Monday, September 30, 2013

ஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி!! (சைவம்)


                         ஹலோ, கிச்சனுக்குள்ள நீங்க வரப்படாது.. ஹால்ல வெயிட் பண்ணுங்க.  நான் செஞ்சு கொண்டு வர்றத சாப்பிட்டு பார்த்துட்டு எப்படி இருக்குன்னு சொல்லுங்க.. புரிஞ்சுதா? ( மைன்ட் வாய்ஸ்: அகில உலக சூப்பர் செப் ஆவியின் கிச்சனுக்குள்ள நீங்க வந்தா தீய்ஞ்சு போன ஐட்டத்தை எல்லாம் நான் கரெக்ட் பண்ற விஷயமெல்லாம் உங்களுக்கு தெரிஞ்சுடும்.. சரியா வரலேன்னு பேக் சைடில ஹோட்டல்ல ஆர்டர் பண்ண விஷயம் மட்டும் தெரிஞ்சா பயபுள்ளைக சும்மாவா இருப்பாங்க)


                      கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் காபி






தேவையான பொருட்கள்:

கேஸ் அடுப்பு அல்லது இண்டக்க்ஷன் ஸ்டவ்.

கேஸ் அடுப்பு எனில் கேஸ் சிலிண்டர் ( ஆதார் நம்பர் வாங்கி கேஸ் கம்பெனிக்காரன் கிட்ட கொடுத்தாச்சா நீங்க?)

லைட்டர் (அ) கரண்ட் (அடுப்பை பற்ற வைக்க, இண்டக்க்ஷன் பயனாளர்கள் ஈ.பி பில் கட்டியாச்சான்னு சரிபார்த்துக்கோங்க )

சிறிய பாத்திரம்- 2- (இரண்டு கிளாஸ் தண்ணீர் பிடிக்கும் அளவிற்கு.. சின்னதா இருந்தா பால் பொங்கும்போது வழியும். பெருசா இருந்தா பாத்திரம் சூடாக பிடிக்கிற நேரம் அதிகமாகும். மைன்ட் வாய்ஸ் - எரிபொருள் சிக்கனம்..ம்ம்! )

குழம்பித் தூள்* - 1 டீ-ஸ்பூன்  ( காப்பி வைக்கவும் டீ ஸ்பூன் தான் பயன்படுத்த வேண்டுமென்பதை நினைவில் "கொல்க" )

சர்க்கரை -     1 1/2 டீ-ஸ்பூன்  ( வாழ்க்கை இனிப்பா இருக்கணும்னா ரெண்டு ஸ்பூன் போட்டுக்கோங்க.)

பால்           -        அரை டம்ளர்  ( காப்பி லைட்டா வேணும்னா முக்கால் கிளாசும், திக்கா வேணும்னா கால் கிளாசும் எடுத்துக்கோங்க)

நல்ல தண்ணி - அரை டம்ளர் ( கின்லே, அக்வா பினா போன்ற மினரல் வாட்டர்களை தவிர்ப்பது நலம்.. மைன்ட் வாய்ஸ் - சமூக சிந்தனையாம்!! )


கிடுக்கி -  பாத்திரத்தை பிடித்து/கொள்ள/ இறக்க உதவும் சாதனம். இதை உங்க ஊர்ல எப்படி சொல்வாங்களோ அப்படி அண்டரஸ்டேண்டு பண்ணிக்கோங்க

வடிகட்டி - 1

வெள்ளி டவரா - 1

* குழம்பித் தூள் - இன்ஸ்டன்ட் குழம்பித் தூள் என்று கேட்டு வாங்கவும். ப்ரு அல்லது நெஸ்கபே போன்ற பெயர்களை உபயோகித்தால் அவர்களுக்கு கொடுக்கப்படும் விளம்பரம் ஆகிவிடும் அபாயம் உள்ளதால் அவ்வாறு செய்யவில்லை. ( மைன்ட் வாய்ஸ் - அதான் இப்ப சொல்லிட்டியே!)


