Saturday, September 28, 2013

ஆவி டாக்கீஸ் - ஓநாயும் ஆட்டுக்குட்டியும்


இன்ட்ரோ  
                           மேஸ்ட்ரோ இளையராஜாவின் மெஸ்மரிசம் செய்யும் இசையில் பாடல்களே இல்லாத தமிழ்ப் படம் எடுத்ததற்கே இயக்குனர் மிஷ்கினுக்கு பெரிய பாராட்டு தெரிவித்துக் கொள்கிறேன். படத்தின் சில காட்சிகள் உலக சினிமாவின் தழுவல்கள் போல் தோன்றினாலும் தமிழ் சினிமாவுக்கு இது புதுசுதான்.




கதை         
                            ஓநாய் (உல்ப்) என்ற பெயரில் அறியப்படுகிற மிஷ்கினை ஆரம்பம் முதலே போலிஸ் தேடுகிறது. இவரைக் கொல்ல இன்னொரு கொலைகார கும்பலும் நார்த் மற்றும் சவுத் மெட்ராஸ் முழுக்க தேடுகிறது. இவரை முதலில் காப்பாற்றும் ஒரு மருத்துவ  கல்லூரி மாணவர் பின்னர் அவரும் சேர்ந்து ஓநாயை தாக்குகிறார். போலிஸ் மற்றும் கொலைகார கும்பல் இவரை ஏன் துரத்துகிறது, இவரகளிடமிருந்து ஓநாய் தப்பித்ததா என்பதே கிளைமாக்ஸ்.

                                                                                                                                            ஆக்க்ஷன் 
                               மிஷ்கினின் முந்தைய படமான யுத்தம் செய் போலவே ஆரம்பிக்கும் காட்சியிலிருந்து முடிவு வரை ஒரு சஸ்பென்ஸ் வைத்து கொண்டு சென்றிருப்பது சிறப்பு. ஓநாய் கதாப்பாத்திரத்தில் சில காட்சிகளில் பார்த்திபன் நினைவுக்கு வந்து போனாலும் தான் எடுத்துக் கொண்ட பாத்திரத்தோடு ஒன்றி நடித்திருக்கிறார் மிஷ்கின். மருத்துவ கல்லூரி மாணவராக ஸ்ரீ. (வழக்கு எண் படத்தில் வருவாரே அவரேதான். இதில் அரும்பு மீசை மழித்து குளித்துவிட்டு அழகாய் வந்திருக்கிறார். ) பதறும் காட்சியிலும் சரி, துப்பாக்கி தன் கைக்கு வந்தவுடன் மிஷ்கினை மிரட்டும் போதும் சரி கண்களை உருட்டி உருட்டி படம் காட்டுகிறார். CID ஆக வரும் ஷாஜியின் நடிப்பும் அருமை.



இசை-இயக்கம்
                                 மிஷ்கினின் சொந்தப் படமான இதில் பின்னணி இசை படத்தை நகர்த்தும் தருணங்கள் ஏராளம். இதுபோன்ற த்ரில்லர் படத்திற்கு தேவையான இசையை அற்புதமாக கொடுத்துள்ளார் இசை ஞானி. முதல் பாதியின் விறுவிறுப்பு பின் பாதியிலும் சற்றும் குறையாமல் ரசிகர்களை ஏமாற்றாமல் வேகமான  அதே சமயம் சிக்கல் நிறைந்த திரைக்கதையை நிறைவாய் தந்திருக்கிறார் இயக்குனர் மிஷ்கின்.

                                      ஆவியை டச் செய்த காட்சி/பாடல்
                                 ட்ரெயினிலிருந்து சாதுர்யமாக தப்பிக்கும் காட்சி. கடைசி போராட்டத்தில் காரில் கைகள் கட்டப்பட்ட நிலையில் எதிரியை எதிர் கொள்ளும் யுத்தி. பிளாஷ்பேக்கிற்காக நேரத்தை செலவு செய்து கொல்லாமல் சுருக்கமாக அதே சமயம் வித்தியாசமாக சொன்ன விதம் சூப்பர். அசத்தலான கேமிரா கோணங்கள். சில "மிஷ்-கிளிஷேக்களை" மட்டும் தவிர்த்திருக்கலாம் என்பது என் கருத்து. பாடல்கள் நகைச்சுவை எதுவும் இல்லாததால் எல்லோருக்கும் பிடிப்பது கஷ்டம். இருந்தாலும் நல்ல சினிமா பார்க்க விரும்புவோர் தவறாமல் ஒரு முறை பார்க்கலாம்.

