Friday, September 6, 2013

பதிவர் திருவிழாவில் நஸ்ரியாவின் பங்கு-2 (பதிவர் பாடல் பிறந்த கதை)

                     மூன்றே வினாடிகள் தாம், என் மொத்தப் பவுண்டுகளும் மடாரென்று சாலையில் மோத "ஹெட்டுக்கு வந்தது ஹெல்மட்டோடு போனது" என்பது போல் அன்று ஹெல்மட் மட்டும் இல்லையென்றால் இந்நேரம் பல பதிவர்கள் ஆவிக்கு கண்ணீர் நஸ்ரியா (அஞ்சலி வேண்டாம்பா!) பதிவை எழுதிக் கொண்டிருப்பர். சுகமாய் வாழும் ஒரு பிரம்மச்சாரி கணப்பொழுதில் கண்ட்ரோல் இழந்து கல்யாணம் செய்து கொள்வது போல்,  அந்த ஒரு நொடி தடுமாறியதன் விளைவு "உலகம் சுற்றும் வாலிபன்" எம்ஜியார் போல் சுற்றிக் கொண்டிருந்தவன் "பாகப் பிரிவினை" சிவாஜி கணேசன் போல் மாறிவிட்டேன்.
விபத்தில் உண்டான வலிகளை விட பதிவர் திருவிழாவுக்கு என்னால் ஆனவற்றை செய்ய முடியாமல் போனதற்காக வருத்தப்பட்டேன்.


அடிகளும் வலிகளும் வீரனுக்கு ஜகஜம்!!

நானே பயந்து போன ஒரு படம்..


                       பதிவர் பாடல் எழுத ஊட்டி போலாமா, கொடைக்கானல் போலாமா என்று யோசித்துக்  கொண்டிருந்தவனை பொள்ளாச்சியிலேயே எழுதப் பணித்தது விதி.  சரியென்று கண்மூடி யோசிக்க, மீண்டும் வந்தாள் நஸ்ரியா.. இந்த முறையும்  தவறிழைக்க மனம் ஒப்பவில்லை. நஸ்ரியாவிற்காய்  ஒரு சந்தம் பாடினேன்.

 லாலா லாலா  லாலலலா- லல    
 லாலா லாலா  லாலலலா
                            
தேவதை போலே ஒரு பொண்ணு- அட
நடந்தே வந்தாள் எனக்கென்று..
கொஞ்சிக் கொஞ்சி பேசும் மொழியாலே- என்
இதயம் கவர்ந்தாள் லபக்கென்று..

                                  இந்த வரிகள் மனதில் ஓடிக் கொண்டிருக்கும் போதே மருத்துவமனையில் எனைப் பார்க்க வந்தனர் பதிவுலக நண்பர்கள் -எழில் மேடம், அவரது கணவர், ஜீவா மற்றும் உலக சினிமா ரசிகன்.  இவர்கள் வந்து போனதும் பதிவுலகத்துக்கு நான் ஆற்ற வேண்டிய கடமை ஞாபகத்துக்கு வந்தது. நஸ்ரியாவிற்காக யோசித்து வைத்திருந்த அதே மெட்டில் பதிவர் சங்கதிகளை நுழைக்க நீங்கள் ரசித்துக் கேட்ட "தமிழா தமிழா" பாடல் உருவானது.



                              பதிவர் திருவிழா பக்கம் வர வர என் கைகளும் கொஞ்சம் கொஞ்சம் குணமாக, கோவை பதிவு நண்பர்களின் உதவியுடன் சென்னை புறப்பட்டேன்.  நாங்கள் செல்லும் வண்டிக்காக ஹோப்ஸ் எனும் இடத்தில் காத்திருந்த போது முன்னரே வந்திருந்த "கோவை சதீஷ்" எனும் பதிவரிடம் எனை அறிமுகப் படுத்திக் கொண்டேன். என் பெயரைக் கேட்டு சற்று மிரண்டு போன அவர் எனைப் பார்த்து "நீங்க ஆவிக கூடவெல்லாம் பேசுவீங்களா" என்றார். "ஏங்க, என்னைப் பார்த்து ஏன் அப்படி ஒரு கேள்வி கேட்டீங்க." என்றேன்.  "இல்லே உங்க கருப்பு ட்ரெஸ்ஸும்ம சந்தனப் பொட்டும் அது மாதிரி இருந்தது " என்றார். அதன் பின்னர் என்டமுரி வீரேந்திரநாத் பற்றியும் மற்ற பேய்க்கதை எழுதும் எழுத்தாளர்களைப் பற்றியும் பேசிக்கொண்டிருந்தோம். அதே சமயம் வண்டி வர உள்ளிருந்து "சென்னை, சென்னை, சென்னை" என்று கூவிக் கொண்டே ஜீவா கதவைத் திறந்துவிட உள்ளே ஐக்கியமானோம்.

