இன்ட்ரோ
நஸ்ரியாவின் நடிப்பில் வந்திருக்கும் இரண்டாவது தமிழ்ப்படம். இந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் மூவி இதுதான் என்று சொன்னால் மிகையல்ல. நஸ்ரியாவின் தீவிர ரசிகன் என்ற முறையில் இதை நான் சொல்லவில்லை. நஸ்ரியாவின் "அழகான" நடிப்பைத் தாண்டி ஒரு நல்ல திரைக்கதை, இசை, நகைச்சுவை, ஜெய் மற்றும் நயன்தாராவின் நடிப்பு என பல விஷயங்கள் அசத்தலாக அமைந்திருக்கிறது.. முதல் படத்திலேயே சூப்பர்ஹிட் கொடுத்த இயக்குனர் ஷங்கரின் சிஷ்யர் அட்லீக்கு ஒரு ஷொட்டு.. சரி கதைக்கு வருவோம்.
கதை
இஷ்டமில்லாத இருவர் மனம் ஒவ்வாது வாழ்க்கை துவங்க, இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள எத்தனிக்கையில் சந்தர்ப்ப வசத்தால் பிரிய நேரிடுகிறது. இவர்களை சேர்த்து வைப்பது யார் என்பது படத்தின் கிளைமாக்ஸ். மௌனராகம் என்றொரு திரைப்படம் பார்த்தது நினைவில் உள்ளதா? அந்தப் படத்தில் கொஞ்சம் நகைச்சுவை, இன்னொரு காதல், ஜீவி யின் இசை, மோகன்-ரேவதிக்கு பதில் ஆர்யா-நயன். சில்லென வந்து செல்லும் கார்த்திக் போல இதில் நஸ்ரியா. இதனுடன் நான் சற்றும் எதிர்பார்க்காத விருந்து ஜெய்யின் நடிப்பு. முன்பாதியில் சத்யனும், படம் நெடுக சந்தானமும் கலக்கல்.
ஆக்க்ஷன்
படத்தின் எதார்த்த ஹீரோ ஜெய். மனிதர் வெள்ளந்தியான கேரக்டரில் வெளுத்து வாங்கியிருக்கிறார். ஜெய்க்குள் இவ்வளவு திறமை உள்ளதா என்று ஆச்சர்யப்பட்டேன். கால் சென்டரில் நயனிடம் திட்டு வாங்குவதாகட்டும், அவரிடம் காதல் சொல்லி பின் லவ்வுவதாகட்டும் செம்ம ஆக்டிங். "நான் அழுவல, கண்ணுல வேர்க்குது" என்று அவர் சொல்லும்போது அரங்கமே அதிர்கிறது. படம் முடிந்த பின்னும் மனதில் நிற்கிறார். இவருடன் சேர்ந்து சத்யன் செய்யும் சேட்டைகள் பிரமாதம்.ஆர்யா இன்னும் நடிப்பில் பாஸ்மார்க் வாங்கவே கஷ்டப் படுகிறார். காமெடி சீன்களில் ஒக்கே, கொஞ்சம் சீரியசான சீன்களில் ஸ்பூப் படங்களில் நடிப்பது போலவே வந்து போகிறார்.நயன்தாரா "மஸ்காரா" போட்ட மங்காத்தாவாக படம் முழுவதும் வருகிறார். இவர் ஒவ்வொருமுறை அழும் போதும் மஸ்காரா கரைந்து முகத்தில் வழிந்து பப்பி ஷேமாக இருக்கிறது. ஆனால் இரண்டு வருடத்திற்கு பின் திரும்ப வரும் அவர் அசத்தல் பெர்பாமன்ஸ் என்றே கூறலாம். சந்தானம் படத்திற்கு தேவையான அளவில் மட்டும் காமெடி செய்வது சிறப்பு. அதுவும் இவரும் மானேஜர் "மொட்டை" ராஜேந்திரனும் சேர்ந்து செய்யும் காமெடிகள் கிச்சுகிச்சு. "தங்கமீன்கள்" ராம் கேரக்டரை விட ஒரு படி மேல் போய் நடித்திருக்கிறார் சத்யராஜ். இவர் கேரக்டரை புரிந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது.
