Friday, February 28, 2014

அந்த ஒரு கணம்!!

                       கைகளில் பிடித்திருந்த காபி டம்ளரையே உற்று நோக்கியபடி அமர்ந்திருந்த அவன் முகத்தில் கோபத்தின் தணல். தனக்கு திருமணம் செய்வதில் விருப்பம் இல்லையென்பதை இதற்கு முன்பும், இதோடும் சேர்த்தும் பல முறை சொல்லியாயிற்று. திருமணம் வேண்டாம் என்பதற்கு ப்ரித்யேகமாய் காரணங்கள் எதுவும் இல்லையென்றாலும் அதன் மீது ஏதோ ஒரு வெறுப்பு அப்பிக்கொண்டிருந்தது. தன்னைக் கேட்காமல் தரகரிடம் சொன்னதும் இல்லாமல்,  தரகர் கொடுத்ததாக இன்று தன் கையில் ஏதோ ஒரு பெண்ணின் புகைப்படத்தை கொடுத்த போது உண்டான கோபம் வயதான தாயிடம் கொட்ட விரும்பாத வார்த்தைகள் உஷ்ணக் காற்றாய் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்க அந்த பூங்காவின் அருகிலிருந்த பெஞ்சில் காபியும் கையுமாக அமர்ந்திருந்தான் பாஸ்கர்.


                 அன்னையின் செய்கையை தடுக்க வழிகளை யோசித்தபடி காபியை உறிஞ்சியபோது அருகில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்களின் சப்தம் கேட்டது. சறுக்கு விளையாட்டில் ஏறிய ஒரு குழந்தை மெதுவாக மேலிருந்து கீழே சறுக்கி வர, அக்குழந்தை கீழே வரும்வரை அதன் முகத்தில் பூத்திருந்த புன்னகை இவனை எதோ செய்தது. கீழே கொட்டப்பட்ட மணலில் விழுந்ததும் தனக்குத்தானே மழலை மொழியில் "டமால்" என்று சொல்லிக் கொண்டு எழுந்தது.. இரண்டரை வயதிருக்கலாம் அந்த குட்டிப் பெண்ணிற்கு, சறுக்குமரம் கொடுத்த உற்சாகமோ என்னவோ மீண்டும் ஓடிச் சென்று சறுக்கு மரத்தின் படிகளில் ஏறியது. அதற்குள் எங்கிருந்தோ வந்த ஒரு பெண்ணும் ஆணும் அந்த குழந்தையை தூக்க "ஒன் மோர் ரவுண்ட் டாடி" என்று கூறிய அந்த குழந்தையிடம் "இல்லம்மா, நீ நான் அம்மா எல்லாம் இப்போ தியேட்டர்க்கு போகலாம், சரியா?"  என்றபடி அந்த தந்தை தூக்கிக் கொண்டு நடக்க, "அங்க கோன் ஐஸ் வாங்கி தருவியாப்பா" கொஞ்சும் மொழியில் கேட்டது குழந்தை. "ரெண்டு வாங்கித் தர்றேண்டா" என்றவாறு பூங்காவை விட்டு வெளியே சென்றனர்.

              இதைப் பார்த்துக் கொண்டிருந்த பாஸ்கருக்கு மனசுக்குள் இனம் புரியாத ஒரு உணர்வு.. முன்பு குடியிருந்த கோபத்தின் தடம் மறைந்து சாந்தம் நிலவியது. மெதுவாக பஸ் ஸ்டாண்டை நோக்கி நடந்த அவன் மனதினுள் சற்று முன் நடந்த சம்பவங்கள் தோன்றி மறைந்தன. பூங்காவிற்கு வரும் வழியில் ஒரு பெண் ஸ்கூட்டியில் கடந்து செல்லும் போது இவனை உரசிவிட, அவன் அப்போதிருந்த மன நிலையில் அவளை ஆங்கிலத்தின் ஆறாவது எழுத்தில் துவங்கும் சொற்களைக் கொண்டு வசை பாடினான். அவளுடைய மன்னிப்பு அவன் குரலுக்கு முன் மெல்லியதாய் ஒலித்தது. தன்னை சுற்றி ஒரு கூட்டம் நிற்பதும் தனக்கெதிரே அந்தப் பெண் அழுது கொண்டிருப்பதையும் கூட ஓரிரு நிமிடங்கள் கழித்து தான் உணர்ந்தான். அப்போதும் கோபம் தீராத அவன் "உனக்கெல்லாம் வண்டி வாங்கி கொடுத்து அனுப்பினானே உங்கப்பன் அவன சொல்லணும்" என்று சொல்லிவிட்டு நகர அந்தப் பெண்ணின் விசும்பல்களைக் கூட அவன் சட்டை செய்யாது நடந்து சென்று பூங்காவில் அமர்ந்தான். 

