Thursday, August 29, 2013

கோநேஜீ டிராவல்ஸ்


                        "தல" பட ரீலிசுக்கு காத்திருந்த அதே டென்ஷன், எதிர்பார்ப்பு, சந்தோசம், ஆர்பரிப்பு எல்லாமே இந்த பதிவர் திருவிழாவுக்கும் உண்டு. காலண்டரின் தேதிகளை கண்ணா பின்னவென்று கிழித்து செப்டம்பர் ஒன்றில் நிறுத்தியபோது உற்சாகம் பீறிட்டது.  ஆனால் முன்கூட்டியே தேதிகளை கிழித்து விட்டபடியால் வீட்டில் ஏச்சுகளும் பேச்சுகளும் ஏராளம்.. சரி, ஏசுநாதரையே ஏசிய கூட்டம் தானே இது என்று விட்டுவிட்டு மற்றொரு காலண்டரைக் கிழிக்க புறப்பட்டேன்.



                          அடுத்த காலண்டரில் கை வைத்ததும் ஆளாளுக்கு தடுக்க வந்தார்கள்.. கைகள் குணமாக வேண்டுமெனில் சிறு சிறு உடற்பயிற்சிகள் செய்யுமாறு டாக்டர் கூறியுள்ளார், அதில் இதுவும் ஒன்று என்றதும் அமைதியானார்கள். காலண்டரில் தேதிகள் கிழித்ததற்கு எதற்கு இவ்வளவு ஆவேசம் என்று யோசித்தேன். ஒரு கட்டத்தில் எனக்கும் அவர்கள் கோபம் நியாயமாக பட்டது. எங்கள் வீடு மட்டுமல்லாமல் இந்த ஒரு மாதத்தில் நான் சென்ற உறவினர் வீடு, நண்பர்கள் வீடு என எல்லார் வீட்டு காலண்டரிலும் இப்போது செப்டம்பர் ஒன்று சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்.



                              நான் சென்னையில் நடக்கும் பதிவர் மாநாட்டிற்கு செல்வதை எப்படியோ தெரிந்து கொண்ட (??) என் உறவினர்களும் நண்பர்களும் ஆலோசனை கூற, சில நாட்கள் முன் அனுமதி அளித்த அம்மா இப்போது "கை கொஞ்சம் சரியாகட்டுமே பா.." என்றார்.. நானோ "அம்மா,  நீங்க வலுவிழந்த இந்த இரு கைகளை பார்க்காதீங்க.. என் வலக்கையாக ஜீவாவும், பாஸ்கரன் சாரும் வர்றாங்க.. இடக்கையாக எழில் மேடமும், கலாகுமரன் சாரும் வர்றாங்க.. கூட என் மனதில் இருக்கிற நம்பிக்"கை".. அப்புறம் எப்பவும் என் கூட இருக்கும் நீங்க வேண்டுற பிள்ளையாரின் தும்பிக்"கை".. என்றதும் மறுபேச்சு ஏதும் இல்லாமல் சரியென்றார்.



                                 உற்சாகத்தின் உச்சியில் இருக்கும் நான் உலகத்துக்கு சொல்லிக் கொள்வது என்னவென்றால் (அரசியல்வாதி பேசுற மாதிரி ஆயிடிச்சோ??) வரும் செப்டம்பர் முதல் தேதி பதிவர் சந்திப்பை முன்னிட்டு கோவையிலிருந்து சென்னை செல்லும் சிறப்பு பேருந்து "கோநேஜீ டிராவல்ஸ்"  (விரிவாக்கம் கேக்கப்படாது) சனிக்கிழமை (ஆகஸ்ட் 31) காலை கோவை நேரத்தில் கிளம்பும் சாரி ஒன்பது மணி சுமாருக்கு கோவை காந்திபுரம் அருகில் உள்ள ஓட்டல் தமிழ்நாடு முன் இருந்து பயணம் துவங்கும் என்பதை இந்த நிகழ்காலத்தில், இனியவை கூறலாய் எடுத்துக் கொண்டு சிற்றுந்தில் பல உலக சினிமாக்களை ரசித்த படியே புன்னகையை சின்ன சின்ன சிதறல்களாய் விட்டு வண்ணத்துப்பூச்சியாய் செல்லலாமென்றும் ஆண்களுக்கும், புதுமை பெண்களுக்கும்  மகிழ்ச்சியுடன் கூறி, இந்த பொன்னான சந்திப்புக்கு வாய்ப்பளித்த சென்னை பதிவர் சந்திப்புக் குழு கமிட்டி மெம்பர்கள் அனைவருக்கும் நன்றி கூறி, மேலும் இதுபோன்ற சந்திப்புகள் அமைவது குறிஞ்சிப் பூ பூப்பது போல் எப்போதாவது நிகழும் என்பதால் (யாருப்பா மைக்கை பிடிங்கினது)..