அசத்தல் அறிமுகம்
தமிழ் சினிமாவிற்கு நீண்ட காலத்திற்கு பின் ஒரு துறுதுறு ஹீரோயன். வேற யாரு நம்ம நஸ்ரியா தான். "ரிங்க ரிங்கா" பாடல் கேட்கும் போதே நமக்கு கால்கள் தாளம் போடும். நஸ்ரியாவை பார்க்கும் போது உள்ளம் துள்ளும். இந்த ரெண்டும் சேர்ந்தால்.. அருமையான அறிமுகமாகிறார். "பிரதர்" என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் சொல்கிறார். மேக்கப் அதிகமில்லாமல் தன் அழகாலும் இயல்பான நடிப்பாலும் கவர்கிறார், தன் குடும்பத்தை பற்றி சொல்லும்போது நம் கண்களும் குளமாகிறது. அந்தக் காட்சியிலும் வெறும் கிளிசரின் வழிய தேமே என்று அமர்ந்திருப்பது ஆர்யாவின் சிறப்பு.
இசை-இயக்கம்-தயாரிப்பு
ஏ.ஆர்.முருகதாஸ் மற்றும் பாக்ஸ் ஸ்டார் மூவிஸ் தயாரித்துள்ள இந்தப்படத்தில் ஜி.வீ. பிரகாஷின் இசை பெரும்பங்கு வகிக்கிறது. பாடல்கள் பின்னணி இசை, தீம் மியூசிக் என எல்லாம் ஏ-ஒன். சக்திஸ்ரீ கோபாலன் பாடிய "அஞ்ஞாடே" பாடல் படத்தில் மிஸ்ஸானது மட்டும் கொஞ்சம் வருத்தம். பலமுறை பார்த்து பழகிய கதைதான் என்றாலும் தொய்வில்லாத திரைக்கதை நமக்கு ப்ரிஜ்ஜில் வைத்த ஐஸ்க்ரீம் போல் சுவையாக இருக்கிறது. இளைஞர்கள் மட்டுமல்லாது குடும்ப ஆடியன்ஸையும் கவரும் வண்ணம் பல காட்சிகளை வைத்து வெற்றிப்பட இயக்குனர் வரிசையில் கடைசியில் சென்று நிற்கிறார் அட்லி. அடுத்தடுத்த படங்களில் முன்னணிக்கு வர வாழ்த்துகள்.
ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
"ஹே பேபி" பாடலில் ஆர்யா-நயன் இருவரும் அசையாமல் நிற்க கண்ணாடியில் அவர்கள் மனசாட்சி சண்டை போடும் காட்சி மற்றும் பிரதர் என்றபடி நஸ்ரியா ஐஸ்க்ரீம் வாங்கி வரும் காட்சி. இமையே பாடல் நெஞ்சை உருக்குவதாய் இருந்தது. ஓடே ஓடே மற்றும் சில்லென மழைத்துளி இளமை துள்ளும் பாடல்கள். காலாண்டு விடுமுறையாதலால் எல்லோரும் குடும்பத்தோடு சென்று கண்டுகளிக்க வேண்டிய படம். காதலர்கள்/ கணவன்-மனைவிகள் பார்க்க வேண்டிய படம். நண்பர்கள் கூட்டமாக சென்று ரசிக்க வேண்டிய படம்.
Aavee's Comments - Blockbuster of 2013.
நஸ்ரியாவின் நடிப்பில் வந்திருக்கும் இரண்டாவது தமிழ்ப்படம். இந்த வருடத்தின் ப்ளாக்பஸ்டர் மூவி இதுதான் என்று சொன்னால் மிகையல்ல. நஸ்ரியாவின் தீவிர ரசிகன் என்ற முறையில் இதை நான் சொல்லவில்லை. ///
ReplyDeleteபார்ரா....
ஹஹஹா
Deleteஇஷ்டமில்லாத இருவர் மனம் ஒவ்வாது வாழ்க்கை துவங்க, இருவரும் பரஸ்பரம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள எத்தனிக்கையில் சந்தர்ப்ப வசத்தால் பிரிய நேரிடுகிறது. இவர்களை சேர்த்து வைப்பது யார் என்பது படத்தின் கிளைமாக்ஸ்./////
ReplyDeleteகிளைமாக்ஸ் ட்விஸ்ட் என்னா????
