Saturday, September 21, 2013

ஆறு மெழுகுவர்த்திகள் - திரை விமர்சனம்

   


                            உலக சினிமா ரசிகனுடன் ஆங்கிலம், தமிழ், தெலுங்கு என பல மொழிப் படங்கள் ஒன்றாக பார்த்திருக்கிறேன்.. அவருடன் "ரெபெல்" என்ற தெலுங்கு படம் பார்த்த போது அதில் ஹீரோ ஸ்கார்ப்பியோ காரின் பானட்டில் தட்டியவுடன் அதன் நான்கு சக்கரங்களும் தெறித்து விழும். இந்தக் காட்சியைப் பார்த்தவுடன் அவர் கொஞ்சம் உணர்ச்சிவசப்பட்டு பார்த்தேன். அதன் பின்னர் படம் நெடுக அவர் வயலேன்ட்டானது இந்தப் படம் பார்த்து தான்.
       
                                அம்மா, அப்பா, அவர்களுக்கு ஒரே மகன். அந்த மகனை பாசம் வழிந்தோடும் அந்த முதல் பாடலுக்குப் பிறகு இவர்கள் பாசப் பிணைப்பை பார்க்க சகிக்காத யாரோ கடத்தி விடுகிறார்கள். அந்த சிறுவனை தேடி ஷாம் இந்தியா முழுவதும் சுற்றித் திரிந்து தவறு செய்யும்  ஆறு தீவட்டி தடியன்களை கொன்று மெழுகுவர்த்தி ஏற்றுகிறார். கடைசி நம்பிக்கையான கல்கத்தாவிலும் கிடைக்காததால் திரும்பி நடக்கும் ஷாமை அந்த சிறுவனே கண்டுபிடிப்பதுதான் கிளைமாக்ஸ்.

                                 முகவரி, தொட்டிஜெயா படத்திற்கு பின் என் பிரியப்பட்ட டைரக்டர் ஆகிவிட்ட துரை இயக்கிய படம் என்ற ஒரே காரணத்துக்காக இந்தப் படத்திற்கு சென்றேன். சென்ற பின்தான் தெரிந்தது, இது சாதாரண படம் அல்ல.. உலக சினிமா என்று. அதிலும் ஹீரோயின் பூனம் கவுர், சிரிக்கும் போதும் அழும் போதும் பல ஆஸ்கார்களை அள்ளிச் செல்கிறார். அவர் மட்டுமா, டிரைவர் ரங்காவாக வரும் கதாப்பாத்திரம், "நீ மகாடு ரா" என சீறும் தெலுங்கு வில்லன் யாதகிரி, மலையாள சேட்டன், கல்கத்தா கடத்தல்காரன், சமரசிம்மா ரொட்டி, சாரி ரெட்டி என பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

                                  இந்த லிஸ்டில் நீங்க ஷாம் பேர தேடுறது புரியுது. அவர் இந்தப் படத்தில் நடிக்கவில்லை.. ஆம், அந்த கதாப்பாத்திரமாகவே தேய்ந்திருக்கிறார்..இரண்டு கண்ணிலும்  கட்டெறும்பு கடித்த அன்று ஷூட்டிங் வைக்க வேண்டாம் என்று ஷாம் அவ்வளவு சொல்லியும் இயக்குனர் கேட்காததன் விளைவு படத்தில் தெரிகிறது. பின்னணி இசை அது இந்த படத்திற்கு தேவையான இம்சை. (ஆகாயம் பூமிக்கெல்லாம் பாடல் தவிர)

                                  தமிழ் மக்களின் மீது இயக்குனர் கொண்டுள்ள தார்மீக கோபம் புரிந்தவன் என்ற முறையில் சொல்கிறேன், இந்தப் படத்தில் மக்களை குழப்பும் பிளாக் காமெடிகள் கிடையாது, கூகிள் கூகிள் என்று தமிழ் கலாச்சாரத்தை கொல்லும் பாடல்கள் கிடையாது. இது கதையம்சமோ, சதையம்சமோ உள்ள படமும் கிடையாது. இது எதுவுமே இல்லையேன்னு மக்கள்  ஏமாந்துவிடக்கூடாதென்று இயக்குனர் இரண்டு ட்விஸ்டுகளை வைத்திருக்கிறார்.. இந்த தீபாவளிக்கு இந்தியத் தொலைக்கட்சிகளில் முதல் முறையாக வரும்போது அதை தவறாமல் பார்த்து விடுங்கள் மக்களே..
(மேலே உள்ள படத்தில் இருப்பது ஷாம் இல்லை.. படம் பார்த்து வரும் ஒவ்வொரு தமிழ் ரசிகனும்தான்)