                                   சரி சரி, கொங்கு நாட்டு அன்பர்களே..  இதுவரை நீங்க முடிவெடுக்கலைன்னாலும் பரவாயில்ல.. திருவிழாவிற்கு வர நீங்க இப்ப ஆசைப்பட்டா உடனே உங்க செல்பேசியை எடுத்து 9894401474  என்ற எண்களை ஒற்றி "ஹலோ, நெப்போலியனா?" என்று கேட்டவுடன் "நீங்க பதிவர் சந்திப்புக்கு வர்றீங்களா" என்ற கேள்வி மறுமுனையிலிருந்து ஒலிக்கும். உங்கள் வருகையை அங்கே பதிவு செய்துகொண்டு திருவிழாவில் கலந்து கொண்டு கவி மழையில் நனைய வருமாறு நட்புடன் கேட்டுக் கொள்கிறேன்.. வர்ட்டா..





25 comments:

  1. பஸ் புடிச்சாச்சா.... குட் குட்...

    ReplyDelete
    Replies
    1. ஆமா பாஸ்.. எல்லாம் கொநேஜீயின் ஏற்பாடு!!

      Delete
  2. என் வீட்டு தினசரியும் செப் 1 என்றே சிரிக்கிறது இது உன் வேலையா?

    ReplyDelete
    Replies
    1. காலங்கார்த்தாலே இந்த பதிவ படிச்சதுக்கப்புறம் குட்டித் தூக்கம் போட்டீங்களே.. அப்ப தூக்கத்துல நடந்து போய் நீங்களே கிழிச்சது தான் அது..

      Delete
  3. //(யாருப்பா மைக்கை பிடிங்கினது)..//அது ஜீவாவா, ஜீவாவேதான். அம்மணிகளோடு சேர்ந்து ஆவலோடு எதிர் பார்க்கிறோம் அவரின் தெல்லுதமிழ் பேச்சை.

    ReplyDelete
    Replies
    1. அவர்கிட்டயிருந்து "தெல்லு" தமிழ் பேச்சு கேட்க முடியுமான்னு தெரியாது. ஆனா கண்டிப்பா "தெள்ளு"டமில் பேச்சு கேட்க முடியும்..

      Delete
    2. அது லொள்ளு தமிழ் இல்லியா ...?

      Delete
  4. நெப்போலியனா?? அவரும் கூட வாராரா தாங்க முடியலடா சாமி

    ReplyDelete
    Replies
    1. நெப்போலியன் எப்போ வருவார், எப்படி வருவார்ன்னு யாருக்கும் தெரியாது.. ஆனா வரவேண்டிய நேரத்துல கரெக்டா கொநேஜீ கூட்டிட்டு வருவார்.. (ஹ்யூமர்.. ஹ்யூமர்)

      Delete
  5. வாங்க வாங்க.. ஆவலுடன் வாசலில் காத்திருக்கிறோம்.

