Tuesday, September 10, 2013

பதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-3 (ஜோராய் நடந்த ஏற்பாடுகள் )

                               சென்னையின் முக்கிய சாலையின் மீது இருந்ததால் அரங்கத்தை கண்டுபிடிக்க எந்த சிரமும் இருக்கவில்லை. வடபழனியின் முக்கிய இடத்தில் (கமலா தியேட்டர் அருகில், விஜயா மால் எதிரில்) இருக்கும் இந்த ஹாலை புக் செய்ய விழாக் குழுவினர் நிச்சயம் தங்கள் உழைப்பை சிந்தியிருக்கிறார்கள் என்று புரிந்து கொண்டேன். அரங்கத்தின் பார்க்கிங்கில் இறங்கியவுடன் கவியாழி ஐயாவின் வரவேற்பு மழையில்  நனைந்தபடி மற்ற பதிவர்களை தேடியபோது அங்கே ஒருவரையும் காணவில்லை. விசாரித்ததில் ஒரு சிலர் திரு.மோகன்குமார் மற்றும் சதீஷ் சங்கவி ஆகியோரின் புத்தக வெளியீடு சைதையில்  நடக்கிறது என்றும் அங்கே சிலர் இருப்பதாகவும், சீனு, ரூபக், கவிஞர் மதுமதி, அரசன் ஆகியோர் இடையிடையே வந்தபோதும் மறுநாள் விழாவிற்கு தேவையான வேலைகளுக்காய் அலைந்து கொண்டிருந்தனர்.  (இது நான் அங்கே இருந்த பதினொன்றரை மணி வரை தொடர்ந்தது. )

ரூபக், ராஜபாட்டை, சதீஷ், வெற்றிவேல் மற்றும் கலாகுமரன் 

                               அப்போது  தங்களுக்குள்ளாகவே கலாய்த்துக் கொண்டும், நகைச்சுவையாய் பேசிக் கொண்டும் இருந்த ஒரு நால்வர் படையை  சீனு அறிமுகப்படுத்தி வைக்க சற்றே அதிர்ந்தேன். முதலாவதாக "ராஜபாட்டை" மேலையூர் ராஜா.. இவர் புகைப்படங்களை இணையத்தில் பார்த்து சற்று வயதானவராக கற்பனை செய்திருந்தேன். ஆனால் அங்கே டைட்டாக ஒரு டீ-ஷர்டில் கலக்கிக் கொண்டிருந்தார். உடன் "சங்கத் தீவிரவாதி" "மதகஜராஜா" சதீஷ் செல்லத்துரை  மற்றும் கோகுல். இவர்களுடன் பிபாஷா பாசு தம்பி போல் ஒல்லியாய் நின்றிருந்த அந்த இரவிலும் பளீரென்று புன்னகைத்துக் கொண்டிருந்த தம்பி வெற்றிவேலையும் சந்தித்தேன். பேசிக் கொண்டிருக்கையில் பதிவர் பாடல் பற்றிய பேச்சு வந்த போது தன் செல்பேசியில் நான் பாடிய பாடலை பதிவிறக்கம் செய்து வைத்திருந்ததை காட்டிய போது புளங்காகிதமடைந்தேன்.

"மெட்ராஸ் பவன்" சிவகுமாருடன் கோவைப் பதிவர்கள் 

நக்கீரன் அண்ணன், ஜீவா மற்றும் தமிழ்வாசி பிரகாஷுடன்..


