வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ள "தெகிடி" எனும் திரைப்படத்தில் நிவாஸ் கிருஷ்ணா இசையில் அபய் மற்றும் சைந்தவியின் குரல்களில் தேனாய் ஒலிக்கும் பாடல் கேட்டு/பார்த்து மகிழுங்கள்...
விண்மீன் விதையில் நிலவாய் முளைத்தேன்..
பெண்ணின் விழியில் எனையே தொலைத்தேன்.
மழையின் இசைகேட்டு மலரே தலை ஆட்டு..
மழலை மொழி போலே மனதில் ஒரு பாட்டு..
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து..
(விண்மீன்)
நான் பேசாத மௌனம் எல்லாம் உன் கண்கள் பேசும்..
உனை காணாத நேரம் என்னை கடிகாரம் கேட்கும்..
மணல் மீது தூறும் மழை போலவே..
மனதோடு நீதான் நுழைந்தாயடி..
முதல் பெண் தானே.. நீதானே.. எனக்குள் நானே ஏற்பேனே..
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து..
ஒரு பெண்ணாக உன்மேல் நானே பேராசை கொண்டேன்.
உனை முன்னாலே பார்க்கும் போது பேசாமல் நின்றேன்..
எதற்காக உன்னை எதிர்பார்க்கிறேன்..
எனக்குள்ளே நானும் தினம் கேட்கிறேன்..
இனி வேண்டாமே..நீயானேன், இவன் பின்னாலே போவேனே..
இனி நீயும் நானும் ஒன்றாய் சேர்ந்தால் காதல் இரண்டு எழுத்து..
(விண்மீன்)
*****************
பாடல் வரிகளும் அருமை...
ReplyDeleteஉங்களுக்கும் பிடித்தது சந்தோசமே!!
Deleteநல்ல காதல் விவரணப் பாடல்.படித்தேன்,கேட்கவில்லை.பின்ன கேட்போம்...............
ReplyDeleteம்ம்
Deleteசரியாக வரிகள் கேட்கவில்லை... இசை நன்றாக உள்ளது...
ReplyDeleteவரிகள் கேட்கவில்லையா? ஏன்?
Deleteபாடல் வரிகள் நன்று...
ReplyDeleteVisit : http://venkatnagaraj.blogspot.com/2014/02/blog-post_27.html
ReplyDeleteநல்ல பாடல்..... ரசித்தேன்......
ReplyDelete