Thursday, December 26, 2013

ஆவி's கிச்சன் - இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி!                 
                               நீண்ட நாட்களாய் பூட்டிக் கிடந்த ஆவி's கிச்சனின் கதவை தட்டித் திறந்து விட்ட 'அந்த' பிரபல பதிவருக்கு நன்றிகள் பல கூறிக் கொண்டு ஒரு முக்கிய விஷயத்தை சொல்ல விழைகிறேன். சுடு தண்ணி வைப்பது எப்படி என்பதை சிறுவயதில் Physics கிளாஸில் லேப் எக்ஸ்பெரிமென்ட் செய்யும் போது மல்லிகா டீச்சரின் பின்னால் நின்று கொண்டு எட்டிப் பார்த்த பசங்க எல்லாம் பதிவாய் போடுவதை பார்த்த போது பாரதிக்குப் பின் நெஞ்சு பொறுக்காமல் போனது எனக்குதான்! அந்தப் பதிவ படிச்சுட்டு யாரும் "பாதரச மானி" ய உள்ள விட்டு பார்த்து "பாத விஷ பானி" ய உருவாக்கிடக் கூடாதே ன்னு ஒரு நல்ல எண்ணத்துல தான் இந்த பதிவ சுடச்சுட எழுதறேன்..!

                                 
 சுடு தண்ணி 
முன்குறிப்பு: 
                      
                           பாய் கடையில ஈசியா பரோட்டா போடறாங்க ங்கிறதுக்காக பரோட்டா போடறது எப்படி ஈசி கிடையாதோ, அது போல தான் சுடு தண்ணியும். நாம கேட்டவுடனே அம்மாவோ, மனைவியோ இல்ல பல வருஷம் கிச்சன் கில்லாடியா இருந்த அப்பாவோ சில நிமிஷத்துல போட்டுக் கொடுத்தாங்க ங்கறதுக்காக அதை ஈஸியான வேலையா நினைச்சிட கூடாது. சைக்கிள் ஓட்டும் போது தள்ளிப் பழகறது எவ்வளவு முக்கியமோ அவ்வளவு முக்கியம் சமையலில் சுடுதண்ணி வைக்கப் பழகுவது. அதை "முறையா" எப்படி வைக்கிறது ன்னு இங்கே பார்ப்போம்..தேவையான பொருட்கள்:
                              

சென்ற ஆவிஸ் கிச்சன் பதிவை படித்த என் வாசகர்களுக்கு இந்நேரம் அடுப்பு, லைட்டர் இத்யாதிகளெல்லாம் தெரிந்திருக்கும். அப்படி தெரியாதவர்கள் இங்கே கிளிக்கி தெரிந்து கொள்ளவும்.

ஒரு காப்பர் பாட்டம் பொருத்தப்பட்ட தட்டையான அடி உள்ள பாத்திரம். (எரிபொருள் மிச்சப் படுத்த)

தண்ணீர் உப்புத்தண்ணியோ நல்ல தண்ணியோ எதுவானாலும் பரவாயில்லை. ஏன்னா கொதிக்க வைப்பதே அதை சுத்தப்படுத்தி நம் உட்கொள்ளும் பொருளாய் மாற்றுவதற்கு தானே!

தண்ணீரின் அளவு பாத்திரத்தின் விளிம்பு வரை இல்லாமல் பார்த்துக் கொள்ளுதல் அவசியம். இங்குதான் பெரும்பாலான "அப்ரசண்டிகள்" தவறு செய்கின்றனர். தண்ணீர் கொதிக்கும் போது விளிம்பு வரை இருந்தால் களிம்பு போடும் நிலை நமக்கு வரும்.. ஆகையால் சர்வ ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம்.

