அலுவல் நிமித்தமாக சென்னை வரும் வாய்ப்பு அமைய, அதே நேரம் இந்த ஏகலைவனின் குருநாதரிடமிருந்து ஒரு முகநூல் அழைப்பு - குவைத்தை சேர்ந்த ஒரு பதிவரின் சென்னை வருகையை ஒட்டி புலவர் ஐயா வீட்டில் பதிவர்கள் சந்திப்பு நடப்பதாக கூற, இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி சென்னை நண்பர்களை சந்திக்க முடிவு செய்து நானும் கலந்து கொள்ளலாமா என தலைவருக்கு தொலைபேசி வழி என் அவாவை தெரிவிக்க, அவரும் அவா ஒண்ணும் சொல்லமாட்டா, நீ வர்றது சந்தோசம் தான் என தன் உபசாரத்தை அங்கேயே துவங்கினார்..
அவன் கூறிய ரேட் எனக்கு மேலும் அதிர்வை ஏற்படுத்த "புஷ்பேக் தானே" என்றேன்.. "ஆமா சார், ஸ்லீப்பர் வேணும்னா சொல்லுங்க, ஒரு ஐம்பது ரூபா கூட ஆவும்" என்றான். இந்த ரேட்டுக்கு சென்னைக்கு எந்த ட்ராவல்ஸும் வராது என்று நன்கு அறிந்திரிந்தபடியால் கடைசியாக ஒரு கேள்வியை வைத்தேன்.. "வண்டி எத்தனை மணிக்கு எடுப்பாங்க?" என்றேன்.. சரிதான் ஒரு அடிமை சிக்கிட்டான் என்று நன்கு உணர்ந்த அவன் "இப்போ எட்டரை சார், ஒன்பது மணிக்கு எடுப்பாங்க" என்று கூறி அவன் கையிலிருந்த ஒரு "வெள்ளைத்தாளில்" 4 என்று எழுதி அதைச் சுற்றி அழகாய் ஒரு வட்டமிட்டு "அதோ நிக்குது பார் பஸ்சு, ஏறிக்கோ சார் " என்றான். "என்ன இது பேப்பர்லே எழுதி கொடுக்கறீங்க" என்றவனுக்கு "இதான் சார் டிக்கட்டு" என்று என் கைகளில் இருந்து ஒரு ஐநூறை பிடிங்கிக் கொண்டு மீதி நூற்றி ஐம்பதை திணித்தான்.
பஸ் எப்படி இருக்குமோ என்ற குழப்பத்தோடே பஸ்ஸை நோக்கி நகர்ந்தேன். இயற்கை உபாதை வேறு தொல்லை கொடுக்க பஸ் எடுக்க இன்னும் அரை மணி நேரமே உள்ளதால் ஓட்டமும் நடையுமாய் பேருந்தை அடைந்தேன். பேருந்தின் உள்ளே ஏறி நான்காம் நம்பர் சீட்டை பிடித்த போது கொஞ்சம் ஆறுதல். (எதிர்பார்த்த அளவுக்கு மோசமில்லை). நான் கொஞ்சம் 'அவசரத்தில்' இருந்ததால் இருக்கையில் என் பேக்கை வைத்துவிட்டு கீழிறங்கி வெள்ளை சட்டை அணிந்த டிரைவரிடம் "ஒரு அஞ்சு நிமிஷத்துல வந்துடுவேன்.. அதுக்குள்ள எடுத்துடுவீங்களா?" என்றேன்.. அவரோ என்னை ஏற இறங்க பார்த்து விட்டு "அத வண்டி டிரைவர்கிட்ட கேளுங்க" என்றபடி அவர் அருகிலிருந்த காரில் ஏறிச் சென்றார்.
நான் சுற்று முற்றும் பார்த்த போது வேறொருவரையும் அருகில் காணவில்லை. பொங்கி வரும் ஆத்திரத்தை அடக்கும் கலை கற்றிருந்த எனக்கு இந்த ஒரு கலை மட்டும் வசப்பட மறுத்த காரணத்தால் அருகிலிருந்த திருவள்ளுவர் பஸ் ஸ்டாண்டின் உள்ளிருந்த கட்டண சேவை மையம் நோக்கி ஓட, அப்போதும் என் கண்கள் பின்புறமாய் பஸ் நின்றிருந்த திசையை நோக்கியபடி இருந்தது. கண்ணிமைக்கும் நேரத்தில் காரியத்தை முடித்துவிட்டு பேருந்தை நோக்கி வெற்றி நடை போட, பஸ்ஸை அடைய சில நூறு அடிகள் இருக்கும் போது அந்த பஸ் நகரத் தொடங்கியது.
