Friday, September 6, 2013

வருத்தப்படாத வாலிபர் சங்கம் - திரை விமர்சனம்

                         


                           நீண்ட நெடுநாட்களாய் பன் (FUN) சினிமாஸின் அட்ராசிட்டிகளை பட்டியலிட்டு ஒரு பதிவிட வேண்டும் என்ற என் துடிப்பு இன்று மீண்டும் அதிகரித்தது. அதை மற்றொரு பதிவில் விரைவில் வெளியிடுகிறேன். சரி நம்ம படத்துக்குள்ள போவோம். நான் இந்தப் படத்தப் பார்க்க முக்கிய காரணம் எனக்கு ஒரு ரகசியம் தெரிந்ததினால் தான். அது என்னன்னா இந்தப் படத்துக்கு வசனம் எழுதினது இயக்குனர் ராஜேஷ். (ஆமாங்க, நம்ம SMS, OkOk படங்களை இயக்கியவரே தான்). முதல் காட்சியில் நிலவில் வருத்தப்படாத வாலிபர் சங்கத்தின் ப்ளெக்ஸ் வைத்திருப்பதை பார்த்து ஆர்ம்ஸ்டிராங் ஆச்சர்யப்படுவது நிச்சயம் இவர் சிந்தனையாக தான் இருக்கும்.


                              கதை என்னன்னா சிலுக்குவார்ப்பட்டி கிராமத்துல ஒரு பெரும்பணக்காரர் சிவனாண்டி (சத்யராஜ்) அவருக்கு மூணு பொண்ணுங்க. அதே ஊருல வெட்டியா ஒரு சங்கம் வச்சு சுத்திகிட்டு திரியற ரெண்டு பேரு போஸ்பாண்டி (சிவகார்த்திகேயன்) மற்றும் கோடி (சூரி). போஸ் ஸ்கூல் மிஸ் பிந்து மாதவியை காதலிக்க தூது அனுப்புவது சிவனாண்டியின் மூன்றாவது மகள் லதாபாண்டியை (ஸ்ரீதிவ்யா). ஒரு கட்டத்தில் லதா போஸை காதலிக்க தொடங்க, போஸும் அவரை காதலிக்க, இது சிவனாண்டிக்கு தெரிய வர தன் மகளை சுட்டுக் கொன்று தன் குடும்பப் பெயரை நிலைநாட்டுகிறார். இதற்கிடையில் துக்குணூண்டு ட்விஸ்ட். அது என்னன்னு சில்வர் ஸ்க்ரீன்ல பாருங்க.


                              சிவகார்த்திகேயன் தனக்கென தனி ட்ராக் போட்டு அதில் காம்பிடேஷனே இல்லாம கலக்குகிறார். அவ்வளவா டான்ஸ் தேவைப்படாத இந்தப் படத்தில் நகைச்சுவையை அள்ளித் தெளிக்கிறார். குறிப்பாக பிந்து மாதிவியின் காதல் தோல்வியடையும்போது இவருடைய ரியாக்சன் பிரமாதம். சத்யராஜின் துப்பாக்கியை திருடி செய்யும் சேட்டைகள் நல்ல நகைச்சுவை. சூரி நல்ல பக்கபலம். கல்யாண வீட்டிலும், சத்யராஜ் கட்டிவைத்து உதைக்கும் போதும் நம்மை கிச்சுகிச்சு மூட்டுகிறார். நாயகி ஸ்ரீதிவ்யா சிறப்பாய் வர வாய்ப்பு இருக்கிறது. சிவகார்த்திகேயன் சொல்வது போல் "ஸ்கூல் ட்ரெஸ்ஸில் சுமாராக இருக்கும் இவர் சேலையில் சிலுக்குவார்பட்டியையே  கலக்குகிறார்.


                                இமான் இசையில் சிவகார்த்திகேயன் பாடிய "வருத்தப்படாத வாலிபர் சங்கமும்", "ஊதா கலரு ரிப்பனும்" அருமை. பின்னணி இன்னும் கொஞ்சம் பெட்டராக இருந்திருக்கலாம். இயக்குனர் பொன்ராம் ராஜேஷின் வசனத்தில் சுகமான சவாரி செய்கிறார். சத்யராஜின் நடிப்பு அமிதாப்பை நினைவுபடுத்துகிறது. மனிதர் அசால்ட்டாக வந்து போகிறார். அதுவும் கிளைமாக்சில் கலக்கல் நடிப்பு. மொத்தத்தில் இந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் எல்லா வயதினரும் வயிறு குலுங்க சிரித்து விட்டு வரலாம்.76 / 10019 comments:

 1. துக்குணூண்டு ட்விஸ்ட்...! பார்த்துடுவோம்... நன்றி...

  ReplyDelete
 2. சுருக் விமர்சனம்.

  ReplyDelete
  Replies
  1. நன்றி தேவா.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

   Delete
 3. அழகான விமர்சனம்..ஆரோக்கியமான விமர்சனம்...!

  ReplyDelete
  Replies
  1. நன்றி தங்கம் பழனி.. வருகைக்கும் கருத்துக்கும் நன்றி..

   Delete
 4. கூட பயணிக்க நாங்க ரெடி ...!!!
  சேந்துடோம்ல ...

  ReplyDelete
  Replies
  1. வாங்க மேடம்.. நம்பி பயணம் செய்ய வந்துட்டீங்கள்ல.. கவலைய விடுங்க.. ஆவியை நம்பினோர் கைவிடப்படார்!!

   Delete
 5. உண்மையில் நன்றாக இருக்கிறதா? பாடல்கள், அவ்வப்போது தலைகாட்டும் காட்சிகள் எதுவுமே பார்க்க வேண்டும் என்று தூண்டவில்லையே!
  நீங்க சிவகார்த்திகேயனின் விசிறியோ?

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா, இல்ல மேடம்.. எனக்கும் பாடல்கள் படம் பார்க்கும் முன் வரை பிடிக்கவில்லை. படம் பார்த்த பின் தான் பிடித்தது.

   Delete
 6. அந்த ஹீரோயின் அழகா இருக்கறதா ஸ்டில் பாக்கறப்பவே தோணிச்சு. படமும் அதிகம் அலட்டிக்காம சிரிக்க வெக்குதுன்னு இப்ப தெரியுது. ஆனாலும்... ஆவிக்கு ரொம்பவே தாராள மனசுப்பா... 76ஆ?

  ReplyDelete
  Replies
  1. என்னை பொறுத்தவரை எந்தப் படம் மக்களை நல்லா என்டர்டையின் பண்ணுதோ அதுதான் சிறந்த படம். கண்டிப்பா இது மக்களை கொஞ்ச நேரமாவது அவர்கள் கவலை மறந்து சிரிக்க வைக்கும்.

   Delete
 7. Indha padam pathina positive comment ippo than parkuren... enakkum padam romba pidichathu..

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...