Wednesday, September 25, 2013

பயணத்தின் சுவடுகள்-13 (மனதை மயக்கும் மயாமி-3)பயணத்தின் சுவடுகள்...
தேசம்: 2; ஸ்தலம்: 9;  தொலைவு: 13.

மனதை மயக்கும் மயாமி  (அமெரிக்கா)
( ப்ளாரிடா )                              ஒரு நாள் முழுக்க சவுத் பீச்சிலும் Downtown எனப்படும் மயாமி நகர வீதிகளிலும் சுற்றித் திரிந்துவிட்டு மறுநாள் நார்த் பீச் சென்றோம். அங்கு கண்ணுக்கு எட்டிய தூரம் வரை வானின் நீலத்தை உட்கொண்ட கடலும், கடல் அலைகளும், திரைப்படங்களில் மட்டுமே இது போல் நீலவண்ண கடல் நீரை பார்த்திருக்கிறேன். அப்போதெல்லாம் காட்சியின் தரத்துக்கு (Richness) வேண்டி காமிராவில் வர்ணம் சேர்த்ததாகவே நினைத்து வந்தேன். நார்த் பீச் காதலர்களின் கனவு கடற்கரை என சொல்லலாம். 

நார்த் மயாமி  பீச்

ஓடி விளையாடு பாப்பா!


                               பெண்களின் ஆடைகள் குறைந்ததே வல்லுறவுக்கு காரணம் என்று சொல்லும் மூடர்கள் ஒருமுறை இங்கு வந்தால் தம் கருத்தை மாற்றிக் கொள்ளுவர் என்றே நினைக்கிறேன். 

யார் இவர்கள்..இளம் காதல் மான்கள்..
     

சலங்கை ஒலி?


ஆவி ஜம்ப் !!

                                கடற்கரைகளில் குப்பை போடுவதெற்கென்று ஆங்காங்கே குப்பைத் தொட்டிகள் வைத்து கடற்கரையை சுத்தமாக வைத்திருக்கின்றனர். மக்களும் சிரமம் பார்க்காமல் குப்பைத்தொட்டியில் போடுவதால் அந்த அழகான இடம் அழகு குறையாமல் இருக்கிறது. 

ஆங்காங்கே வைக்கப்பட்டிருக்கும் குப்பைத்தொட்டிகள்.


                               அங்கிருந்து புறப்பட மனமில்லாமல் புறப்பட்டு அட்லாண்டா நோக்கி பயணித்தோம். நாங்கள் நேரமின்மையால் பார்க்க முடியாமல் போன இடம் கீ வெஸ்ட்  எனப்படும் ஒரு மயாமிக்கு  அருகிலிருக்கும் ஒரு தீவு. மயாமி செல்ல விரும்புவோர் இதற்கும் நேரம் ஒதுக்கி செல்லுதல் நலம். அமெரிக்காவில் காணவேண்டிய இடங்களில் மயாமி  மிக முக்கியமான ஒன்றாகும். எனக்கு மிகவும் பிடித்த இடங்களுள் இதுவும் ஒன்று. இதைப் போலவே மற்றொரு இடத்தை பற்றிய பதிவை  அடுத்த பயணச் சுவடுகளில் எழுதுகிறேன்..பயணங்கள் முடிவதில்லை..


40 comments:

 1. படங்கள் மனதைக் கொள்ளைக்கொள்கின்றன

  ஆவி பாஸ் நீர் மச்சக்காரன் :)

  ReplyDelete
  Replies
  1. அடப்போங்க.. நீங்க வேற.. ஓரமா நின்னு போட்டோ எடுத்த என்னை மச்சக்காரன்னு சொல்றீங்களே, நியாயமா??

   Delete
 2. /// பெண்களின் ஆடைகள் குறைந்ததே வல்லுறவுக்கு காரணம் என்று சொல்லும் மூடர்கள் ஒருமுறை இங்கு வந்தால் தம் கருத்தை மாற்றிக் கொள்ளுவர் என்றே நினைக்கிறேன். ///

  ‘கோவை நேரம் ஜீவாவை’ குறி வைத்து தாக்கும் மர்மம் என்ன?
  [ இப்படித்தான் போட்டு கொடுக்கணும்.]

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. ஜீவா ஒரு மீசை வச்ச குழந்தை ஸார்.. அவரப் போய்... அவ்வ்வ்வவ்வ்வ்வ்!!