டிஸ்கி: இந்த விமர்சனம் எழுத ஆரம்பித்தவுடன் இந்தப் படத்திற்கு பொருத்தமான படம் தேட கூகிளில் "6" என்று அடித்தேன். என்னுடையது தமிழ் பாண்ட்டில் இருந்ததால் அது "௬" என்று டைப்பியது.. இது இந்த விமர்சனத்திற்கு கிடைத்த பாராட்டின் குறியீடாய் எடுத்துக் கொண்டு முற்றுப் புள்ளி வைக்கிறேன்..



30 comments:

  1. /// இரண்டு கண்ணிலும் கட்டெறும்பு கடித்த அன்று ஷூட்டிங் வைக்க வேண்டாம் என்று ஷாம் அவ்வளவு சொல்லியும் இயக்குனர் கேட்காததன் விளைவு படத்தில் தெரிகிறது. ///

    ஹா...ஹா...ஆ.வி.யின் அக்மார்க் அட்டகாசம்.

    ReplyDelete
  2. /இது கதையம்சமோ, சதையம்சமோ உள்ள படமும் கிடையாது. இது எதுவுமே இல்லையேன்னு மக்கள் ஏமாந்துவிடக்கூடாதென்று இயக்குனர் இரண்டு ட்விஸ்டுகளை வைத்திருக்கிறார்../

    சூப்பர்.

    ReplyDelete
  3. அப்பறம்.. போன பதிவுல நய்யாண்டி டீச்சர்னு சொன்னீங்களே. அவங்களால ஏதாச்சும் பிரச்னையா? சொல்லுங்க மோதிப்பாத்துருவோம்.

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா ...!

      ஆவி இது உம்ம (ஸ்)பெல்லி(ங்) டான்ஸ் ...ஆஆஆஆஆ?

      Delete
    2. @சிவகுமார்- கண்டிப்பா பாஸ். உங்ககிட்ட சொல்லாமலா?

      Delete
    3. @ஜீவன்சுப்பு - யோவ், நான் டீசர்ன்னு தான் சொன்னேன்.. சிவகுமார் அண்ணாத்தே, சும்மா காமெடி பண்றாரு..

      Delete
  4. // ஷாமை அந்த சிறுவனே கண்டுபிடிப்பதுதான் கிளைமாக்ஸ்.// ஹா ஹா செம ட்விஸ்ட் போல

    //மேலே உள்ள படத்தில் இருப்பது ஷாம் இல்லை.. படம் பார்த்து வரும் ஒவ்வொரு தமிழ் ரசிகனும்தான்// ஹா ஹ மீ கிரேட் எஸ்கேப்

    ReplyDelete
    Replies
    1. @ ஆவி

      ஏன்யா இப்புடி கிளைமாக்ஸ்ச சொல்லலாமா ....? அட டிவி லே பார்த்தாலும் சுவராஸ்யம் இல்லாம போயிடுமே ....!

      @தி.கொ.போ.சீ ....

      லொள் ....!

      Delete
    2. @சீனு- அதுதான் ட்விஸ்டுன்னு மக்கள் நினைப்பாங்க.. ஆனா டைரக்டர் ட்விஸ்ட மல்லிசேரி பீடிக்குள்ள வச்சிருக்கார்.. ஆங்.. சொல்லிட்டனே..

      Delete
    3. @ஜீவன்சுப்பு - கவலைபடாதீங்க சுப்பு.. அந்தப் படத்துல பல "கிளை"மாக்ஸ் இருக்கு. அதனால ஒண்ணு தெரிஞ்சா பரவாயில்ல.

      Delete
  5. கொடுமையான படத்தைப் பார்த்தாலும் பொறுமையா விமர்சனம் எழுதும் ஆனந்துக்கு ஒரு வணக்கம்...

