பதிவர் சந்திப்புக்கு வந்த எல்லோரும் ஒருவரையொருவர் நலம் விசாரித்துக் கொண்டிருக்க, சிலர் செல்போனில் டாக்கிக் கொண்டிருக்க, இன்னும் சிலர் எதிரே இருந்த பழக்கடையிலும், சிலர் புழக்கடையிலும் இருந்தனர். எல்லோரையும் உள்ளே இழுக்க "பதிவுலக SPB" சுரேகா தன் சிம்மக் குரலில் "வானவில்லே.. வானவில்லே வந்ததென்ன இப்போது?" என ஆரம்பித்ததும் விக்ரமன் பட "லாலாலா" வை கேட்டது போல் சந்தோஷத்தில் ஓடி வந்தனர். கவிஞர் மதுமதி நிகழ்ச்சியை துவங்கி வைக்க புலவர் ராமானுசம் ஐயாவும், ரமணி ஐயாவும் தலைமை தாங்க, சுரேகா அவர்களுடன் சேர்ந்து நிகழ்ச்சி முழுவதும் பாங்குடன் (தலைவாவில் வரும் பாங்கு அல்ல) தொகுத்து வழங்கினர் திருமதி எழில் மற்றும் திருமதி அகிலா அவர்கள். நிகழ்ச்சி ஆரம்பிக்கும் முன் குவைத்திலிருந்து மஞ்சுபாஷிணி அக்கா போன் செய்து நிகழ்ச்சி பற்றிய தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டார். தான் இங்கே வர இயலாவிட்டாலும் அங்கிருந்து நேரடி ஒளிப்பரப்பை காணத் தயாரானார்.
பதிவர்கள் சுய அறிமுகம் செய்துகொள்ள அழைக்கப் பட்டனர். (விழாக் குழுவில் இருந்தவர்கள் தவிர்த்து அனைவரும் மேடைக்கு அழைக்கப்பட்டனர்) பிரபல பதிவர்களையும், பிற பல பதிவர்களையும் இங்கே பார்க்க முடிந்தது மகிழ்ச்சியளித்தது. பொதுவாக எல்லோரும் தங்கள் பெயர் மற்றும் தங்கள் வலைதளத்தின் பெயர் கூறிவிட்டு இறங்கினர். ஒரு சிலர் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி இரண்டு மூன்று நிமிடங்கள் பேசினர். ஒவ்வொருவருக்கும் பலத்த வரவேற்பு அளித்த சக பதிவர்கள் ராஜி அக்கா மேடை ஏறியதில் இருந்து இறங்கும் வரை கைதட்டல்களை பொழிந்து அவரை திக்குமுக்காட செய்தனர். (இருந்தாலும் ஜாலியா பேசுவாங்கன்னு எதிர்பார்த்தால் கொஞ்சம் செண்டிமெண்ட்டா பேசிட்டாங்க..( ஒரே பீலிங்ஸ் ஆப் சென்னையா போச்சு.)
"பின்னூட்ட சூறாவளி" திண்டுக்கல் தனபாலன் அவர்கள் மேடைக்கு வந்த போது அரங்கமே கைதட்டலில் ஆரோ-3D எபெக்டில் அதிர்ந்தது. "காமெடி கும்மி சங்க தீவிரவாதி" சதீஷ் செல்லத்துரை மேடை ஏறியதும் சொல்லிவைத்தது போல் சங்கத்து உறுப்பினர்கள் அவரை ஜலதொஷத்துடன், சீ.. கரகோஷத்துடன் வரவேற்றனர். அவர் தமிழை லைக் பண்ணிய விதத்தை நான் லைக் பண்ணினேன். சங்கத்தை அறிமுகம் செய்து வைக்காததை கண்டிக்கவும் செய்தனர். அந்தக் குறையை பிளாக்கர் நண்பன் அப்துல் பாஷித் மேடை ஏறிய போது தீர்த்து வைத்தார். பலமுறை என் வலைப்பூவிற்கு வந்திருந்த அன்பு நண்பர் குடந்தை சரவணன் அவர்களை சந்தித்தது மகிழ்ச்சி.
