Sunday, September 22, 2013

உலக சினிமா ரசிகனின் சூழ்ச்சி..!!

                             


                               சனிக்கிழமை காலை பத்து மணிக்கு உலக சினிமா ரசிகனிடமிருந்து போன். "ஆனந்த், யாயா போலாமா?" "கண்டிப்பா சார்." என்று சொல்லும் போது நான் அறிந்திருக்கவில்லை, வெள்ளியன்று "6" படத்திற்கு நான் கூட்டிச் சென்றதற்கு பழிவாங்கும் நடவடிக்கை என்று. நாங்கள் (மீ+ உ.சி.ரா + கோவை நேரம்) உள்ளே சென்று அமரும் போது பத்து நிமிட படம் ஓடியிருந்தது (நல்லவேளை!!)

                                  படம் பார்க்க ஆரம்பித்த பத்து நிமிடங்களிலேயே சனி என் தலையின் உச்சத்தில் நின்றிருப்பதை உணர முடிந்தது. சிவாவும் சந்தானமும் போட்டி போட்டு மொக்கை போடுகிறார்கள். இவர்களின் ஹீரோயின்களாக தன்ஷிகாவும், சந்தியாவும். பட போஸ்டரில் பவர் ஸ்டாரைப் பார்த்து எதற்கு ஒவ்வொரு படத்திலும் இவரைப் போடுகிறார்கள் என்று யோசித்தேன். ஆனால் இதில் பவர் வரும் அந்த பத்து நிமிடங்கள் தான் காமெடி ரிலீப்.

                                     இடைவேளைக்கு சற்று முன் மங்காத்தா அஜித்- அர்ஜுன் போல் புயல் காற்றுக்கு நடுவில் சண்டை போடுவது போல் சிவாவும் சந்தானமும் மோதிக் கொள்ளும் காட்சி. இந்தக் காட்சி முடிந்த பின்னும் புயல் காற்றின் சப்தம், திரும்பிப் பார்த்தால் அங்கே ஒரு அன்பர் நிம்மதியாக குறட்டை விட்டு உறங்கிக் கொண்டிருந்தார். நான் எங்க சார் படம் பார்க்க வந்தேன். வூட்ல பொண்டாட்டி தொல்ல தாங்கலே ன்னு தான் இங்க வந்தேன் என்பது போல் நிம்மதியாக உறங்கினார். ( விழித்து மட்டும் பார்த்திருந்தால் பொண்டாட்டி தொல்லையே எவ்வளவோ மேல் என்று உணர்ந்திருப்பார்.)

                                     சந்தானம் இந்தப் படத்தின் மூலம் பாதிக்கப்படப் போவதில்லை. ஆனால் தொடர்ந்து ஒரே மாதிரி படங்களில் நடித்து வரும் சிவா இனி மேலாவது ஜாக்ரதையாக கதை கேட்பது அவருக்கு  நலம் பயக்கும். தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் பீ கேர்புல் என்று என்னை நானே வார்ன் செய்துகொண்டு கிளம்பினேன். இனிமேல் தமிழ் சினிமாவிற்கே போவதில்லை என்ற முடிவையும் எடுத்தேன். அதாவது அடுத்த வெள்ளிக்கிழமை நஸ்ரியாவின் "ராஜாராணி" வெளியாகும் வரை.

12 comments:

 1. சந்தானமும்கூட இப்பல்லாம் திகட்ட ஆரம்பிச்சுட்டாருன்னுதான் எனக்குத் தோணுது ஆனந்து! காமெடி பண்றேன் பேர்வழின்னு நம்மை டிராஜடி பண்ற படங்கள் இப்பல்லாம் அதிகமாய்டுச்சு. என்னமோ யா, வாட் டு டூ யா?

  ReplyDelete
 2. நேற்று ‘அர்ச்சனாவில்’ நடத்தப்பட்ட கொடும் தாக்குதலில் நாம் உயிர் பிழைத்ததே... ‘பகார்டி பாக்கியத்தால்தான்’.

  ReplyDelete
  Replies
  1. அச்சச்சோ, இப்போ பதிவுக்கும் பழிவாங்கலா?? ;-)

   Delete
 3. /// பொண்டாட்டி தொல்லையே எவ்வளவோ மேல்... ///

  படம் எந்தளவிற்கு உள்ளது என்று புரிகிறது...

  ReplyDelete
 4. ஒரே மாதிரி படங்களில் நடித்து வரும் சிவா இனி மேலாவது ஜாக்ரதையாக கதை கேட்பது அவருக்கு நலம் பயக்கும்.

  கரெக்ட்

  இனிமேல் தமிழ் சினிமாவிற்கே போவதில்லை என்ற முடிவையும் எடுத்தேன். அதாவது அடுத்த வெள்ளிக்கிழமை நஸ்ரியாவின்
  "ராஜாராணி" வெளியாகும் வரை.

  அதானே பார்த்தேன்

  ReplyDelete
 5. /தியேட்டரை விட்டு வெளியே வந்ததும் பீ கேர்புல் என்று என்னை நானே வார்ன் செய்துகொண்டு கிளம்பினேன். இனிமேல் தமிழ் சினிமாவிற்கே போவதில்லை என்ற முடிவையும் எடுத்தேன்./

  Almost same blood...

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. நீங்களும் மாட்டிகிட்டீங்களா?

   Delete
 6. ஒரே மாதிரியான படங்களில் நடித்தும் இவர்கள் பண்ணும் கொடுமை தாங்க முடியல!

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...