             இப்போது அந்த செயலை நினைத்து தன்னைத் தானே திட்டிக் கொண்டே பஸ்ஸில் ஏறிய பாஸ்கர்.. ஏறியதும் உட்கார்வதற்கு ஒரு இடம் கிடைத்துவிட, "ஸார் கொஞ்சம் குழந்தைய வச்சுக்கறீங்களா, மடியில" என்ற குரல் கேட்டு நிமிர்ந்து பார்த்த போது அங்கே பூங்காவில் பார்த்த அதே பெண், தன் கையில் அந்த குழந்தையுடன் நின்றிருந்தாள். சட்டென எழுந்து "நீங்க உட்காருங்க"  என்று அவளுக்கு இடம் கொடுத்து அவன் நின்றான்.. "தேங்க்ஸ் ங்க " என்றவாறு அமர்ந்த அந்த பெண்ணின் மடியில் இருந்த குழந்தை அவன் விரல்களை பற்றிக் கொண்டது. பஞ்சு போன்ற அந்த விரல்களின் ஸ்பரிசம் அவனுள் இதுவரை காரணம் தெரியாமல் வெறுத்து ஒதுக்கிய திருமணம் எனும் பந்தத்தின் மேல் சட்டென்று மானாவரியான மதிப்பு தோன்றியது.

              மனது முழுக்க சந்தோஷத்தோடு வீட்டை அடைந்த அவன் தாயிடம் சென்று, "அம்மா வாங்க போலாம் பொண்ணு வீட்டுக்கு". சந்தோசம் மேலிட அவன் மாற்றத்தை பார்த்த அவள் உடனே தரகருக்கும் டாக்சிக்கும் போன் செய்தாள்.. அப்பா அம்மா தரகர் சகிதமாய் புறப்பட்ட அவர்கள் கார் பகுதி தூரம் சென்ற போது அம்மா அவனிடம் "காலையில கோபத்துல பொண்ணோட போட்டோவ பாக்காமயே போயிட்டே." என்றபடி போட்டோவை கொடுக்க அவன்  வெடித்து அலறியபடி கூறினான் " வண்டிய நிறுத்துங்க"

                                                        ****************


       

33 comments:

  1. சரியான கொக்கி.. யாரந்தப் பொண்ணு?

    போகட்டும், அது என்ன ஆங்கில ஆறாம் - FOOL?

    ReplyDelete
    Replies
    1. //யாரந்தப் பொண்ணு?//

      ஹஹஹா அப்பாதுரை சார்.. கதையில தான கேக்கறீங்க??

      Delete
    2. //என்ன ஆங்கில ஆறாம்//

      அது அவரவர் கற்பனையை பொறுத்து யோசிக்கட்டும்னு விட்டுட்டேன் ஸார்..

      Delete
    3. ஆச்சரியமா இருக்கிறது.
      அப்பாதுரை சாருக்கா தெரியல்லே ?

      சும்மா உடான்சு.

      நான் கரெக்டா சொல்லட்டுமா ? வேணாம்.

      அமெரிக்காவிலே அது சகஜமான சொல்.

      ஆவிப்பா !! அதெல்லாம் உனக்கு வோண்டாம்.


      சுப்பு தாத்தா. .
      www.subbuthatha.blogspot.com

      Delete
    4. அதனால தான் தாத்தா அதை குறிப்பிட்டு சொல்லல.. சரி, இனிமேல் அதுபோல் உபயோகப் படுத்தமாட்டேன்.. :)

      Delete
  2. இந்த விசயத்த நாம அளவுக்கு அதிகமாவே டிஸ்கஸ் செஞ்சிருக்கதால முடிவ வேற மாதிரி எதிர்பார்த்தேன் பாஸ்..

    என்னா கேட்டா... நல்லா வளத்துருக்க வேண்டிய கதை.. சீக்கிரம் முடிச்ச மாதிரி தோணுது.. இன்னும் மானே தேனே போட்டு ஒரு மூணு பாரா இழுத்திருந்தா செமையா இருந்திருக்கும்...



    ReplyDelete
    Replies
    1. அண்ணே இது சிறுகதை, இதையும் தங்கள் பயணக் கட்டுரை அளவுக்கு நீட்டனுமா????

      Delete
  3. ஸ்கூட்டில இடிச்ச பொண்ணுதானே...? ஓகே சொல்ல வேண்டியதுதானே!

    ReplyDelete
    Replies
    1. இவன் ஓ.கே. சொல்லி என்ன பண்ண? இவனைப் பார்த்தா அந்தப் புள்ள காளியாவுல்ல மாறிடும் ஸ்ரீராம்!

      Delete
  4. மனது மாறியதெல்லாம் ரசனை... கோபத்தின் பலனை அனுபவிக்கத்தான் வேண்டும்...

    ReplyDelete
  5. அதே பொண்ணு தான் பொண்ணு....

    ReplyDelete
  6. நறுக் சுருக்கென்று ஒரு சிறுகதை! படிக்கிற சுவாரஸ்யத்திற்கு ஓ.கே.!

