Tuesday, September 3, 2013

பயணத்தின் சுவடுகள்-11 (மனதை மயக்கும் மயாமி-1)



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 9;  தொலைவு: 11.

மனதை மயக்கும் மயாமி  (அமெரிக்கா)
( ப்ளாரிடா )


                                அமெரிக்காவின் தென்கிழக்கில் அட்லாண்டிக் கடற்பகுதியில் அமைந்துள்ள மிக நீண்ட கடற்கரைதான் மயாமி கடற்கரை. ப்ளாரிடா மாநிலத்தில் அமைந்துள்ள இந்த ஊர் பல்வேறுபட்ட மக்களையும்,கலாச்சாரங்களையும் கொண்டுள்ளது. 




                          நெடுந்தூரப் பயணம் செல்வதென்றால் அலாதிப் பிரியம் எனக்கு. அதுவும் மகிழுந்தில் செல்வது இரட்டிப்பு சந்தோசம். மயாமி பற்றி சிறு வயதில் படித்த ஞாபகம். ஒரு முறை அமெரிக்காவில் பெஞ்சில் இருந்த போது   (பெஞ்சுன்னா உட்கார்ற பெஞ்ச் இல்லீங்க. வேலையில்லாமல் இருக்கும் காலத்தை குறிக்கும் சிலேடை மொழி அது) நண்பர்களுக்கும் "லாங் வீக்கெண்டு" வர ( அரசு விடுமுறை வெள்ளி அல்லது திங்கள் வரும்போது அதோடு சேர்த்து ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விடுமுறை எடுத்தால் நான்கைந்து நாட்கள் கிடைக்கும். அதுபோன்ற சமயங்கள் தான் தொலைதூரப் பயணம் மேற்கொள்ள ஏதுவாக இருக்கும்) எங்காவது செல்லலாம் என்று முடிவெடுத்து கேன்சஸில் உள்ள நண்பன் ஜெயராஜுக்கு போன் செய்ய உற்சாகத்துடன் அழைப்பை ஏற்றுக் கொண்டு மயாமி செல்லலாம் என்றும் கூறினான். பதிலுக்கு நான் அவனிடம் வைத்த ஒரே கண்டிஷன் காரில் செல்ல வேண்டும் என்பது தான்.


மகிழுந்தில் மகிழ்ச்சியுடன்..

CeeJay...

                             நான் இருந்த சிகாகோ நகரத்திலிருந்து கேன்சஸ் சிட்டி சுமார் எட்டு மணி நேர தொலைவில் இருந்தது. அதுவும் மயாமி செல்லும் திசைக்கு எதிர் திசையில் இருந்தது. ( மேலுள்ள படம் பார்க்க ) எங்களுக்கிருந்த ஐந்து நாட்களில் முழுவதும் காரில் செல்வது உசிதமல்ல என உணர்ந்த நாங்கள் ஒரு திட்டம் வகுத்தோம். சிகாகோவிலிருந்து நானும், கேன்சஸிலிருந்து CJ (ஜெயராஜின் சுருக்கப் பெயர்) மற்றும் அவன் நண்பர் ஒருவரும் அட்லாண்டா வரை பிளைட்டில் வருவதென்றும், அங்கிருந்து வாடகைக் கார் பிடித்து மயாமி செல்வதென்றும். திரும்பி வரும் வழியில் நேரம் இருப்பின் அட்லாண்டா சுற்றிப் பார்ப்பதென்றும் முடிவு செய்தோம். பயண நாளுக்காக ஐ-போனில் தேதிகளை ஸ்வைப் செய்தபடி காத்திருந்தோம்.


புறப்பட தயாராகும் டெல்டா விமானம்..

                             பயணத் தேதியும் வந்தது. டெல்டா ஏர்லைன்ஸில் ஏறி அமர்ந்தேன். சற்று நேரத்தில் நாற்பதை கடந்திருந்த நதியா போன்ற ஒரு அம்மணி ட்ரிங்க்ஸ் கொண்டு வர ஆரஞ்சு பழச்சாறு மட்டும் (அட நம்புங்கப்பா!! ) வாங்கி குடித்துவிட்டு சற்று கண்ணயர்ந்தேன். (ஆமாங்க டெல்டா விமானத்தின் ஸ்பெஷாலிட்டியே லோக்கல் பிளைட்டிலும் டிரிங்க்ஸ் தருவார்கள்) முக்கால் மணி நேரத்தில் விமானம் தரை இறங்கியது.  அட்லாண்டா ஏர்போர்ட்டில் இறங்கியதும் வெதுவெதுப்பான கிளைமேட்டை உணர்ந்தேன்.. வருடத்தில் ஏழு மாதம் வெண் கம்பளம் விரித்தது போன்று பனி படர்ந்திருக்கும் சிகாகோ நகரத்திலிருந்து முற்றிலும் வித்தியாசமாக இருந்தது. எட்டு லேன் கொண்ட சாலையின் பிரமாண்டத்தை ரசித்தவாறே முன்பதிவு செய்திருந்த நிஸ்ஸான் வெர்சாவை ( வாடகை கார் ) எடுத்துக் கொண்டு அருகிலிருந்த மெக்டோனல்ட்சை அடைந்தேன். (அங்குதான் சந்திப்பதாய் ஏற்பாடு )


