Tuesday, September 17, 2013

பயணத்தின் சுவடுகள்-12 (மனதை மயக்கும் மயாமி-2)



பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 9;  தொலைவு: 12.

மனதை மயக்கும் மயாமி  (அமெரிக்கா)
( ப்ளாரிடா )

பகுதி 1 படிக்க..

                           பாதை மாறி சென்று கொண்டிருந்த காரின் ஸ்டீயரிங்கை நான் எட்டிப் பிடித்து திருப்ப, அதற்குள் ரஜினியும் விழித்துவிட கார் மீண்டும் ரோட்டில் சென்றது. அருகில் இருக்கும் பெட்ரோல் பங்க்கில்  நிறுத்த சொல்லிவிட்டு பின்னால் திரும்பி பார்த்த போது இவ்வளவு கலவரத்திலும் கண்ணுறக்கம் கலையாமல் இருந்தனர் இருவரும். பெட்ரோல் பங்க்கில் வண்டியை நிறுத்திய போது பாதி தொலைவு தான் கடந்து வந்துள்ளோம் என தெரிந்தது. அடுத்து வண்டியை நான் ஒட்டுவதென தீர்மானித்து நான்கு ரெட்-புல்களும் தண்ணீர் பாட்டில்களும் வாங்கி நிரப்பிக் கொண்டு பயணம் தொடர்ந்தது.




                           இரவு நேரம் ட்ராபிக் அதிகம் இல்லையென்றாலும் அதிகபட்ச வேகத்திற்கு மேல் சென்றால் அந்நேரத்திலும் காவல் நண்பர்கள் வரும் அபாயம் இருந்ததால் காரின் க்ரூசரில் ( அதிக திருப்பங்கள் இல்லாத ஹைவேயில் செல்லும் போது நாம் ஒரு குறிப்பிட்ட வேகத்தை செட் செய்து விட்டால் ஆக்சலரேட்டரிலிருந்து காலை எடுத்து விடலாம். வேகம் கூட்டவும் குறைக்கவும் ஸ்டியரிங்கிலேயே வசதி இருக்கும். பிரேக் அழுத்தும் வரை வண்டி  அதே வேகத்தில் போய்க்கொண்டிருக்கும்) அதிகபட்ச வேகத்தை செட் செய்துவிட்டு ரகுமானின் ராகமழையில் நனைந்தபடி ஓட்டினேன். காலை நாலரை மணிக்கு மயாமி  வந்து சேர ஏற்கனவே பதிவு செய்திருந்த ஹோட்டலில் உறங்க சென்றோம்.



                              காலையில் பத்து மணி சுமாருக்கு எல்லோரும் தயாராகிவிட மயாமி நோக்கி பயணமானோம். நகர எல்லைக்குள் நுழையும் போதே அய்யனார் சாமி போல் வீற்றிருப்பது டோல் கேட் (Toll Gate ). ஒவ்வொரு சுற்றுலா தளத்துக்கு செல்லும்போதும் இதை கடக்க வேண்டும் என்பதாலும், கட்டபோம்மனே கிராஸ் செய்தாலும் வரி கட்ட வேண்டுமென்பதாலும், இங்கே வசூலிக்கப்படும் சுங்க வரி கொஞ்சம் அதிகம் என்பதாலும் (சுமார் 12 டாலர்கள்.) மக்களின் சலிப்பை காணலாம். அதையும் தாண்டி வழிநெடுக வளர்ந்திருந்த பனை மரங்களின் ஊடே உலகப் புகழ்பெற்ற மயாமி கடற்கரையை அடைந்தோம்.





                             உள்ளே நுழையும் போதே தூரத்தில் தெரிந்த நீலக் கடல் (White Sand  Sea என்பதால் எங்கு நோக்கினும் நீலமயமாக) மற்றும் வண்ணமயமான, "கண்களுக்கு குளிர்ச்சியான" சுற்றுப்புறமும் மனதுக்குள் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது. 


 எழில் கொஞ்சும் மயாமி

சைக்கிள் மட்டுமா கவுந்து கிடக்கு?