கொலைப் பசியுடன் கோவை பதிவர்கள்.. 

ஆங்.. இதுதான் அண்டா..


                                 ஏராளமான பதிவர் கூட்டத்தை எதிர்பார்த்து பெரிய வண்டியை புக் செய்து பின்னர் ஆறு பேருடன் சென்றதால் அமர்வதற்கு ஏராளமான இடம் இருந்தது. பல்வேறுபட்ட விஷயங்களையும் பேசிக் கொண்டே வர செல்லும் தூரம் வேகமாக குறைந்துகொண்டே வந்தது. சேலம் தாண்டியதும் உணவிற்கு நிறுத்தி ஜீவாவின் சிக்கன், கலாகுமரன் அவர்களின் காளான் பிரியாணி, எழில் மேடத்தின் தக்காளி சோறும் முட்டையும, மற்றும் ஆவியின் நகைச்சுவை இப்படி எல்லாவற்றையும் சுவைத்தபடியே மதிய உணவை முடித்து போக்குவரத்து நெரிசலின் ஊடே நுழைந்து வடபழனி சினி ம்யுசிக் ஹாலை அடைந்த போது எங்களை வரவேற்க முன் நின்றது கவியாழி ஐயா, புலவர் ஐயா மற்றும் ரமணி ஐயா.



தொடரும்..




40 comments:

  1. /// ஆவியின் நகைச்சுவை ///

    அது தான் நல்ல சுவையாக இருந்திருக்கும்...

    ReplyDelete
    Replies
    1. அப்படியா சொல்றீங்க!!

      Delete
  2. தேர்ந்த எழுத்து நடை....அந்தப் படத்தைப் பார்த்து நானும் பயந்துட்டேன்...

    ReplyDelete
  3. அடடா...காளான் பிரியாணி மிஸ் பண்ணிட்டேனே.

    பதிவர் திருவிழாவுக்கு என்னால் வர முடியாத சோகத்தை...
    ஓங்கி அடிச்சு ஒண்ணரை டன் வெயிட்டை மேலும் ஏத்துறீங்க...உங்க பதிவின் மூலமா.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. பிரியாணி மட்டுமா.. அருமையான சந்திப்பு நிகழ்வுகளை மிஸ் பண்ணிட்டீங்க..

      ஸார், இப்போதான் ஆரம்பிச்சுருக்கேன்.. இப்போவே ஒன்றரை டன்னுன்னா அப்போ போகப் போக பாரம் இன்னும் கூடிடுமே?? ;-)

      Delete
    2. @உ.சி , //அடடா...காளான் பிரியாணி மிஸ் பண்ணிட்டேனே.// சார் அது மட்டுமா ஜீவாகிட்ட ஒன்னு சொன்னேன் ஒன்பது கொண்டு வந்தார்.

      Delete
  4. அதுக்குள்ள தொடரும் போட்டுட்டீங்களே..!!!

    ReplyDelete
    Replies
    1. பெருசா போட்டா மக்கள் நிறைய விஷயங்கள ஸ்கிப் பண்ணிடறாங்க.. அடுத்த பதிவில் நீங்க சொன்ன மாதிரி கொஞ்சம் நிறைய எழுதறேன்..

      Delete
    2. //பெருசா போட்டா மக்கள் நிறைய விஷயங்கள ஸ்கிப் பண்ணிடறாங்க.. //

      கரக்ட்டட்ட்ட்டு ...! அந்த மக்கள்ல நானும் ஒருத்தன் ....!

      Delete
  5. விபத்தைக்கூட நகச்சுவையாக பதிவிட்டூள்ளீர்கள் நீங்கள் பலே ஆள் ஆவி.