தரையிறங்கும் விமானங்கள்..

எட்டு வழிச்சாலை..கடவுள் பார்வையில். (நன்றி :உ.சி.ர )


                                 நான் வருவதற்கு அரை மணிநேரத்துக்கு முன்பே அங்கு வந்துவிட்ட CJ வும் அவன் நண்பர் ரஜினி உடன் மதிய உணவை முடிக்க  மற்றும் ஒரு நண்பர் அட்லாண்டாவில் வசிக்கும்  ஸ்ரீநி அங்கு வந்து சேர்ந்தார். அட்லாண்டாவிலிருந்து மதியம் மூன்று மணிக்கு  எங்கள் நிஸ்ஸான் புறப்பட்டது. எழுநூறு மைல் ( சுமார் ஆயிரத்து முன்னூறு கிலோமீட்டர் ) செல்ல வேண்டியிருந்ததால் காரை ஒவ்வொருவரும் இரண்டு மணி நேரம் ஓட்ட பின் இடையிடையே பிரேக் எடுத்தும் பயணித்தோம். சுமார் பதினோரு மணிக்கு சப்வேயில் இரவு உணவை முடித்துவிட்டு ரஜினி வண்டியை எடுக்க முன்சீட்டில் நானும் மற்றவர்கள் பின்னிலும் அமர வண்டி புறப்பட்டது.


நண்பர் ரஜினி..

                                ஆரம்பத்தில் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்த ரஜினி சற்று நேரத்தில் சடன் பிரேக்குகள்  இடுவதும், வளைவுகளில் சர்ரென்று திருப்புவதுமாக சென்று கொண்டிருந்தார். நான் சற்றே பயத்துடன் பின் சீட்டை பார்க்க இருவரும் புல்மீல்ஸ் சாப்பிட்ட கும்பகர்ணன் போல் தூங்கிக் கொண்டிருக்க திடீரென்று வண்டி ரோட்டிலிருந்து விலகி ஓரத்தில் இருந்த மரத்தை நோக்கி சென்று கொண்டிருந்தது.அப்போதுதான் கவனித்தேன் ரஜினியும் நித்திரையில் இருக்கும் நித்தியானந்தாவாக மாறி  இருப்பதை...

தொடரும்..


22 comments:

  1. பதிவர் சந்திப்பு பத்தி போடாம இதென்ன எப்பவோ போன ஊரை பத்தி எழுதுறது. பதிவர்களுக்கு உண்டான விதியை மீறிட்டதால உங்களை பத்து நாளுக்கு பதிவுலகத்தை விட்டு ஒதுக்கி வைக்குறேன். உங்க பிளாக்குக்கு யாரும் கமெண்ட் போடக்கூடாது, ஓட்டு போடக்கூடாது. நீங்க மட்டும் எல்லார் பிளாக்குக்கும் ஓர்ரும், கமெண்டும் போடலாம். இதான் தீர்ப்பு... எட்ற வண்டியை பசுபதி.

    ReplyDelete
    Replies
    1. யக்கோவ், கலக்குறீங்க...

      Delete
    2. அக்கா, இருக்கிற சரக்கெல்லாம் முகநூல்ல போட்டுட்டேன். பதிவெழுத நேரமாகும் என்பதால் ஆவியின் வாசகர்கள் என் படைப்புத் தீனி கிடைக்காமல் பசியால் வாடக் கூடாது என்பதால் முன்பே எழுதிய பதிவு ஒன்றைப் போட்டேன்.. இது வெறும் அப்பிடைசர் தான்.. மெயின் டிஷ் வருது..ஹிஹிஹி

      Delete
    3. அப்புறம், பசுபதிய நாங்க ஆள் வச்சு கடத்தி ரொம்ப நாள் ஆச்சு.. இன்னும் எவ்வளவு நாள் தான் அந்த ஓடாத வண்டியில உற்காந்துகிட்டு "எடுறா வண்டிய" ன்னு சொல்லிக்கிட்டு இருப்பீங்க??

