ஆப்பிள் நிறுவனத்தின் தயாரிப்புகள் மற்ற கம்பெனிகளின் பொருட்களை விட ஏன் சிறந்தது? ஆப்பிள் வெளியிட்ட அனைத்து பொருட்களின் (லேப்டாப் நீங்கலாக) பெயர்களையும் கவனியுங்கள். எல்லா பெயரிலும் முன் நிற்கும் எழுத்து "i". இந்த i எனும் எழுத்து இந்தப் பொருட்களை உபயோகப்படுத்தும் ஒவ்வொருவரையும் குறிக்கும். "இது என்னுடையது என்ற பொருள் படும்படி பெயரிடப்பட்டது அது. அது மட்டுமா? அந்தப் பெயர்களில் முதலாவதாக வரும் 'i' சிறியதாகவும், அதன் பின் வரும் எழுத்து பெரியதாகவும் இருக்கும். (உதாரணம் iPhone, iPad, iPod ) எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் "தான்" (i) எனும் செருக்கு அற்றவனாக இருந்தால் தான் நல்லது என்பதை குறிக்கிறது. தான் சிறியதாக இருந்த போதும் அருகில் உள்ளவன் பெரிதாவதால் சந்தோசம் தவிர பொறாமை படுதல் ஆகாது எனவும் பொருள் கொள்ளலாம்.
மேற்கூறிய இரு விஷயங்களும் ஆப்பிளின் அனுமதியின்றி பிரசுரிக்கப் பட்டது என்றும் மேற்கூறிய தகவல்கள் பற்றிய அறிவு ஆப்பிளுடையது அல்ல எனவும் தெளிவு படுத்திக் கொள்கிறேன். சரி மேட்டருக்கு வர்றேன். நான் முதன் முதலாக வாங்கிய ஒரு ஆப்பிள் சாதனத்தை பற்றிய சம்பவத்தைத் தான் இவ்விடம் கூற விழைகிறேன். இந்த சம்பவத்தைப் படித்து முடிக்கும் போது இந்தத் தலைப்பு எவ்வளவு உண்மையானது என்பது உங்களுக்கும் புரியும்.
2006 இதே செப்டம்பர் மாதம் தான் எனக்கும் ஆப்பிளுக்கும் முதல் பந்தம் உண்டானது. ஆம், என் முதல் ஐ-பாட் வாங்கியது அப்போதுதான். ஐ-பாட் கிளாசிக் வகையை சார்ந்த அந்த சாதனம் எனக்கு மகிழ்ச்சி கொண்டு வந்தது என்று சொல்வதை விட அந்த ஐ-பாடினை கவர் போட்டு ஸ்க்ரீன் கார்டு போட்டு, என்கிரேவ் செய்து என்று ஒரு குழந்தையைப் போல் சீராட்டி பாராட்டி வளர்த்தேன் என்பதே சரி. நண்பர்கள் வெறும் mp3 பிளேயர்கள் வைத்திருந்த காலம் அது. என் ஐ-பாட் எனக்கு பெருமை சேர்த்தது என்பதில் ஐயப்பாடு ஏதும் இல்லை. காரில் செல்லும்போதும் வீட்டில் இருக்கும் போதும், அலுவலகத்திலும் இப்படி உறங்கும் நேரம் தவிர எல்லா நேரமும் என் வாழ்வில் அங்கம் ஆகிவிட்ட ஒரு நண்பன் அது.
எல்லா சந்தோஷங்களுக்கும் ஒரு "டாட்" வருமில்லையா.. அந்த ஐ-பாட்டின் வாழ்விலும் அது வந்தது. 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி ஆறு ஒரு உலக நுண்ணறிவாளர் தினத்தன்று அது வேலை செய்ய மறுத்தது. முதல் ஸ்க்ரீன் மட்டும் வருகிறது. வேறு அப்ளிகேஷங்களுக்குள் போக மறுக்கிறது. உள்ளே செல்ல முயலும் போது ரீ-ஸ்டார்ட் ஆகி மீண்டும் அதே ஸ்க்ரீனிற்கு வருகிறது. நுண்ணறிவாளர் தினத்தின் சந்தோஷத்தை கொண்டாட மனம் ஒப்பவில்லை. ஐ-பாட்டை தூக்கிக் கொண்டு ஆப்பிள் ஸ்டோரை நோக்கி ஓடினேன். அங்கே ஐ-பாட்டை பரிசோதித்த பணியாளன் "உங்க ஐ-பாட் வாரண்டி பீரியடான இரண்டு வருடத்தை தாண்டிவிட்டது." என்றான் "பரவாயில்லை, எனக்கு என் ஐ-பாட்டை சரி செய்து கொடுத்தால் போதும். எவ்வளவு செலவானாலும்(?!!) பரவாயில்லை என்று கூறினேன். என்னை ஒரு மணி நேரம் கழித்து வர சொல்லிவிட்டு அந்த பணியாளன் என் ஐ-பாட்டை உள்ளே எடுத்துச் சென்றான். அருகிலிருந்த என் நண்பன் "டேய், அதுக்கு நீ ஒரு புது ஐ-பாடே வாங்கியிருக்கலாம். இப்போ பில் தீட்டப் போறாங்க பாரு" என்றான். அதை கேட்ட பிறகு எனக்கும் அப்படி செய்திருக்கலாமோ என்ற எண்ணம் தோன்றியது.