    //உணவிற்கு நிறுத்தி ஜீவாவின் சிக்கன், கலாகுமரன் அவர்களின் காளான் பிரியாணி, எழில் மேடத்தின் தக்காளி சோறும் முட்டையும, மற்றும் ஆவியின் நகைச்சுவை // நீங்கள் பலே பலே ஆள்தான்:)

    ReplyDelete
    Replies
    1. ஸாதிகா அக்கா, எல்லாம் உங்க கிட்ட எடுத்துகிட்ட ட்ரையினிங் தான். ஒரு ஆட்டோவையும் பரோட்டவையும் வச்சு ஒரு பதிவ தேத்துன உங்க முன்னாடி நான் ரொம்ப சாதாரணம்.. :-)

      Delete
  6. படத்தைப் பார்த்ததும் உண்மையிலேயே எனக்கும் பயம் வந்துடுச்சு...

    ReplyDelete
    Replies
    1. அது நான் அசந்து தூங்கிகிட்டு இருக்கும்போது மக்கள் எடுத்தது.

      வருகைக்கும், கருத்துக்கும் நன்றி..

      Delete
  7. Welcome back to usual write up Boss...!

    First paragraph is awesome ....! Way to go...!

    ReplyDelete
    Replies
    1. ஓ, இதுதானா அது.. நம்மள ஒரு பார்முலாவுக்குள்ள சிக்க வச்சிருவாங்க போலிருக்கே.. அலர்ட்டா இருடா ஆறுமுகம்!!

      Delete
  8. அன்பின் ஆவி - அருமையான பாடல் -நன்று நன்று - பதிவு அருமை - தொடரட்டும். நல்வாழ்த்துகள் - நட்புடன் சீனா

    ReplyDelete
    Replies
    1. நன்றி ஐயா, கருத்துக்கும் பாடலை ரசித்தமைக்கும்..

      Delete
  9. ஜீவாவின் சிக்கன், கலாகுமரன் அவர்களின் காளான் பிரியாணி, எழில் மேடத்தின் தக்காளி சோறும் முட்டையும, மற்றும் ஆவியின் நகைச்சுவை
    >>
    ஓசி சாப்பாட்டை சாப்பிட்டதை கூட எப்பௌடி சமாளிக்குது பாரு இந்த ஆவி!?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி.. படிச்ச இத்தனை பேத்துல இத யாருமே நோட்டீஸ் பண்ணலே.. என் அக்கா ஒருத்தவங்க தான் இத கண்டுபிடிச்சு சொல்லியிருக்காங்க.. சும்மாவா சொன்னாங்க சேம் ப்ளட்டுன்னு..

      Delete
    2. @ ராஜி, நீ என்ன கட்டுசோறு கொண்டு வந்தே என்று கேட்டதற்கு வாயக்கொண்டு வரன்னு சொன்ன ஆளுதானே. வாய் உள்ள பிள்ளை பிழைச்சிக்கும்.

      Delete
    3. உண்மைதான் சார்.. வாய் உள்ள பிள்ளை தான் சாப்பிடும்.. சாப்பிட்டாதான் பிழைக்க முடியும்.. அதானே சொல்றீங்க? ஹிஹி..

      Delete
  10. நானே பயந்து போன ஒரு படம்..
    >>
    நீங்க பயந்தது சரி! ஆனா, பின்னாடி அமர்ந்திருப்பவங்க கண்டிப்பாய் உங்க அம்மா,அத்தை, பெரியம்மா, சித்தி இப்படி யாராவது ஒருத்தர்தான் இருப்பாங்க. அவங்க எவ்வளாவு அசால்டா சிரிச்சுக்கிட்டு இருக்காங்க, அவ்வளவு காமெடியா இருந்திருக்கு உங்களை பார்க்க!!

    ReplyDelete
    Replies
    1. என்னை வச்சு காமெடி பண்றது இப்போ உலக வழக்கமாயிட்டுது..

      Delete
  11. நல்ல பயணம்... உங்க படத்த பார்த்து நானே பயந்துட்டேன் அண்ணா... இப்படிப்பட்ட சூழ்நிலையிலையும், தொடர்ந்து எழுதிய தாங்கள் ஆர்வம் என்னை மிரளவைக்கிறது...

    ReplyDelete
    Replies
    1. நன்றி தம்பி.. என் படைப்புகளை ரசிக்கிற உன் போன்ற ஒரு சிலரை நினைத்துப் பார்க்கும் போது வழிகள் பறந்து மாயமாகிறது.

      Delete
    2. வலிகள். அல்லது வழிகள்???

