Monday, September 23, 2013

வெற்றி.. வெற்றி.. மாபெரும் வெற்றி!!


                        சென்ற மாதம் உலக சினிமா ரசிகன் அவர்களின் கோவை ‘பன் மால்’...அக்கிரமம்...அநியாயம்...அராஜகம். பதிவில் பன் மாலில் (Fun Mall) புட் கோர்ட்டில் பொதுமக்கள் குடிப்பதற்கு தண்ணீர் வைக்கவில்லை என்ற புகார் பதிவு செய்யப் பட்டிருந்தது.


                       இதன் பின்னர் இரண்டு வாரம் முன்பு ஒரு நாள்  நானும் அவரும் சென்றிருந்த போது மீண்டும் அதே போல் தண்ணீர் வைக்கப்படாமல் குடிப்பதற்கு பணம் கொடுத்து பாட்டில் தண்ணீரை பெறுமாறு அறிவுறுத்தப் பட்டோம். அங்கே இருந்த புகார்ப் புத்தகத்தில் உலக சினிமா ரசிகன் ஏற்கனவே கொடுத்த புகாரோடு சேர்த்து மீண்டும் ஒரு புகார் பதிவு செய்தோம். நேற்று செப். 22 அன்று அவ்விடம் சென்ற போது அங்கே பொதுமக்களுக்காக வாட்டர் ப்யுரிபையர் (Purifier) ஒன்று வைக்கப்பட்டிருந்தது. உடன் அந்த புகார்ப் புத்தகத்தில் இதை அவர்கள் கவனத்திற்கு கொண்டு வந்ததற்காய் நன்றி கூறியிருந்தனர்.


அப்பாடா, தண்ணி கிடைச்சிடுச்சி!!


                      நம் புகாருக்கு செவி சாய்த்து (கொஞ்சம் தாமதித்தாலும்) தண்ணீர் கொடுத்த பன் மாலுக்கு தமிழ்ப் பதிவர்கள் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேலும் இது நம் விடாமுயற்சிக்கு கிடைத்த வெற்றியாகவே கருதுகிறேன். இந்த அறப் போராட்டத்தை துவக்கி, செம்மையாக வழிநடத்தி வெற்றிக்கனியை பறித்த உலக சினிமா ரசிகன் பாஸ்கரன் சார் அவர்களையும் வாழ்த்துகிறேன்.,.


21 comments:

  1. அருமை, போராடி வெற்றியில் கிடைத்த தண்ணீர் சுவையாகத்தான் இருக்கும்......வெற்றி மேல் வெற்றி கிடைக்கட்டும் !

    ReplyDelete
    Replies
    1. சுவையா.. தித்திப்போ தித்திப்பு!!

      Delete
  2. ‘கேட்டால் கிடைக்கும்’.... என போராட்டத்திற்கு தக்க ஆலோசனை வழங்கிய கேபிள் சங்கருக்கும்...சற்று தாமதமாகவேனும் நம் கோரிக்கையை நிறைவேற்றிய ‘பன் மால்’ நிறுவனத்தாருக்கும் ‘கோவை பதிவர்கள்’ சார்பில் என் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

    ReplyDelete
  3. .....எனவே உ.சி.ர.வை பெருமைப்படுத்தும் பொருட்டு இன்று இரவுக்குள் அக்குடிநீர் தொட்டி மீது 'அய்யா குடிநீர்' ஸ்டிக்கர் ஒட்டிவிட்டு வருமாறு ஆவியை கேட்டுக்கொள்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. நல்ல ஐடியாவா இருக்கே??

      Delete
    2. அம்மா ஆட்சியில் ‘அய்யா குடிநீர்’ எப்படி?
      ‘பன் மால்’ பூட்டி சீல் வைக்கப்பட ரகசிய திட்டம் ஏதும் உளதா...சிவா?

      Delete
  4. அப்படியே ஒரு எட்டு “அங்கிட்டும், இங்கிட்டும்” போய் பேசி பிரச்சனையை தீர்த்து தண்ணி கொண்டு வர ஆவி தலைமையில் ஒரு குழு அமைக்க சொல்லி ”அம்மா”க்கிட்ட ரெக்கமெண்டேஷன் பண்றேன்.

    ReplyDelete
    Replies
    1. அக்கா, "தண்ணி" பிரச்சனைன்னு சொன்னாலே முன்னாடி வந்து நிப்பாரு எங்க தல "ஜீவா" அண்ணாச்சி!!

      Delete
  5. வெற்றி தொடரட்டும்... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  6. கோவை பதிவர்கள் கலக்கறாங்கப்பா...வாழ்த்துக்கள் பாஸ்கரன் சார்...

    ReplyDelete
  7. கேட்டால் கிடைக்கும் என்பதை நிருபித்த கோவை பதிவர்களுக்கு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. விடா முயற்சி விஸ்வரூப வெற்றி ! வாழ்த்துக்கள் உலக சினிமா ரசிகன் :)

    ReplyDelete
  9. மிக நல்ல விஷயம் "கேட்டால் கிடைக்கும்" :-)

    ReplyDelete
  10. நல்லதொரு செயலை செய்தமைக்கு வாழ்த்துகள்.. இதுபோல மேலும் நல்ல பல செயல்களைச் செய்து வெற்றிப்பெற்ற என்னுடைய மனமுவந்த வாழ்த்துகள...

    நன்றி..!

    ReplyDelete
  11. தட்டினால் திறக்கும்...கேட்டால் கிடைக்கும் என்பது நிரூபனமாகியுள்ளது. good effort !

    ReplyDelete
  12. பின்னூட்டமிட்டு ஆதரவு அளித்த எல்லோருக்கும் நன்றி..

    ReplyDelete

  13. தமிழ்நாட்டுக்கு தண்ணீர் கொண்டு வர முடியல. ஆனா, நீங்க fun mall -க்கு தண்ணீர் கொண்டு வந்துட்டீங்க. (copy from தலைவா வசனம்)

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...