இருந்தாலும் ஆவிக்கு ஒரு நாக்கு ஒரு வாக்கு என்பதால் கொடுத்தது கொடுத்ததாகவே இருக்கட்டும் என்று சொல்லி அருகிலிருந்த சப்-வே யில் உணவருந்திவிட்டு வேகமாய் ஆப்பிள் ஸ்டோருக்கு விரைந்தோம். அந்த பணியாளன் என்னைக் கண்டதும் அவன் நின்றிருந்த இடத்திலிருந்து வெளியே வந்து "சார்.. இந்த ஐ-பாட்டை சரி செய்யக் கொடுத்தது நீங்கதானே?" என்றான். நானோ "என் ஐ-பாட் இப்போ எப்படி இருக்கு, சரி ஆயிடுச்சா" என்று ஐசியு வில் கிடக்கும் பேஷண்டைப் பற்றி டாக்டரிடம் விசாரிப்பது போல் விசாரித்தேன். அதற்கு அவனோ "சார்.. உங்கள எங்க ஸ்டோர் மேனேஜர் மீட் பண்ண விரும்பறார்" என்றதும் என் மனதில் ஒருவித பயம் உண்டானது. இருந்தாலும் என் நண்பன் உடனிருக்கும் தைரியத்தில் உள்ளே சென்றேன்.
உள்ளே சென்ற என்னை தன் இருக்கையிலிருந்து எழுந்து வந்து காலியாக இருந்த ஒரு இருக்கையில் அமர்த்தினார். என் நண்பனையும் அமரப் பணித்தார். பின் அவர் இருக்கையில் அமர்ந்து தன் மேசை மீது வைக்கப்பட்டிருந்த என் ஐ-பாட்டை கையில் எடுத்து ஒரு முறை பார்த்தபடியே என்னை நோக்கி " எங்க ஐ-பாட் வகையிலேயே இதுவரை இதுபோன்ற பிரச்சனை வந்ததே இல்லை. எங்க பணியாளர்கள் எவ்வளவோ முயற்சித்தும் இதை சரி செய்ய முடியவில்லை. இது போன்ற தவறுகள் உங்களை எவ்வளவு வேதனைப் படுத்தும் என்று நாங்கள் அறிவோம்" என்று கூறிக் கொண்டிருக்கும் போதே நிலைமை புரிந்து நான் "பரவாயில்ல சார்.." என்று சொல்வதற்குள் தன் மேசைக்குள்ளிருந்து ஒரு புதிய ஐ-பாட் (அதே வகை) ஒன்றை எடுத்து "சிரமத்துக்கு மன்னிக்கவும்" என்று சொல்லி என் கைகளில் கொடுக்க நான் திக்குமுக்காடிப் போனேன்.. நண்பனின் கண்களிலும் காதுகளிலும் மெலிதான புகைமண்டலம்..
*********************
(i) எனும் விளக்கத்தை அவரும் மிகவும் உணர்ந்தவராக இருப்பாரோ...?
ReplyDeleteஅப்படித்தான் போலே.. ரொம்ப நாளா எழுத நினைச்ச பதிவு இது.. நன்றி DD
Deleteஜாக்பாட் ஐபாடா மாறி ஆவிக்கு கிடைச்சுது போல!!
ReplyDeleteஅதென்னமோ தெரியல அக்கா, ஆவிய பார்த்ததுமே பயந்துடறாங்க போல.. ஹஹஹா..
Deleteபடம் சரியில்லையென்றால் பணத்தை திருப்பி கொடுத்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்!
ReplyDeleteஆஹா, அப்படி கிடைச்சா அத வச்சு ஒரு புது ஐ-போனே வாங்கிருப்பேன்..ஹஹஹா
Deleteஎங்களுக்கும் இங்க புகை வர்றது உங்களுக்கு தெரியுதா ?! :-)
ReplyDeleteஹஹஹா.. நல்லா வரட்டும் நல்லா வரட்டும்.. அதுக்க்காகத்தானே போட்டோம்.. :-)
Deleteதன் மேசைக்குள்ளிருந்து ஒரு புதிய ஐ-பாட் (அதே வகை) ஒன்றை எடுத்து "சிரமத்துக்கு மன்னிக்கவும்" என்று சொல்லி என் கைகளில் கொடுக்க நான் திக்குமுக்காடிப் போனேன்.. நண்பனின் கண்களிலும் காதுகளிலும் மெலிதான புகைமண்டலம்..