சிவகாசிக்காரன் ராம்குமார், தென்றல் சசிகலா அவர்கள், யாமிதாஷா , ஜோதிஜி, கோகுலத்தில் சூரியன் வெங்கட், நக்கீரன் அவர்கள், ரூபக், தமிழ்வாசி பிரகாஷ், சங்கரலிங்கம் அவர்கள், இரா.எட்வின் ஐயா ஆகியோர் அறிமுகப்படுத்தி கொண்டனர்.சுப்புத்தாத்தா மேடையில் தனக்கு சென்ற ஆண்டு வழங்கப்பட்ட அடையாள அட்டையை தான் அமெரிக்காவில் தன் அடையாள அட்டையாக காண்பித்ததை கூறியபோது பெருமிதமாக இருந்தது. அவர் பேசுகையில் அவ்வளவு நேரம் அதிசயமாக இருந்த தமிழக மின்சாரம் அப்போது கட்டானது வேதனைக்குரியது. மேலும் அவரை சந்தித்தும் அளவளாவ முடியாமல் போனது வருத்தமே.. பிறகு எழுத்தாளர் பாமரன் அவர்கள் நகைச்சுவையுடனும், கருத்துச் செறிவுடனும் அருமையான சொற்பொழிவு தந்தார்.
அதன் பிறகு வெளியே வெஜ், நான்-வெஜ் என்று இரு பிரிவுகளாய் மக்கள் உண்ண ஆரம்பித்திருந்தார்கள். நான் "ப்யூர் நான்-வெஜ்" என்பதால் கொஞ்சம் பைனாப்பிள் கேசரி மட்டும் எடுத்துக் கொண்டு பின் டைரக்டாக சிக்கன் பிரியாணி சென்று விட்டேன். கடவுள் என்னைக்கும் என் பக்கம்தான் இருக்கார்ங்கிறத அப்போ மறுபடி உணர்ந்தேன். பின்னே முன் இரு தட்டுகளுக்கும் கிடைக்காத லெக் பீஸ் எனக்கு மட்டும் கிடைத்ததே!! உணவு இடைவேளையின் போது ரஞ்சனி அம்மா, "தளிர்" சுரேஷ், பழனி கந்தசாமி அய்யா, கேபிள் சங்கர் அண்ணன், கவிஞர் முத்து நிலவன், ரஹீம் கஸாலி, வால்பையன், பிலாசபி பிரபாகரன், ஆகியோரை சந்தித்தேன். ரஞ்சனி அம்மா என் பாடல் நன்றாக இருந்ததென கூறினார்.
பிறகு ஜாக்கி சேகர் அண்ணாவை வாத்தியார் பாலகணேஷ் சார் அறிமுகம் செய்து வைத்தார். ஆரூர் மூனா அண்ணாவைப் போல் இவரிடமும் பேசத் தயங்கி இருந்த என்னிடம் அவர் மிகவும் சகஜமாக பேசினார். அதற்குள் உள்ளே மயிலன் அவர்கள் கவிதை வாசிக்க, குடந்தையார் பாரதிராஜாவை மிமிக்ரி செய்ய, தனித்திறன்கள் அரங்கேறியது. பின் கவிஞர் மதுமதியின் குறும்படம் 90 டிகிரி திரையில் ஒளிர ஆரம்பிக்க, அரங்கமே அமைதியுடன் பார்த்தது. நேர்த்தியான முறையில் எடுக்கப்பட்ட அந்தப் படம் ஒரு அதிர்வை ஏற்படுத்தியது என்னவோ உண்மை. பின்னர் கண்மணி குணசேகரன் அவர்களின் பேச்சு தாலாட்டு போல் இருக்க நிறைய பேர் தூங்கியே விட்டார்கள்.. (சீனு, நான் உன்ன சொல்லலே). பிறகு சேட்டைக்காரன் அவர்களின் "மொட்டைத்தலையும் முழங்காலும்", வீடுதிரும்பல் மோகன்குமார் அவர்களின் "வெற்றிக்கோடு", சதீஷ் சங்கவியின் "இதழில் எழுதிய கவிதைகள்", யாமிதாஷா நிஷா அவர்களின் "அவன் ஆண் தேவதை, மற்றும் சுரேகா அவர்களின் புத்தகமும் ( அடிபட்டதில் மெடுல்லா ஆப்லங்கேட்டாவில் சில செல்கள் டேமேஜ் ஆயிடுச்சுன்னு நினைக்கிறேன். இவர் புத்தகத்தின் பெயர் மற்றும் இன்னும் சில பதிவர்களின் பெயர்களும்
