Friday, February 21, 2014

ஆவி டாக்கீஸ் - ஆஹா கல்யாணம்


இன்ட்ரோ  
                          உணர்வுகள் என்பது வடக்கிலும் தெற்கிலும் சமமே, வட இந்திய உணவு வகையை கூட சிறப்பான முறையில் தயார் செய்து அழகாக பரிமாறினால் தமிழன் அன்போடு ஏற்றுக் கொள்வான் என்பதற்கு இப்படம் ஒரு உதாரணம்.  பொதுவாக ரீமேக் செய்யப்பட்ட படங்கள் ஒரிஜினலை ஓவர்டேக் செய்ததாக எனக்கு தெரிந்து சரித்திரமே இல்லை.. இதற்கு உன்னைப்போல் ஒருவன் வரை எந்தப் படமும் விதிவிலக்கல்ல. ஆனால் முதல் முறையாக ஒரு படம் நன்றாக ஓடிய  ஒரிஜினலை விடவும் சிறப்பாக வந்திருப்பது இதுவே முதல் முறை என நினைக்கிறேன்..
       



கதை         
                            தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் இன்னும் அவ்வளவாய் பழக்கப்படாத "வெட்டிங் ப்ளானர்" (Wedding Planner) எனும் ஹை-பை திருமண காண்ட்ராக்டர்கள் பற்றிய கதை. நாயகியின் கனவை உடன் நின்று நிறைவேற்றும் நாயகன். புகழின் உச்சிக்கு வர இருக்கும் சமயத்தில் ஏற்படும் சிறு மன உரசலால் இருவரும் பிரிய நேர்கிறது. ஈகோவை விட்டுவிட்டு இருவரும் இணைந்தார்களா, தொழிலில் வெற்றி பெற்றார்களா என்பதே கதை. தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மொத்தமாக காண்ட்ராக்ட் விடும்  திருமணங்கள் இருக்கின்றன என்ற போதும் இன்னும் பிரபலமடையாத ஒரு விஷயத்தை மக்கள் மனதில் பதியும் வண்ணம் சொல்லியதில் படத்தின் ஒட்டுமொத்த டீமுக்கும் பங்குண்டு..
                                                                                                                                            ஆக்க்ஷன் 
                           "நான் ஈ" படத்தில் நல்ல பிரேக் கிடைத்தும் பயன்படுத்தாமல் விட்டுவிட்ட நானி இந்தப் படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி, கல்லூரி மாணவிகளின் பேவரைட் லிஸ்டில் சிவகார்த்திகேயன், ஆர்யா ஆகியோரை பின்னுக்கு தள்ளுகிறார். எதார்த்தமான நடிப்பில் அப்ளாஸ் அள்ளுகிறார். முதல் பதினைந்து நிமிடங்களுக்கு அவர் சொந்தக் குரல் நமக்கு உறுத்தலாக இருக்கிறது, ஆனால் படத்தின் விறுவிறுப்பில் நாம் அதை ரசிக்க ஆரம்பித்துவிடுவதே உண்மை.. ஹீரோயின் 'டெல்லி குலாபி' வாணி கபூர். இவர் நடித்த "ஷுத் தேசி ரோமென்ஸ்" படம் பார்த்த போதே இந்தப் படத்தின் மீதான என் எதிர்பார்ப்பு கூடியிருந்தது. என் பேவரைட் நடிகை அனுஷ்கா ஷர்மா நடித்த கதாப்பாத்திரத்தில் எப்படி நடிக்கப் போகிறார் என்ற ஆவலும், கூடவே இந்த முகம் தமிழுக்கு சரிப்படுமா என்ற கேள்வியும் கண்முன் வைத்து பார்க்கத் துவங்க சின்மயியின் குரல் உதவியுடன் இந்த வெள்ளை "பிளமிங்கோ" மனதை கொள்ளை கொண்டது.