செய்முறை விளக்கம்: 

1. அடுப்பை பற்ற வைக்கவும்.
2. பாத்திரத்தை நன்கு கழுவி அதன் அடியை துடைத்துவிட்டு  அடுப்பின்மேல் வைக்கவும்
3. நல்ல தண்ணீரை ஊற்றி கொதிக்க வைக்கவும்.
4. அதே சமயம் பாலை வேறொரு பாத்திரத்தில் கொதிக்க வைக்கவும். பால் கொதித்ததும் அரை டம்ளர் பாலைத் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
5. தண்ணீர் கொதித்தவும் குழம்பித்தூளை போடவும்.
6. ஓரிரு நொடிகள் கழித்து கிடுக்கியின் உதவியுடன் பாத்திரத்தை இறக்கவும்.
7.  பால் இருக்கும் டம்ளரின் மேல் வடிகட்டியை வைத்து அடுப்பிலிருந்து எடுத்த குழம்பி நீரை ஊற்றவும்.
8. வடிகட்டியை எடுத்து விட்டு சர்க்கரையை சேர்க்கவும். (கலக்க வேண்டாம்.. சூடு ஆறி விடும்)
9. வெள்ளி டவராவில் வைத்து இரண்டு ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப அன்பையும் சேர்த்து பரிமாறவும்.


          சூடான "ஆவி" பறக்கும் குழம்பி தயார். ( காப்பி வைக்க ஒரு விளக்கம் தேவையான்னு நீங்க கேக்குறது புரியிது. ஆனா வெறும் சுடுதண்ணி மட்டும் வைக்க தெரிஞ்ச பேச்சிலர் ஆசாமிகளுக்கு இது பயன்படுமே.. ஹிஹிஹி )

பி.கு: இது கும்பகோணம் டிகிரி பில்டர் காப்பிக்கு போட்டி அல்ல..

~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
ஆவி 's கிச்சனில் அடுத்து வருவது - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்)              ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~      
                   


50 comments:

  1. எனக்கு இன்ஸ்டண்ட் காப்பியும்...இங்கிலிசும் ஒண்ணு.
    விருப்பம் இல்லாமத்தான் குடிச்சும்...படிச்சும்...தொலைப்பேன்.

    ReplyDelete
    Replies
    1. ஆனா இது ரெண்டும் செய்தாத்தான் காலைகடன்கள் சுளுவா போகும்னு எங்க கிராமத்துல சொல்வாக!! ஹிஹி

      Delete
  2. :"ஆவி" பறக்கும் சூடான குழம்பியை குழப்பியடிக்காமல் இப்படி ஹிப்-டாக்ஸாச் சொல்ல நம்ம "ஆவி"யால மட்டும்தான் முடியும்!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. நன்றி தலைவரே..போன வாரம் நம்ம பிளாக்க ரிவ்யு பண்ணிக்கிட்டு இருந்த போது அதுல ஏதோ ஒண்ணு குறையிற மாதிரி இருந்தது. அதான் இந்த பகுதியையும் சேர்த்துட்டேன்.. ஹிஹிஹி

      Delete
    2. //போன வாரம் நம்ம பிளாக்க ரிவ்யு பண்ணிக்கிட்டு இருந்த போது அதுல ஏதோ ஒண்ணு குறையிற மாதிரி இருந்தது. அதான் இந்த பகுதியையும் சேர்த்துட்டேன்.. ஹிஹிஹி// ஒரு டிவி ஆரம்பிப்பதற்கான சகல பகுதிகளும் இந்த பிலாக்-ல் இருக்கிறது !! சீக்ரமே ஆவி டீவி பிராப்தி ரஸ்து !!

      Delete
  3. ஹிஹி... சர்க்கரை இரண்டு ஸ்பூன் போட்டா தித்திப்பாக இருக்கும், மூன்று ஸ்பூன் போட்டா புழு கடிக்கும்...

    ReplyDelete
    Replies
    1. ஸ்கூல் படிக்கிற குட்டிப் பசங்கெல்லாம் காப்பி ப்ரிபேர் பண்ண வந்தா இப்படித்தான். தம்பி, உங்க டாடி கிச்சன்ல இருப்பாரு.. அவர்கிட்ட இத காமிப்பா..

      Delete
  4. // காப்பி லைட்டா வேணும்னா முக்கால் கிளாசும், திக்கா வேணும்னா கால் கிளாசும் எடுத்துக்கோங்க... //

    குறும்புகளை ரசித்தேன்...

    ReplyDelete
    Replies
    1. தளத்தை தமிழ்மணம் சென்று இணைக்கவும்...

      Link : http://tamilmanam.net/user_blog_submission.php

      Delete
    2. ஆவி..நீங்க எங்கள் வீட்டுக்கு வாங்க..கால் டீஸ்பூன்பாலில் திக்காக காஃபி போட்டு தர்ரேன்

      Delete
  5. ஹிஹி குழம்பித்தூள் ஆஹா என்ன ஒரு பெயர் ரசித்துப்படித்தேன் என்று சொல்ல முடியாது சிரித்துப்படித்தேன்.

    ReplyDelete
    Replies
    1. எப்படியோ படிச்சீங்களே, அது போதும்.. ;-)

      Delete
  6. வெள்ளி டவராவில் வைத்து இரண்டு ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப அன்பையும் சேர்த்து பரிமாறவும்.
    >>
    எங்க வீட்டுல வெள்ளி டவரா இல்லியே! அப்புறம் எப்படி நான் காஃபி குடிக்க!?

    ReplyDelete
    Replies
    1. வெரி சாரி அக்கா.. இந்த காபி வெள்ளி டவரால தான் குடிக்கணும்.. மாமாகிட்ட சொல்லி நாளைக்கு வரும்போது டவரா வாங்கி வர சொல்லிடுங்க..

      Delete
    2. மாமாக்கிட்ட கேட்டேன். எவன் உனக்கு இந்த ஐடியா கொடுத்தானோ அந்த தம்பி தங்க கம்பிக்கிட்டயே போய் வாங்கி வான்னு சொல்லிட்டாரு.

      Delete
  7. குழம்பித்தூள் அப்படி என்றால் என்ன?

    ReplyDelete
    Replies
    1. குழம்பி என்றால் காபி. அடுத்த முறை உங்க பெயருடன் கருத்தை வெளியிடவும்..

      Delete
    2. பாவம் அவரே கொயம்பிட்டாறு

      Delete
  8. ஏனுங்க ஆவி அட்லீஸ் உங்கள் வீட்டம்மா காஃபி போடும் போது பக்கத்தில் நின்றாவது பார்த்திருப்பீர்களா?இன்ஸ்டண்ட் காஃபிக்கு வடிகட்டியூஸ் பண்ணுவீர்களா உங்கள் ஊரில்..?

    ஆவி 's கிச்சனில் அடுத்து வருவது - சிக்கன் குலோப் ஜாமூன் (அசைவம்) //இனி மண்டைவெல்லம் பிரியாணி,இறால் அல்வா,மீன் பர்பி,மட்டன் பாயஸம் இப்படி ரெஸிப்பி எல்லாம் போடுங்க சரியா?

    யப்பா..எப்படி எல்லாம் டெரர் கெளப்புறாங்கப்பா..ஆவி..சரியான நாமகரணம்தான்:)

    ReplyDelete
    Replies
    1. ஸாதிகா அக்கா, நான் டிப்ளமா படிக்க வீட்டை விட்டு தனியாக இருக்க வேண்டியிருந்தது. அப்போது கொஞ்சம் கொஞ்சம் சமையல் செய்ய கற்றுக் கொண்டேன். சில நேரம் தூள் கலங்காமல் இருக்கலாம். கட்டியாகலாம். அவற்றை வடிக்கட்டலாம்.. பாலில் ஆடை இருந்தால் வடிகட்டலாம்.. (அப்பாடா, எப்படியோ சமாளிச்சாச்சு!!) :-)

      Delete
    2. இப்போ தானே ஆரம்பிச்சிருக்கோம்.. இதுக்கே டெர்ரர் ஆயிட்டா எப்படி? (சிக்கன் குலாப்ஜாமுன் நிஜமாகவே நான் செய்து பார்த்து நன்றாக வந்த ஒரு ஸ்வீட். )

      Delete
    3. கிச்சன் சூப்பர் ஸ்டாரே குழம்பியை குடித்து குழம்பிட்டாரே..

      Delete
    4. கிச்சன் சூப்பர் ஸ்டாரே குழம்பியை குடித்து குழம்பிட்டாரே..

      Delete
    5. கிச்சன் சூப்பர் ஸ்டாரே குழம்பியை குடித்து குழம்பிட்டாரே..

      Delete
    6. கிச்சன் சூப்பர் ஸ்டாரே குழம்பியை குடித்து குழம்பிட்டாரே..

      Delete
  9. ஆவி பறக்கும் உங்க ஸ்டைல் காபி ஜோர்! ருசித்தேன்! நன்றி!

    ReplyDelete
    Replies
    1. நன்றி நண்பா.. யாரங்கே.. நண்பர் சுரேஷுக்கு ஒரு கப் காபி பார்சல்.

      Delete
  10. நமக்கு காபி குடிக்கற பழக்கம் இல்லீங்க. இந்த செய்முறை வைத்து நான் உங்களுக்கு தான் முதல் காபி போட்டு தருவேன் ....