மண்ணை தின்னும் அமெரிக்க கண்ணன்..

 ஹிப்னாடிசத்தால் தண்ணீர் பாட்டில் காற்றில் நிற்கும் மாயம்!


கடலுக்குள் மோட்டார் ரைட்

க்ரூஸ்,  அக்வா ப்ளோட்

பாரா செய்லிங், 

 கடற்கரையில் வீடு கட்டி!!

மணலுக்குள் புதைந்து விளையாடும் சிறுவர்கள்..


                               மயாமி  கடற்கரை நார்த் பீச்,சவுத் பீச் என இரு கடற்கரைகளாய்  பிரிக்கப்பட்டுள்ளது. இதுவரை பார்த்தது சவுத் பீச்..அடுத்த பதிவில் நார்த் பீச் சென்று பார்ப்போமா?

தொடரும்..



41 comments:

  1. //உள்ளே நுழையும் போதே தூரத்தில் தெரிந்த நீலக் கடல் (White Sand Sea என்பதால் எங்கு நோக்கினும் நீலமயமாக) மற்றும் வண்ணமயமான, "கண்களுக்கு குளிர்ச்சியான" சுற்றுப்புறமும் மனதுக்குள் கிளுகிளுப்பை ஏற்படுத்தியது.//

    நல்லா இருக்குய்யா... உங்க profile படம் இங்க எடுத்ததுதானா?

    கடைசி படத்தில் மணலுக்குள் புதைந்து விளையாடும் சிறுவர்களை ரசித்தேன்....

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஸ்.பை. அந்த profile படம் மயாமில எடுத்தது தான்.

      //கடைசி படத்தில் மணலுக்குள் புதைந்து விளையாடும் சிறுவர்களை ரசித்தேன்....//

      ஆமாமா.. நீங்க சிறுவர்களை ரசிக்க வேண்டி தானே அந்த போட்டோவ போட்டேன்.. ஹிஹி..

      Delete
    2. ஸ்பை அவர்களுக்கு இரண்டு கவிதைப் புத்தகம் பார்சல்

      Delete
  2. பாதை மாறி சென்று கொண்டிருந்த காரின் ஸ்டீயரிங்கை நான் எட்டிப் பிடித்து திருப்ப, அதற்குள் ரஜினியும் விழித்துவிட கார் மீண்டும் ரோட்டில் சென்றது.

    அபாயத்திலிருந்து த்ப்பியிருக்கிறீர்கள்..

    உற்சாகமான பயணப்பகிர்வுகள்..!

    ReplyDelete
    Replies
    1. ஒரு நிமிடம் நெஞ்சை பதற வைத்த நிகழ்வு அது. கருத்துக்கு நன்றி அம்மா!!

      Delete
  3. நண்பருடன் போட்டோவில் என்ன ஆராய்சி ?

    ReplyDelete
    Replies
    1. பாஸ், அந்த போட்டோ பார்த்தா தெரியலையா, நாங்க அத ஒப்புக்கு பார்த்துகிட்டு இருக்கோம்னு?

      Delete
  4. நான் கேள்விபட்ட தகவல் :

    மியாமி இந்தியர்கள் மெளமே பள்ளத்தாகில் இருந்து இடம் பெயர்ந்தவர்கள் (சிர்கா 1700) இவர்கள் ஓகியோ வில் பலம் பொருந்திய பூர்வ குடிகள். இந்தியானா,இல்லினாய்ஸ், தெற்கத்தி மெக்சிகன் பகுதிகளில் இந்திய பூர்வகுடிகள் வசிக்கிறார்கள். அவர்கள் பேசும் வட்டார மொழி இந்தியர்களை இனங்காட்டுகிறது.

    மியாமி... மையாமியா என்றால் தோஸ்துகள் ( அ) நட்புகள் சங்கமம்.