      Delete
  12. என்னது ஆவிக்கு அடி பட்டதா........!!!!!!!!!!!!!! ???????.ஆவி அடிக்கும் என்று தான் நான் கேள்விப் பட்டுள்ளேன் .இது என்ன புதுசா இருக்கே ....!!!!!செத்த பிணம் எப்பையா எழும்பி நடந்திருக்கு ....!!!!! .பதிவர்கள் மாநாட்டுக்கு நானும் போயிருந்தால் உண்மை வெளித்திருக்கும் .ஆவி சேர் உங்க காலை யாரும்
    கவனிக்கவே.......... இல்லைப்
    போலும்.........:))))))))).வலைத் தளத்தில் வந்து
    எங்களைப் பயமுறுத்தாதீங்க...... .உங்களுக்குப் புடிச்ச கொக்குப் புறியாணியை எப்படியும் சமைத்துத் தந்திடுறேன் .சின்ன வயதில் இருந்தே எனக்கு ஆவி என்றால் அப்படி ஒரு பயம் .அந்த அம்மாக்கள் எப்படி ஜாலியா ஆவி பக்கத்தில் இருக்காங்க .இதுக்கெல்லாம் ஒரு தைரியம் சத்தியமா வேணும் ஆவி !!!!!...:))))))

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா, இந்த ஆவிய வீழ்த்த பாகிஸ்தான் காரன் செய்த சதின்னு நினைக்கிறேன்..

      உங்களுக்கு யாரோ தப்பா சொல்லிக் கொடுத்திருக்காங்க.. ஆவி எப்பவும் நல்லது. பேய், பிசாசு தான் கெட்டது..

      //கொக்குப் புறியாணியை எப்படியும் சமைத்துத் தந்திடுறேன்//

      இந்த ஆவிக்கு வான்கோழி ப்ரை தான் இஷ்டம்.. ஹிஹி..

      Delete
  13. வேதனையையும் நகைச்சுவையாக சொன்னது சிறப்பு! வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  14. அது சரி இத விட ரெண்டு மடங்கு ப்ளேட்டுகள் உங்க முன்னாடி இருந்ததே அந்த போட்டோ எங்கே?

    ReplyDelete
    Replies
    1. ஹிஹிஹி.. நாங்க அத மறைச்சுடோம்லே..

      Delete
  15. முட்டை எடுத்து குடுங்க சார்ன்னு அன்பா கேட்டப்ப விளங்கள இப்ப வெளங்கிருச்சு. ஜாக்கரதயா இருங்க என்று சொன்ன சம்சாரத்தோட பேச்ச கேட்காதது தப்புதான்யா...தப்புதான்.

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. சார் அந்தப் படம் எவ்வளவு தத்ரூபமா வந்திருக்கு பாருங்க சார்.. நீங்க சாப்பிடப் போற மாதிரியே வந்திருக்கு..

      // ஜாக்கரதயா இருங்க என்று சொன்ன சம்சாரத்தோட பேச்ச கேட்காதது தப்புதான்யா..//

      ஹஹஹா..

      Delete
  16. நானே பயந்து போன ஒரு படம்..//

    வருத்தப்படவைத்தது..

    அத்தனை வலியையும் வென்று குணமாகி பயணமும் மேற்கொண்டது தங்கள் மன உறுதியை காட்டுகிறது..

    ReplyDelete
  17. எனக்கு எந்த திரைப்படம் பார்த்தாலும், சென்சார் சர்டிபிகேட்லேர்ந்து பார்க்கணும். புத்தகம் படிச்சா அட்டையிலிருந்து வாசிக்கணும். பதிவர் திருவிழாவை என் மனம் போல நீங்கதான் எழுதியிருக்கீங்க. வாழ்க! வளர்க!
    தொடருங்கள் படிக்க காத்திருக்கிறேன்.
    உங்களை சந்தித்தது மகிழ்ச்சி!

    ReplyDelete
    Replies
    1. ஆஹா.. என்ன மாதிரியே தான் நீங்களுமா.. டீட்டெயிலா எழுதிடறேன்.. பதிவர் சந்திப்பில் உங்களை சந்தித்ததில் மகிழ்ச்சி அம்மா..

      Delete
  18. மறுபடியும் மொதல்லயிருந்தா...அப்படின்னு நினைக்கத் தோணலை...திரும்பவும் எப்ப அப்படி கிளம்பப் போறோம்ன்ற ஆவலைத் தூண்டியது உங்க பதிவு ம்...ம்... கலக்குங்க....

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...