    ReplyDelete
  7. [[அவன் மாற்றத்தை பார்த்த அவள் உடனே தரகருக்கும் டாக்சிக்கும் போன் செய்தாள்.]]
    நல்ல இடுகை; தமிழ்மணம் +5.

    ஒரு கேள்வி? இன்றும் தரகர் மூலமா பெண் பார்கிறார்கள்? அவர்கள் கமிஷனுக்குகாக பொய் சொல்லி எப்படியாவது கல்யாணத்தை செய்து வைப்பார்கள் அல்லவா? கமிஷன் எதிர்பாட்க்கும் ஆளுக்கு எவன் எவளை கல்யாணம் செய்தால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. நிறைய பேர் தரகர் மூலமா தான் பார்க்கிறார்கள் பாஸ்!!

      Delete
  8. நல்லாயிருக்கு சிறுகதை...

    ReplyDelete
  9. சோக்கா கீதுபா இஸ்டோரி...!
    //வயதான தாயிடம் கொட்ட விரும்பாத வார்த்தைகள் உஷ்ணக் காற்றாய் உள்ளுக்குள் ஓடிக் கொண்டிருக்க// "தொழில்முறை எழுத்தாளர்" அங்கனக்காண்டி எட்டிப் பாக்குறார்பா...!

    அல்லாம் போட்டாச்சு... போட்டாச்சு...!

    ReplyDelete
    Replies
    1. அங்கனக்காண்டி யா, அவரு பெரிய எழுத்தாளரா?? ;-)

      Delete
  10. நல்ல கதை, எதிர்பாராத முடிவு. இவர பார்க்கற அந்த பொன்னு என்ன சொல்லுமோ??? வாசகர்களின் கற்பனைக்கே விட்டது நல்லாருக்கு....

    ஏதோ என்ற சொல் எதோ என்றும் தன் என்ற சொல் தன என்றும் உள்ளது. சரி செய்யவும்...

    ReplyDelete
    Replies
    1. இதோ இப்பவே கரெக்ட் பண்ணிடறேன்..

      Delete
  11. எங்க தலைக்கு கல்யாணம் ... அடிடா மேளத்தை .. கட்டுடா வாழையை ...

    நான் சொன்னது பாஸ்கருக்கு பாஸ் ...

    ஆமா அந்த பொண்ண தான் சரியா கவனிக்கலையே, போட்டோ பாத்த உடனே இதுதான் அந்த பொண்ணுன்னு பட்டுன்னு எப்படி தெரிஞ்சுது .. சும்மா டவுட்டு ..

    ReplyDelete
    Replies
    1. இப்போ அந்த 'பாஸ்கருக்கு' வேற பொண்ணோட கல்யாணமாகி குழந்தையும் குட்டியுமா சந்தோசமா இருக்கான் பா.. (மேளம் வேஸ்டா போச்சே..)

      Delete
    2. நின்னு ஒருத்தர திட்டும் போது அவங்க முகம் மனசில பதிஞ்சு போகாதா?

      Delete
  12. அருமையான சிறுகதை! முடிவு முதலில் தெரியாவிட்டாலும் , காலையில கோபத்துல பொண்ணோட போட்டோவ பாக்காமயே போயிட்டே." என்றபடி போட்டோவை கொடுக்க என்ற இடத்தில் guess பண்ண முடிந்துவிட்டது! அந்தப் பெண்ணாய்த்தான் இருக்கும் என்று!

    அழகாக எழுதியுள்ளீர்கள்!

    ReplyDelete
    Replies
    1. ம்ம் கடைசி பத்தி வரை ரசிச்சு படிச்சிருக்கீங்க.. நன்றி..

      Delete
  13. சும்மா பக்கு,பக்கு ன்னு இருந்திச்சு,எங்க கல்யாணமே வேண்டாம்னு சொல்லிடுவீங்களோன்னு!அப்புறம் 'அந்தப்' பொண்ணு யாரு?(விடிஞ்சாப்புறம்,ராமருக்கு சீத என்ன வேணும்?ஹி!ஹி!!ஹீ!!!)

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. ராமர் இல்லீங்க.. கிருஷ்ணர்.. (அவருக்கு தானே அனந்தன்னு இன்னொரு பேர் இருக்கு.. :)

      அப்போ "அந்த" பொண்ணு பேரு என்ன நீங்களே சொல்லுங்க.. :)

      Delete
  14. பொண்ண திட்டினானு படிக்கும்போதே கண்டுபிடிச்சுட்டேன்..அந்தப் பொண்ணுதான் போட்டோ பொண்ணுனு ..
    நல்ல கதை!

    ReplyDelete
    Replies
    1. நீங்க உண்மையிலேயே ஜீனியஸ் தான்!!

      Delete
  15. நல்ல சிறுகதை ஆவி.

    பாராட்டுகள்.

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...