Friday, February 28, 2014

ஆவி டாக்கீஸ் - தெகிடி


இன்ட்ரோ  
                         இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சென்ற போது படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரெயிலரை பாரத்ததிலிருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகிவிட்டது. தமிழில் துப்பறியும் கதைகள் என்பது அதிகம் வரும் வகையறா கிடையாது. அதிலும் செவிகளுக்கு இனிமையான இரு பாடல்களும் இருக்க, என் பிரியப்பட்ட கிரிக்கட்டை கூட புறக்கணித்து விட்டு படம் பார்க்கச் சென்றேன்.




கதை         
                            கல்லூரியை முடித்த கையோடு ஒரு தனியார் துப்பறியும் நிறுவனத்தில் வேலை கிடைக்க தன் குருநாதரின் ஆசியோடு வேலையில் சேர்கிறான் நாயகன். சேர்ந்த இடத்தில் ஒரு சில நபர்களை நிழல் போல் தொடர்ந்து அவர்களைப் பற்றிய தகவல்களை சேகரித்து கொடுக்க வேண்டும். இப்படி நான்கு பேருக்கு கொடுத்த பிறகு ஐந்தாவதாக தான் விரும்பும் பெண்ணையே பின்தொடர வேண்டிய நிலைமை. அப்போதுதான் தான் நிழலாய் தொடர்ந்து தகவல் கொடுத்த இரண்டு பேர் மர்மமான முறையில் இறந்து போயிருப்பதை கண்டு சுதாரித்து மற்றவர்களையும் தன் காதலியையும் காப்பாற்ற, இதற்கு பின்னணியில் இருப்பவர்களை கண்டறியவும் முனைகிறான். இவர்களை காப்பாற்றினானா இல்லையா என்பதை படம் பார்க்கும்போது தெரிந்து கொள்ளுங்கள்.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                              நாயகன் அசோக் செல்வன் வில்லா படத்திற்கு பின் நடித்திருக்கும் படம், இன்னும் முகபாவங்களில் உதயநிதி ஸ்டாலினுக்கு கம்பெனி கொடுக்கிறார். இன்னும் நிறைய எதிர்பார்க்கிறோம் பாஸ்.. துப்பறியும் கதை என்பதாலோ என்னவோ இவர் பேசும் டயலாக் எல்லாமே அதிகபட்சம் பத்து வார்த்தைகள் மட்டுமே. ஆனாலும் கண்டிப்பாக தமிழ் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்கக் கூடிய தகுதிகளும் இருக்கிறது. ஜனனி ஐயர் பெரிதாக நடிக்க ஸ்கோப் இல்லாவிட்டாலும் பாடல் காட்சிகளில் அழகாக வந்து போகிறார்.



                             நாயகனின் நண்பனாக வரும் காளி நல்ல குணசித்திர நடிகர். இயல்பான காமெடியும் இவரிடம் தமிழ் திரையுலகம் எதிர்பார்க்கலாம். ஹோட்டலில் அசோக்கிடம் இவர் வந்து மெதுவாக சாப்பிட்ட பில்லுக்கு பணம் கொடுத்துட்டு போ என்பது தியேட்டரில் எல்லோரும் ஒருசேர சிரித்த காட்சி.. ஜெயபிரகாஷ் வழக்கமான நடிப்பு. துப்பறியும் நிறுவன முதலாளி மற்றும் அசோக்கின் குரு ஆகியோரும் நல்ல நடிப்பு. ஆனாலும் காதல் காட்சிகளை கொஞ்சம் குறைத்திருந்தால் இன்னும் விறுவிறுப்போடு இருந்திருக்கும்.

இசை-இயக்கம்-தயாரிப்பு
                                 அறிமுக இசையமைப்பாளர் நிவாஸ் பாடல்கள் மற்றும் பின்னணி இசையில் குறைவில்லாமல் செய்திருக்கிறார். முதல் படம் என்பதே தெரியாத அளவுக்கு அனுபவமிக்க இசையை கொடுத்துள்ளார். நாளைய இயக்குனர் மூலம் அறிமுகமான ரமேஷின் முதல் முயற்சி நிச்சயம் சிறப்பான ஒன்றுதான். வழக்கம்போல் நல்ல, விறுவிறுப்பான படத்தை தயாரித்திருக்கும் திருக்குமரன் என்டர்டெயின்மென்ட்ஸ் சி.வி குமாருக்கு ஒரு ஷொட்டு..

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 "யார் எழுதியதோ" மற்றும் "விண்மீன் விதையாய்" பாடல்கள். சங்கரன் குளக்கரை காட்சி மற்றும் கமலக்கண்ணன் சந்திப்பு இப்படி சில காட்சிகள் படத்திற்கு வலு சேர்க்கும் காட்சிகள்.

                  Aavee's Comments - Inspiring Detective with too much         of love..!




27 comments:

  1. வணக்கம்
    தங்களை மிஞ்ஜ யாருதான் இருக்கு இப்படி கதையை சொல்ல
    வாழ்த்துக்கள்......