                             "காதலையும் வேலையையும் ஒன்றாக கலக்க கூடாது" என்று நானி சொல்லி செல்லும் அந்த ஒற்றைக் காட்சியில் முகபாவங்களால் நடிப்பின் உச்சம் தொடுகிறார். ஆயினும் "தமிழ் தொட்ட பெண்" கதாபாத்திரங்களுக்கு தேறுவது கடினம். சிம்ரன் ஏதோ வந்து போகிறார். படத்தில் சிறப்பாய் செய்திருக்கும் மற்றொரு நடிகர் 'படவா' கோபி. நானிக்கும் வாணிக்கும் இடையே பஞ்சாயத்து செய்து வைக்கும் காட்சியில் சிக்ஸர் அடிக்கிறார். படத்தின் பெரிய பலம் படத்துடன் சேர்ந்தே வரும் நகைச்சுவைகள்.

                               

இசை-வசனம்-இயக்கம்
                                 இசை "போடா-போடி" புகழ் தரண் குமார். படத்தின் முதுகெலும்பு நிச்சயம் இசைதான் என்ற போதும், "கெட்டி மேளம்" குரூப்பின் தீம் சாங் மற்றும் சர்ப்ரைஸ் பாடல் ஆகியவை கொஞ்சம் சொதப்பலாக அமைந்தது (படத்திற்கு பொருந்தாமல் ) என்ற போதும், பின்னணி, பாடல்கள் என அனைத்தும் சூப்பர். தமிழ் ஆடியன்ஸுக்கு ஏற்ற வசனங்களை வழங்கிய ராஜீவ் மற்றும் ஹபிப் கைதட்டல் பெறுகிறார்கள். மனீஷின் கதையை அழகாக டைரக்ட் செய்த கோகுல் கிருஷ்ணா நல்லதொரு படத்தை கொடுத்த திருப்தியை தருகிறார். இப்படத்தின் மூலம் தமிழ்தேசம் வரும் யஷ்ராஜ் குரூப் ஹிந்தியில் செண்டிமெண்ட் படங்களுக்கு பெயர் போன தயாரிப்பாளர்கள். இவர்கள் வருகை தமிழுக்கு இன்னும் சில நல்ல படங்கள் கிடைக்குமென நம்பலாம்..


                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                வாணியை இம்ப்ரெஸ் செய்ய வேண்டி நானி DVD கொடுக்கும் காட்சி மற்றும் இரும்பு வியாபாரி கதை சொல்லி திருமண ஆர்டர் வாங்கும் காட்சி. "பாதியே என் பாதியே " பாடல் காட்சி.

                  Aavee's Comments - Feel good marriage.


27 comments:

  1. ஓகே..அப்போ பார்க்கலாம்னு சொல்றீங்க, பார்ப்போம்!

    ReplyDelete
  2. வசூல் ராஜா என் பார்வையில் ஒரிஜினலை மிஞ்சிய படம்

    ReplyDelete
    Replies
    1. இல்லப்பா.. அந்த "வட்டி" கேரக்டர் நிச்சயம் அர்ஷத் வர்ஷியின் பக்கம் கூட பிரபு நிற்க முடியாது. அவ்வளவு இயல்பா பண்ணியிருப்பார். தவிர பாடல்கள் தமிழுக்காக மசாலா சேர்த்ததால் கொஞ்சம் உறுத்தல் இருந்தது. ஹிந்தியில் எதார்த்தமாக இருக்கும்.. ஆனா தலைவர் கலக்கி இருப்பார்.. கூடவே கிரேசியும் பின்னியிருப்பார்..

      Delete
  3. பார்க்கத் தூண்டும் விமர்சனம் ஆவி... பேவரைட் இப்போது அனுஷ்கா ஷர்மா என்பது இன்று தான் தெரியும்...!

    ReplyDelete
    Replies
    1. ம்ம்ம்ம்.. அனுஷ்கா ஷர்மா பேவரைட் தான்.. துடிதுடிப்பான நடிப்பிற்காக பிடிக்கும்..