கிளைமாக்ஸ் ஹீரோவும் ஹீரோயினும் சேர்ந்திடுவாங்க.. ஹையா ஹீரோ யாரு, ஹீரோயின் யாருன்னு நான் சொல்லலியே..
Deleteநயன்தாரா "மஸ்காரா" போட்ட மங்காத்தாவாக படம் முழுவதும் வருகிறார். இவர் ஒவ்வொருமுறை அழும் போதும் மஸ்காரா கரைந்து முகத்தில் வழிந்து பப்பி ஷேமாக இருக்கிறது. ////
ReplyDeleteஆனாலும் நயன் நயன் தான்... ஹி..ஹி...
உண்மையிலேயே அழகுப் பதுமையாய் இதுவரை வந்து போன நயன் சிறப்பாக நடித்துள்ள படம் இது.. ஆமா நீங்க நயன் ரசிகர் மன்ற செயலாளரா?? #டவுட்டு
Deleteதமிழ் சினிமாவிற்கு நீண்ட காலத்திற்கு பின் ஒரு துறுதுறு ஹீரோயன். வேற யாரு நம்ம நஸ்ரியா தான். "ரிங்க ரிங்கா" பாடல் கேட்கும் போதே நமக்கு கால்கள் தாளம் போடும். நஸ்ரியாவை பார்க்கும் போது உள்ளம் துள்ளும். இந்த ரெண்டும் சேர்ந்தால்.. அருமையான அறிமுகமாகிறார். /////
ReplyDeleteநஸ்ரியாவின் தனி குளோஸ் ஸ்டில் பதிவில் இணைக்காததால் வெளிநடப்பு செய்கிறேன்....
ஹிஹிஹி.. அது ஆவிப்பா போடும்போது யூஸ் பண்ணிக்கிறதுக்காக மறைக்கப்பட்டுவிட்டது.. ஹிஹிஹி..
DeleteBlockbuster of 2013 என்று சொல்ல முடியாது, இந்த வருடத்துக்கான அப்படி ஒரு படம் வரவில்லை. சிறு குறைகள் நீக்கிப் பார்த்தால் இது ஒரு ஹிட் படமே... என்னுடைய விமர்சனம் விரைவில்..
ReplyDeleteஸ்.பை. அது என்னுடைய கருத்து மட்டுமே.. ஆறு மெழுகுவர்த்திகள் திரை விமர்சனம் எழுதிய போது அந்த விமர்சனத்தை கண்டித்து சில பின்னூட்டங்கள் வந்தன. இன்று ஒரு வாரத்தில் பெரும்பாலான தியேட்டரை விட்டு ஓடி விட்டது. இந்தப் படத்தினை மக்கள் ரசித்த விதம், என்னுடன் படம் பார்த்த நண்பர்கள், படத்தில் இருக்கும் விஷயங்கள் இதை அலசி ஆராய்ந்தே "பிளாக்பஸ்டர்" ஆகும் என்று கூறினேன். தவிர ஒவ்வொருவரின் கருத்தும் வேறாக இருத்தல் தவறில்லை. உங்க விமர்சனத்திற்காக காத்திருக்கிறேன். இந்தப் படம் வசூலிலும் சாதனை படைக்கும் என்பதில் ஐயமில்லை.
Deleteநஸ்ரியா படம்ன உடனே ஆளாளுக்கு முந்திக்கிட்டு முதல் ஷோவுக்கு ஓடிட்டாய்ங்க போல... ஜெய்யோட நடிப்பைப் பத்தியும், போரடிக்காம படம் போகுதுன்னும் ஆவி, தி பாஸ் சொல்றதால நம்பிட்டோம்...! பாத்துரலாம்...! ஆர்யாகிட்டல்லாம் நடிப்பை எதிர்பார்க்கற ஆவிய முதல்ல அட்லாண்டிக் கடல்ல தூக்கிப் போடணும்யா...!