                                    அரங்கின் உள்ளிருந்த ஒரு மகளிர் அணி (தென்றல் சசிகலா அவர்கள், எழில் மேடம் மற்றும் அகிலா மேடம்) புறப்படத்  தயாரானார்கள். அவர்கள் புறப்பட்டதும் அங்கே வந்த ஸ்கூல் பையன் மற்றும் "வாத்தியார்" பாலகணேஷ் அங்கு வந்தனர். காலை நான்கு மணிக்கே விழாவுக்கு தேவையான பேட்சுகளை வாங்க வேண்டுமென்பதால் தலைவர் வீட்டுக்கு கிளம்ப,  கவிஞர் மதுமதி, "பட்டிக்காட்டான்" ஜெய், சீனு மற்றும் ரூபக் அங்கே வந்தனர். இரவு பத்தரை மணிக்கு மேல் ஆனபோதும் ஒவ்வொருவரும் பம்பரம் போல் சுழன்று கொண்டிருந்தனர். விழாவுக்கு மேடை அலங்காரம் செய்தவரும் ஒரு பதிவர் என்று கேட்டபோது "தமிழால் இணைந்தோம்" என்ற என் பாடல் வரிகள் பேக் கிரவுண்டில் கேட்டது. மணி பதினொன்றரை ஆனபோது என்னை நித்யா தழுவ ஆரம்பிக்க, சாரி நித்திரை தழுவ ஆரம்பிக்க மறுநாள் நேரடி ஒளிபரப்புக்குக்கு திரு.அகரனுடன் பிசியாக இருந்த சீனுவிடமும், பிளக்ஸ் போர்டு வாங்கிவிட்டு அப்போதுதான் உள்ளே நுழைந்த ரூபக்கிடமும் சொல்லிவிட்டு ஸ்கூல்பையனுடன் கிளம்பினேன்.

கம்பீரமான பேனர்..


                                      கோடம்பாக்கம் லிபர்டி தியேட்டர் அருகில் இருந்த நயாகரா ஹோட்டலில் அறை புக் செய்யப்பட்டிருந்தது. ( அந்த சொகுசு அறையை எங்களுக்கென ஏற்பாடு செய்து கொடுத்த அகிலா மேடத்துக்கு கோவைப் பதிவர்கள் சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.) அறையில் நுழையும் போதே "HBO" சேனலில் "தமிழ்ப் படம்" பார்த்துக் கொண்டிருந்த ஜீவாவிடம் சிறிது நேரம் "பேஷி"விட்டு கண்ணயர்ந்த போது மணி ஒன்று. மறுநாள் காலை ஆறு மணிக்கு புறப்பட்டு ஸ்கூல் பையன் சந்திப்பிற்கான வேலைகள் பார்க்கச் செல்ல, நாங்களும் புறப்பட்டோம். மூன்று உடைகள் மாற்றிய பின் கடைசியாக ஒரு நீல டி-ஷர்ட்டில் வெளியே வந்த ஜீவா, கலகுமரன், கோவை சதீஷ் ஆகியோருடன் காலை சிற்றுண்டி முடித்துவிட்டு (மதிய பிரியாணியை மனதில் கொண்டு கொஞ்சம் குறைவாகவே சாப்பிட்டோம்) அரங்கத்தை அடைந்தோம்.

"வாத்தியார் @ ரெமோ" பாலகணேஷ்

ராம்குமார், சீனு மற்றும் ஸ்கூல் பையனுடன் 

                                       வெளியே படு பிசியாக சுத்திக் கொண்டிருந்த ஆரூர் மூனா அண்ணாவை சந்தித்தேன். அவருடைய திரை விமர்சனங்களை விட அவர் படம் பார்த்த கதைகள் எனக்கு பிடிக்கும் என சொல்ல நினைத்து பின் அதை எப்படி ஏற்றுக் கொள்வாரோ என்று எண்ணி சம்பிரதாயமாய் கை மட்டும் குலுக்கிவிட்டு நகர்ந்தேன். "மெட்ராஸ் பவன்" சிவகுமார் அவர்களை சந்தித்த போது அவரிடம் நிறைய பேச நினைத்திருந்தும் ஏனோ அப்போது பேசவில்லை. வாசலில் வாத்தியார் ஏற்பாடுகளை மேற்பார்வையிட, தமிழ்வாசி பிரகாஷ் இங்கும் அங்கும் அலைந்து கொண்டிருந்தவரிடம் என்னை அறிமுகப்படுத்திக் கொண்டு உள்ளே நுழைய எத்தனித்த போது நுழைவாயிலில் ஒரு மேசையில் சீனு, சீனுவின் நண்பர் சக்தி, மற்றொரு நண்பர், சிவகாசிக்காரன் ராம்குமார், ரூபக் மற்றும் ஸ்கூல் பையன் ஆகியோர் அடங்கிய குழுவில் நான் என்னையும் ஐக்கியமாக்கி கொண்டு எழுத அமர்ந்தேன்.