    ReplyDelete
    Replies
    1. தல நீ கலக்கு தல :-)))))))))

      Delete
    2. நன்றி ரூபன்..:)

      Delete
  2. அப்போ பார்க்கலாம்னு சொல்றீங்க.. சாரி முடிந்தால் திங்கட்கிழமை பார்கிறேன்..

    ReplyDelete
    Replies
    1. ம்ம்.. பாருங்க.. அதுதான் மூணுநாள் இருக்கே லீவ்..

      Delete
  3. பாஸ் யாரு அந்த பொண்ணு ...? ஏன் சுமார் மூஞ்சி பிகர் கூட எல்லாம் போட்டோ எடுக்குறீங்க.. அவ்வ்வ்வ்வ்வ்வ் செவல தாவுடா தாவு

    ReplyDelete
    Replies
    1. நான் போட்டோ எடுத்தா அதுல நான் எப்படி இருப்பேன்.. வேறொருத்தர் எடுத்தது.. ஹஹஹ்ஹா..

      Delete
  4. மேலே ஜனனி பக்கத்துல இருக்கிறவர் தான் வில்லனா?

    ReplyDelete
    Replies
    1. இல்லப்பா அவர் வெறும் காமெடி பீஸு..

      Delete
  5. ஜோடி பொருத்தம் நல்லா இருக்கே ஹி ஹி...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சொல்றீங்க அண்ணே.. ஆனா அந்த பொண்ணு ரொம்ப குள்ளம்.. (நீ பெரிய உயரமான்னு கேக்கப்படாது)

      Delete
  6. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகணும் ஆவிவிவி...!

    ReplyDelete
    Replies
    1. கேளுங்க கேளுங்க.. நீங்க என்ன கேக்கப் போறீங்கன்னு தெரியும் எனக்கு.. ;-) ஆனா இது அது இல்ல..

      Delete
  7. நல்ல விமர்சனம்!எப்படியும்,ஞாயிறு இணையத்தில் வந்து விடும்,பார்ப்போம்!

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஆடியோவுடன் பாருங்க. பிடிக்கும்.. :)

      Delete
  8. "சந்திரா" என்று ஒரு ராஜ பரம்பரைப் பின்னணியில் 'ஸ்ரேயா' நடித்த படம் ஒன்று ரிலீசாகி இருக்கிறது.சுமார் தான்,முடிந்தால் பாருங்கள்.

    ReplyDelete
    Replies
    1. ஆமா, ஸ்ரேயா கூட தன் கேரியரில் சிறந்த படம் ன்னு சொல்லியிருக்கிறதா கேள்வி.. இங்க நல்ல தியேட்டர் எதிலும் வரவில்லை.. ஆகவே டிவிடி க்கு வெயிட்டிங்.. (ஒரிஜினல் டிவிடி தான் பாஸு ):)

      Delete
    2. எதுக்கு டீ.வீ டீ க்கு வெயிட் பண்ணனும்?ப்ரீயா வே அரச(raj ) இணைய தொலை இல் பார்க்கலாம்!

      Delete
  9. மிக அருமையாக விமர்சித்து இருக்கிறீர்கள்...

    ReplyDelete
  10. அடங்கொன்னியா... ஈரோயின் பக்கத்துல நிக்கிறது இந்தப் படத்தோட ஈரோன்னுல்ல நெனச்சுக்கிட்டு இருந்தேன்...!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. இப்படி ஒரு சிலர் ஏமாந்து போகட்டுமேன்னு தான் அத்தை இங்க போட்டேன்.. :)

      Delete
  11. அநதப் புள்ள நியாயவிலைக் கடைல சர்க்கரை தர்ற மாதிரி அளவாச் சிரிக்குது. பக்கத்துல நிக்கிற ஆவியோ விலையில்லா சர்க்கரை கிடைச்சுட்ட மாதிரி அகலமாச் சிரிச்சுக்கினு இருக்காரு. நல்லவேளை... இன்னும் கொஞ்சம் லெவல் கூடியிருந்தா ‘இஹாஹாஹாஹா’ன்னு குமரிமுத்து சிரிப்பாயிருக்கும் வேய்! த்ரில்லர் படம் எனக்கு ரொம்பவே பிடிக்கும்கறதால அவசியம் பாத்துடறேன் (சீனு செலவில... ஹி... ஹி...!)

    ReplyDelete
    Replies
    1. எப்படி பார்த்தாலும் அதே படம் தானே.. அப்ப ஒக்கே..

      ஆவி பக்கத்துல நிக்கும் போது ஒரு பயம் இருக்காதா பின்னே..? :)

      Delete
  12. விமர்சனம் நல்லா இருக்கு.. துப்பறியும் படம்னா பார்க்கலாம் போலிருக்கு..

    ReplyDelete
  13. நஸ்ரியாவிற்குப் பிறகு? ......:))))

    நல்ல விமர்சனம் ஆவி. உலகத் தொலைக்காட்சிகளில் முதல் முறையாக போடும்போது தான் நான் பார்க்க முடியும்!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...