ஆங்கிலத்தில் அவுட் ஆப் பாக்ஸ் என்று சொல்லப்படும் ஒரு வித்தியாசமான யுத்தியை ஏந்தி வெளிவந்த சூது கவ்வும் மக்கள் மனதையும் கவ்வியது. மூடர் கூடம் சற்றேறக்குறைய அதே ரகம்தான். இதுபோன்ற படங்களை ஹாலிவுட்டில் நாம் பார்த்திருக்கலாம். ஆனால் தமிழ் சினிமாவுக்கு ரொம்பவுமே புதுசு. இந்த வித்தை A மற்றும் B சென்டர் மக்களால் ரசிக்கப்படும். காமெடி, குத்துப்பாட்டு, மாஸ் ஹீரோக்கள் யாருமில்லாத இப்படத்தை C சென்டர் மக்கள் ரசிப்பார்களா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஒரு சின்ன விசிட்டிங் கார்டின் பின்புறம் எழுதிவிடக் கூடிய கதை. வாழ்க்கையில் பல்வேறு காரணங்களுக்காக துரத்தியடிக்கப்படும் நான்கு பேர் வழக்கம் போல் ஒரு மதுபானக் கடையில் ஒன்று சேர்கிறார்கள். முதலில் செய்யாத தவறுக்காக சிறை சென்ற அனைவரும் தங்களுக்கு இழப்பதற்கு ஒன்றுமில்லை என்ற பெரும் தைரியத்தை முதலீடாக கொண்டு ஒரு பைனான்சியரின் வீட்டில் அவர்கள் வெளியூர் சென்ற ஒரு தினம் திருட செல்ல, அவர்களோ தாமதமாக பயணிக்க எண்ண வேறுவழியின்றி அவர்களை வீட்டுக்காவலில் வைத்து பணம் பறிக்க முயல்கிறார்கள். இவர்களிடமிருந்து அந்தக் குடும்பம் தப்பிச் செல்ல முயல்கிறார்கள். அவர்கள் முயற்சி வென்றதா.. கடைசியில் வெற்றி பெறுவது யார் என்பதே மூடர் கூடம்.
இரண்டாம் பாதியின் சிறிய தொய்வைத் தவிர சிறப்பான திரைக்கதையுடன் களம் இறங்கியிருக்கிறார் நவீன். படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் ஹீரோவும் இவரே. இவருடன் சென்ட்ராயன், ரஜாஜ் மற்றும் குபேரன் பக்கபலமாக நடித்திருக்கிறார்கள். வழக்கம்போல் பாண்டிராஜின் எல்லா படங்களிலும் வரும் ஜெயப்ரகாஷ் இதிலும் கலக்குகிறார். ஓவியா ஒப்புக்கு சப்பா.. இவரது மம்மியாக வரும் அனுபமா ஷாருக், மோகன்லால் போன்ற பெரிய ஹீரோக்களுடன் நடித்தவர். தன் பாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.
ஒவ்வொருவருக்கும் ஒரு முன்கதை ( வீட்டிலிருக்கும் நாய் முதற்கொண்டு) ஆனால் ஒவ்வொரு முன்கதையிலும் ஒரு வித்தியாசத்தை புகுத்தி அத்துணை பிளாஷ்பேக்குகளையும் நாம் ரசிக்கும் வண்ணம் தந்திருப்பது சிறப்பு. இசை புதுமுகம் நடராஜன் சங்கரன், இன்னும் கொஞ்சம் உழைத்திருக்கலாம். இதுபோன்ற படங்களுக்கு பின்னணி இசை பக்கபலமாக இருக்க வேண்டும். மொத்தத்தில் மூடர் கூடம் நிச்சயம் மூடர்களுக்கான படம் அல்ல..
76 / 100
சிறியதாக இருந்தாலும் படத்தை பார்க்கலாமா வேண்டாமா என்கிற கேள்விக்கு நச்சென பதில் சொல்லியிருக்கும் பதிவு.. :-)
ReplyDeleteநன்றி ராம்குமார்..
Deleteபோகலாம் என்றாலும் காசு பணம் துட்டு மணி மணி நகி நகி.. அதனால் அப்புறமா பாத்துக்கலாம் ன்னு விட்டுட்டேன் ..
ReplyDeleteதயாரிப்பாளர் பாண்டி ராஜ் இல்லையா
இதுக்கதாம்லே அதிகமா வெளியில ஊர் சுத்தாத சுத்தாதுன்னு சொன்னது .. சொன்னா கேட்டாதானே ...
Deleteநல்ல விமர்சனம்... பார்த்திடுவோம்...
ReplyDeleteநல்ல விமர்சனம். ஆனா, நான் பார்க்க மாட்டேன். டிவில போடும்போது கூட!
ReplyDeleteசுவையான விமர்சனம்! சுருக்கமான விமர்சனம்! நன்றி!
ReplyDeleteவிமர்சனம் நறுக் தலைவரே
ReplyDeleteஎனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது இந்த படம்
ReplyDelete