டார் என்று அழைக்கபடும் கணேஷின் முதல் படம். இவர் முதலில் தொலைக்காட்சியில் காமெடி ஷோ நடத்தி வந்தவர். தமிழில் வந்த 'காதல்' படத்தின் ரீமேக்கில் நடித்தார். இதுவும் சூப்பர் ஹிட். பாடல்களும் அருமை. ஸ்ரேயா கோஷலின் இனிமையான குரலில் பாடல்கள் என்றால் கேட்க வேண்டுமா?
Delete'நின்னின்தலே' என்றால் உன்னிடமிருந்து, உன்னாலதான் என்று சொல்லலாம். புனீத் ராஜ்குமார் நடித்த 'மிலனா' (ஒன்று சேருவது/தோழன்/தோழி) கிடைத்தால் பாருங்கள். இந்தப்படத்தில் ஷ்ரேயா இழைத்து இழைத்து பாடியிருப்பார். இவையெல்லாமே பாடல்களுக்காகவும் ஓடிய படங்கள்.
கண்டிப்பா பார்க்கிறேன் அம்மா.. :)
Deleteநன்றாக நிழல் தந்தீர்கள்.நன்றி!
ReplyDeleteநன்றி பாஸ்..
Deleteசுவையான தகவல்கள்! விராட் கோலியின் கேப்டன் ஷிப்பை பார்க்க முடியவில்லை! என் மகள் போகோ! கார்டூன் என்று சேனல் மாற்றிமாற்றி பார்த்து வெறுப்பேற்றுகிறாள். எனக்கும் கிரிக்கெட் மீது இருந்த ஆர்வம் குறைந்து விட்டது. விளையாட்டில் தோல்விகள் சகஜம்! தொடர் தோல்விகள் என்றால் யோசிக்க வைக்கிறது. சித்தன்னவாசல் சீனுவின் பதிவை வாசித்தேன். நீங்களும் சுருக்கமாக சொல்லியிருக்கிறீர்கள்.பெரிதாக எதிர்பார்த்து செல்கையில் இது போன்ற ஏமாற்றங்கள் தவிர்க்க முடியாதது. நல்லதொரு பகிர்வு! நன்றி!
ReplyDeleteம்ம்.. தொடர் தோல்விகள் கொஞ்சம் வருத்தப் படத்தான் வைக்கிறது..
Deleteகருத்துக்கு நன்றி nanbaa
நல்ல நிழற்குடை! ஒரு பீச்சில் இருப்பது போல......தியேட்டருக்குள்ள ஃபோன் பேசறவங்கள் நிஜமாகவே தொல்லைதாங்க......பேசாம ஃபோன பிடுங்கிடலாமானு கூட யோசிச்ச்து உண்டு!....தியேட்டர்காரங்க ஏதாவது செஞ்சாதான் உண்டுங்க!
ReplyDeleteஅட! போட வைக்கும் நாயகி ஷர்மா! ஜில்!
MTS விளம்பரம் கொஞ்சம் ஓவர்தான்! அது திரு வெங்கட்நாகராஜ் வலைத்தளத்தில் பார்த்தோம்!
கமலின் படத்திற்கு எதிர்பார்ப்பு கூடி வருகின்றது!
நல்ல பகிர்வுக்கு மிக்க நன்றி!
நன்றிங்க.. தலைவர் படம் இன்னைக்கு தான் படப்பிடிப்பே ஆரம்பம்.. அதற்குள் களைகட்ட துவங்கிவிட்டது.. :)
Deleteஓஓஓஓஓஓஒ படம் பேரு உத்தம வில்லனா ...? நான் இரத்தம் வில்லன்னு ல நெனச்சேன் .....!
ReplyDeleteபடம் பேர புரிஞ்சுக்குறதுக்கே கண்ணக் கட்டுதே காடேஸ்வரா ....
நிழற்குடையில் படித்த விஷயங்கள் நன்று......
ReplyDeleteMTS விளம்பரம் என்னுடைய போன வார ஃப்ரூட் சாலட்-ல் பகிர்ந்திருந்தேன்......