ReplyDeleteஹஹஹா.. இருக்காதா பின்னே.. அந்த நஸ்ரியா புள்ளையும் ஏமாத்தாம சிறப்பா நடிச்சு பேரக் காப்பாத்திட்டா..இந்தப் படத்தை சென்னையில விசிலடிச்சுகிட்டே இளைஞர்கள் நம்ம எல்லோரும் பாக்குறோம்.. :-)
Delete/// "தங்கமீன்கள்" ராம் கேரக்டரை விட ஒரு படி மேல் போய் நடித்திருக்கிறார் சத்யராஜ். இவர் கேரக்டரை புரிந்து கொள்ள கொஞ்ச நேரம் பிடித்தது.///
ReplyDeleteசத்யராஜின் பழைய படங்கள் உங்களுக்குள் ஏற்றி வைத்த பிம்பங்களின் பிரதிபலிப்பே இதற்கு காரணம்.
உண்மைதான்.. எவ்வளவு நாள் தான் கெட்டவனாவே நடிக்கறது என்று அவர் கூறுவது போல் இருந்தது.
Deleteஅட ... உங்கள இவ்வளோ கவர்ந்த படத்தை விரைவில் பார்க்கணும்
ReplyDeleteநஸ்ரியாக்காக முதல் முறை.. ஜெய்-நயனுக்காக இரண்டாம் முறை, நல்ல கதைக்காக மூன்றாம் முறை.. மறுபடியும் நஸ்ரியாவுக்காக ஒருமுறை என குறைந்தது நான்கு முறையாவது இந்தப் படத்தை பார்க்க திட்டமிட்டுள்ளேன்..
Deleteஅடடா... என்னவொரு ரசனை...!
ReplyDeleteநன்றி DD. பாருங்க..இந்த படத்தை பற்றிய உங்க கருத்தை நான் எதிர்பார்க்கிறேன்..
Delete"அஞ்ஞாடே" பாடல் படத்தில் இல்லையா - அட பாவிங்களா ...!
ReplyDeleteநஸ்ரியாவுக்காகவே புது பார்மெட் விமர்சனமா ... இதெல்லாம் ஓவரு ....!
அந்த "பார்மெட்" சேஞ்சு நஸ்ரியாவுக்காக இல்ல.. எந்த விஷயத்தையும் பளிச்ச்னு பிரம்மாண்டமா கொடுத்தா மக்களுக்கு பிடிக்கும்னு ராஜா ராணி படம் மூலமா கத்துகிட்டேன். அதான் இந்த சேஞ்ச்!! ( ஆனா அதை ரெண்டே ரெண்டு பேர் தான் கவனிச்சீங்க.. மத்தவங்க கவனிக்கலையா.. இல்ல அவ்வளவு சிறப்பா இல்லையா ன்னு தெரியல..
Delete//"அஞ்ஞாடே" பாடல் படத்தில் இல்லையா - அட பாவிங்களா ...!//
Deleteஆமா பெரிய டிஸ்ஸப்பாயின்மென்ட் எனக்கும். அதுவும் அந்தப் பாட்டு நஸ்ரியாவுக்கு வர வேண்டியது.. இதை வன்மையாக கண்டிக்கிறேன்.. நீங்களும் கண்டிக்கரீங்கன்னா சொல்லுங்க.. ஒண்ணா டீ குடிக்க போலாம்..
//ஒண்ணா டீ குடிக்க போலாம்..//
Deleteபாஸ் நா பால் டீ தான் குடிப்பேன் ....டீல் ஓக்கேவா ...! பண்ணு வாங்கி கொடுத்தா இன்னொருவாட்டி கண்டிப்பேன் ....! :)
உங்க விமர்சனம் படித்ததுமே படம் பார்க்க வேண்டும் போல் உள்ளது... நஸ்ரியாவுக்காக தனி பத்தி...
ReplyDeleteபாருங்க மேடம்.. குடும்பத்தோட பார்க்கலாம்.. உங்களுக்கும் பிடிக்கும்.
Deleteநான் பொறுமையா பார்க்கலாம்னு இருக்கேன் தல .. . ஒரே நாளில் இரண்டு படமா ?
ReplyDelete