                  Aavee's Comments - Lone Wolf can be visited once..




14 comments:

  1. அருமை ஆவி.தெளிவானப் பார்வை... ஆம்.. உண்மையிலே ராஜாவின் ராஜ்ஜியம் படம் முழுக்க வியாபித்திருக்கிறது,.

    ReplyDelete
    Replies
    1. த்ரில்லர் கதை தொய்வில்லாமல் சென்றதற்கு ராஜா தான் முக்கிய காரணம்.

      Delete
  2. அட...உங்கள் நஸ்ரியா நடிச்ச படத்துக்கு பதிவு போடாம... ‘மிஷ்கினுக்கு’ கை தட்னீங்க..பாருங்க.
    அங்க நிக்கறீங்க!

    ReplyDelete
    Replies
    1. இதற்கு அடுத்த special பதிவு...

      Delete
    2. ஹிஹிஹி.. முதல்ல நஸ்ரியா படத்துக்கு தான் எழுதினேன்..பப்ளிஷும் செய்தேன். வலைப்பூவில் முதலில் நஸ்ரியா நடித்த படத்தின் விமர்சனம் வரவேண்டுமென்பதால் இப்படத்தின் பப்ளிஷ் டைமிங்கை ஒரு நிமிடம் முன்னதாக மாற்றி பப்ளிஷ் செய்தேன்.. ஹிஹிஹி..

      Delete
  3. அட... உ.சி.ர.ஸாரும் நலல படம்னு சஜஸ்ட் பண்ணினாரு... இங்க ஆவியும்! அவசியம் பாத்துர வேண்டியதுதான். அப்புறம்... உ.சி.ர. ஸார்..! நஸ்ரியா படத்துக்கு விமர்சனம் எழுதாட்டா ஆவியோட தலை சுக்குநூறா வெடிச்சுடும்னு ஒரு முனிவர் விட்ட சாபமே இருக்கு... இதுகூடத் தெரியாம அப்பாவியா இருக்கீகளே....! அய்யோ.. . அய்யோ...!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. சிஷ்யர்களைப் பற்றி நன்கு அறிந்த குருநாதர். தல வெடிக்கறது மட்டுமா மறுபடியும் மனிதன் ஆயிடுவேன்னு சாபம் வேற.. ஹஹஹா..

      Delete
    2. நேற்று தியேட்டரில் நஸ்ரியா வந்ததும் ஆ.வியில் அட்ரினல் துடித்தது...
      டிடிஸ் இல்லாமலேயே தியேட்டரில் எதிரொலித்தது.
      கை தட்டல் என்ன...எக்காளம் என்ன...கும்மாளம் என்ன...
      என்ன...என்ன...என்ன...வேலை பிடித்தது என்ன!...என கே.பி.எஸ் மாதிரி பாடிக்கொண்டே போகலாம்.

      ஆ.விக்கு விசிலடிக்க தெரியாது என்பதை நேற்று கண்டு கொண்டேன்.

      Delete
    3. என்ன சார்.. கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லிட்டீங்களே.. நியாயமா??

      Delete
  4. இந்தப் படம் சற்று குறைவான காட்சிகளே உள்ளது, திரையில் காண்பது கடினம் என்றே தோன்றுகிறது. இருப்பினும் எனக்கும் மிஸ்கின் படங்களுக்கும் உள்ள வரலாறை தொடர திரையில் காண வேண்டும்

    ReplyDelete
    Replies
    1. அடுத்த வார துவக்கத்தில் அதிக திரைகள் கிடைக்கலாம்.

      Delete
  5. முதலில் பார்க்க நினைத்த படம்... (ரா..ரா.. அப்புறம்...!)

    ReplyDelete
    Replies
    1. ரெண்டுமே பாருங்க DD.. நல்லா இருக்கு..

      Delete
  6. டிவில போடும்போதாவது பார்க்க டிரை பண்ணுறேன்

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

இதுவும் பிடிக்கும்.. படிங்க!!

Related Posts with Thumbnails