இயக்குனர் சிகரம் பாலச்சந்தர் இயக்கி சூப்பர் ஸ்டார் தன் நகைச்சுவை நடிப்பால் அசத்திய படம் தில்லு முல்லு.. அந்தப் படத்தின் அக்மார்க் ரீமேக் தான் இந்த புதிய தில்லு முல்லு. அதே அண்ணன்-தம்பி ஆள்மாறாட்டக் கதை. கண்ணா லட்டு திங்க ஆசையா படம் போல் அல்லாமல் இந்தக் காலத்திற்கு ஏற்றவாறு பட்டி பார்த்திருக்கிறார்கள்.
பழைய தி.மு வில் கதாநாயகனின் பெயர்க்காரணம் (அய்யம்பேட்டை அறிவுடைநம்பி கலியபெருமாள் இந்திரன்) போல் புதிதிலும் நாயகன் பெயருக்கு (பசுபதி) விளக்கம் கொடுப்பதில் ஆரம்பித்து கிளைமாக்சில் சந்தானத்தின் உதவியுடன் படத்தை முடிப்பது வரை ஜாலிலோ ஜிம்கானா.. நாயகனாக சிவா, (இவருக்கு ஏற்ற மாதிரியே படங்கள் எப்படி அமைகிறதோ??) இயல்பான நக்கல் கலந்த டயலக்குகளால் மனம் கவர்கிறார். தேங்காய் சீனிவாசன் இடத்தில் பிரகாஷ் ராஜ். (சில இடங்களில் சொதப்புகிறார்)
கதாநாயகி இஷா தல்வார் ஓட்டவச்ச சிங்கி போல் இருக்கிறார். ஒரு சாயலில் பழைய ஊர்மிளா மடோன்கரை நினைவு படுத்தினாலும் நடிப்பில் சொல்லிக் கொள்ளும்படி இல்லை. பொடியனின் கேரக்டருக்கு பதில் நண்பனாக வரும் சூரி, இளவரசு, கோவை சரளா என ஆளாளுக்கு அசத்துகிறார்கள். இருந்தாலும் சூப்பர் ஸ்டார் நடிப்பில் பார்த்த அந்த கிளாசிக் படத்திலிருந்து ஏதோ மிஸ்ஸிங்.
சிவா கராத்தே மாஸ்டர் கங்குலியாகவும், பசுபதியாகவும் பின்னியெடுக்கிரார். தன் வழக்கமான பாணியில் சிக்சர் அடிக்கிறார். ஆனால் இதே போன்ற படங்களில் நடித்தால் முத்திரை குத்தப்பட்டுவிடுவார். என்னதான் பழைய சாதத்தை புது பிளேட்டில் போட்டாலும் டேஸ்டு கொஞ்சம் குறைவுதான்..
60 / 100
பழைய கள்ளு புதிய மொந்தை..
ReplyDeleteரசிக்க வைக்கிறது படம் அப்படித்தானே..
மச்சி, பழைய ஒயின் புது பாட்டில்ன்னு கூட சொல்லலாம்..
Deleteடேஸ்டே இல்லை...
ReplyDeleteடேஸ்டே இல்லேன்னு சொல்லிட முடியாது. பழைய படத்தோட தித்திப்பு நம்ம நாக்குல இன்னும் இருக்கிறதால இதோட சுவை கொஞ்சம் குறைவா தெரியுது DD!!
Deleteகொஞ்ச நேரம் போய் சிரிச்சிட்டு வரலாம்ன்றதுக்காக பாக்கணும்... டிடி கிட்ட நீங்க சொன்ன பதில் சூப்பர்... பழைய சாதம்னாலும் அது தான சுவை.... தில்லுமுல்லு நேத்து வச்ச மீன் குழம்பு ப்ளஸ் பழைய சாதம் மாதிரி ...!
ReplyDeleteஆஹா, என்ன உவமை.. பின்னீட்ட சீனு!
Deleteபார்க்கலாம்னு சொல்றீங்க! ஓக்கே
ReplyDeleteவாங்க நண்பா.. இன்னும் பார்க்கலையா?
Deleteமுதன் முறையாக தங்களின் தளத்திற்கு வருகை தந்தேன் . ரசித்தேன்
ReplyDeleteவருகைக்கு நன்றி ஜெயக்குமார்.. தொடர்ந்து வாருங்கள்..
Delete