    ReplyDelete
    Replies
    1. அப்ப அன்னைக்கு full ஆ சமையலே கிடையாதா உங்க வீட்டுல?? (எங்க புண்ணியத்துல உங்க வீட்டார் எல்லாரும் உங்க சமையலில் இருந்து விடுதலை போல??)

      Delete
  6. என் வலக்கையாக ஜீவாவும், பாஸ்கரன் சாரும் வர்றாங்க.. இடக்கையாக எழில் மேடமும், கலாகுமரன் சாரும் வர்றாங்க.. கூட என் மனதில் இருக்கிற நம்பிக்"கை".. அப்புறம் எப்பவும் என் கூட இருக்கும் நீங்க வேண்டுற பிள்ளையாரின் தும்பிக்"கை".. என்றதும்
    >>
    வாயை மூடிக்கிட்டு போய் ரெஸ்ட் எடுடா உலக்கைன்னு சொன்னாங்களா?!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா..

      இத சொல்லி முடிக்கும் போதே அவங்க பாதி மயக்கத்துல இருந்தாங்க.. அதுக்கு மேல பேச அவங்ககிட்ட தெம்பு இல்ல.. :-)

      Delete
  7. மற்றொரு காலண்டரைக் கிழிக்க புறப்பட்டேன்
    >>
    பிளாக்கராகி இதுவரை என்னத்த கிழிச்சேன்னு யாரும் உங்களை கேட்டுட முடியாதில்லை!!

    ReplyDelete
  8. திருவிழாவில் கலந்து கொண்டு "கவி மழையில்" நனைய வருமாறு நட்புடன் கேட்டுக் கொள்கிறேன்..

    அப்டிக்கா , குடை , ரெயின்கோட் எல்லாம் எடுத்துட்டு போய்டுங்க மக்களே . மழையில நனைஞ்சு குளிர் ஜூரம் , ஜன்னி எது வேணா வரலாம் ...! உசார் மக்களே உசார் ...!

    ReplyDelete
    Replies
    1. ஹஹஹா.. ஆனா நீங்கதான் ஏமாத்தீட்டீங்க நண்பா!!

      Delete
  9. //எல்லார் வீட்டு காலண்டரிலும் இப்போது செப்டம்பர் ஒன்று சிரித்துக் கொண்டிருப்பதைக் காணலாம்// ஆவிக்கு எங்கும் உலவல் தான் போல


    //கூட என் மனதில் இருக்கிற நம்பிக்"கை"
    அப்புறம் எப்பவும் என் கூட இருக்கும் நீங்க வேண்டுற பிள்ளையாரின் தும்பிக்"கை"// நீர் எப்பயும் இப்படியா இல்ல இப்படித்தான் எப்பவுமா ?

    ReplyDelete
    Replies
    1. ஆவின்னாலே அப்படி தானே..

      இப்பதான் இப்படி.. இல்லேன்னா எப்பவும் அப்படி..!!

      Delete
  10. Replies
    1. நன்றி.. அது நானே வடிவமைத்தது.. அதை இனம் கண்டு பாராட்டியமைக்கு நன்றி..

      Delete
  11. இடது கை தயாரா இருக்கு ஆனந்த....வாங்க நாம ஒரு கை என்ன இரண்டு கை பார்த்திடலாம்..

    ReplyDelete
    Replies
    1. இப்படை தோற்கின் எப்படை வெல்லும்.. வாழ்க கோநேஜீ!! வளர்க அவர் புகழ்!!

      Delete
  12. //என்றதும் மறுபேச்சு ஏதும் இல்லாமல் சரியென்றார்.// ஷப்பா எப்படி தான் வீட்ல சமாளிக்கிறாங்களோ.. எப்படி தான் ரெண்டுநாள் சமாளிக்கப் போறோமோ... அட ஆண்டவா

    ReplyDelete
    Replies
    1. நான் ரெண்டு நாள் தங்கணும்னு நீங்க ஆசைப்படறது புரியுது.. ஆனா ஒரே ஒரு நாள் தான் தங்கற மாதிரி வர்றேன்..

      Delete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...