    ReplyDelete
    Replies
    1. நான் போன புதிதில் "இந்தியர்கள்" என்றதும் அவர்கள் இந்தியாவில் இருந்து வந்தவர்கள் என்று நினைத்தேன். அவர்கள் அங்கு வாழும் பழங்குடி இன மக்கள். அவர்களைப் பற்றிய தகவல் அளித்தமைக்கு நன்றி நண்பரே..

      Delete
    2. இன்னொரு தாழ்மையான வேண்டுகோள்.. அது இல்லினாய்ஸ் அல்ல.. இல்லினாய் (S சைலன்ட்..) என்னை வாழ வைத்த ஊர் என்பதால் அதை தவறாக உச்சரித்ததை சரி செய்தேன்.. தவறிருந்தால் மன்னிக்கவும்..

      Delete
  5. ஹிப்னாடிசத்தால் தண்ணீர் பாட்டில் காற்றில் நிற்கும் மாயம்! நம்பிட்டோம் :)

    ReplyDelete
    Replies
    1. எல்லாம் ஆவியோட வேலைங்க.. வேறென்ன சொல்ல.. ஹஹஹா

      Delete
  6. //அடுத்து வண்டியை நான் ஒட்டுவதென தீர்மானித்து//

    இதுவரைக்கும் உல்லாசப் பயணம்.. இனி அமானுஷ்யப் பயணம்

    //வழிநெடுக வளர்ந்திருந்த பனை மரங்களின் ஊடே // கவித கவித

    //சைக்கிள் மட்டுமா கவுந்து கிடக்கு?// சீ பேட் பாய்ஸ்...


    ஒரு சின்ன வேண்டுகோள் இப்படி ஒரு பதிவு எழுதும் போது பக்கத்தில் 18+ என்று போடவும்.. நான் எல்லாம் மிகவும் நல்ல பையன்.. என் மனம் சஞ்சலப் பட வாய்ப்புகள் அதிகம்...

    ReplyDelete
    Replies
    1. //நான் எல்லாம் மிகவும் நல்ல பையன்.. என் மனம் சஞ்சலப் பட வாய்ப்புகள் அதிகம்...//

      ஆமாமா சீனு ரெம்ப ரெம்ப நல்லவேன் ...!

      Delete
    2. //இதுவரைக்கும் உல்லாசப் பயணம்.. இனி அமானுஷ்யப் பயணம் //

      வாப்பா எங்க காலை வார ஆளைக் காணோம்னு பார்த்தேன்..

      Delete
    3. // சீ பேட் பாய்ஸ்... //

      வாங்கப்பு, நல்லா இருக்கீங்களா..

      Delete
    4. // என் மனம் சஞ்சலப் பட வாய்ப்புகள் அதிகம்...//

      பக்கத்துலையே, குழந்தைகள் படம் போட்டிருந்தேனே.. பாக்க வேண்டியத தவிர எல்லாத்தையும் பார்த்துபுட்டு பேச்சு வேற..

      Delete
  7. கடற்கரை பயண அனுபவங்கள் ரசிக்கவைத்தன! புகைப்படங்கள் மிகவும் சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  8. அன்பின் ஆவி - பயணக்கட்டுரை இரண்டு அருமை - புகைப்படங்கள் நன்று - தறி கெட்ட வண்டியினைக் கட்டுக்குள் கொண்டு வந்த செயல் நன்று - பெட்ரோல் பங்கில் நான்கு ரெட் ஃபுல்லா - அது சரி

    அதென்ன கார் மேலே போஸ் - நல்லாவே இருக்கு

    அப்புறம் அதிக பட்ச வேகத்தை செட் பண்ணிட்டு ஓட்டினீங்களாக்கும். ராக மழை வேறு - தூங்காம இருக்கவா - அப்படியும் பின்னாலே ரெண்டு பேரு தூங்கி வழிஞ்சாங்க போல இருக்கு

    அங்கேயும் டோல் கேட்டா ? இதென்ன அனியாயம் - கடற்கரைக்குப் போறதுக்கு டோலா - அநியாயம்.

