Sunday, August 18, 2013

ME, LORD கணேஷ், & பாலகணேஷ்..


                                அவருடைய எழுத்துக்களை தொலைவில் இருந்து (ஒரு ஐநூறு  கிலோமீட்டர்) பார்த்து வித்தை கற்றுக் கொண்ட ஏகலைவன் போல், என் குருநாதரிடமிருந்து பல கலைகளை கற்றுக் கொண்டேன். குறிப்பாக எழுத்துகளை மக்கள் நேசிக்க ஒரு மெல்லிய நகைச்சுவை இருத்தல் நலம். சுருங்கச் சொல்லி விளங்க வைப்பது போன்ற விஷயங்களை அவரிடம் படித்து தெரிந்து கொண்டேன். துரோணரின் சீடராய் பல அர்ஜுனர்கள் கலக்கிக் கொண்டிருக்க இந்த ஏகலைவனை கண்டு கொள்வாரோ என்ற ஏக்கமும் இருந்தது. ஆயினும் இந்த "எழுத்துலக துரோணாச்சாரியார்" என்னையும் விளித்து பாராட்டியது என் எழுத்துகளுக்கு கிடைத்த ஓர் அங்கீகாரமாய் உணர்ந்தேன்.


                                  இப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்துல தான் சென்னை போகிற வாய்ப்பு அமைஞ்சுது எனக்கு. அதே சமயம் தோழி மஞ்சுபாஷிணி அவர்களின் வருகையும் அமைந்துவிட, மற்ற பதிவர்களையும் சந்திக்கும் பாக்கியம் கிடைத்தது எனக்கு.. அந்த சந்திப்பின் போது அவருடைய விருந்தோம்பலில் மனம் நிறைந்தது. காலை வேளையில் அவர் குடிக்கும் ஒரு "உற்சாக பானம்"  (சாரி ஸார், கம்பெனி சீக்ரெட்ட வெளிய சொல்லிட்டேன்) இப்போது நினைத்தாலும் என் நாவில் தித்திக்கிறது. (அடுத்த முறை வரும்போது கட்டாயம் ரெசிபி கொடுங்க!)

                                    மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்னு சொல்வாங்க.. ஆனா என்னைப் பொறுத்தவரை அது அம்மாவுக்கு தான் பொருந்தும். அதுவும் சாருடைய அம்மாவின் அன்பையும், உபசரிப்பையும் பார்த்த பிறகு அது அவர்களுக்கு மட்டும் தான் பொருந்தும். (கொடுத்து வச்சவர் சார் நீங்க..) வாத்தியாரின் தீவிர ரசிகனான எங்கள் "வாத்தியார்" அவரைப் போலவே அம்மா என்ற மூன்றெழுத்துக்கு அவ்வளவு மரியாதையும் அன்பும் செய்பவர். அந்தப் பயணத்தின் போது  எனக்கு அவர் அன்பாய் ஒரு அன்பளிப்பைக் கொடுத்தார். அது "சரிதாயணம்" எனும் காவியம்.


                                        எனக்கு சின்ன வயசிலிருந்தே ஒரு கெட்ட பழக்கம். யாராவது ஜோக் சொன்னாலோ, அல்லது நகைச்சுவையாய் கமெண்ட் அடித்தாலோ சுமார் மூன்று நிமிடத்திற்கு  குறையாமல் சிரிப்பேன். மற்றவர்கள் எல்லோரும் சிரிப்பதை நிறுத்திவிட்டு என்னை ஒரு மாதிரி பார்ப்பார்கள். இந்தப் பழக்கத்தை மிகவும் கஷ்டப்பட்டு கல்லூரி காலத்தில் நிறுத்தி விட்டேன். அதன் பிறகு இப்போது தலைவரின் "சரிதாயணம்"  படித்த போது  அந்தப் பழக்கம் மீண்டும் ஒட்டிக் கொண்டது. எவ்வளவு முயன்றும் தவிர்க்க முடியவில்லை. அதுவும் பொதுவாக நான் புத்தகம் வாசிப்பது இரவு பத்தரை மணிக்கு மேல் என்பதால் அதனுடைய பின்விளைவுகள் அதிகம். வீட்டார் மட்டுமல்லாது அண்டை வீட்டாருக்கும் அவ்வப்போது டெர்ரர் கொடுப்பதுண்டு.  நேற்று எதிர் வீட்டு ஆண்ட்டி  என் அம்மாவிடம் "என்ன நேத்து உங்க வீட்டுல நைட்டு பன்னெண்டு மணிக்கு ஒரே சிரிப்பு சத்தமா கேட்டுதே.. " என்றார்.. என் அம்மாவோ "ஓ..அதுவா, அது எங்க வீட்டுல இருக்கிற ஒரு ஆவி பண்ணின கலாட்டா" என்றாரே பார்க்கலாம்!



