Wednesday, September 4, 2013

பதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-1 (முன்னேற்பாடுகளும் முட்டுக்கட்டைகளும்)

முன்கதைச் சுருக்கம்: பதிவர் திருவிழாவை மையமாக வைத்து பதிவை தேத்தும் எண்ணம் எதுவும் "எனக்கு" இல்லை என்பதை கூறிக் கொள்கிறேன். நம் பதிவர் திருவிழாவை ஒட்டி நிகழ்ந்த சம்பவங்களையும் (முன்னாலும் பின்னாலும்) மாபெரும் பதிவர் திருவிழாவையும் வரலாற்றில் பதிய வேண்டும் என்ற ஆவல் மிகுதியால் மட்டுமே இந்தப் பதிவை எழுத ஆரம்பிக்கிறேன். அது மட்டுமல்ல பதிவர் திருவிழாவில் "எனது கிளிக்ஸ்"  (அந்த பதிவர் யாருன்னு கேக்காதீங்க, ப்ளீஸ்) என்று போகிற போக்கில் நாலு புகைப்படங்களை தெளித்துவிட்டு போக எனக்கு மனதில்லை. அதுக்காக திடம் கொண்டு ஒரு புக் போடுற அளவுக்கு எழுத நம்மகிட்ட சரக்கும் இல்ல. So ஒரு ரெண்டு மூணு பாகங்கள் அவ்வளவே.. நம்ம வீட்டு விசேஷம், படிக்காம போயிடுவீங்களா என்ன?

அப்பாவி ஆவி?!!


                          அது ஒரு அழகிய வெயில் காலம்.. சூரியனின் செங்கதிர்கள் புதிதாய் அடித்திருந்த என் மொட்டையை பதம் பார்த்துக் கொண்டிருக்க, அவினாசிலிங்கம் பெண்கள் கல்லூரியின் அருகே நானும் ப்ரிஸ்ஸில்லாவும் சென்று கொண்டிருந்த போது  ரேபான் கண்ணாடிக்கு பின்னால் அப்பாவியாய் இருந்த என் கண்கள் அலைமோத (அன்பர் கோநேஜீயின் வாக்கில் சொல்வதென்றால் அம்மணிகளின் அணிவகுப்பை பார்வையிட்டபடி..)  திடீரென்று என் செல்பேசி சிணுங்க, உயிர்ப்பித்த போது நம்ம வாத்தியார்.. வண்டியை ஓரம் கட்டிவிட்டு ஆவலுடன் பேச செப்டம்பர் ஒன்று பதிவர் சந்திப்பு நடக்கவிருப்பதை சொன்னார். உற்சாகம் கரை புரண்டோட அவரிடம் "ஸார், நான் ஒரு மாசம் முன்னாடியே வந்து சந்திப்புக்கு தேவையான வேலைகளை செய்ய ஆவலாய் உள்ளேன். என்னுடைய பங்களிப்பும் இந்த சந்திப்புல இருக்கணும்னு ஆசைப்படறேன்" என்றதற்கு "தாராளமா வாப்பா.. இந்த ஞாயிறு ஒரு மீட்டிங் இருக்கு. அதுக்கப்புறம் சொல்றேன் வா" என்றதும் சந்தோசத்தில் மனம் கூத்தாடியது.

தேவதையை புறக்கணித்ததால் தானோ அது நடந்தது?

                             இதுவரை பார்த்திராத பதிவர்கள், பார்த்து பழகிய நண்பர்கள், பதிவுலக ஜாம்பவான்கள், பிரபலங்கள் என  இப்படி அனைவரும் ஒன்றுகூடும் நிகழ்வாயிற்றே.. வீட்டிற்கு வந்ததும் முதல் வேலையாக எப்ப கிளம்பலாம் என IRCTC யில் சென்னை செல்ல (ஆகஸ்டு முதல் வாரம்) ரயிலில் இடம் தேட, அதுவோ "வாரல் என்பது போல்" லோட் ஆக மறுக்க.. சரி பிறகு செய்து கொள்ளலாம் என எண்ணி  கணிப்பொறியையும் கண்களையும் மூடி அமர்ந்த போது வழக்கம் போல் மனதுக்குள் நஸ்ரியா தோன்ற சட்டென்று கண்விழித்து ஒரு முடிவெடுத்தேன். இனி பதிவர் திருவிழா முடியும் வரை நஸ்ரியாவின் நினைவுகளை கொஞ்சம் தள்ளி வைப்பெதேன்றும், ஆவிப்பாவை அதுவரை இயற்றப் போவதில்லை என்றும் முடிவெடுத்தேன், (நஸ்ரியாவிடம் மானசீகமாய் மன்னிப்பு கேட்டது தனிக்கதை. பயப்படாதீங்க.. அத நான் எழுதப்
போறதில்ல..)

எழில் கொஞ்சும் கேரளா..