    பனை மரத்துக்கு நடுவே ரோடா - சூப்ப்ப்ப்ப்ப்ப்பர் படம்

    நீலக் கடல் - வண்ண மயமான - கண்ணுக்குக் குளிர்ச்சியான - மனசுக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்திய கடற்கரை.

    ஆமா கடல இரசிச்சீங்களா ? இல்ல படத்துல இருக்க மாதிரி மத்த கிளுகிளுப்பெல்லாம் இரசிச்சீங்களா

    கவுந்து கிடந்த சைக்கிள நிமித்தாம மத்த கவந்து கெடந்ததெல்லாம் பாத்தீங்களாக்கும்

    ரெண்டு பேரும் காமெராவ அப்படிப் பாக்கௌம் போதே தெரியுதே - யாரோட ஃபோட்டொன்னு - பின்னாடி மூணு பேரு ஃபோஸ் குட்த்துருக்காங்க போல இருக்கு....

    தாவாங்கொட்டையிலே கைய வச்சிக்கிட்டு என்னத்த அப்படி இரசிக்கறேங்க

    அடப் பாவிங்களா - அங்கேயும் புள்ளைங்க பீச்சு மண்ணைத்தான் திங்குறானுங்களா

    ஹிப்பனாடிசம் - காதுல பூவு

    கடலுக்குள்ள ரைடு - பின்னாடி வரதுல பின்னாடி நிக்கறது யாரு

    க்ரூஸ் அக்வா ஃப்ளோட் பாராசூட் செய்லிங் - சூப்பரோ சூப்பர்

    வீடி கட்டி மணலுக்குள் புதைந்து விளையாடும் மழலைகள் சூப்பர் - ஆமா கடசிப் படம் குழந்தைகளத்தான் எடுத்தீங்களா

    சரி - அருமையான் பதிவு - படங்கள் அனைத்தும் சூப்பர் - நல்லா அனுபவிச்சு எழுதி இருக்கீங்க

    அடுத்த பதிவு இருக்கா - திரும்வி ஊட்டுக்கு வந்ததப் பத்தி ....

    நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. ஆமா ஐயா, தொல்லை தரும் கேட்டுக்கு டோல் கேட்டுன்னு பேர் வச்சிருக்காங்க..

      //ஆமா கடல இரசிச்சீங்களா ? இல்ல//
      எல்லாம் இணைந்ததுதானே வாழ்க்கை.. :-)

      //தாவாங்கொட்டையிலே கைய வச்சிக்கிட்டு என்னத்த அப்படி இரசிக்கறேங்க //

      அது நாங்க பேசி வச்சு பிரெஞ்ச் பேர்ட் (Beard)வச்சோம்.. ஹிஹி..

      //கடலுக்குள்ள ரைடு - பின்னாடி வரதுல பின்னாடி நிக்கறது யாரு //
      எல்லாத்துக்கும் பதில் சொன்னா நான் மாட்டிக்குவேன் போலிருக்கே.. :-)

      // ஆமா கடசிப் படம் குழந்தைகளத்தான் எடுத்தீங்களா //

      அது கலை உணர்வு மிக்க என் நண்பன் எடுத்தது.. அதில் நான் ரசித்தது குழந்தைகளை மட்டுமே (நீங்க நம்பித்தான் ஆகணும்!!)

      Delete
  9. அல்லோ ஆவி ... வண்டிக்கு மட்டும் பெட்ரோல் போடுமய்யா ....!

    ReplyDelete
    Replies
    1. பாஸ்.. அது ரெட்புல்.. எனர்ஜி ட்ரிங்க்.. இரவுப் பயணத்தின் போது உறங்காமல் விழித்திருக்க செய்யும்..

      Delete
    2. அப்படியா இப்ப தான் கேள்வி படுகிறேன். நமக்கு டீ குடிச்சுதான் பழக்கம்.

      Delete
    3. டீ, காபி கொஞ்ச நேரம் தான் தாங்கும்.. அப்புறம் தூக்கம் வந்திடும்.. காப்பியில் இருப்பதை விட கேபைன் (Caffeine) மிக அதிகம் உள்ளதால் ரெட்-புல் நம்மை தூங்க விடாமல் செய்கிறது.