ReplyDeleteபுகைமண்டலத்தின் நடுவில் கனவுக்காட்சியோ ..!
புது ஐபாடுக்கு வாழ்த்துகள்...!
கனவு இல்லை அம்மா நிஜம் தான்.. நன்றி அம்மா!
Deleteபார்ரா ...! வர வர ரெம்ப யோசிக்குறீங்க ஆவி பாஸ் ...!
ReplyDeleteயப்பா சுப்பு, இது நிஜமா நடந்தது..
Deleteஎன் கைகளில் கொடுக்க நான் திக்குமுக்காடிப் போனேன்.//அதானே பார்த்தேன்.தலைப்பை தம்பி ஏன் அப்படி வச்சார்ன்னு..:0
ReplyDeleteபொருத்தமா இருக்கனுமில்லே.. நன்றி அக்கா..
Deleteவாரண்டி காலத்தைக் கடந்தும் எப்படி மாற்றித் தருகிறார்கள்? சரிசெய்து தர முடியாததாலா?
ReplyDeleteஸ். பை - உங்களுக்கும் லைட்டா புகை வர்ற மாதிரி தெரியுது.. ஹிஹி.. ஆப்பிள் அப்படித்தான்.. அவர்களுக்கு கஸ்டமர்ஸ் ரொம்ப முக்கியம். இதேபோல் இன்னொரு நண்பனுக்கும் மாற்றிக் கொடுத்தார்கள்.
Delete//என் ஐ-பாட் எனக்கு பெருமை சேர்த்தது என்பதில் ஐயப்பாடு ஏதும் இல்லை. // அடடா !
ReplyDelete// இருந்தாலும் ஆவிக்கு ஒரு நாக்கு ஒரு வாக்கு // ஆவிக்கு கால் இருக்காது, நாக்கு இருக்குமா ? ஹி ஹி ஹி
பழசுக்கு புதுசா, இது போல் ஒரு சம்பவம் என் நண்பனும் சொல்லியதுண்டு.
ஆவிக்கு கால் கிடையாதுன்னு இரண்டாவது படிக்கும் சின்ன குழந்தைக்கு கூட தெரியுமே.. 'ஆ' பக்கதுலையோ 'வி' பக்கத்துலையோ கால் வராது ரூபக்கு!! :-)
Deleteபழசுக்கு புதுசு மட்டுமல்ல.. இன்னும் பல கதைகள் இருக்கு. கொஞ்ச கொஞ்சமா சொல்றேன். இந்த பதிவ எழுதனும்னு ரொம்ப நாளா யோசிச்சு ரூபக் ஸ்மார்ட் போன் வாங்கறேன்னு சொன்னதுக்கப்புறம் தான் சீக்கிரம் எழுத தோணித்து. அதுக்கு உனக்கு தான் ஒரு தேங்க்ஸ்..
Deleteஅருமை சகோ!..
ReplyDeleteஉங்களுக்கு உண்மையில் அதிர்ஷ்டம் தான்.
இங்கு வெளிநாடுகளிலேயே இயன்றவரை முயன்று அதன்பின் புதியதைத் தருவார்கள் அப்படியிருக்க உங்களுக்கு இப்படி...:)
ஒருவேளை உங்க பெயரை ஆவின்னு கேட்டதாலோ... பயந்து தந்திருப்பார்கள்!...:)
நல்ல பகிர்வு வாழ்த்துக்கள்!
அதிர்ஷ்டம் இல்ல இளமதி .. அந்த இடத்துல யார் இருந்திருந்தாலும் கொடுத்திருப்பாங்க. நான் சொன்னதும் அமெரிக்காவில் நடந்தது தான்.. இங்கே கொடுப்பார்களா.. டவுட்டு தான்.. ஹிஹி..
Deleteபாஸ்,
ReplyDeleteஆப்பிள் மட்டும் அல்ல, 90% அமெரிக்க நிறுவனங்கள் இது மாதிரி தான் நடந்துக்குவாங்க என்பது என்னோட அனுபவம். ஆப்பிள் அவங்களில் ஒரு படி மேல. :):):) ஆப்பிள் புது ப்ரொடக்ட் ரீலீஸ் ஆகும் போது ரஜினி படம் முத ஷோ மாதரி கூட்டம் அள்ளும். சில தீவிர ரசிகர்கள் ரெண்டு நாள் முன்னாடியே போய் ஸ்டோர் வாசல்ல படுத்துகுவாங்க.
