Tuesday, June 25, 2013

தீயா வேலை செய்யணும் குமாரு.. திரை விமர்சனம்






                             பாசமலர் சிவாஜி சாவித்திரி மாதிரி  ஒரு நல்ல அண்ணன் தங்கை (சந்தானம்-ஹன்சிகா).  தந்தையின் தவறான புரிதலால் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் அண்ணன் குடும்பத்தின் தொடர்பை இழந்து, சென்னை வந்து ஊரே போற்றும்   மோக்கியாவாக (Correcting  People )  மாறி காதலர்கள் சேர யோசனை சொல்லும் நிறுவனம் (?!!) ஒன்றை ஆரம்பித்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் போது வில்லனாக வருகிறார் சித்தார்த். இவர் தன் காதலை சேர்த்து வைக்க நாடுவது மோக்கியாவை.



                                தன் தங்கைதான் சித்தார்த் காதலிக்கும் பெண் என்று அறியாமல் அவருக்கு ஐடியா பல கொடுத்து (ஒவ்வொரு ஐடியாவுக்கும்  பத்தாயிரம் பீஸ் )  பர்சனாலிட்டி அதிகமுள்ள கணேஷ் வெங்கட்ராமனை ஹன்சிகா காதலித்த போதும் அவரை ஒதுக்கிவிட்டு சித்தார்த்தை காதலிக்க வைக்கிறார். சில சுமாரான டூயட்களுடன் முதல் பாதி இப்படி போகிறது.


                                எதேச்சையாய் ஒரு கோவிலில் சித்தார்த்துடன் ஹன்சிகாவைப் பார்த்துவிட சேர்த்து வைத்த காதலை தானே பிரிக்கும் முயற்சியில் இறங்குகிறார் சந்தானம். அதில் ஒவ்வொரு முறையும் தோல்வியே கிடைக்க, தன் பெற்றோரிடம் சென்று இதைக் கூற, சந்தானத்தின் மேல் இருக்கும் கோபத்தில் சித்தார்த்- ஹன்சிகா திருமணத்துக்கு ஏற்பாடு செய்ய, ஒரு கட்டத்தில் ஹன்சிகாவுக்கு கணேஷிடமிருந்து தன்னை பிரிக்கவும், தன்னை காதலிக்கவும் சித்தார்த் தீட்டிய திட்டங்கள் தெரிய வர அவரைப் பிரிகிறார் ஹன்சிகா..


                               பெற்றோரின் முடிவைக் கேட்டு  சித்தார்த்தை கொல்ல  வரும் சந்தானம், அங்கே அவரின் உண்மையான காதலை உணர்ந்து மீண்டும் அவரை ஹன்சிகாவுடன் சேர்த்து வைக்க முயற்சி செய்து வெற்றியும் பெறுகிறார். படத்தின் முதல் பாதியில் RJ பாலாஜி, தேவதர்ஷினி, பாஸ்கி, சமந்தா ஆகியோரும், பின் பாதியில் வித்யுலேகா, மனோபாலா, ஜான் விஜய், சித்ரா லட்சுமணன் ஆகியோரும் படத்தின் ஓட்டத்துக்கு உதவுகிறார்கள். பழைய சுந்தரை பார்க்க முடியாவிட்டாலும் அவ்வப்போது அவருடைய டச் தெரிகிறது.. பாடல்களும் இசையும் சுமார் ரகம்.  மொத்தத்தில் சந்தானம் மட்டும் தான் தீயா வேலை செஞ்சிருக்காரோன்னு தோணுது..


65 / 100


11 comments:

  1. எதோ சந்தானத்திற்காக ஓடுகிறது... விரைவில் ஓடி விடும்...

    65....!?!!!

    ReplyDelete
  2. எப்பவும் தீயாய் விமர்சனம் வரும் இப்போ ரொம்ப ஆறிப்போய் வருதே.

    ReplyDelete
  3. எங்கள் தங்க தாரகை சின்ன குஷ்பு பத்தி எதுவும் சொல்லாததை வன்மையா கண்டிக்கிறோம்

    ReplyDelete
  4. முதல் பாதியில் பாலாஜியின் காமெடி வசனங்கள் நன்றாக இருக்கும்.... 65 மார்க் கரெக்ட் மச்சி....

    ReplyDelete
  5. தீயா விமர்சிச்சுட்டே ஆனந்து.

    ReplyDelete
  6. ஓக்கே ரைட்டு..,

    ReplyDelete
  7. படம் பார்க்கிறப்ப லாஜிக்லாம் பார்க்கத் தோணல.. ஜாலியாத்தான் போவுது. நடுவில் ஒரு தொய்வு மட்டும் லைட்டா !

    ReplyDelete
  8. கஷ்டப்பட்டு நகைச்சுவையாக படம் எடுக்க முயற்சி செய்வது போன்ற உணர்வு தான் படம் பார்த்த பொழுது எனக்கு தோன்றியது

    ReplyDelete
  9. உங்கள் விமர்சனத்தைப்பார்த்தால் படத்தைப் பார்க்கலாம் போலத்தோன்றுதே!

    ReplyDelete
  10. இந்தபடத்துக்கு 65 ல ஓவர், ஆனா தில்லுமுல்லுவோட கம்பேர் பண்ணினான் 200/100 கூட குடுக்கலாம்

    ReplyDelete

படிச்சுட்டு அப்படியே போனா எப்படி.. ஏதாவது சொல்லிட்டு போங்க..

How to sell your Infosys stocks through buyback?

Buyback: What? When a company decides to repurchase it's stocks from the investors it announces a Buyback Program. Why?  Basically a com...