இன்று செப் 8, 2013 ஞாயிற்றுக் கிழமை சுமார் பன்னிரெண்டரை மணிக்கு பதிவுலகின் "காதல் மன்னன்", பரங்கியர்களின் "கனல் கண்ணன்", "கிதார் சாம்ராட்", இளவட்டங்களை கிறங்கடிக்கும் "புன்னகை இளவல்" என்றெல்லாம் மக்களால் செல்லமாக அழைக்கப்பட்ட ஒரு நட்சத்திர பதிவர் எங்கள் தங்கத் தலைவி "செல்வி. நஸ்ரியா" வை "மொக்க" எனும் தகாத வார்த்தையால் வசைபாடியதைக் கண்டித்து "அகில உலக நஸ்ரியா மன்றம்" சார்பில் பலத்த கண்டனக் குரல் எழுப்பப் படுகிறது.
நாட்டியான பிகர் எனக்கு,
தாட்டியான பிகர் உனக்கு..
என்று இதுநாள் வரையில் சண்டையில்லாமல் வாழ்ந்திருந்தோமே,
போன்லெஸ் எனக்கு,
லெக் பீஸ் உனக்கு..
என்று பிரச்சனையில்லாமல் பிரித்துக் கொண்டோமே?
அவற்றையெல்லாம் ஒரு கனாக் காலமாக மாற்றிவிட்டு இன்று கட்டி வைத்த கன்னுக்குட்டி கூட பொறுத்துக் கொள்ள முடியாத ஒரு வார்த்தையால் வளர்ந்து வரும் ஒரு 'வாலிபியை' அவதூறாக பேசிய அன்னாரைக் கண்டித்து இன்று இரவு ஒன்பது மணி முதல் நாளைக் காலை எட்டு மணி வரை உண்ணாவிரதமும், கண்விழியாப் போராட்டமும் நடத்தப்படும் என தெரிவித்துக் கொள்கிறோம். பொதுமக்களும் இதில் பங்கு கொண்டு ஆதரவுக் கரம் நீட்டுமாறு வேண்டி விரும்பி கேட்டுக் "கொல்லு"கிறோம்!!
சீனு வந்து அடுத்த ஆட்டம் தொடங்குவாரு :)
ReplyDeleteஅதான்பா இதுக்கு மறுப்பு தெரிவிப்பார் :)
மறுப்பு, மன்னிப்பு ரெண்டையும் நாங்க ஏத்துக்கறதா இல்லை அக்கா..
Deleteஅடப்பாவி... ஈரப் பேனாக்கி பேனை பெருமாளாக்குரதுங்கிறது இது தானா...
ReplyDelete:-) ஹா ஹா சொல்ல நினைத்தேன் ஸ்.பை
Deleteஸ்.பை - டமால்னு கட்சி மாறுவீங்கன்னு நான் நினைக்கவே இல்லை..
Deleteயு டூ கௌதமன் சார்.. ;-)
Deleteநானும் இதை வண்மையாக கண்ணடிக்கிறேன் சாரி கண்டிக்கிறேன். உங்கள் "நியாயமான" போராட்டத்திர்க்கு என் ஆதரவை தெரிவிக்கிறேன். . .போர். . .போர். . .ஆமாம் போர். . .
ReplyDeleteஆஹா, நம்ம படைக்கு வலுவான ஒரு ஆள் சேர்ந்தாச்சு.. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்?? ஆமா போர்..போர்..இல்லையேல் வார்.(War)!!
Deleteதம்பி ஒரு சின்ன ஆலோசனை, இப்படி திட்டுற மாதிரி தடவிக் கொடுக்க கூடாது. அடிச்சா ஒரே அடி, வாங்குறவனுக்கும் வலிக்கனும். படிக்கிறவனும் பயப்படனும், அப்படி இருக்கனும் பதிவு. இது ரொம்ப சாப்டா இருக்கு.
ReplyDeleteஇப்படி உசுப்பேத்தியே .....