கருங்காலி வேர் (கேரள முறை)            

மிக்ஸர் (அ) பிடித்தமான நொறுக்குத் தீனி 


செய்முறை விளக்கம்: 
 1. பற்ற வைத்த அடுப்பின் மேல் பாத்திரத்தை வழக்கம் போல் அடி துடைத்து வைக்கவும்.
 2. கருங்காலி வேரைப் போடவும் (இது நம் ரத்தத்தை சுத்தம் செய்ய உதவும்)
 3. தண்ணீர் கொதிக்கும் வரை நேரத்தை வீண் செய்யாமல் அடுத்து செய்ய இருக்கும் சமையலுக்கு தேவையான காய்கறிகளை நறுக்குவது, வெங்காயம் உரிப்பது போன்ற பயனுள்ள வேலைகளை செய்யலாம்.
 4. வேறு வேலை எதுவும் இல்லையென்றால் கொஞ்சம் மிக்ஸர் அல்லது உங்களுக்கு பிடித்தமான நொறுக்குத் தீனியை கொறிக்கவும்.
 5. அவ்வாறு செய்கையில் ஏதாவது படத்தின் கதையையோ, சீரியலையோ மனதில் அசை போடவும். ஏனெனில் "Idle Brain is the Devil's Workshop" என்றொரு பழமொழி உண்டு. சும்மா இருந்து நாமாகவே சாத்தானை கூப்பிடுவானேன்?
 6. சிறு வயதில் பபிள்கம் சாப்பிட்டு அதில் மொட்டு விட்டு களித்திருப்போம். அது போன்ற ஒரு மொட்டு மெல்ல பாத்திரத்தின் அடியிலிருந்து மேலே வரும். 
 7. ஒற்றை குமிழாய் இருந்தது கொஞ்சம் கொஞ்சமாய் பெருக்கமடைந்து கூட்டம் நிறைந்த கல்கத்தா வீதியில் அலையும் மக்கள் கூட்டம் போல் பல குமிழ்கள் பொங்கி வரும் போர்வீரர்கள் போல் பாத்திரத்தின் அடிப் பகுதியிலிருந்து மேல் பகுதிக்கு தங்களால் எப்படியும் வந்து சேர முடியும் என்று திடங்கொண்டு போராடி  மேலே வரும்.
 8. தண்ணி சூடானதை சோதனை கூடத்தில் வைத்து பரிசோதிப்பது போல பாதரச மானியெல்லாம் தேவையில்லை. தண்ணீரின் மேல்பரப்பில் குவிந்திருக்கும் எண்ணிலடங்கா குமிழ்களும், வெற்றிகரமாய் விண்ணைத் தொட புறப்படும் "ஆவியும்" தான் அளவுகோல். 
 9. அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து சிறிது ஆற விடவும். (பச்சை தண்ணீர் கலந்து குடிப்பது தண்ணீர் சுட வைத்த நோக்கத்தையே வீணடித்து விடும்)
 10. சிறிது நேரம் கழித்து சுவையான சுடு நீரை குடித்து மகிழலாம். 

(மேற்சொன்ன வழிமுறைகள் குடிப்பதற்கான சுடு தண்ணி வைக்க மட்டும் தான். குளிக்க ஏதாவது ஒரு நல்ல ஹீட்டரை வாங்கி மாட்டிக்கிங்க, எரிவாயுவ வீணாக்காதீங்க. )
( பி.கு) : போதும் இத்தோட நிறுத்திக்குவோம். வேற யாரும் "நாங்களும் வெப்போம்லே சுடுதண்ணி" ன்னு ஒரு பதிவு போடாதீங்க.. நாடு தாங்காது.

                                                   **************

(இது என்னுடைய இருநூற்று ஐம்பதாவது பதிவு. தொடர்ந்து ஆதரவு அளித்து வரும் வாசக கண்மணிகளுக்கு என் கோடானு கோடி நன்றிகள்)


61 comments:

 1. This comment has been removed by the author.

  ReplyDelete
  Replies
  1. யோவ்... எம்மேல வெறி இருக்கலாம்... கொலவெறி இருக்கக் கூடாது சொல்லிபுட்டேன்.. அந்த கோட்ட தாண்டி நானும் வரமாட்டேன்... நீரும் வரக் கூடாது

   Delete
  2. // கொட்ட தாண்டி நானும் வரமாட்டேன்... நீரும் வரக் கூடாது//

   "கொட்ட" எங்கேப்பா போட்டிருக்கீங்க..

   Delete
  3. அடப்பாவி.. அதுக்குள்ள பயபுள்ள சுதாரிச்சுகிச்சே.. வட போச்சே!!