வேகத்தள (fast track) மணிக்காட்டி ஒன்பதைக் காட்ட மனம் பதைபதைக்க, பின்னங்கால் என் புதிய மொட்டை மண்டையில் அடிக்க ஓட்டம் எடுத்து, பஸ்சின் அருகில் வர, பஸ் நின்றது. உள்ளிருந்து டிரைவர் இறங்கி கதவை சாத்திவிட்டு எதிரில் இருந்த பேக்கரிக்கு சென்று ஒரு தம்மைப் பற்ற வைத்தார்.. பயபுள்ள இதுக்குத்தானா என்னை ஓட வச்சான் என்று திட்டிக் கொண்டே (மனதிற்குள் தான்) பஸ்சிற்குள் ஏற அப்போது தான் கவனித்தேன். உள்ளே என் சீட்டிற்கு முன் ஒரு கல்லூரி படிக்கும் பெண்ணும் (கொஞ்சம் சுமார் தான்) எனக்கு பின் இரு சீட்டுகளும் மட்டுமே நிரம்பியிருக்க வண்டியே காலியாக இருந்தது.
வண்டி ஏறியதும் தலைவருக்கு போன் செய்து " சார் இன்னும் அஞ்சு நிமிஷத்துல வண்டி எடுத்திடுவாங்க.. காலைல கோயம்பேடு வந்ததும் கூப்பிடறேன் என்றேன்.. அவரும் சரியென்று சொல்லிவிட்டு அவரின் மூத்த சிஷ்யப் பிள்ளை சீனு இன்னும் சற்று நேரத்தில் என்னை கூப்பிடுவார் என்று சொல்லிவிட்டு உறங்கச் சென்றார். நான் அந்த வார ஆனந்த விகடனில் பாரதிராஜா அவர்கள் இயக்குனர் மணிவண்ணன் அவர்களை புகழ்ந்து கூறிய வரிகளை படித்துக் கொண்டே கண்ணயர்ந்தேன். திடும்மென விழித்த போது வண்டி எங்கோ நின்றிருந்தது. செல்பேசி மணி பதினொன்றை காட்டியது. சீனுவின் காலைத் தவற விட்டுவோட்டோமா என்ற பதைபதைப்பில் பார்த்த போது அந்த "பிரபல பதிவரிடமிருந்து" கால் ஏதும் வந்திருக்கவில்லை. சரி எந்த ஊர் வந்திருக்கிறது என்று தெரிந்து கொள்ள வேண்டி தலையை சன்னலூடே வெளியே எட்டி நோக்கிய போது ஒரு விளம்பரப் பலகையின் முடிவில் காந்திபுரம், கோவை என்றிருந்தது. ஏஸி பஸ் என்று கூறிவிட்டு என் மொட்டை மண்டையில் வியர்வைப் பூக்கள் வேறு பூத்திருந்தது. கிளைமாக்சில் வீறுகொண்ட மொட்டை ரஜினி போல் பஸ்ஸை விட்டு கோபத்துடன் இறங்கினேன்.
"ஏய் மொட்டை, அவனுகளே பஸ்ஸ நிறுத்தி வச்சு இவ்வளவு நேரமா லந்த கொடுத்துட்டு இப்பதான் வண்டி எடுக்கறான்.. நீ எங்க எறங்கற?" என்று மதுரைத் தமிழில் ஒருவர் அன்புடன் கொஞ்ச அப்போதுதான் கவனித்தேன். டிரைவர் வண்டி எடுக்க தயாராய் இருந்தான். நிலைமையை உணர்ந்து "சாரி பாஸ்" என்றவாறு என் சீட்டில் அமர்வதற்காக நகர்ந்தேன். முன் அமர்ந்திருந்த அந்த மொக்கை பிகர் என்னைப் பார்த்து ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்தது, எரியும் பயரில் ஆயிலை ஊற்றியது. ஒருவாறாக வண்டி சென்னையை நோக்கி சீறிப்பாய்ந்தது..
தொடரும்..
இந்தச் சிரமம் யாருக்கும் வரக் கூடாது... (இரண்டு மணி நேர நல்ல தூக்கம்...) பிறகு தூக்கம் வந்ததா...?
ReplyDeleteஆமாங்க DD, யாருக்கும் வரக்கூடாது. முன் சீட்டிலோ பின் சீட்டிலோ எதுவும் தேறாத காரணத்தால் நல்லா தூங்கிட்டேன்..