பிரகாஷ், மனோஜ் மற்றும் ஆவி


                                பதிவர் சந்திப்புக்கு நாம என்ன செய்யலாம்னு ரூம்ல படுத்துகிட்டே மேலே இறக்கைகளை விரித்தபடி சுற்றிக்கொண்டிருந்த மின்விசிறியை பார்த்து யோசித்த போது நமக்கு எது நல்லா வரும் பாட்டு தான், அத பண்ணுவோமே என்று எனக்கு நானே ஒரு முடிவுக்கு வந்தவுடன் கணினியை மீண்டும் உயிர்ப்பித்தேன். பதிவர் திருவிழா பாடல் எழுத அமர்ந்து அரைமணி நேரமாகியும் ஒன்றும் தோன்றவில்லை. என் சோனி வயோ வின் பேக் ஸ்பேஸ் கீ தேய்ந்து விடும் அளவுக்கு எழுதுவதும் அழிப்பதுமாய் இருந்தேன். சரி இதை ஒரு இரு நாட்கள் ஒத்திப் போடுவோம் என எண்ணி ஒரு வெள்ளியன்று என்  கெரசின்கள்  (அதாம்பா, அத்தை பசங்க.. ஓ அது கசின்களா??) மற்றும் ப்ரிஸ்ஸில்லாவுடன் கேரளா நோக்கி பயணித்தேன். அங்கே சில கோவில்களுக்கு சென்றுவிட்டு ஐந்து மணிநேர பயணத்துக்குப் பின் வீடு திரும்பினோம்.


சம்பவத்திற்கு சற்று முன்..


                                  மறுநாள் மாலை அவர்கள் இருவரும் பொள்ளாச்சி வருமாறு அழைக்க நானோ முதலில் மறுத்து பின் மனதை மாற்றிக் கொண்டு கதவை பூட்டிவிட்டு கீழே இறங்க என் மீது ஒரு மழைத்துளி விழுந்தது. அப்போது தான் பொள்ளாச்சியில்  மழை  அதிகம் இருக்கும் என யோசித்து மீண்டும் உள்ளே சென்று ஹெல்மெட்டை அணிந்து வந்தேன்.  மனோஜ் தனியாகவும், நானும் பிரகாஷும் ப்ரிஸ்ஸில்லாவிலும் புறப்பட்டோம். நாங்கள் வேகமாய் வந்துவிட்டதால் கிணத்துக்கடவு எனும் இடத்தில் நிறுத்தி மனோஜுக்காக காத்திருந்தோம். சில புகைப்படங்கள் எடுத்துவிட்டு மனோஜ் வந்தவுடன் அங்கிருந்து புறப்பட்டு மிகவும் மெதுவாக லேசான மழைத் தூறலை  அனுபவித்தபடி வந்தபோது ஒரு மேட்டில் ஒரு காரை முந்திச் செல்ல முயற்சித்த போது தரையின் ஈரம் காரணமாக வண்டியின் பின்சக்கரம் லேசாய் சரிய, அதை சமாளிக்க வேண்டி நொடி நேர பதற்றத்தில் முன்புற பிரேக்கை அழுத்த அடுத்த நொடி வண்டி நிலைதடுமாறி சுழன்றபடி கீழே விழ நானோ இரண்டடி உயரத்தில் அரசாங்கத்தால் அழகாய்ப் போடப்பட்டிருந்த தார் சாலையை நோக்கி பயணித்துக் கொண்டிருந்தேன்.


தொடரும்..

     


30 comments:

 1. ரொம்ப முன்னாலேருந்து இஸ்டார்ட் பண்றீங்களா....!

  உங்கள் விபத்து குறித்தும் கக் கட்டுப் போட்ட நிலையில் இருந்த புகைப்படமும் சீனு ப்ளாக்கில் பார்த்த நினைவு.

  ReplyDelete
  Replies
  1. ஸ்ரீராம் பாஸ், என் ஸ்டைல் எப்பவும் அப்படித்தான்.. கொஞ்சம் டீட்டெயிலா இருக்கும்.. பொறுத்துக்கோங்க..

   பரவாயில்லையே, ஞாபகம் வச்சிருக்கீங்க!! (ஆவி கொஞ்சம் பேமஸ் ஆயிட்டான்னு நினைக்கிறேன்.. கீழ விழுந்து கட்டு போட்டாதான் நாலு பேருக்கு தெரியுது.)

   Delete
  2. அப்ப நெறைய பேமஸ் ஆகணும்னா எப்டி விழுகனும் எத்தன கட்டு போடனும் .....! ஆத்தாடி ....!

   Delete
 2. ஒரு ஆக்ஸிடெண்ட் ஆன
  கதையை இவ்வளவு சுவாரசியமா யாரும் சொல்ல முடியாது......சரி அப்புறம் என்ன ஆச்சு ?!

  ReplyDelete
  Replies
  1. சில பேர் சுவாரஸ்யமான விஷயங்களை செய்துட்டு சிம்பிளா சொல்லிடுவாங்க. சிலர் துக்குணூண்டு விஷயத்த சுவாரஸ்யம்ங்கிற பேருல இழு இழுன்னு இழுப்பாங்க.