    ReplyDelete
    Replies
    1. பழகி வச்சுக்கப்பா.. கல்யாணத்துக்கு அப்புறம் உதவும்.. ;-)

      Delete
  11. //காப்பி வைக்கவும் டீ ஸ்பூன் தான் பயன்படுத்த வேண்டுமென்பதை நினைவில் "கொல்க" // :-)

    //காப்பி லைட்டா வேணும்னா முக்கால் கிளாசும், திக்கா வேணும்னா கால் கிளாசும் எடுத்துக்கோங்க//

    ஓசில வேணும்னா ...?

    ReplyDelete
    Replies
    1. வந்துட்டான்யா.. வந்துட்டான்யா

      Delete
  12. //வாழ்க்கை இனிப்பா இருக்கணும்னா ரெண்டு ஸ்பூன் போட்டுக்கோங்க.//

    ஆமா ஒடம்பு பூரா இனிப்பா இருக்கனும்னா இன்னும் ரெண்டு கரண்டி போடுங்க ....சுகர் வந்துடும் ....!

    ReplyDelete
    Replies
    1. அடுத்த முறை உன்னைப் பார்க்கும் போது சுப்புவுக்குன்னே ஸ்பெஷலா பால், சர்க்கரை, டிக்காஷன் இல்லாம ஒரு காபி தர்றேன்..போதுமா?

      Delete
  13. //1. அடுப்பை பற்ற வைக்கவும்.
    2. பாத்திரத்தை நன்கு கழுவி அதன் அடியை துடைத்துவிட்டு அடுப்பின்மேல் வைக்கவும்//

    ம்க்கும் ... இதுதான் உங்க சிக்கனமாக்கும் ...! மொதல்ல பாத்திரத்த கழுவோணும் அப்புறம் அதன் அடியை தொடைக்கோணும் , கடசில தான் அடுப்புல வச்சு பத்த வைக்கோணும் ....!

    ReplyDelete
  14. ஏன்யா ...ஏன் ...! மேல காப்பி உள்ளார குழம்பி ஏன் இப்பூடி ...!

    ஆவி's கிச்சன் - கோயம்புத்தூர் டிப்ளோமா இன்ஸ்டன்ட் குழம்பி !!

    ஆவி பறக்கும் குழம்பி
    இது யாரு வச்ச குழம்பி
    நம்ம ஆவி தெளிஞ்சு வச்ச குழம்பி ...!

    ReplyDelete
    Replies
    1. பாட்டு நல்லா இருக்கே.. நம்ம காபி Ad-க்கு உபயோகப் படுத்திக்கறேன்.

      Delete
  15. //சூடான "ஆவி" பறக்கும் குழம்பி தயார். //

    போட்டாவுல ஆவி வரல யுவர் ஆனர் ...!

    ReplyDelete
    Replies
    1. அதான் நான் வந்துட்டனே..

      Delete
    2. யோவ் ஜீவன் ஆவிகிட்ட ஏன்யா வாய குடுத்து மாட்ரீறு :-)))))))

      Delete
  16. வெள்ளி டவராவில் வைத்து இரண்டு ஸ்பூன் அல்லது தேவைக்கேற்ப அன்பையும் சேர்த்து பரிமாறவும்.

    அன்புக் காப்பி அருமை..!

    ReplyDelete
    Replies
    1. நன்றி அம்மா.. அந்த "அன்பை" உங்களைத் தவிர யாருமே சுவைக்கவில்லை..

      Delete
  17. // இன்ஸ்டன்ட் குழம்பித் தூள் // கொய்யால நக்கலுக்கு அளவே இல்லாமல் போச்சு ஏன்னா ரவுசு

    // வெள்ளி டவராவில்// நாங்க கொஞ்சம் ரிச் பேமிலி தங்க டவரால தான் குடிப்போம் :-)))))

    ReplyDelete
    Replies
    1. தம்பி, விட்டா நீங்க ஐபில் டவர்ல கூட குடிப்பீங்க.. நான் சொன்னது பொதுமக்களை.. :-)

      Delete
  18. காஃபியில் சைவம் ? டபராவில் குடிக்கிரோமா மக்கில் குடிக்கிரோமா என்பதை பொருத்து.

    ReplyDelete
  19. அதென்ன ஆ.வி " குழம்பி " என்பதை மட்டும் ஆங்கிலத்தில் சொல்லி இருக்கிறீர்கள். குழம்பி என்றவுடன் குழம்ப வேண்டும் என்ற நல்ல எண்ணமா !! :) //குழம்பித் தூள் - இன்ஸ்டன்ட் குழம்பித் தூள் என்று கேட்டு வாங்கவும்// கடைக்காரன் கடுப்பாகி விட போகிறான்

    ReplyDelete
  20. ப்ளாட்டினத்தில் டபரா உண்டா???

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...