   Delete
 3. நம்மூரில் குப்பைத் தொட்டி வைத்தாலும் மக்கள் குப்பையைத் தொட்டியில் போட வேண்டுமே... அதற்கு தனியாக ஆட்கள் நியமிக்க வேண்டியிருக்கும்!

  ReplyDelete
  Replies
  1. ஆமா நீங்க சொல்றது சரிதான் ஸ்ரீராம் சார்.

   Delete
 4. வெறும் போட்டோ மட்டும்தான் இருக்கு.... மயாமி பத்தி இன்னும் நிறைய சொல்லியிருக்கலாம்.... அந்த ஜம்ப் எப்படி?

  ReplyDelete
  Replies
  1. ஒரு பத்து அடி பின்னாடி ஓடிப் போயி வேகமா ஓடிவந்து அப்படிக்கா குதிச்சா இப்படி வரும்.

   Delete
 5. // அங்கிருந்து புறப்பட மனமில்லாமல் // ஏன் புறப்பட மனமில்லன்னு போட்டோவ பார்த்தாலே தெரியுதே... இல்ல குதிச்சி குதிச்சி விளயாண்டத்த தான் சொன்னேன் மிஸ்டர் ஆவி

  ReplyDelete
 6. குப்ப தொட்டி வச்சு அதுல கொட்டி ம்..ம்.. நம்மூர ஆளுங்களுக்கு சுட்டு போட்டாலும் வராதே. குப்பையை குப்பை தொட்டியில் தான் போட வேண்டும் என்ற பழக்கம் தொட்டில் பருவத்தில் இருந்தே கற்றுக் கொடுக்கப்பட வேண்டும். வெறும் படிப்பு எதையும் கற்றுக் கொடுப்பது இல்லை.

  ReplyDelete
  Replies
  1. உண்மைதான் ஸார். அங்க சின்னப் பசங்க கூட குப்பைகளை பொது இடங்களில் போடாமல் குப்பைத் தொட்டியைத் தேடித் போய் போடுகிறார்கள். அந்த விஷயத்த பெற்றோர்கள் சிறு வயதிலிருந்தே இங்கேயும் கற்றுக் கொடுக்க வேண்டும்.

   Delete
 7. பெண்களின் ஆடைகள் குறைந்ததே வல்லுறவுக்கு காரணம் என்று சொல்லும் மூடர்கள் ஒருமுறை இங்கு வந்தால் தம் கருத்தை மாற்றிக் கொள்ளுவர் என்றே நினைக்கிறேன்.//

  வணக்கம் தலைவரே!

  மேலே தாங்கள் சொன்ன கருத்தை நான் மறுக்கிறேன்!! ஆடை குறைவு என்பது அமெரிக்காவில் ஒரு பெரிய விசயமே இல்லை, அனால் அதே மாதிரி உடை அணிந்து நம்மூர் வீதிகளில் உலா வந்தால் சில மணித்துளிகளாவது நின்று பார்க்காமல் கடப்பவர்கள் மிகவும் அரிது! நிச்சயமாக ஆடை என்ற ஒன்று இப்போது நடந்து கொண்டிருக்கும் பாலியல் குற்றங்களுக்கு மிக முக்கிய காரணி! ஆடை மட்டும் காரணி என்று நான் சொல்லவில்லை அதுவும் ஒரு காரணி! ஆகவே அமெரிக்க மியாமி கடற்கரையும் நம்ம ஊரையும் ஒப்பீடு செய்து இது போன்ற கருத்துக்களை கூறவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன் தல ... நன்றி

  ReplyDelete
  Replies
  1. பாஸு, ஒரு பொண்ண நின்னு பார்த்து ரசிக்கிறது தப்பில்லே. அந்த எல்லைய தாண்டுவது தான் தவறுன்னு சொல்றேன். எல்லா ஊர்லயும் மனுஷங்க தான் இருக்காங்க.. அங்கே இருக்கிற டிரஸ்ஸு, போன், வாட்சு, பேச்சு, பழக்கம், எல்லாத்தையும் ஏத்துக்க தயாரா இருக்கிற நாம இதை மட்டும் ஏன் ஏற்றுக் கொள்ள முடியாது.