மறந்து போச்சு.. )
விழாக்குழுவினருக்கு நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. இதற்கிடையில் "தமிழா.. தமிழா" பாடல் பாட ஒரு குழு அமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தேன். உற்சாகத்துடன் ஒத்துக் கொண்ட சீனு, கடைசி வரை தயக்கத்தோடே வந்த ரூபக், அடிக்கடி மாயமாய் மறைந்தாலும் மேடைக்கு வந்த ஸ்கூல்பையன், தானே முன்வந்து குறுகிய சமயத்தில் பயிற்சி எடுத்த குடந்தை சரவணன் அவர்கள் ஆகியோருடன் மேடை ஏறியது "Gangs of ஆவிப்பூர்". மனநிறைவுடன் பாடி முடித்தபோது அரங்கில் சொற்ப பேரே இருந்தனர். இதன் பின்னரும் அரங்கில் வீற்றிருந்த நாலைந்து நல்ல உள்ளங்களுக்கு நன்றி கூறி சீனு "ஆவேச" உரை நிகழ்த்தி விழாவை சிறப்பாக முடித்து வைத்தார். இந்த அழகிய பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த விழாக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள். தங்குமிடம் ஏற்பாடு செய்த அகிலா மேடத்திற்கு மீண்டும் ஒரு நன்றி. கோவைப்பதிவர்களை ஒருங்கிணைத்து, போக்குவரத்து ஏற்பாடுகள் செய்து அழைத்து வந்த கோவை நேரம் ஜீவாவுக்கும் நன்றிகள் பல.
தினந்தோறும் அலுவல்கள் ஏராளம்.. நாங்கள்
அதினிடையே பதிவெழுத மறப்பதில்லை.
குற்றம்குறை எழுத்துப் பிழை தாராளம்- அதை
ஏற்றுக்கொள்ள திருத்திக்கொள்ள மறுப்பதில்லை
இணையில்லா இணையத்தின் சாலையிலே- நம்
கற்பனைக்கு என்றுமந்த வானமே எல்லை..
பாராட்டு ஒன்றே தான் நாங்கள் கேட்கும் வரமே..!
தமிழா, தமிழா இணைவோமே- தோழா
தமிழால் தமிழால் இணைந்தோமே.
இணையத்தின் மூலம் இணைந்தோமே- இன்று
இசையில் கொஞ்சம் நனைவோமே.
ஆங்கிலம் கலவா தமிழாலே - பல
கவிகள், கதைகள் படைப்போமே.
எட்டுத் திக்கும் நம்ம தமிழ் பரவிடவே,
பாட்டேடுப்போம், பாட்டேடுப்போம், பாடிடுவோம்..
அருமை ஆ...வி...
ReplyDeleteநன்றிகள் பல...
நன்றி DD..
Deleteஇந்த அழகிய பதிவர் சந்திப்பை ஏற்பாடு செய்த விழாக்குழுவினருக்கு என் மனமார்ந்த நன்றிகள்.
ReplyDeleteஅருமையான தொகுப்புகள்.. பாராட்டுக்கள்..!
நன்றி அம்மா..