                                                  பிரபல பதிவர்களுடன் ஆவி..

                                      ஒவ்வொரு பதிவர்களின் பெயரையும் தெரிந்து கொள்ள இதைவிட ஏதுவான வழி இல்லையென்று நினைத்தபடி எழுத ஆரம்பிக்க  இந்த பதிவர் சந்திப்பில் நான் பார்க்கத் துடித்த மிக முக்கியமான ஒருவர் அங்கே வர (எல்லோரையும் பார்க்க வேண்டியே அங்கு வந்தேன். இவரை வேறு சந்தர்ப்பங்களில் பார்ப்பது அரிது என்பதால்.. ) உளம் மகிழ்ந்து அவர் பெயரை என் கரங்களால் எழுதிக் கொடுத்துவிட்டு நான் என்னை அவரிடம் அறிமுகப் படுத்திக் கொண்டேன். சந்தோசமடைந்த அவர் தான் பத்திரமாய் வைத்திருந்த சென்ற ஆண்டு பதிவர் சந்திப்பில் தனக்கு அளிக்கப்பட்ட அடையாள அட்டையை காண்பித்துவிட்டு பெருமிதத்துடன் உள்ளே சென்றார். அவர் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் ..


தொடரும்..




47 comments:

  1. இனிமையான இச் சந்திப்பு என்றும் தொடர வாழ்த்துக்கள் சகோ .

    ReplyDelete
    Replies
    1. நன்றி சகோ.. நானும் அதைத்தான் வேண்டுகிறேன்..

      Delete
  2. தூங்காம இருந்த உங்க கடமை உணர்ச்சியைப் பார்த்தேனே.வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. ஆஹா, நீங்களே வாழ்த்திட்டீன்களா? சூப்பர்..

      Delete
  3. அருமையான பதிவு. எழுத்துலக நண்பர்களைச் சந்திப்பது என்பது எப்பொழுதும் கிடைக்காத அரிய நிகழ்வு. தொடருங்கள் தொடர்கிறேன்

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக.. இப்படி ஒரு சந்திப்பிற்க்காய் நேரம் ஒதுக்குவது பொதுவாக நிகழாத ஒன்று. அதே போல் விழாக் குழுவினருக்கு இவ்விடத்தில் நன்றி கூறிக் கொள்ள ஆசைப்படுகிறேன். இவ்வளவு பெரிய சந்திப்பை ஒருங்கிணைத்ததற்க்கு

      Delete
  4. விழா அரங்கத்தை அடைந்து விட்டீர்கள் போல! எந்தக் க்ளூவுமே தராமல் அவர் யார்னு கேட்டால் சம்பந்தப்பட்ட அவர் தவிர வேறு யாரால் பதில் தர முடியும் ஆவி? :)))

    ReplyDelete
    Replies
    1. க்ளு இருக்கு பாஸ்! அவரு மேடையில் சுய அறிமுகத்தின் போதும் தன் சென்ற ஆண்டு அடையாள அட்டையை காண்பித்தார்.. நினைவுக்கு வருகிறதா?

      Delete
  5. எல்லாமே சுவாரஸ்யம்.... திரும்பவும் நான் பழைய நினைவுகளுக்கு போன மாதிரி இருக்கு.... நான் உங்க கூட தானே இருந்தேன், யாரு அவரு? ஞாபகம் இல்லையே...

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஸ்.பை.. எழுதும் போது எனக்கும் அதே உணர்வுகள். ஆமா, உங்களுக்கும் அறிமுகப் படுத்தி வச்சேன். அவரு மேடையில் சுய அறிமுகத்தின் போதும் தன் சென்ற ஆண்டு அடையாள அட்டையை காண்பித்தார்.. நினைவுக்கு வருகிறதா?