   Delete
  4. நீ எதுக்கு சீனு பயப்படுறே!? உனக்கு பக்கத்துணையா நான் இருக்கேன். நீ கோட்டை தாண்டிப் போய் ஆவியை ஒரு கை பார்த்துட்டு வா!

   Delete
  5. ஆஹா, ஒரு குரூப்பா தான் கிளம்பியிருக்காங்களோ?

   Delete
 2. மேற்சொன்ன வழிமுறைகள் குடிப்பதற்கான சுடு தண்ணி வைக்க மட்டும் தான். குளிக்க ஏதாவது ஒரு நல்ல ஹீட்டரை வாங்கி மாட்டிக்கிங்க, எரிவாயுவ வீணாக்காதீங்க
  >>
  ஹீட்டர் போட்டு கரண்டை வீணாக்கலாமா!? வீட்டுலயே இருக்கும் தேங்காய் ஓடு, பொருட்கள் வரும் அட்டைப் பெட்டிலாம் போட்டு அடுப்பெரிய வைச்சு குளிங்கப்பா!

  ReplyDelete
  Replies
  1. அதுக்கு பேசாம குளிக்காமையே இருந்திடலாம்.. இன்னும் சிக்கனமா இருக்குமே!!

   Delete
  2. ச்ச்ச்சீ அப்புறம் கப்பு தாங்காதே!

   Delete
 3. 250க்கு வாழ்த்துகள். அதுக்கு கிஃப்டா தம ஓட்டு போட்டாச்சு!

  ReplyDelete
  Replies
  1. அக்கான்னா அக்கா தான்.. டேங்க்ஸு !!

   Delete
 4. எனக்கு சுடு தண்ணி வைக்க தெரியாது.
  சுடு தண்ணியை, எதிராளிகள் மேல ஊத்ததான் தெரியும்.

  ReplyDelete
  Replies
  1. சரி சரி, இப்படி ஒரு பதிவு எழுதினதுக்காக என் மேலே ஊத்திடாதீங்க..

   Delete
 5. //தண்ணி சூடானதை சோதனை கூடத்தில் வைத்து பரிசோதிப்பது போல பாதரச மானியெல்லாம் தேவையில்லை.//திராணி உள்ளவர்கள் விரலை விட்டு சோதனை செய்யவும்...அவ்

  ReplyDelete
  Replies
  1. இனி தண்ணி கொதிக்கும் போது உங்களையே கூப்பிடறேன் ஸார்!!

   Delete
 6. //இது என்னுடைய இருநூற்று ஐம்பதாவது பதிவு.// good keep it up ^^^^^^^

  ReplyDelete
 7. கேரளாப்பக்கம் போனால் மஞ்ஞளா சுடு தண்ணி குடுக்கராங்களே அதை எப்படி போடுவது ??

  ReplyDelete
  Replies
  1. அது தான் சார் இது..

   Delete
  2. அது சரி மஞ்சுளா இங்க எங்க வந்தாங்க?

   Delete
 8. 250க்கு வாழ்த்துகள்.!!!!!!!என்ன ஒரு கரிசனை,ஹூம்???????????///அந்த சமயத்தில் அடுப்பை அணைத்து சிறிது ஆற விடவும்.///அடுப்பையா?அடுப்பை 'அணை' த்தால் சுடாது?

  ReplyDelete
  Replies
  1. நீங்க அங்கே "அணை"க்க போயிட்டீங்களா.. அச்சச்சோ?

   Delete
 9. // கருங்காலி வேர் , ,//

  கருங்காலி கிடைக்காவிட்டால் நாற்காலி பயன்படுத்தலாமா??

  ReplyDelete
  Replies
  1. முக்காலியாவது வச்சு அட்ஜெஸ் பண்ணுங்க வாத்தி!!

   Delete
 10. இதை அப்படியே நஸ்ரியாவை வச்சு செய்முறை வீடியோவா எடுக்கலாமே??

  ReplyDelete
  Replies
  1. சாரி, அவங்களுக்கு இவ்வளவு கஷ்டமான சமையல் எல்லாம் செய்ய தெரியாது..