Deleteகுருஜி, மொதல்ல தட்டிக் கேட்போம் அப்புறமா "தட்டி" கேட்போம்.. அடுத்த முறை அதிரடி தான்..
Deleteகொன்னேப்புடுவேன் :)
Deleteதங்கள் கண்டன போராட்டத்தை எதிர்த்து வழக்கு பதிவு செய்ய உள்ளோம்.. முடிந்தால் என்னை எதிர்த்து போராட்டம் நடத்திப் பார்க்கவும் - ஆண்ட்ரியா ரசிகர் வட்டம்
ReplyDeleteவழக்கை எடுத்து நடத்த இருப்பவர் எங்கள் வக்கீலையா கவியாழி அவர்கள்...
கவியாழி தயாராய் இருங்கள்.. இது போன்ற நஸ்ரியா ரசிகர்களை இரும்புக் கரம் கொண்டு நாம்தான் ஒடுஇக்க வேண்டும்
எங்களுக்காக போராட போஸ்பாண்டி இருக்காருப்பா.. இருந்தாலும் எதிர் தரப்பு வக்கீல் பார்க்கும் போது தொடை நடுங்குது. இருந்தாலும் கவியாழி ஐயா அவர்களுக்கு ஆவிப்பா மீதும், நஸ்ரியா மீதும் நல்ல ஒப்பீனியன் உள்ளதால் அவர் நியாயத்தின் பக்கமே நிற்பார் என நம்புகிறேன்..
Deleteபோர்..போர்..இல்லையேல் வார்.(War)!!
Deleteயாரு கவியாழியா? :) சரியானவர் தான்...
Deleteஅன்பின் ஆவி அவர்களுக்கு முதலில் கமெண்ட் மாடரேஷனை எடுத்துவிட்டுவிட்டு எங்களை கண்டித்து போராட்டம் நடத்துங்கள்... எங்கள் நியாயமான கமண்ட்டை நீங்கள் நீக்கிவிடுவதன் சாத்தியகூறு மிக அதிகம்.. மேலும் இதற்கு முன் இப்பதிவில் ஆண்டிரியாவை ஆதரித்தும் நஸ்ரியாவை எதிர்த்தும் நான் பதிவு செய்திருந்த வரலாற்று பின்னூட்டங்கள் பலவற்றை நீர் தன்னலம் கருதி மட்டுப் படுத்தி விட்டீர்...
ReplyDeleteவக்கீலையா தம புராணம் படி இதற்கு நாம் என்ன தண்டனை கொடுக்கப் போகிறோம் என்பதை கூறுங்கள்...
ஹஹஹா.. இந்த கோரிக்கையை நான் ஏற்கிறேன்.. கமென்ட் மாடரேஷன் இன்றோடு நீக்கப்படும்.
Deleteஅதோடு வக்கிலையா வினாயக சதுர்த்தியை முன்னிட்டு லீவில் இருப்பதால் போரை புதன் கிழமைக்கு ஒத்தி வைத்துக் கொள்ளலாம்..
9 மணிக்கு மேல உண்ணாவிரத போராட்டம் ஓக்கே! கண்விழியா போராட்டம் நடத்துனா. நம்மைளைலாம் நம்பி இருக்கும் ஃபேஸ்புக்கை யாரு காப்பாத்துறது!? அதனால, இந்த போராட்டத்தில் நான் பங்கெடுக்கலை!!
ReplyDeleteஆஹா, அப்படி ஒரு மேட்டர் இருக்கா.. சரி நீங்க உண்ணாவிரதப் போராட்டம் மட்டும் இருங்க.. நம்ம கோரிக்கை நிறைவேறும் வரை போர்..போர்.. இல்லையேல் வார்.. வார்..
Deleteஅப்படி போடு அரிவாளை...!
ReplyDeleteஎந்த சைடு நீங்க அருவாள வீசரீங்கன்னு சொல்லவே இல்லையே DD?