      Delete
  6. ஒவ்வொரு வரியிலும் சந்தோச உற்சாகம்... ஆகா... தொடருங்கள் ஆவி...

    ReplyDelete
    Replies
    1. நன்றி DD. நான் கடைசியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே?

      Delete
    2. இல்ல DD. இவர் ஒரு மூத்த பதிவர்.

      Delete
  7. நேரடி ஒளிபரப்பு போல் சொல்லிட்டு வரீங்க நல்லாருக்கு நண்பா இடையிடையே மானே தேனே மாதிரி நகைச்சுவை எட்டி பார்ப்பது படிக்க இன்னும் சுவாரஸ்யமா இருக்கு

    ReplyDelete
    Replies
    1. நன்றிங்க சரவணன். நான் கடைசியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே?

      Delete
  8. இதற்கு தான் பதிவர் சந்திப்பு வேணும்ங்கிறது. அடுத்த முறை சந்திக்கும் போது இன்னும் நெருங்கி விடுவோம் ஆவி. எனது உருவம் தான் எனக்கு பலமும் பலவீனமும். நன்றி .

    ReplyDelete
    Replies
    1. அப்படியே ஆகட்டும் அண்ணே..

      //எனது உருவம் தான் எனக்கு பலமும் பலவீனமும். நன்றி .//

      எனக்கும் அப்படித்தான் அண்ணே.. சேம் பிஞ்ச்..

      நான் கடைசியா கேட்ட கேள்விக்கு பதில் சொல்லலியே?

      Delete
    2. நாம அப்படி இல்லையே நம்ப பக்கத்தில ஏன் நெருங்கி வரல..வேலையின் காரணமா மூட் அவுட்டோ

      Delete
  9. அவர் யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் ..
    //சீக்கிரமாக சொல்லுங்க..

    ReplyDelete
    Replies
    1. கொஞ்சம் வெயிட் பண்ணி பார்ப்போம் அக்கா. யாரும் சொல்லலைனா மாலையில் சொல்கிறேன்.

      Delete
  10. அன்பின் ஆவி - பதிவு நன்று - படங்களுடன் கூடிய கருத்துகள் - இரசித்து மகிழ்ந்தேன் - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
  11. நினைக்க நினைக்க மனம் குதூகலிக்கிறது. மீண்டும் அந்த பரவசங்களை அடைய ஆசைப்படுது!! பதிவர் சந்திப்பு மீண்டும் எப்போது?!ன்னு இப்பவே காத்திருக்க ஆரம்பித்து விட்டேன்.

    ReplyDelete
    Replies
    1. ஐ.. இந்த பதிவு எழுதும் போது சத்தியமா நானும் அதுதான் நினைச்சேன் அக்கா.

      Delete
    2. ஸ்...(இன்னும் )முடியலடா சாமி !

      Delete
  12. // புளங்காகிதமடைந்தேன்// அண்ணே புளங்காகிதம் A4 ஆ இல்ல A3 யா.. சொல்லுங்கண்ணே சொல்லுங்க

    //அடங்கிய குழுவில் நான் என்னையும் ஐக்கியமாக்கி கொண்டு எழுத அமர்ந்தேன்.// நீங்களும் ஜோதியில் ஐக்கியமாவீர்கள் என்று சற்றும் எதிர்பார்க்கவில்லை ஆவி.. காலத்தினால் செய்த உதவி... ;-)))))))))))

    முந்தின நாள் நிகழ்வுகள் அனைத்தும் என் நினைவுகளில் மீண்டும் வந்து சென்றது...

    அது யாருன்னு எனக்கு தெரியுமே எனக்கு தெரியுமே

    ReplyDelete
    Replies
    1. ம்.. அது A2 தம்பி. ( தாங்கலை உன் சேட்டை

      Delete
    2. நிறைய செய்யணும்னு நினைச்சு கடைசில ிவ்வளவு தான் முடிஞ்சது. :-(

      Delete
    3. தெரிஞ்சா சொல்லுப்பா.