Deleteபதிவர் திருவிழாவை சிறப்பாக தொகுத்து ஒளிபரப்பு செய்த...
ReplyDelete‘கோவை ஆ.வி.’ தொலைக்காட்சிக்கு நன்றி.
இயக்குனர் வசிஷ்டரே பாராட்டி விட்டாரா? சபாஷ் ஆவி.. நல்லாத்தான் எழுதியிருக்கே போல..
Deleteஅருமை.
ReplyDeleteஅழகான தருணங்கள்....
ஆமா வெற்றி.. பசுமையானவையும் கூட.
Deleteதக்க சமத்துல உதவி பண்ணுன சக பதிவர்களை அடையாளப்படுத்தியது உனக்கு செண்ட்மெண்டா?! நன்றி மறப்பது நன்றன்று ஆவி!! அதை ஒரு போதும் நான் செய்ய மாட்டேன்.
ReplyDeleteஅப்படியில்ல அக்கா, நீங்க பேசி முடிச்சதும் எல்லார் கண்ணிலும் கண்ணீர்.. அதைத்தான் சொன்னேன்..
Deleteஇரண்டு தடவை பிரியாணி வாங்கி சாப்பிட்டதை சொல்ல விட்டுடிங்க. . .
ReplyDeleteஅப்பாடா ரெண்டு தடவை வாங்கினத தான் வாத்தி பாத்திருக்காரு.. அடுத்த முறை கவனிக்கல போல..
Deleteஉங்ளை நீங்க அறிமுகம் செய்யும் போது கைதட்டினால் ஜூஸ் வாங்கி தாரேன்னு சொல்லி ஏமாத்திட்டிங்க. . . .
ReplyDeleteஜூஸ் வாங்கி வச்சிருந்தேன் பாஸ். நீங்க அதுக்குள்ள விக்ரமின் ராஜபாட்டை பற்றி மேடையில் பேசப் போயிட்டீங்க..
Deleteமறக்க முடியாத சந்திப்பு. மீண்டும் அடுத்த சந்திப்பு எப்போது என்ற அவளை ஏற்படுத்திவிட்டது. ஆவியைப் பாரத்ததில் மிக்க மகிழ்ச்சி
ReplyDelete"அவளை" ஏற்படுத்திருச்சா? என்ன சொல்றீங்க.. ஓ ஆவலை ஏற்படுத்திருச்சா?? ஒரு நிமிஷம் பயந்துட்டான் இந்த ஆவி..
Deleteசீனு மட்டுமில்ல, நானும் லேசா கண் அசந்துட்டேன்
ReplyDeleteஹஹஹா.. சீனு கண்ணசரல அக்கா. நான் படம் பிடிக்கும் போது கண் சிமிட்டியது..
Deleteகலக்கலான உங்க பாட்டைதான் மிஸ் பண்ணிட்டேன்.
ReplyDeleteஆமா அக்கா. அடுத்த சந்திப்புல பாத்துக்கலாம்.
Deleteசுவையான சந்திப்பை சிறப்பாக தொகுத்தமை நன்று! வாழ்த்துக்கள் ஆவி!
ReplyDeleteமெதுவாகத் தொடங்கிய பதிவு இந்தப் பதிவில் கடகடவென நிறைவு பெற்று விட்டது!
ReplyDeleteஎல்லாவற்றையும் சொல்லிவிட்டீர்கள். திரும்பிப் போனதை சொல்ல வில்லையே! :)) சும்மா....
ReplyDeleteஅடுத்த சந்திப்பு எப்போ? எங்கே?
ஒரு சிறிய வேண்டுகோள்:
ReplyDeletefollow by email gadget போடுங்கள். எனக்கு உங்கள் பதிவுகளைத் தவறாமல் படிக்க இயலும், ப்ளீஸ்!
இப்போதே போட்டுவிடுகிறேன் அம்மா!!
Deleteஅப்பாடா! இனிமேல் உங்கள் பதிவுகளை தவறாமல் படிப்பேன். நன்றி!
ReplyDelete