உண்மைதாங்க.. நிறைய அமெரிக்க கம்பெனிகள் நிச்சயம் இதுபோல் நடந்துக்கறாங்க.. ஆனா ஒரு சில கம்பெனிகள் விரட்டி அடிக்கறதும் உண்டு.. ஹிஹி.. நானும் என் ஐ-பேட் வாங்கும் போது பதினைந்து மைல்கள் பயணித்து காலை மூன்று மணியிலிருந்து கால்கடுக்க நின்று வாங்கினேனாக்கும் .. வருகைக்கு நன்றி ராஜ்!!
Delete'ஐ" எனும் எழுத்துக்குரிய விளக்கமும், உங்கள் ஐ-போட் க்கும் உங்களுக்கும் உள்ள பந்த்தஃதையும், ஒரு நாள் சொல்லிக்கொள்ளாமலே அடங்கிவிட்டதும், அதற்காக தாங்கள் பட்ட வேதனையும், வேதனையால் வந்த சோதனையும், சோதனையின் முடிவில் ஏற்பட்ட நன்மையையும், அதனால் நண்பருக்குள் எழுந்த புகைச்சலையும் எளிமையாக , சுவாரஷ்யம் குறையாமல் கொடுத்த விதம் அருமை சார்...
ReplyDelete?????ஆப்பிள் ஏன் சிறந்த்து???? ன்னு இப்போ புரிஞ்சு போச்சு....
ஆனால் ஏன் ஏதோ "தொழில்நுட்பத்துல" புகுந்து கலக்கி கட்டிருப்பீங்கன்னு நினைச்சு வந்தேன்.. படிக்க படிக்க ஏமாந்துட்டோமோன்னு ஒரு பீல் வரும்போதே... உங்களோட சுவாரஷ்யமான எழுத்து நடையில அதை மறக்கடிச்சிட்டீங்க...கடைசி வரைக்கும் ஒரே மூச்சுல படிச்சுட்டுத்தான் கமெண்ட் எழுத ஆரம்பிச்சேன்னா பார்த்துக்கோங்களேன்....!!!
சூப்பர் சார்.. !!!
நன்றி பழனி. தொழில்நுட்பம் பத்தி நல்லா எழுதற ஆட்கள் இருக்காங்க.,. எனக்கு அவ்வளவு பொறுமையில்லை.. நம்ம ப்ளாக்கர் நண்பன் அப்துல் பாசித் ரொம்ப நல்லா எழுதுவாரு. நமக்கு தெரிஞ்சதெல்லாம் கதைதான்.. :-) உங்க கருத்துக்கும்.. ரசனைக்கும் நன்றிகள் பல.
Deleteஇதே போலத்தான் என்னுடைய அனுபவமும் என்றால் ஆச்சரியபடுவீர்கள்.
ReplyDeleteநானும் ஆப்பிள் ஸ்டோருக்கு சென்று அந்த ஆப்பிளை காண்பித்தேன்.
அந்த மேனேஜர் அதை மேலும் கீழும் , இடது பக்கம், வலது பக்கம், சுற்றி எல்லாம் பார்த்து விட்டு,
ஒரு புது ஆப்பிள் ஒன்றை தந்தார்.
ஆஹா என்னே கருணை என்னே கஸ்டமர் கருத்து என சிலாகித்துக்கொண்டே
வீட்டுக்கு வந்ததும் முதற்காரியமாக,
அதை துண்டு போட்டு சாப்பிட்டு விட்டேன்.
but this is Himalayan apple.
சுப்பு தாத்தா
ஹஹஹா.. எதோ காமெடியா சொல்லப் போறீங்கன்னு தெரியும் ஆனா இதுதான்னு யூகிக்க முடியல.. சூப்பர் தாத்தா..
Deleteஆப்பிள் சாதனங்களின் அருமை, சொன்னால் புரியாது !
ReplyDeleteநீங்க சிவா ரசிகரா?? ஹஹஹா..
Delete//எவ்வளவு பெரிய மனிதனாக இருந்தாலும் "தான்" (i) எனும் செருக்கு அற்றவனாக இருந்தால் தான் நல்லது என்பதை குறிக்கிறது.// ஆப்பில் கம்பெனி காரன் கூட இப்பிடி யோசிச்சி இருக்கமாட்டான் :-)
ReplyDeleteஹஹஹா.. அவனுக்கு இதெல்லாம் யோசிக்க எங்க சார் நேரம்??
Deleteஆப்பிளை யாரு கடிச்சது ...சந்தேகம் ?
ReplyDeleteஇந்தக் கேள்விய என்னப் பார்த்து ஏன் சார் கேட்டீங்க?? ;-)
Deleteஉண்மைதான் சார்..
ReplyDeleteSir am a sincere folllower of android n stayed away from apple since its expensive but after reading ur blog I really got goose bumps
ReplyDelete