   நம்ம பெண்கள் நாகரீகமா ஆடை அணியணும்ங்கறத நானும் வலியுறுத்தறேன். ஆனா அப்படி செய்யலேனா நாங்க எல்லை மீறுவோம்னு சொல்லுற ஆண்களையும் நிச்சயமா கண்டிக்கிறேன்.

   Delete
  2. ஆவிக்கு சபாஷ். சரியான கருத்தை சொல்லி இருக்கேப்பா! நம்ம அரசன் இன்னும் கொஞ்சம் வளரனுமோ மனசளவில்!!

   Delete
  3. தேங்க்ஸ் அக்கா.. உங்க தம்பியாச்சே..

   Delete
  4. அடுத்த வாரம் சென்னை போறேன்,, அப்போ அரசன எலியட்ஸ் பீச்சுக்கு கூட்டிட்டு போய் "நல்லா" விளக்கி சொல்றேன் அக்கா!!

   Delete
  5. மீண்டும் உங்க கருத்துடன் மாறுபடுகிறேன் தல!

   இரசிப்பது வேறு தான்! நான் ஒத்துக்கொள்கிறேன். அவங்களோட பழக்க வழக்கங்களின் மீது நம்ம ஆட்கள் அதிக மோகம் கொண்டு அலைவது சமீப காலமாகத்தான் நடந்தேறி வருகிறது (குறிப்பாக பத்தாண்டு ஆண்டுகளுக்குள் தான் இந்த அளவு மாற்றம்)...

   தலைவரே அமெரிக்காவில் ஆடை குறைப்பு என்பது இன்று நேற்றல்ல வந்த கலாச்சாரம்! அவர்களின் இயல்பே ஆடை குறைவாக அணிவது தான்! அது அவர்களின் வாழ்வியல்! அமெரிக்க பெண் முழுக்க சேலை கட்டி சென்றால் நிச்சயம் வேடிக்கை பார்க்கும் அமெரிக்க இளசுகள்! ஏனெனில் வழக்கத்தை விட வேறு மாதிரியான உடை என்பதால் கவனம் கொள்ளும்!

   அதைத்தான் நான் இங்கு சொல்கிறேன், நேற்று வரை தாவணியோ , சுடிதாரோ அணிந்து சென்ற பெண் பாதி உடம்புடன் (மேற்கத்திய உடையுடன் ) சென்றால் எத்தனை பேர் பார்க்காமல் செல்வார்கள் என்று நினைக்கிறிர்கள்!

   தல நான் மேற்கத்திய உடைக்கு எதிரி அல்ல ... , இந்த வயரை தொட்டால் ஷாக் அடிக்கும் என்று சொல்பவனை புறந்தள்ளி விட்டு என் விருப்பம் நான் இந்த வயரை பிடித்து தொங்குவேன் என்று சொல்லும் கால சூழலில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்!

   நீங்களும் , நானும் வேண்டுமானால் எல்லையை மீறாமல் இருக்கலாம், ஆனால் நிறைய பேர் அப்படி கட்டுப்பாட்டில் கண்ணை கவரும் ? வகையில் உடை அணிந்திருந்தாள், அதுவும் தனிமையில் சிக்கினால் என்ன ஆகும்! மீண்டும் சொல்கிறேன் தல ஆடை குறைவினால் பாதிப்பு என்னவோ அந்த ஆடைகளை அணியும் பெண்களுக்கு தான்! சோ ஆடையும் ஒரு காரணி என்பதை நான் ஆணித்தரமாக சொல்கிறேன்!

   Delete
  6. வாங்க வாங்க நாம எலியட்ஸ் எப்படி இருக்கும்ன்னு தெரியல, பெசன்ட் நகர் அட்ட்கசாம்

   Delete
  7. ஒரு வகையில் ஆவியின் கருத்தும் அரசனின் கருத்தும் சரி தான்.

   ஆனால் நம்ம ஊரில் பெரும்பாலான ஆடவர் மனப் பக்குவம் அடையவில்லை என்பது என் கருத்து.

   ஆடை அணியும் பெண்களிடம் தவறு இல்லை, அதை தவறாக பார்க்கும் ஆண்களின் மனதில் தான் தவறு உள்ளது.

   தன் வாழ்வில் தோழியாகவோ/காதலியாகவோ/தங்கையாகவோ/ அக்காவாகவோ ஏதேனும் ஒரு வகையில் தன்னுடன் நெருக்கமாக ஒரு பெண்ணுடைய உறவு இருந்தால், அவன் பெண்மையை மதிக்கக் கற்றுக்கொள்கிறான்.