      Delete
    2. எந்தந்த நடிகையை எதற்காக பிடிக்கிறது என்று ஒரு பதிவைப் போட்டு சொல்லிட்டா எனக்கு நிம்மதியாய் இருக்கும் ஆவி ஜி !
      த ம 3

      Delete
    3. ஆஹா, பதிவு எழுத ஏதும் யோசனை வரலேன்னா இத கூட எழுதலாமே.. ஐடியாவுக்கு நன்றி பாஸ்!! ;-)

      Delete
  4. கலக்கலா இருக்கும்னு நினைக்கிறேன் பார்த்துருவோம்.

    ReplyDelete
    Replies
    1. ஜாலியா போகுது அண்ணே.. கண்டிப்பா பாருங்க..

      Delete
  5. நல்ல விமர்சனம்.செங்கோவி ஜஸ்ட் மிஸ் பண்ணிட்டாரு போலயே?

    ReplyDelete
    Replies
    1. பிரம்மன் படம்பார்த்து நொந்து போனவருக்கு இது பார்த்தா ஆறுதலா இருக்கும்!!

      Delete
  6. நல்லா இருந்துச்சுன்னா...குலோப்ஜாமூனையும், குல்பி ஐஸையும் குழைச்சு சாப்பிடுவான்யா தமிழன்.

    ReplyDelete
    Replies
    1. உண்மைதான் சார்.. :)

      Delete
  7. வடக்கத்தி ஸ்வீட்கள் தனி ருசியோடதான் இருக்கும். நம்மில் நிறையப் பேருக்கு அது பிடிக்கும்ங்கறதால இந்த ஸ்வீட்டையும் சாப்பிட்டுப் பாக்கலாம் தைரியமா. மைனஸ் பாயிண்ட்ஸ்ன்னு ஒரு அம்சம் ஆவி விமர்சனத்துல தென்படாததுலருந்தே படம் பாக்க தைரியம் வந்துருது. அதுசரீ... அனுஷ்கா (ஷர்மா) நடிச்ச அந்த ஹிந்தி ஒரிஜினல் படத்தோட பேர் என்னய்யா? அதை சொல்லாம மண்டை காய வுட்டிட்டியே!

    ReplyDelete
    Replies
    1. Band Bajaa Bharaat சார்.. நல்லா இருக்கு படம். சந்தர்ப்பம் கிடைச்சா பார்த்துடுங்க.. :)

      Delete
  8. பார்க்கலாம்.. பார்த்துடுவேன் :-)

    ReplyDelete
    Replies
    1. மிஸ் பண்ணாதீங்க!

      Delete
  9. எனக்கும் மிகவும் பிடித்த நடிகை அனுஷ்க்காதான் .ஆனால் எந்தப்
    படமாக இருந்தாலும் சரி இங்கு இருக்கும் நாங்கள் cd வாங்கித்
    தான் பார்க்க முடியும் :)) சிறப்பான விமர்சனத்துக்கு பாராட்டுக்கள்
    சகோதரா .

    ReplyDelete
    Replies
    1. சூப்பர் சகோ.. வெயிட் பண்ணி பாருங்க.. உங்களுக்கும் பிடிக்கும்!!

      Delete
  10. நல்ல விமர்சனம்...பார்க்கலாம்னு சொல்றீங்க! பாத்துட்டா போச்சு! என்ன எங்க ஊர்ல வரணும்மே!

    ReplyDelete
    Replies
    1. பாலக்காட்டுக்கு இந்த படமெல்லாம் கொண்டு வர மாட்டாங்களா?

      Delete
  11. thalaivarae vanaikkam epadi erukenga ,enga erukenga .. Nabgam vachu ikkurathu konjam kastam thn kita thatta 3-4 yrs achu :) sry nga

    ReplyDelete
    Replies
    1. ஞாபகம் இருக்குப்பா.. I'm in cbe.. R u still in Chicago?
      FB la accept panniten.. anga vaanga pesalaam.. :)

      Delete
  12. நல்ல விமர்சனம். தில்லியில் இந்த வாரம் இந்த படம் இருக்கு. பார்க்க முடியும்னு தோணலை!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...