                                 அது சரி, டைட்டில்ல ME, LORD கணேஷ், & பாலகணேஷ் ன்னு போட்டிருக்கு.. ஆவி, பாலகணேஷ் ஒகே.. எங்க ரெண்டு பேருக்கு நடுவுல LORD கணேஷ் எங்கிருந்து வந்தாருன்னு தானே பார்க்கறீங்க? நான், பாலகணேஷ் சார் மற்றும் LORD கணேஷ் மூணு பேருக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கு.. என்னன்னு கண்டுபிடிச்சீங்கன்னா ரகசியா கிட்ட சாரி ரகசியமா என்கிட்டே சொல்லுங்க.. ஹிஹி..

(சரிதாயணம் பற்றி மற்றொரு பதிவில் எழுதுகிறேன்.. சரிதாயணம் படிக்க என்னைப் போல் நீங்களும் ஆவலாக இருந்தால் இங்கே கிளிக்கவும்.)

36 comments:

  1. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் - அவர் எழுத்தின் ரகசியம்...!

    ReplyDelete
    Replies
    1. வழக்கம் போல் முதல் அட்டன்டென்ஸ் போட்டுடீங்க.. சூப்பர்..

      Delete
  2. போட்டோல பக்கத்தில இருந்த என்னையும் சீனுவையும் கட் பண்ணினதுக்கு எங்களது கண்டனங்கள்...

    ReplyDelete
    Replies
    1. ஐயோ நண்பா, அதுல கட் பண்ணினா என்ன? உங்கள என் இதயத்துல வச்சிருக்கேன்.. :-)

      Delete
    2. ச்சோ... ச்சோ... ச்சோ... முடியல...

      Delete
  3. //காலை வேளையில் அவர் குடிக்கும் ஒரு "உற்சாக பானம்" //

    அதுக்குப் பேர் காப்பி...

    ReplyDelete
    Replies
    1. ராங் ஆன்ஸர்.

      Delete
    2. டீ, காபி, ஹார்லிக்ஸ் எதுவும் கிடையாது, இது வேற.. உடனே ஜீவா மாதிரி யோசிக்கப்படாது.. இது வேற வேற..

      Delete
    3. யோவ்..என்னை ஏன் இழுக்குற...

      Delete
  4. //நான், பாலகணேஷ் சார் மற்றும் LORD கணேஷ் மூணு பேருக்கும் பொதுவான ஒரு விஷயம் இருக்கு.. என்னன்னு கண்டுபிடிச்சீங்கன்னா //

    இதுகூட தெரியாத பச்சை மண்ணா நாங்க... மூணு பேருக்கும் பெருந்தொப்பை உண்டு...

    ReplyDelete
  5. மச்சி..அது தொப்பை தானே..அடடா பப்ளிக்ல சொல்லிட்டனா

    ReplyDelete
    Replies
    1. என்ன மச்சி இப்படி பண்ணிட்டே.. யாருக்கும் தெரிய வேணாம்னு தான் ரகசியமா சொல்ல சொன்னேன்.. :-)

      Delete
  6. வாழ்த்துக்கள் சகோ நல்லதொரு சந்திப்பு .மேலும் தொடரட்டும் !

    ReplyDelete
  7. என் அண்ணாவின் அன்பும், அம்மாவின் உபசரிப்புக்கும் ஆளானவர்கள் மீண்டும் அவற்றை பெற ஏங்குவார்கள். அண்ணாவோட காலை உற்சாக பாணம் என்னன்னு எனக்கு தெரியுமே!! உனக்கு முன்னாடியே நானும், தூயாவும் கூட சாப்பிட்டிருக்கோம்!!

    ReplyDelete
    Replies
    1. நீங்களும் ட்விஸ்ட் வைக்கரிங்களே சகோ

      Delete
    2. ரூபக்- மூளைய ப்ரெஷ்ஷா வச்சுக்கப்படாது.. கொஞ்சம் யோசிக்கலாம்.. :-)

      Delete
    3. ராஜி அக்கா.. பார்த்தீங்களா.. தம்பிய விட்டுட்டே போய் சாப்பிட்டுடீங்க..

      Delete
  8. அட (பா)ஆவி! தன் வீட்டுக் குழந்தைய செல்லம் ‌கொஞ்சற அம்மாக்கள் மாதிரி நான் எழுதின சரிதாயணத்தை காவியம்னு சொல்லிட்டியே... பாக்கறவங்க இதைப் படிச்சே சிரிப்பாங்களோன்னு தோணுது... சரி, எல்லாரும் சிரிக்கணும்கறதுதானே நம்ம நோக்கம்..! சிரிச்சாலும் மகிழ்ச்சிதான்!
    -தொடரும்...