   Delete
 11. சார் சார் சார் !! ஆவி சார்

  ஓடி வாங்க ஓடி வாங்க.

  நீங்க சொன்னபடி, நீங்க சொன்னபடியே தான் ஒரு மிஷ்டக்க்கும் இல்லாம சுடு தண்ணி வச்சேன்.
  தண்ணி கொப்புள்ளித்துக்கொண்டு வந்தபோது, மேற்கொண்டு என்ன செய்யறது அப்படின்னு மறந்து போனதினாலே , அத அப்படியே வச்சுட்டு,
  திரும்பவும் இந்த கம்புட்டர் லே உங்க பதிவு எங்கன இருக்கு அப்படி தேடி பார்த்து கண்டு பிடிக்கிரதுக்குள்ளே, நடுவிலே டிஸ்டர்ப் கொஞ்சம் பண்ணிப்பிட்டாங்க அந்த பவர் கட் பண்ணறவங்க.
  அப்பறம் கரண்ட் வந்தப்பறம் உங்க பதிவு பார்த்து புரிஞ்சுகிட்டு
  சரி அப்படின்னு கிச்சனுக்கு போனா ...
  அய்யோ...
  பாத்திரம் ஒரே சிவப்பா நெருப்பு மாதிரி இருக்குது.
  தண்ணியே காணோம். எங்கே பார்த்தாலும் ஒரே
  ஆ ஆ ஆ ஆ ஆ வி வி வி வி வி வி வி வி யா யா யா
  இருக்குது.

  அடுத்து, என்ன செய்யனும்னு சொல்லுய்யா.

  உங்க செல்லு நம்பர் னாச்சும் என்ன அப்படின்னு சொல்லுயா.
  உனக்கு புண்ணியமா இருக்கும்.


  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. நான் தான் சொன்னேனே தாத்தா.. அது கொஞ்சம் கஷ்டமான சமையல்.. நாலைஞ்சு பாத்திரம் கரிஞ்சாலும் தப்பில்ல.. சுடு தண்ணி வைக்க கத்துக்கணும்.. அது தான் முக்கியம். (நாலு பேர கொன்னு தான் நல்ல டாக்டர் ஆகணும்னு சொல்லுவாங்களே, அது மாதிரி..)

   அது சரி, பாட்டி கிட்ட இருந்து எப்படி தப்பிச்சீங்க..

   (நம்பர் முகப்புத்தகத்தின் உள் பெட்டியில் போடுறேன் தாத்தா) :)

   Delete
 12. மிடில... ஆ...
  250வது பகிர்வுக்கு வாழ்த்துக்கள்...

  ReplyDelete
 13. சுடு தண்ணீர் வைப்பவன் கருங்கலியா இருந்தா உடம்புக்கு கெடுதல் ஒன்றும் இல்லையே?

  ReplyDelete
  Replies
  1. யார் உடம்புக்கு?

   Delete
 14. 250 வது பதிவிற்கு வாழ்த்துக்கள்
  த.ம.4

  ReplyDelete
  Replies
  1. வாழ்த்துக்கு நன்றிங்க!!

   Delete
 15. 250... மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்...

  ReplyDelete
  Replies
  1. இந்த முறை ஏன் கொஞ்சம் லேட் DD

   Delete
 16. 250 ஆவது பதிவுக்கு வாழ்த்துக்கள்....

  சிறந்த இலக்கியப் பதிவுகளா நம்ப நண்பர்கள் பின்றாங்க... வாழ்த்துக்கள் ...இப்பதான் முட்டை அவிப்பது எப்படின்னு நண்பர் தமிழ்வாசி முக நூல் பக்கத்தில் பகிர்ந்ததை கவனிச்சிட்டு வர்ரேன்...அப்படியே கல்வெட்டுல பொறிச்சுடலாம்...பின்னாடி வருகிற தலைமுறைக்கு உதவுமில்லையா...

  ReplyDelete
 17. கல்யாணம் ஆகப் போகும் எல்லா இளைஞர்கள் மற்றும் இளைஞிகளுக்கும் பயனுள்ளதாய் இருக்கும் மேடம்.. வாழ்த்துகளுக்கு நன்றி மேடம்..