      Delete
    4. ஐயோ சாமீ...! (சகோதரியின் தீர்ப்பு....!!!!)

      Delete
    5. அக்கா வர்றது மட்டும் பிளைட்ல...போறது மாட்டு வண்டியிலயா...

      Delete
    6. அக்கா தீர்ப்ப மாத்துங்க.. ஆவிய வேறு உலகத்துக்கு கடத்துங்க.

      Delete
    7. சசிகலா- சப்போர்ட்டுக்கு வர்றீங்கன்னு பார்த்தா, வேற உலகத்துக்கு கடத்தறதாம்.. கவுத்துடீங்களே?? :-)

      Delete
  2. ம்... நல்லா ஊர் சுத்தியிருக்கீங்க.... அப்புறம் என்னாச்சு?

    ReplyDelete
    Replies
    1. அதான் அக்காவே சொல்லிட்டாங்களே.. பதிவர் சந்திப்பு பதிவுக்கு அப்புறமா என்னாச்சுன்னு சொல்றேன்..

      நன்றி நண்பா..

      Delete
  3. கலக்கல் பயணக் கட்டுரை நன்றி சகோ

    ReplyDelete
    Replies
    1. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி சகோ..

      Delete
  4. ஓ ஹெலிகாப்டர் மற்றும் பறவையின் பார்வையை எல்லாம் கடந்து இப்போ கடவுளின் பார்வைக்கு போயாச்சா

    ஹா ஹா ஹா செம செம... எங்க போனாலும் எங்கியாது முட்டிகிறதே வேலையா போச்சுயா உமக்கு...

    ReplyDelete
    Replies
    1. உலக சினிமா ரசிகன் அவர்கள் சினிமா விமர்சனம் பேசும்போது அவ்வப்போது உபயோகப்படுத்தும் வார்த்தை அது..

      கடைசி வரிய சரியா படி அப்பு.. முட்டப்போகுதுன்னு தானே சொன்னேன்.. முட்டிடுச்சுன்னா சொன்னேன்.. நீங்களா முடிவு பண்ணிட்டா எப்படி?

      Delete
  5. அட மனதை மயக்கும் மாமி.....சாரி மியாமி ஆரம்பம் ஆயிடுச்சு.....அப்போ ஸ்விம் சூட் போட்டோ எல்லாம் உண்டா.... நான் உங்க போட்டோ கேட்கலை !!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா..பீச் பற்றி போட்டுட்டு ஸ்விம் சூட் இல்லாமலா..

      Delete
  6. கடவுள் பாய்ண்ட் ஆப் வியூ ஷாட் பற்றி எழுதும் போது என்னை குறிப்பிட்டதற்கு நன்றி.

    பயணக்கட்டுரையை திரில்லர் பாணியில் வடிவமைத்தது...அம்சம்.

    ReplyDelete
    Replies
    1. ஸார், சினிமா சம்பந்தப்பட்ட ஏராளமான தொழில்நுட்ப நுணுக்கங்கள் அறிந்த "நடமாடும் சினி டிக்க்ஷனரி" நீங்க தானே??

      கருத்துக்கு நன்றி ஸார்

      Delete
  7. machan...great effort and salute to your awesome memory and narration. koncham uppu, molaga, masala ellam thookalave irukkattum :), eagerly awaiting for other parts ..

    ReplyDelete
    Replies
    1. தேங்க்ஸ் மச்சான்..

      //koncham uppu, molaga, masala ellam thookalave irukkattum//

      அதுக்கென்ன, சுந்தர்.சி படம் மாதிரியே கொடுத்திடறேன்..

      பதிவர் மாநாட்டு பதிவை முடிச்சுட்டு அடுத்த வாரம் இதுக்கு வர்றேன் மச்சி..

      Delete
  8. அன்பின் ஆவி - பயணக்கட்டுரை நன்று - படங்களுடன் விளக்கமாகப் பதிவெழுதியது நன்று - நீண்ட நெடு நேரம் - நேரம் கெட்ட நேரத்தில் வண்டி ஒட்டுவதைத் தவிர்க்க வேண்டும். பாவம் ரஜனி - தூக்கக் கலக்கம் - ம்ம்ம்ம் - அடுத்த பதிவிற்குச் சென்று பார்க்கிறேன் - நன்று நன்று - நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    பி.கு : பெஞ்சில உக்காரது ஐ டி யிலே சகஜம் தானே

    ReplyDelete
  9. பயணத்துல ஆவியின் பயணங்கள் படிக்கப் படிக்க சுவாரஸ்யமாத்தான் இருக்குது!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...