    ReplyDelete
  9. மக்களே... மக்களுக்கு மக்களே... யாரும் குழம்ப வேண்டாம். ஆவி சொல்லிருக்கற அந்த உற்சாக பானத்தோட பேர் ‘ஓட்ஸ் கஞ்சி’ காலையில அதைக் குடிச்சுட்டு ஓட்டமா, நடையான்னே தெரியாத அளவுல ஒரு மணி நேரம் வெளில சுத்திட்டு வீட்டுக்கு வந்து குளிப்பேன். இப்ப ரெண்டு மாசமா அந்த ஓட்ட நடை நின்னு போச்சு. மறுபடி ஆரம்பிக்கணும். இதாங்க என் அழகின்(?) ரகசியம்! ஹி... ஹி...!
    -தொடரும்...

    ReplyDelete
    Replies
    1. உண்மையிலேயே அது நாள் முழுவதும் உற்சாகத்தை கொடுக்கும் பானம் தான்! வாசகர்களின் கற்பனை குதிரையை ஓட விடாமல் கம்பெனி சீக்ரெட்ட ஒடச்சுட்டீங்களே ஸார்..

      Delete
  10. அப்பனே ஏகலைவா...! உன் துரோணரின் வீட்லயும் மனசுலயும் எல்லாருக்கும் இடம் உண்டுங்கறது நிஜந்தான். ஆனா தங்கை ராஜிக்கு எப்பவுமே முதலிடம். அப்புறம்தான் மத்தவங்கல்லாம். அதனால... டேக் இட் ஈஸி!
    -தொடரும்...

    ReplyDelete
    Replies
    1. என் அக்கா தானே நம்பர் ஒன்.. சந்தோசம் தான் ஸார்!

      Delete
  11. ‘சரிதாயணம்’ படிச்சுட்டு மனசு விட்டு ரசிச்சுச் சிரிச்சேன் அப்படிங்கற உன்னோட வார்த்தை இன்னும் பல நகைச்சுவை‌ப் படைப்புகளை உருவாக்கணும்கற தீவிர எண்ணத்தை எனக்குள்ள விதைச்சுருச்சு. என்னை தீவிரவாதியாக்கின ஆவியே...! நீ நீடூழி வாழி!
    -தொடராது... ஹி... ஹி...!

    ReplyDelete
    Replies
    1. ஹாஹா.. ஒரே பதிவுக்கு இவ்வளவு கமெண்ட்ஸ் ஆ.. அடியேன் சந்தோசம் அடைந்தேன்..நன்றி ஸார்..இதுபோல் பல நூறு படைப்புகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம்..

      Delete
  12. 'ஆ'னந்த் 'வி'நாயகன் 'பா'லகணேஷ்
    'ஆ'வி'க'ணேஷ்

    சரியா தலைவரே

    ReplyDelete
    Replies
    1. தம்பி, நீயெல்லாம் விஞ்ஞானியா வந்திருக்க வேண்டிய பையன்.. நாஸா மிஸ் பண்ணிடுச்சே உன்ன..

      அதுசரி, அதென்ன ஆவிகணேஷ்??? சரியா புரியலேங்கிறதுக்காக தான் நியுட்டனின் முதல் விதியோட பிஸிக்ஸ் புக்க மூடி வச்சவன்.. இப்படி யோசிக்க வைக்கிறியே??

      Delete
  13. வாத்தியாருக்குக் உற்சாக டானிக் கொடுத்த ஆவிக்கு டபுள் 'ஓ'

    ReplyDelete
    Replies
    1. இதெல்லாம் பெருமையா? கடமைப்பா கடமை..

      Delete
  14. மூணு பேருக்கும் நான் கண்ட ஒற்றுமை...மிகச்சிறந்த கலா ரசிகர்கள்.
    எதிரில் வரும் கலாவையும்...கலையையும் ஒன்றாக கருதி ரசிப்பவர்கள்.

    ‘தொப்பை’ என்ற ஒற்றுமையை நீங்கள் சொலவது எனக்கு பிரியவில்லை.
    தொப்பை என்றால் என்ன?
    அது எப்படி இருக்கும்?

    ReplyDelete
    Replies
    1. "கலா" ரசிகர்கள்.. ஹாஹஹா...செம்ம..

      Delete
  15. சுவாரசியமான சந்திப்பைப்பற்றி இன்னும் அதிக சுவாரசியத்துடன் எழுதி விட்டீர்கள்!! சரிதாயணத்தை அவசியம் படிக்க வேன்டும்!

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...