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் பெருமையா, இல்ல மேடம்.. கடமை.. சமூகக் கடமை!!

      Delete
  6. அய்யய்யோ... சாயங்காலத்துக்கு டிக்கட் புக் பண்ணிட்டேனே...

    ReplyDelete
    Replies
    1. அப்பாடா.. யான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம்.. ஒரு போன் பண்ணியிருக்கலாமே?

      Delete
  7. @ இஸ்கூல் பையன் --- நீர் கண்டிப்பா பார்த்தே ஆகோணும் . ஸ்கூல் படிக்குற புள்ளைங்க எல்லாம் எப்புடி சூதானமா இருக்கோணும்னு சொல்லீருக்காங்க்லாம் ...!

    ReplyDelete
    Replies
    1. ஹா ஹா.. அதை கேன்சல் பண்ணிட்டு யாயா வந்திட்டேன்....

      Delete
    2. அய்யோ அய்யோ ...! ஆவிட்ட இருந்து தப்பிச்சு பேய்கிட்ட மாட்ட போறியே ஸ்பை ....! விதி வலியது ....!

      Delete
    3. //அதை கேன்சல் பண்ணிட்டு யாயா வந்திட்டேன்....//

      யோவ்.. ஸ்கூல் உமக்கு இன்னைக்கு சனி உச்சத்துல இருக்கு.. இல்லேன்னா அத விட ஒரு கடிப் படத்துக்கு போவீரா??

      Delete

  8. நிஜமாகவே இப்படி ஒரு படம் வந்திருக்கிறதா ஆனந்தராஜா விஜயராகவன்? இது நிஜமான விமர்சனமா?

    ReplyDelete
    Replies
    1. ஆமாம் ஸ்ரீராம்.. நேற்று வெளியான படம்.

      Delete
  9. ஸ்ரீராம் சாருக்கே சந்தேகம் வந்து விட்டது ஆவி... வலைச்சர ஆசிரியரின் மகிமை...!!!!!@ ஹிஹி...

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. ஆவிய நம்புங்கப்பா..

      Delete
  10. அட... ஆவின்னோ ஆனந்துன்னோ கூப்புடாம பேரை முழுசாச் சொல்லிக் கூப்புட்டதுக்கே ஸ்ரீராமுக்கு ஒரு ஸ்பெஷல் பார்ட்டி தரணும் நீயி! இந்தக் கதைய இத்தினி வருஷமாப் படம் புடிச்சதுக்கு பேசாம ஏதாச்சும் ஒரு கென்யப் படத்தை சுட்டு துரை படம் எடுத்திருந்திருக்கலாம்...! என்ன இருந்தாலும் கோவை நண்பர்களின் தியாகம் மிகப் பெரியதப்பா... இப்படி எங்களைக் காப்பாத்தறதுக்காகவே சுடச்சுட படம் பாத்துட்டு(!) விமர்சனமும் எழுதிடறீங்களே...!

    ReplyDelete
    Replies
    1. // பேரை முழுசாச் சொல்லிக் கூப்புட்டதுக்கே ஸ்ரீராமுக்கு ஒரு ஸ்பெஷல் பார்ட்டி தரணும் //
      அட ஆமால்லே, படம் கொடுத்த சோகத்துல அத கவனிக்கல.

      Delete
    2. //பேசாம ஏதாச்சும் ஒரு கென்யப் படத்தை சுட்டு துரை படம் எடுத்திருந்திருக்கலாம்...!//

      ஹஹ்ஹா.. இந்தக் கதையவே இன்னும் சுவையா சொல்லியிருக்கலாம்ங்கிறது என் கருத்து..

      Delete
    3. // எங்களைக் காப்பாத்தறதுக்காகவே சுடச்சுட படம் பாத்துட்டு(!) விமர்சனமும் எழுதிடறீங்களே...!//

      உங்க கண்களும் வீங்கிடக் கூடாதில்லையா??

      Delete
  11. உண்மையான...தெளிவான விமர்சனம்

    ReplyDelete
  12. பொறுமையாய் பார்த்து எங்களை காப்பாற்றிய ஆவிக்கு நன்றி!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...