      Delete
  13. உங்களின் ஆர்வம் கண்டு வியந்தேன் பாஸ் ... விழாக்குழுவினர் போல் நீங்களும் உங்களை இணைத்துக்கொண்டு செய்தமைக்கு மாளவிகா ரசிகர் மன்றம் சார்பாக நன்றிகள்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வருடம் நிச்சயம் விழா குழுவோட சேர்ந்து வேலை செய்வேன் நண்பா.

      Delete
  14. ஹ்ம்ம்...உங்களை எல்லாம் சரியாக கவனிக்க வில்லையோ என்று தோணுது . அடுத்த வருடம் வெயிட்டா கவனிச்சிடுவோம் .

    ReplyDelete
  15. என்னாது அடுத்த முறை ஆவியும் விழா குழுவிலா...?

    ReplyDelete
  16. என்னப்பா விடுகதை போட்டு ஒருத்தரும் சரியான பதில் சொல்லலையா? எனக்கும் தெரியல. அவர் அறிமுகத்தின் போது வெளியே பிஸி..பிஸி

    ReplyDelete
  17. // "மதகஜராஜா" சதீஷ் செல்லத்துரை // யாரு தமிழ் லைக் மீ என்னு (t-shirt) நெஞ்சுல எழுதி இருந்தவருதானே!

    ReplyDelete

  18. அப்பறம் அந்தப் பதிவர் யார் என்று எனக்கு தெரியுமே... உங்கள் அருகில் இருந்தல்லவா பார்த்தேன்... சொல்லட்டுமா ?

    ReplyDelete
    Replies
    1. சொல்லி இருக்கலாமே ரூபக்..

      Delete
  19. சுவையான பகிர்வு! உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி! அடுத்த விழாவில் இன்னும் சிறப்பாக செய்வோம்! யாரு அந்த மூத்த பதிவர்? தெரியலையே!

    ReplyDelete
    Replies
    1. நன்றி சுரேஷ்.. நிச்சயமா கலக்குவோம்.

      Delete
  20. அந்த மூத்த பதிவர் - "நம்ம" சுப்பு தாத்தா!!

    ReplyDelete
  21. இதை படிக்கும்போது மீண்டும் அந்த சுகமான நினைவுகள் வருகிறது, எல்லோரையும் சந்தித்தது மகிழ்ச்சி.


    பயங்கர சஸ்பென்ஸ் வைச்சு முடிச்சு இருக்கீங்க.....!! சீக்கிரம் அடுத்த பதிவு போடுங்க பாஸ் !

    ReplyDelete
  22. ரெமோவை இருட்டடிப்பு செய்த ஆவிக்கு கண்ட(ன)ங்கள் ...!

    ReplyDelete
  23. பிபாஷா பாசுவின் தம்பி..... என்னே ஒரு உவமை, உவமானம்....

    ReplyDelete
  24. சுவாரஸ்யமாக எழுதுகிறீர்கள். சுப்பு அவர்கள் காலையில் வந்துவிட்டு சீக்கிரம் கிளம்பி விட்டதால் என்னால் அவரை சந்திக்க முடியவில்லை.
    எல்லோரையும் போலவே நானும் அடுத்த சந்திப்புக்குக் காத்திருக்கிறேன்.

    ReplyDelete
  25. ரொம்ப தாங்க்ஸ் சுப்பு...! பி.சி.ஸ்ரீராம் ஸ்டில் படமெடுத்த மாதிரி ஆவியும் நைட் எஃபெக்ட்ல படமெடுத்துப் போட்டு ÔரெமோÕவோட இமேஜையே கவுக்கப் பாக்குறாரு.... இவரை ஆவியில்லாக் காட்டுக்குக் கடத்திட வேண்டியதுதான்!

    ReplyDelete
    Replies
    1. ஸார், அது ஒரு உலகப் புகழ்பெற்ற புகைப்படமாக்கும்.. ஹிஹி. தலைய திருப்பினா யார் வெளிப்படப்போறாங்க ங்கிற சஸ்பென்ஸ் இருக்கிற படம் (ரெமோவா, அந்நியனா, அம்பியான்னு)

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...