   நீங்க முதல் வகை. நான் இரண்டாம் வகை நண்பா..

   Delete
  2. // நான் இரண்டாம் வகை நண்பா... //

   ஆவி யோட நேர்மைக்கு ஒரு லைக் ...!

   Delete
 3. Replies
  1. கடைசில கடு கடுப்பு ஆகாம இருந்தா சரி..! :-)

   Delete
  2. ஹா ஹா ...! ஆயிடுத்து ....

   Delete
  3. எனக்கு ஆப்பு வெளியில இல்ல.. நீ எல்லாம் நல்லா வரணும் தம்பி..

   Delete
 4. எழுத்து நடை, சொல்லும் விதம் நல்லாருக்கு

  ReplyDelete
 5. "ஆவி த பாஸ்" என்பது சரி தான்... எங்களுக்கு தான் திக் திக் என்று இருக்கிறது...

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. DD, உங்களை மீண்டும் சந்தித்து அளவளாவியதில் மகிழ்ச்சி. உங்களுடன் இந்தமுறை ஒரு படம் கூட எடுத்துக் கொள்ளாதது வருத்தமாக இருக்கு.

   Delete
 6. ஆக்சிடண்டுக்கே இந்த பில்டப்ன்னா இன்னும் நஸ்ரியா கூட டேட்டிங் போனால்?!

  ReplyDelete
  Replies
  1. ராஜி அக்கா தம்பின்னா சும்மாவா.. பில்டப்புக்கு எந்தக் குறையும் வந்திடக் கூடாதுன்னு பாத்து பாத்து செதுக்கினது.

   Delete
 7. ஆக்சிடென்டா ??

  அய்யய்யோ?

  அப்ப பதிவர் திருவிழாவுக்கு வந்தது நிசமாவே உங்க ஆவியா ?

  சுப்பு தாத்தா.

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா..

   தாத்தா.. உங்களோட இடைவேளையின் போது பேச நினைத்து அங்கிருந்த எல்லா இடத்திலும் ஆவி தேடியது.. ஆனா நீங்க ஆவிக்கே டேக்கா கொடுத்து எஸ் ஆயிட்டீங்க.. :-)

   இந்த வருடம் உங்க அடையாள அட்டையில் பெயர் எழுதித் தரும் பாக்கியம் எனக்கு கிடைத்தது.

   நிறைய பேச நினைத்திருந்தேன்.. கொஞ்சம் ஏமாற்றமடைந்தேன்.. உலகம் சிரியதல்லவா.. மீண்டும் சந்திப்போம் தாத்தா..

   Delete
 8. சூப்பர்... எழுத்து நடை அருமை... சம்பவம் தான் எங்களுக்கு தெரியுமே... இருந்தாலும் சுவாரஸ்யம்...

  ReplyDelete
  Replies
  1. உங்களுக்கு தெரியாத தகவல்களும் இருக்கு நண்பா..தொடர்ந்து படிங்க

   Delete
 9. //அதுக்காக திடம் கொண்டு ஒரு புக் போடுற அளவுக்கு எழுத நம்மகிட்ட சரக்கும் இல்ல. // ஹா ஹா ...செம


  //நம்ம வீட்டு விசேஷம், படிக்காம போயிடுவீங்களா என்ன?//........ ராஜதந்திரம்

  //ஆவிப்பாவை அதுவரை இயற்றப் போவதில்லை என்றும் முடிவெடுத்தேன்// அப்ப நஸ்ரியா வாழ்க்கை

  ReplyDelete
  Replies
  1. நன்றி ரூபக்..

   //அப்ப நஸ்ரியா வாழ்க்கை//

   தொடர்ந்து படிங்க.. உங்களுக்கே தெரியும்.. :-)

   Delete
 10. படிக்காம போயிடுவீங்களா என்ன?
  //

  அதானே!!தொடருங்கள்:)

  ReplyDelete
  Replies
  1. வாங்க ஸாதிகாக்கா..

   Delete
 11. அதகளம் ஸ்டார்ட்...

  ஆவியை சந்திச்சதில் மிக்க மகிழ்ச்சி

  ReplyDelete
  Replies
  1. ஹாஹா..

   முதல் வருகைக்கு நன்றி பிரகாஷ். உங்களை சந்தித்ததில் எனக்கும் மிக மகிழ்ச்சி.

   Delete
 12. விபத்தை கூட வர்ணிக்கும் உங்கள் அழகு சிறப்பு! நீங்க பாடின பாட்டு சூப்பர்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ரசித்தமைக்கு நன்றி நண்பா.. சந்திப்பில் நெடுநேரம் உங்களை தேடிக் கொண்டிருந்தேன்..

   Delete
 13. அப்பாடா நஸ்ரியா நமக்கு தான் ... (சீனு மைண்ட் வாய்ஸ் )

  ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails