"காலத்தினாற் படித்த போஸ்ட்டுகள் சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது"
எனும் ஆவியானந்தாவின் கூற்றுக்கிணங்க தாமதமாக படித்த ஒரு போஸ்ட்டின் காரணமாக தமிழுக்கே தீங்கிழைத்து விட்ட பாவி ஆகிவிட்டான் இந்த ஆவி.
அட ஆமாங்க, பதிவர் மாநாட்டுக்கு போலாம்னு நம்ம கோநேஜீ ட்ராவல்ஸ்ல புறப்பட்ட விஷயம் உங்களுக்கு தெரிந்ததுதான். அந்த வெள்ளிக்கிழமை நம்ம அவ்வைப் பாட்டியும் பழனியிலிருந்து பாதயாத்திரையா கோவை வரைக்கும் வந்து நம்ம ட்ராவல்ஸுக்காக வெயிட் பண்ணியிருக்காங்க. (இது பற்றிய பதிவை நம்ம சுப்பு தாத்தா எழுதியிருக்காரு..இங்கே 'கிளிக்'கவும்)
ஐந்து நாட்கள் கழித்து தாத்தாவின் பதிவை இப்போதான் படித்தேன். அவ்வை பாட்டியை அம்போன்னு விட்டுட்டு வந்துட்டனே.. தமிழுக்கு இழைத்த பெரும் கொடுமையல்லவா இது.. இனி நான் என் செய்வேன்.. முருகா நீதாம்பா, எனக்கு ஒரு வழி சொல்லணும்.. "என்னது, தாம்பரம் தான் ஒரே வழியா?' முருகா, உன் திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா??
சரி, நான் நம்ம சுப்பு தாத்தா கிட்டேயே கேட்டுக்கறேன்.. தாத்தா நீங்க சொல்லுங்க.. அவ்வைப்பாட்டிகிட்ட மட்டும் செல்போன் இருந்திருந்தா இப்படி நடந்திருக்காதே.. அச்சச்சோ, இப்ப நான் என்ன செய்யட்டும். எங்க போய் அவ்வை பாட்டியை தேடட்டும். ஒருவேளை பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் இருப்பாங்களோ, இல்லை வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் ஓய்வேடுப்பார்களோ? ஐயகோ இப்படி தமிழுக்கே தீங்கிழைத்து விட்டேனே, இந்த பாவம் தீர நீங்கதான் ஒரு வழி சொல்லுங்களேன்..
''அவ்வ்வ்வ்வ்...." வை பாவம்தான்! :)
ReplyDeletehaa haa ...!
Deleteஉங்க திருவிளையாடலுக்கு ஒரு அளவே இல்லையா...?
ReplyDeleteவாழ்த்துக்கள்... தொடர்க...
பதிவை விட முதல் படம் சூப்பர்... சுட்டு வச்சிக்கறேன்... பெச்புக்கில போட்டோ கமென்ட் போடா வசதியா இருக்கும்...
ReplyDelete:) :)
Delete//பெச்புக்கில போட்டோ கமென்ட் போடா வசதியா இருக்கும்...// Ha ha ha ...!
ReplyDeleteMr.Aviyaanantha ji kku Jey ...!
இருந்தாலும் நீர் இப்படி செய்திருக்க கூடாதுதான்! ஹா! ஹா!
ReplyDeleteரியல்லி... ஆவியானந்தாவோட படத்தை நானும் ரொம்பவே ரசிச்சேன். சூப்பர்யா!
ReplyDelete