  ReplyDelete
 18. ஆண் சமூகத்திற்கு நீங்கள் ஆத்தியிருக்கும் சேவைக்கு நன்றி பாஸ்!

  ReplyDelete
 19. 250 க்கு வாழ்த்துக்கள் ஆவி அண்ணே ...

  ReplyDelete
 20. ஆனா ஒன்னு மட்டும் உறுதியா தெரியுது ... அதை என்னன்னு எப்படி என் வாயால சொல்லுறது

  ReplyDelete
  Replies
  1. ஒரு பதிவா போடுங்களேன்!! ;-)

   Delete
 21. Replies
  1. படிச்சுட்டேன்.. சிறப்பு!

   Delete
 22. அடடா.... என்ன ஒரு சூடான பதிவு! :)

  250-ஆவது பதிவிற்கு வாழ்த்துகள் ஆவி.

  ReplyDelete
 23. aavi anna ,
  சாப்பிடுவது எப்படி? (சுடுதண்ணி/முட்டை/டீ) intha padhiva ganesh annava poda vacha ungala parthu pogalamnu vanthen ,,,
  இப்படித்தான் வைக்கணும் சுடு தண்ணி! intha thalaipa parthathum mayangi poiten anna

  ivalavu kastamana velaya ellam naan eppadi kathukitu , mamiyar vetla poi vela panna porenu payama iruku

  ReplyDelete
  Replies
  1. இப்ப பாதி பொண்ணுங்க இது கூட தெரியாம தான் கல்யாணம் பண்ணிப் போகுதுங்க.. அவங்களுக்கும் யூஸ் ஆகட்டுமே! ( நான் உன்ன சொல்லலே) ;-)

   Delete
 24. aduthu yara pakka pogalam wait panuga seenu annava parthutu vareen

  ReplyDelete
  Replies
  1. இந்த இலக்கிய பணிய துவக்கி வச்சதே அவர்தான்.. அவரை மொதல்ல வாழ்த்திட்டு வாம்மா!!

   Delete
 25. 250-vathu pathivirku vazthukal anna , menmelum valarga

  ReplyDelete
 26. கோவை ஆவிDecember 28, 2013 at 12:17 PM
  இப்ப பாதி பொண்ணுங்க இது கூட தெரியாம தான் கல்யாணம் பண்ணிப் போகுதுங்க.. அவங்களுக்கும் யூஸ் ஆகட்டுமே! ( நான் உன்ன சொல்லலே) ;-)
  anney ithula etho ul kuttu iurku,
  motha motha veedu thedi vantha pullaye ippadiya esuvengaa
  :)))))))))))))))))
  ungala pathi raji akka keta complain panren paarunga

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ.. நான் எங்கே ஏசினேன்.. சும்மா பேசத்தானே செஞ்சேன்.. அதுக்கு எதுக்கு சொர்ணாக்கா கிட்ட சாரி ராஜி அக்கா கிட்டவெல்லாம் பஞ்சாயத்த கொண்டு போறே தங்கச்சி..

   Delete
  2. இதுல போட்டோ கமெண்ட் போட வசதியில்ல.. இல்லேன்னா என்னை அண்ணனா தத்து எடுத்து கிட்ட தங்கச்சி வீட்டுக்கு வர்றப்போ ஒரு சாக்லேட்டாவது கொடுத்திருப்பேன்.. :( போன மாசம் ஆவீஸ் கிச்சனில் செஞ்ச சிக்கன் குலோப் ஜாமூன் இருக்கு.. தரட்டுமா? ;-)

   Delete
 27. anna why this kola veri,, thangachiya marupadi intha veetu pakkam sekura idiyave illaya unglauku

  ReplyDelete
 28. //தண்ணீர் உப்புத்தண்ணியோ நல்ல தண்ணியோ எதுவானாலும் பரவாயில்லை. ஏன்னா கொதிக்க வைப்பதே அதை சுத்தப்படுத்தி நம் உட்கொள்ளும் பொருளாய் மாற்றுவதற்கு தானே!//

  "அம்மா மினரல் வாட்டர்" ன்னு ஒண்ணு இப்போ கிடைக்குதே அதை பயன்படுத்தலாமா? ப்ரோ...

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...