Deleteஅந்த பிரபல பதிவர் வீட்டுக்கு போய் உன்நம்பர வாங்கிக்கறேன்னு சொல்லிட்டு எனக்கே கால் பண்ணாம டபாய்ச்சுட்டார் ஆனந்து. பசி.. சாரி, பிசி போல. பயணத்தில் உங்க சென்னை பயண அனுபவம் விறுவிறுப்பாவே ஆரம்பிச்சிருக்க.
ReplyDeleteபிரபலம் ஆயிட்டாலே ஒரு சிலர் இப்படித்தான் சார்.. ஆனா நம்ப சீனு அப்படியில்ல சார். காலைல சந்திச்சப்போ அதுக்கான காரணத்த சொன்னப்போ நான் நெகிழ்ந்து போயிட்டேன்..
Deleteம்.... எழுத்து நடையில் வித்தியாசம் தெரிகிறதே..... தொடர ஆவல்....
ReplyDeleteஅப்படியா நண்பா, நல்ல வித்தியாசமா, மோசமானதா.. க்லாரிபை ப்ளீஸ் ;-)
Deleteநல்ல வித்தியாசம் தான்...
Deleteஅப்ப சரி.. :-)
Deleteபடத்தில பேருந்து சூப்பராதானே இருக்கு. கஷ்டப்பட்டாலும் இஷ்டப்பட்ட நகைச்சுவை எந்த கஷ்டத்திலிருந்தும் காப்பாற்றும் !
ReplyDeleteமின்னுவதெல்லாம் பொன்னல்ல ஸார்..
Deleteஎன்ன பண்றது அடிச்சாலும் வலியில்லன்னு தானே சொல்லுவோம்.. ;-)
//அவரும் அவா ஒண்ணும் சொல்லமாட்டா, நீ வர்றது சந்தோசம் தான் என தன் உபசாரத்தை அங்கேயே துவங்கினார்..// ஹா ஹா ஹா
ReplyDelete//அவர் அருகிலிருந்த காரில் ஏறிச் சென்றார். // அடுத்தவங்க அசிங்கபட்டா ஏன்னா சந்தோசம்
//சீனுவின் காலைத் தவற விட்டுவோட்டோமா என்ற பதைபதைப்பில் // இன்னுமாயா இந்த உலகம் என்ன நம்புது
//"பிரபல பதிவரிடமிருந்து"// இப்படி உசுபேத்தியே நம்மள பிரபலம் ஆக்கிருவாங்க போல இருக்கே... சரி அது தான் விதின்னா நாலு பேருகிட்ட திட்டு வாங்க தயார் ஆகிக்கோடா கைப்புள்ள.... ம்ம்ம்ம் நடத்துங்கள்....
// "ஏய் மொட்டை, அவனுகளே பஸ்ஸ நிறுத்தி வச்சு இவ்வளவு நேரமா லந்த கொடுத்துட்டு இப்பதான் வண்டி எடுக்கறான்.. நீ எங்க எறங்கற?" // என்ன பிரபலம்ன்னு சொன்னதுகே இந்த எபெக்ட்னா... :-) நல்ல வேணும்
என்ன தம்பி, விட்டுட்டே குமார பாக்க போயிட்டே.. உன் கூட டூ!!
Deleteநல்ல நகைச்சுவை நடையில பயணத்தொடர் அட்டகாசம் . ரெண்டு மூணு இடங்கள்ள குபுக்குன்னும் , ஒருசில இடங்கள்லா முனுக்குன்னும் சிரிச்சேன் ....! சூப்பர் பிரதர் ...!
ReplyDeleteவருகைக்கு நன்றி ஜீவன்சுப்பு.. அடுத்த பதிவுல நீங்க குபீர்னு சிரிக்கற மாதிரி எழுத முயற்சி பண்றேன்,, :-)
Deleteநல்லா இருக்கு மச்சி உன் அனுபவம்...
ReplyDeleteஏன் மச்சி லேட்டு???
Deleteகோவை குசும்பு வார்த்தைகளில் வெளிபடுகிறது சுவாரஸ்யமான பயண தொடக்க அனுபவம் அடுத்து முடியும் வரை எதிர்பார்க்கலாம் போல கோவை டு சென்னை சென்னை டு கோவைன்னு பதிவை தேத்துங்க ஆவி ....வாழ்த்துக்கள்
ReplyDeleteகொஞ்சம் அதிகமா எதிர்பார்க்க வச்சிட்டனோ??
Delete