      Delete
  10. பயணக் கட்டுரை - படிக்கவும்
    படங்கள் - இரசிக்கவும்
    மிக அருமையான பதிவு.
    தொடரட்டும்... பயணம்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி நிஜாமுதீன்.. நீங்க தொடர்ந்து பின்னூட்டமிடுவது மகிழ்ச்சி அளிக்கிறது..

      Delete
  11. மனதை மயக்கும் மியாமி !!! என்னையும் மயக்கி விட்டது.. நல்ல பதிவு !!!

    ReplyDelete
    Replies
    1. நன்றி விமல்ராஜ்.. எதோ என்னால முடிஞ்சது!!

      Delete
  12. இங்க போகனும்னு ஆசையைத்தூண்டுதே..ஆமா மயாமி கடற்கரையில இன்னும் நிறைய அம்மணிகள் இருப்பாங்களே...வெறும் சாம்பிள் மட்டும் போட்டு இருக்க,...மத்தது என் மெயிலுக்கு வரும் தானே...>?

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. ஆமா மாப்ளே.. இது சென்சார்டு வெர்ஷன் தான்..

      Delete
    2. அவரு எங்க இருந்தாலும் உங்களோட பதிவு ஈர்த்திடும்பா..

      Delete
  13. குழந்தைகள் உலகம் எங்குமே ஒரே மாதிரித்தான் போலே

    ReplyDelete
    Replies
    1. ஆமாங்க.. ஆவி எனும் குழந்தையை தானே சொல்றீங்க.. அவ்வ்வ்வ்!!

      Delete
  14. சிவப்புக் காளை--ங்கற உற்சாகம் தர்ற பானம் பத்தி இப்பத்தான் கேள்விப்படறேன். பயணக் கட்டுரையோட நிறைய தகவல்களும் தெரிஞ்சுக்க முடியறது வெகு சிறப்பு. மணல் தின்னும் அமெரிக்கக் கண்ணனை(யும்) மிகவும் ரசித்தேன். ஜீவாவுக்கு மட்டுமில்ல... எனக்கும் மெயில் ஐ.டி. இருக்குன்றத மறந்துடாத ஆவி! எனக்குப் படங்கள் அனுப்பாட்டா ஆயிடுவே நீ பாவி!

    ReplyDelete
    Replies
    1. //சிவப்புக் காளை// ஹஹஹா.. எங்க சார் போயிருந்தீங்க இவ்வளவு நாளா..

      Delete
    2. //எனக்கும் மெயில் ஐ.டி. இருக்குன்றத மறந்துடாத ஆவி! எனக்குப் படங்கள் அனுப்பாட்டா ஆயிடுவே நீ பாவி!//

      உங்களுக்கு ஒரு USB ஏ கொரியர் அனுப்பிடறேன் ஸார்!! ஹஹஹா..

      Delete
  15. உங்களுடையது ஒரு அழகான பயணம் ..நீங்கள் இந்தியாவில் உள்ள சில சிறப்பான இடங்களையும் பற்றியும் தகவல்களை கூறுங்கள் நான் படித்த ஒரு பயன கட்டுரை நரசி மேத்தா போன்ற ஒரு புனிதரையும்இந்த கட்டுரையில் காணலாம்.. மேலும் படிக்க http://manam.online/Konjam-Punidham-Konjam-Manidham-3

    ReplyDelete
  16. உங்களுடையது ஒரு அழகான பயணம் ..என் நீங்கள் இந்தியாவில் உள்ள சில சிறப்பான இடங்களையும் பற்றியும் தகவல்களை கூறுங்கள் நான் படித்த ஒரு பயன் கட்டுரை நரசி மேத்தா போன்ற ஒரு பு னிதரையும்இந்த கட்டுரையில் காணலாம்.. மேலும் படிக்க http://manam.online/Konjam-Punidham-Konjam-Manidham-3

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...