Delete(உங்களுக்கு "பதிவுலக கர்ணன்" பட்டம் கொடுத்தது நஸ்ரியா ரசிகர் மன்றம் என்பதை நீங்க டிசைட் செய்வதற்கு முன் ஒரு நொடி சிந்திக்கவும்.. :-) )
1) நஸ்ரியான்னா யாரு?
ReplyDelete2) சீனுவுக்கு இன்னொரு பட்டமும் உண்டு! (ஹிஹிஹி... நான் கொடுத்தது) புன்னகை இளவல். (பேசும்போதே அவர் கிளுகிளுவென்று சிரிப்பதைப் பார்த்திரு/கேட்டிரு க்கிறீர்கள்தானே!)
1) "தேவதை" ங்கிற வார்த்தைய புக்குல படிச்சிருப்பீங்க.. சினிமால கேட்டிருப்பீங்க.. ஏன் ரேடியோல கூட கேட்டிருக்கலாம்.. ஆனா நீங்க நேர்ல பார்த்திருக்க முடியாது. அப்படி பார்த்திருந்தா இப்போ நஸ்ரியா யாருன்னு கேள்வி கேட்டிருக்க மாட்டீங்க.. ;-)
Delete2)சரி அதையும் சேர்த்திடறேன்.. இப்போ நீங்க நஸ்ரியா கட்சி தானே??
ஆஹ் ஸ்ரீராம் சார் நஸ்ரியா யாருன்னு தெரியாதா உங்களுக்கு? :)
Deleteநாட்டியான பிகர் எனக்கு,
ReplyDeleteதாட்டியான பிகர் உனக்கு..
என்று இதுநாள் வரையில் சண்டையில்லாமல் வாழ்ந்திருந்தோமே,
போன்லெஸ் எனக்கு,
லெக் பீஸ் உனக்கு..
என்று பிரச்சனையில்லாமல் பிரித்துக் கொண்டோமே?
ஆஹா.. என்ன அற்புதமான கொள்கை !
நன்றி ரிஷபன் சார்!!
Deleteபோரிலும் நல்ல கொள்கைகள் வேண்டுமே!!
Deleteநல்ல கொள்கை தான் :)
Deleteஎந்த கூட்டணியில் இணைவதேன்று ஒரே குழப்பம். நமக்கு ஆண்ட்ரியாவும் பிடிக்கும் நஸ்ரியாவும் பிடிக்கும். ஆகையால், இந்தச் சண்டையில் இருந்து மாதவி ரசிகர் மன்றம் வெளி நடப்பு செய்கிறது
ReplyDeleteஅப்டி போடு :) மாதவியுமா... பகவானே உலகம் தாங்குமா?
Delete'Comment Moderation'ஐ நீக்கிய ஆவிக்கு ஒரு சல்யூட்
ReplyDelete:D ஒரு கமென்ட்-க்கு இவ்ளோ பெரிய போரா ! நஸ்ரியா வின் கொ.ப.செ வே நீ வாழ்க ! எவ்ளோ நாள் நஸ்ரியாக்கு ரசிகனாக இருப்பீங்க னு பார்க்கலாம் :)
ReplyDeleteஆனந்தை தானே சொல்றீங்க விஜயன்? :)
Deleteஇன்னைக்கும் "தில்லானா மோகனாம்பாள்" படம் டீவில போட்டா எங்க தாத்தா மொதோ ஆளா வந்து உக்கார்ந்துக்கிறார். ரசனை என்பது காலம் கடந்தது விஜயன் சார்..
Deleteமஞ்சுக்கா, நஸ்ரியா ரசிகன்னு சொன்னதுக்கப்புறம் இப்படி ஒரு கேள்வி கேக்குறீங்களே..? நியாயமா?
Deleteஎன்னோட ஆதரவுக் கரம் தானே!!!
ReplyDeleteகொடுத்துட்டாப் போச்சு, ஆனால் நான் நஸ்ரியாகிட்ட தான் கொடுப்பேன்...
அவ்வ்வ்....
விவகாரமான ஆளா இருப்பாப்புல போலிருக்கே
Delete