   எலியட்ஸில் தொடருவோம் ....

   Delete
  8. ரூபக் நீங்க நினைக்கிற அதே விஷயத்தை தான் நானும் சொல்றேன்.. எலியட்ஸ் வரும்போது நான் முன்னமே சொன்ன மாதிரி உருட்டு கட்டை (நாட்டு கட்டை அல்ல) எல்லாம் எடுத்துட்டு வந்திடுங்க.. ஹஹஹா

   Delete
 8. ஜம்ப்க்கு ஆள் யாரையாவது செட் பண்ணி போட்டோ எடுத்திங்களா தல, செம செம .. எவம்லே அங்க அண்ணனுக்கு ஒலிம்பிக்ஸ் பதக்கம் ஒன்னு பார்சல்

  ReplyDelete
  Replies
  1. இல்லேங்க.. நிசமா நானே ஜம்ப்பியது.. ஒலிம்பிக்ஸ் பதக்கமா அவ்வ்வ்வவ் ...

   Delete
 9. போட்டோவுல என்ன கஞ்சத்தனம் இன்னும் நாலஞ்சு சேர்த்து போட்டிருக்கலாம் ..

  ReplyDelete
  Replies
  1. ஹிஹிஹி.. இப்பவே மேல பாருங்க.. ஆண்கள் மட்டும் தான் கமென்ட் போட்டிருக்காங்க.. ஒருவேளை என் வாசகர் வட்டத்தை உடைக்க நீங்கள் செய்யும் சதி இதுவோ??

   Delete
  2. அப்படின்னா இந்த டீலுக்கு வாங்க! தனி மடலுக்கு அனுப்பவும் தல

   Delete
 10. குட்டி சுவரை தாண்டி குதிப்பது போல் இருக்கிறதே

  ReplyDelete
  Replies
  1. ஒரு குட்டிச் சுவரே, குட்டிச் சுவரை தாண்டுகிறதே, அடடே! ங்கிற மாதிரி கேக்குறீங்க.. சுவற்றுக்கும் எனக்கும் சுமார் நாலைந்து அடி இருக்கும் பாஸ் ..

   Delete
 11. வீட்டுல நாய்க்குட்டி வளர்க்குறவங்க எதையாவது தூக்கி போட்டா அந்த குட்டி நாய் ஜம்ப் பண்ணி பிடிக்கும். அதுப்போலவே இருக்கு முதல் ஃபோட்டோ பார்க்கும்போது!!

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. அது நான் இல்லை அக்கா.. என் நண்பன் ஜெயராஜ்.. இரண்டாவது படத்தில் அழழழக்க்க்க்கா ஜம்ப் பண்றேனே அதுதான் நான்!!

   Delete
 12. அழகான பயணக் கட்டுரை! நம் ஊரில் குப்பைத்தொட்டி வைத்தாலும் அதில் குப்பையை போட மாட்டார்கள் குழந்தையை போடுவார்கள்! தொடருங்கள்! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. உண்மைதான் நண்பா..

   Delete
 13. இன்னும் கொஞ்சம் போட்டோ பெருசா போடுங்க.....ஹீ ஹீ

  ReplyDelete
  Replies
  1. வர்ற தீபாவளிக்குள்ள வலைதளத்தை கொஞ்சம் சீரமைக்கப் போறேன். அதுக்கப்புறம் பாருங்க.. எல்லாம் XXL தான். போட்டோவ சொன்னேன்.. ஹிஹிஹி

   Delete
 14. //செல்ல விரும்புவோர் //

  மீ விரும்புறேன் .. பிளைட்டுல வித்அவுட்டு உண்டா பாஸ் ....!

  ReplyDelete
  Replies
  1. ஹஹஹா.. "வித் அவுட் யு" வேணும்னா உண்டு

   Delete
 15. @ ஆவி & அரசன்

  நல்ல விவாதம் ...! தொடரலாமே ...!

  ReplyDelete
  Replies
  1. வாங்கப்பா.. ரெண்டு பேரும் சட்டைய கிழிச்சுக்கற வரை ஓரமா குச்சி ஐஸ் சாப்பிட்டுகிட்டே வேடிக்கை பார்ப்பீங்களே..

   ஜோக்ஸ் அபார்ட்.. இதுல உங்க கருத்து என்ன சுப்பு?

   Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...